திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

நடிகர் திலகம் வெறும் நடிகர் மட்டும்தான்?

நடிகர்திலகம் வெறும் நடிகர் மட்டும்தானா? 

சிவாஜி என்று பேச்சு ஆரம்பித்தாலே அது நடிப்பை பத்தி பேசுவதாகத்தான் எல்லா பேச்சும் இருக்கிறது.நடிகர்திலகத்தின் படங்கள் செய்த தாக்கம்தான் அது.
அவரது படங்கள் பற்றி பேசும் அதே நேரத்தில், அந்த படங்கள் எல்லாம் எப்படி அமைந்தது, அவையெல்லாம் அவரது வாழ்க்கையிலும் எப்படி இணைந்திருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
இப்போது வரும் ஸ்டார் வேல்யூ படங்கள் எல்லாம் எப்படி வருகின்றன. ஒவ்வொரு படங்களும் 100 கோடியில் தயாரிப்பு, 200 கோடியில் தயாரிப்பு என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.ஆனால் எல்லாம் அடி தடி குத்து கொலை வெட்டு படங்கள்தான்.கடந்த சில ஆண்டுகளில் எத்தனை படங்களை சிறந்ததாக கொள்ள முடியும்? தமிழ் கலையுலகுக்கு பெருமை தரும் படி எந்த தயாரிப்பும் இல்லை.இதில் கதா நாயகனுக்கு வேறு 40 கோடி 50 கோடி சம்பளம் என்று பெருமைகள்? இதெல்லாம் தான் கதாநாயகர்களுக்கு பெருமையா என்றால் அப்படி மாறி விட்டது திரையுலகம்! என்ன செய்ய!
பெரும்பாலோர் சமூகத்தில் வைத்திருக்கும் மதிப்பும், நாட்டுப்பற்றும் சொல்ல வேண்டியதில்லை.அவர்களின் பணப் பெட்டி நிறைந்தால் சரி என்றுதான் இருக்கிறார்கள்.அவர்களின் பழக்க வழக்கங்களும் ,வைத்திருக்கும் தொடர்புகளும் அவ்வாறே தான் இருக்கின்றன.தலைவர்களும் சொல்லிக் கொள்ளும்படி இப்போது யார் இருக்கிறார்கள்?அதனால் இப்போது வரும் திரைப்படங்களும் அப்படியே! 

 காஞ்சி மகா  பெரியவர் முதல் வாரியார் வரை நடிகர்திலகத்துடன் பழக்கம் இருந்தது.அவர்களும் விரும்பினார்கள்.நடிகர்திலகமும் மதித்தார்.இது போன்று பெரியவர்களுடன் பழகும் போது நமக்கும் அந்த குணம் வந்து சேரும் என்பது குறள் மொழி.நடிகர்திலகமும் திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம், திருவிளையாடல் என்று தமிழ் திரையுலகில் பக்தி மழை பொழிய வைத்தார்.மக்களும் அதில் நனைந்தனர்.இது போன்ற படங்கள் வந்தால் மக்கள் மனம் பண்புறும், சமூகம் செம்மையாகும்.இது அமைய அதற்கு நல்ல கலைஞன் வேண்டும்.அந்த வகையிலே அன்றைய தமிழ்மக்களுக்கு சிவாஜி இருந்தார்.செய்தார்!

அரசியல் தலைவர்கள் எடுத்துக் கொண்டால் காமராஜர் முதல் ஜீவா வரை நல்ல தலைவர்கள் மதிக்கும் படி நடிகர்திலகத்தின் பண்பு இருந்தது.செயல்கள் இருந்தன.தன்னை அப்படியே வளர்த்துக் கொண்ட மனிதன் அல்லவா சிவாஜி! அவர் நடித்த சமூக படங்களை எதைச் சொல்ல? ஒன்றா! இரண்டா! பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும் என்பார்கள்! ஆனால் இங்கே சிவாஜி நார் இல்லை! சிவாஜிக்கு இயல்பிலேயே அந்த பண்புகள் அமைந்திருந்தன. சிவாஜியின் திரைப்படம் மட்டுமல்லாது அவரின் தனிப்பட்ட குண நலன்களுமே தலைவர்களை கவர்ந்தது. சிவாஜி பழகியதும் அப்படிப்பட்ட தலைவர்களுடன் தான்.நடித்த படங்களும் அப்படியே அமைந்தது.அதற்கேற்றபடியே படங்களையும் செய்தார்.குடித்து விட்டு வாழும் லாரி டிரைவராக நடித்த நீதி படமும்  எப்படிப்பட்ட சட்ட நீதி படமாக இருந்தது.பாவமன்னிப்பு லட்சுமி கல்யாணம் என்று பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

சிவாஜியுடன் பழகியவர்களில் எத்தனையோ நல்ல கொடையுள்ளம் படைத்த தனவான்கள் நிறைய பேர் உண்டு.அந்த மாதிரி நபர்களுடன் நடிகர்திலகமும் நல்ல தொடர்பு வைத்திருந்தார்.செய்வதை சொல்லாததுதான் நல்ல தான தர்ம வாதிகளின் குணம்.நடிகர்திலகமும் அவ்வாறே இருந்தார்.அதனால்தான் கர்ணன், அவன்தான் மனிதன் போன்ற நல்ல படைப்புகள் நமக்கு கிடைத்தன.
நம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றபடியே நம் தொடர்பும் அமைகிறது. நம் செயல்களும் அதன்படியே இருக்கின்றன.நடிகர்திலகம் இப்படிப்பட்ட படங்களை கொடுத்திருக்கிறார் என்றால், அவருடைய நட்பும், தொடர்பும், பழக்க வழக்கங்களையும் அவ்வாறே வளர்த்துக் கொண்டார் என்பதும் காரணம்.

எல்லா தலைவர்களும் மதிக்கப்பட்ட தலைவன் சிவாஜி.எல்லா ஆன்மீகவாதிகளும்  மதித்த மனிதர் சிவாஜி.எந்த நேரத்திலும் கர்வம் கொண்ட மனிதராக தன்னை காட்டிக் கொண்டதில்லை.எல்லோரிடமும் பணிவு காட்டினார்.ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தன் தன்மானத்தை விட்டுக் கொடுத்து வாழ்ந்தவரும் இல்லை.நாட்டின் பிரதமரே ஆனாலும் மதிப்பு கொடுத்த பழகிய போதும் தன் தலையை தாழ்த்திக் கொள்ளாத வீரமகனும் சிவாஜியே! பணிவு பக்தி ஒரு புறம் என்றால் தன்மானம் சுயகௌரவம் இன்னொரு பக்கம் என்று கடைசி வரை வாழ்ந்த தீரனும் சிவாஜியே!

செந்தில்வேல் சிவராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற