திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

கடைசி வரை மாறாத சிவாஜி ரசிகர்கள்

1956ல் புயல் நிவாரணத்திற்காக பலர் நிதி வசூல் செய்து கொடுத்தனர்.  அதிக  வசூல் செய்தவர் சிவாஜிதான். அதிகமாக வசூலித்துக் கொடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சிவாஜி 
அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரை மேடையில் கௌரவித்தனர். அண்ணாதுரை அவர்கள் சிவாஜியை பற்றி கேட்கும் போது " கணேசனால் வர முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.
வஞ்சகர்களுக்கு சிவாஜியின் பதில்....

வெறும் அமைதிதான்..

பீம்சிங் வருகிறார்.சிவாஜியின் மன கிலேசம் தீர திருப்பதி அழைத்தார்.
சிவாஜி போனார்.
திருப்பதி சாமியை  பார்த்தார்.
சாந்தி அடைந்தார்.
திருப்பதியை பார்த்தால் பசி தீரும்.

கணேசா! உனக்கொரு நல்ல தலைவன் தேவை! இங்கேயும் ஒரு காந்தி இருக்கின்றார்.அதோ கர்மவீரர் காமராஜர்.
நீ ஒரு உத்தம தொண்டன்
காமராஜ் ஒரு உத்தம தலைவன்

காமராஜர் ஏற்றார் உன் சேவையை.
கலைச்சேவை ஒரு புறம்
காங்கிரஸ் வளர்ப்பு ஒரு புறம்
காங்கிரஸிலும் புல்லுருவிகள்.
அங்கேயும் தடைகள் தானே உன் பணிக்கு..

பெருந்தலைவரின் பின்னால் சிவாஜியின் பயணம்.எங்கேயெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கேயெல்லாம் கர்மவீரருக்காக கட்சியை வளர்த்தாய்.கடமையை செய்தாய் ..பலனுக்காக அல்ல..

1975 அக்டோபர் 2.
அணைந்தது தீபம்.
எளிய மனிதர் காமராஜ் இல்லாது போனார்.
உன்னை நோகடித்ததும்
தமிழகத்தை சாகடித்ததும்
அந்த மரணம்..

அந்த சூழ்நிலை விபரீதமானது.சிவாஜி எந்த முடிவெடுத்தாலும் தவறாகத்தான் இருக்கும் மற்றவர்களுக்கு.
யாருடைய தயவும் தேவையில்லை சிவாஜிக்கு.சிவாஜியின் ஆதரவு இருந்தால் மற்றவர்களுக்கு உதவும் என்ற நிலையில் தான் ஆதரவு கரம் நீட்டினார் அன்னை இந்திரா காந்தி.

இந்திரா காங்கிரஸில் இணைந்து சிவாஜி அந்த கட்சியையும் வளர்த்தார்.சிவாஜி இருந்தால் தங்களால் வளர முடியாது என்று இருந்தவர்கள் ஏராளம்.சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க நிறைய பேர் அங்கேயும்..

இப்படித்தான் 1988 வரை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கட்சிக்காக உழைத்தார்.மாற்றுமுகாம் கட்சித்தலைவர் கூட சிவாஜியைத்தான் நம்பினார்.அவர் மறைந்தார் .அந்த கட்சிக்கு ஆதரவளித்து வந்த காங்கிரஸ் கையை விரித்து விட்டது.அந்த நம்பிக்கை துரோகத்தை சிவாஜியார்  ஏற்றுக் கொள்ள முடியாததால் கட்சியை விட்டு விலகினார்.

சிவாஜியையே  நம்பி இருந்த பிள்ளைகளுக்காக புதுக்கட்சி தொடங்கினார்.சுயநலம் பாராது ஆரம்பிக்கப்பட்ட கட்சி தமிழக முன்னேற்ற முண்ணனி.நம்பியவர்களை ஏமாற்றாத ஏணியாய் தன் சிவாஜி இருந்தார்.

சிவாஜிதான் சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிக்கவில்லையே.பொது நலத்தை மக்களே யோசிப்பதில்லையே இங்கே! 
அதனால் தமுமு தோல்வி அடைந்தது.

பின் விபி சிங் என்னும் நல்ல தலைவன் அழைத்ததால் ஜனதாதளத்தில் சிவாஜி சேர்ந்தார்.தன்னை நம்பி இருப்பவர்களுக்காக.
அடித்துத்தான் பிழைக்க வேண்டும் அரசியலில்.சிவாஜிக்கு அது தெரியாது என்பதை விட பிடிக்காது என்பது தான் சிவாஜியின் கொள்கை.அங்கேயும் பிரச்சினைகள் தான்.அது தானே அரசியல் இங்கு.
மனம் வெறுத்து கட்சிகளில் இருந்து ஒதுங்கி கொண்டார் சிவாஜி!
அப்போதும் சிவாஜி ரசிகர்கள் அவர் பின்னால் நிறைய பேர் இருந்தார்கள்.அது சிவாஜியை விட்டு பிரியாத கூட்டம்.எதற்காக சிவாஜி பின் வந்தார்களோ அதற்காகவே கடைசி வரை இருந்த கூட்டம்.
தன் நிம்மதியை விட சிவாஜியின் நிம்மதியே உண்மையான சிவாஜி ரசிகன் விரும்பினான்.இது தான் அவருக்கு கிடைத்த மாபெரும் சொத்து.
இது தான் தானாக சேர்ந்த கூட்டம்.திருவையாறு தோல்வியெல்லாம் சிவாஜி ரசிகனை சிதற விடாது.அவன் பராசக்தியின் வெற்றியில் இருந்தே சிவாஜியுடன் கலந்தவன்.

ஜெய்ஹிந்த்! 
தான்

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற