திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

புகழை கர்வமாக்கிக் கொள்ளாத சிவாஜி

சிவாஜியின்
படங்கள் 
தேன்கூடு 
போலே
அதிலும்
தேனெடுத்தால்
தேனீக்கள் 
கொட்டாத 
கூடு

நாகரீகம் வளரும் போது கலாச்சார  சீர்கேடுகளும் உண்டாவது தான்.அதிலிலிருந்து மக்களை நல்வழிப்படுத்தவே கலைகள் தோற்றுவிக்கப்பட்டன.
கலாச்சாரம்,பண்பாடு, கடமைகள் போன்றவை நல்வழிகள் சொல்லி மக்களை  பண்படுத்தவே கலைகள் பிறந்தன.
கலைகளை பரப்ப நல்ல படைப்பாளிகள் இதிலிருந்தே  வந்திருக்க வேண்டும். அவர்களின் கலை அம்சம்  ஈர்க்கப்பட்டதால் மக்கள் அவர்களை கலைஞர்களாக மதித்து போற்றப்பட்டனர்.நல்ல கலைஞனின் வேலை சமூகத்திற்கு பயன்படும் கலைகளை பரப்புவது தான்.இப்படி தோன்றிய கலைகள் தான் இன்று எப்படி மாறியுள்ளது!
இன்று நாகரீகம் எவ்வளவோ வளர்ந்திருக்கலாம்.அந்தளவு நல்ல கலைகள் உருவாக்கப்படுகிறதா?
இங்கே தான் நடிகர்திலகத்தின் படங்களை நாம் சொல்ல வேண்டியுள்ளது.
சமுகத்தை பண்படுத்தும் படங்களாகவே அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
நல்ல கலைஞனாக அவர் செய்ததை செய்துவிட்டார்.அதை பின்பற்றுவது மக்களின் கையில்.

கலைகள் வளர எதை எடுத்துச் சொல்வது?
சமூகத்தில் நடந்த நல்ல நிகழ்வுகள் ,எழுதப்பட்ட காவியங்கள், சிறந்த மனிதர்களின் வரலாறுகள்,
இன்னும் பல நல்ல விஷயங்கள்.
இதை வைத்து நல்ல கலையென்று ஆராயத் தொடங்கினால் இந்த நூற்றாண்டில் நடிகர்திலகத்தின் பங்களிப்பை சொல்லாமல் இருக்க முடியுமா? இவற்றுக்கு உதாரணங்கள் சொல்லி பட பட்டியலை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

ஈடுபாட்டுடன் செய்த நல்ல கலைகள் கொடுக்கும் புகழ்மோகம் நாளடைவில் போதையாக மாறும்.இதற்கு  ஆளாகதவர்கள் குறைவுதான்.ஆரம்பத்தில் அர்ப்பணிப்புடன் ஆரம்பிப்பவர்கள் இறுதி வரை தொடர்கிறார்களா? 
அதில் சறுக்கியவர்கள் ஏராளம்.இறுதி மூச்சு வரை கலையை மட்டுமே நேசிப்பவன் தான் கலைஞரில் மாணிக்கமாகிறான்.அப்படி கடைசிவரை தன் அர்ப்பணிப்பை கலைக்காக கொடுத்தவர் நடிகர்திலகம் என்பதற்கும் அத்தாட்சி் தேவையில்லை.கலைஞனுக்கு கர்வம் இருப்பது சகஜம் என்றாலும் இதிலும் விலகி நிற்கிறார் நடிகர்திலகம்.புகழ்போதைகளுக்கு மயங்கி தலைக்கனத்தை ஏற்றிக் கொள்ளாத மாபெரும் மேதையாக கடைசி வரை வாழ்ந்தார்.

நாட்டிற்கேற்ற நல்லவராய் இருத்திடல் வேண்டும்
நல்ல பண்புகளை தன்னகத்தே வைத்திடல் வேண்டும்
நல்மொழியாய் தாய்மொழியை பரப்பிடல் வேண்டும்
நல்லோரை எந்நாளும் மதித்திடல் வேண்டும்
இதுதான் நல்ல கலைஞர்களுக்கு தேவையான குணம்.
படித்தாரோ இல்லை
அறிந்தாரோ இல்லை
ஆனாலும்,
இவையனைத்தும் பிறவிக் குணமாய் அமைந்து விட்டது நடிகர்திலகத்துக்கு.

நாட்டிற்கு செய்வன எல்லாம் கலைஞனாக செய்து விட்டார்.நல்ல கலைஞர்களை கௌரவிப்பதும் நாட்டிலுள்ளோர்  கடமையன்றோ?
இங்கே தான் அந்த கேள்வி எழுகின்றது?
அவர் இங்கே பெற்ற வரம் என்ன? 

நன்றி
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற