திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜியோடு நடித்து பெயர் வாங்கிய குழந்தை நட்சத்திரங்கள்

குழந்தைகளோடு நடிப்பதென்றால் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.மிகப் பெரும்பான்மையான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு இணைந்து நடித்திருக்கிறார்கள்.
மாஸ்டர் ஸ்ரீதர் குட்டி பத்மினி கமலஹாசன் பேபிஇந்திரா ஸ்ரீதேவி பப்லு நடிகை மீனா நடிகை ஷாலினி பேபி வினோதினி என்று இன்னும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் சிவாஜியோடு நடித்திருக்கிறார்கள் .
குழந்தை பட்டாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர் திலகம் நடித்த படங்கள் என்றால் குழந்தைகள் கண்ட குடியரசு எங்க மாமா படங்களை சொல்லலாம் ..
அதிலும் குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் சிறுவர் சிறுமிகளே  கதாநாயக வேடங்களில் நடித்திருப்பார்கள். குழந்தைகள் கண்ட குடியரசு படத்தில் நடிகர்திலகத்துக்கு கௌரவ வேடம் தான் .
விஞ்ஞானியாக நடித்திருப்பார் .
இது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படமும் கூட.
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் பாடல் 
பாபு படத்தில் இடம் பெற்ற  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல் 
என் தம்பி படத்தில் இடம்பெற்ற முத்து நகையே  உன்னை நான் அறிவேன் 
உத்தமன் படத்தில் இடம்பெற்ற கேளாய் மகனே கேள் ஒரு வார்த்தை
எங்க மாமா படத்திலிருந்து செல்லக் கிளிகளாம் பள்ளியிலே என்ற பாடல்
பார்த்தால் பசி தீரும் படத்தில் இடம்பெற்ற பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடல்
தங்கை படத்தில் இடம்பெற்ற தண்ணீரிலே தாமரைப்பூ என்ற பாடல், 
அவன்தான் மனிதன் படத்தில் இடம்பெற்ற ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ என்ற பாடல் ,
தங்கப்பதக்கம் படத்தில் இடம்பெற்ற ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடல்
மன்னவன் வந்தானடி படத்தில் இடம்பெற்ற சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
 கவரிமான் படத்தில் இடம்பெற்ற பூ போலே உன் புன்னகையில் என்ற பாடல் ,
இமயம் படத்தில் இடம்பெற்ற கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று என்ற பாடல்,
நான் வாழவைப்பேன்  படத்தில் இடம்பெற்ற எந்தன் பொன்வண்ணமே என்ற பாடல், 
ரத்த பாசம் படத்தில்  இடம்பெற்ற மான் குட்டி இப்போது என் கையிலே என்ற பாடல், கல்தூண் படத்தில்  இடம்பெற்ற சிங்கார சிட்டுத்தான் என்ட  புள்ள என்ற பாடல்,
வா கண்ணா வா படத்தில் இடம்பெற்ற எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டு தான் என்ற பாடல், 
கருடா சௌக்கியமா படத்தில் இடம்பெற்ற கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாடல்,
பந்தம் படத்தில் இடம்பெற்ற பேபி பேபி ஓ மை பேபி என்ற பாடல்,
படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டு கிளியாக என்ற பாடல்,
மண்ணுக்குள் வைரம் படத்தில் இடம்பெற்ற ஜாதி மல்லிகையே நெஞ்சுல சாஞ்சு என்ற பாடல் ,

என்று இப்படி ஒரு நீண்ட ஒரு வரிசையில் குழந்தைகளுக்கு சிவாஜிகணேசன்  பாடிய பாடல்கள் ஏராளம் இருக்கின்றன.

கர்ணன் படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் நடித்திருப்பார்.நடிகர்திலகத்தோடு அவர் நடித்திருப்பதை மிகவும் சிலாகித்து பேசுவார்.கர்ணன் படத்தில் மாஸ்டர் ஸ்ரீதரிடம் சிவாஜி பேசும் காட்சிகள் மிக மிக ரசிப்புத்தன்மையுடன் இருக்கும்.ஒரு அரசுக்கே  புத்தி கூறும் அறிவடா உனக்கு என்று மாஸ்டர் ஸ்ரீதரிடம் சிவாஜி பேசிய வசனம் நெஞ்சை விட்டு அகலாது.

பாபு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி சிவாஜி வரும் காட்சிகள் எல்லாம் மனதை தொடும் காட்சிகள்.
 பிச்சையெடுக்கும் ஸ்ரீதேவியை பார்த்து சிவாஜி பேசும் காட்சிகள் உணர்ச்சிகரமாக இருக்கும்.

எங்கமாமா பட கதைக்களமானது முழுக்க முழுக்க குழந்தைகள் சம்பந்தப்பட்டது.அநாதை குழந்தைகள் இல்லம் நடத்தி வரும் கேரக்டரில் சிவாஜி நடித்திருப்பார்.ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தேச தலைவர்களின் பெயர்களை சூட்டியிருப்பார் சிவாஜி.அதிலும் கூட தேசபக்தியை நினைவூட்டுவார்.

பிற்காலத்தில் பந்தம் படமும் 
வா கண்ணா வா படமும் மிக முக்கியமான படங்கள்.
பந்தம் படத்தில் கண்டிப்பான ரிடையர்டு ஆன கர்னல் வேடத்தில் சிவாஜி நடித்திருப்பார் .பேபி ஷாலினியுடன் சிவாஜி நடித்த காட்சிகள் எல்லாம் மக்களால் என்றும் மிகவும் ரசிக்கப்படுபவையாக இருக்கின்றன.

அதேபோல வா கண்ணா வா படமும். நடிகர் திலகத்தின் படு வித்தியாசமான நடிப்பில் அமைந்த  படம் வா கண்ணா வா. கலகலப்பான குடும்ப பாச சித்திரமான இந்த படம் கடைசியில் சோகத்தில் முடிவது உணர்வுகளை உருக்குவதாக இருக்கும்.


இமயம் உத்தமன் படங்களில் நடிகர்திலகத்துடன் ஒரு முக்கிய கேரக்டராக சிறுவன் கதாபாத்திரம் இருக்கும்.

சிவாஜி படங்களில் தான் அதிகமான குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 

சிவாஜியை எல்லோரும் சிங்கமாகத்தான் பார்க்கிறார்கள்.
ஆனால் பழகிய பின்பு அவரை குணத்தில் ஓர் குழந்தையென்றே வர்ணிக்கிறார்கள்.
குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகுபவர் சிவாஜி.அது படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படித்தான்.

செந்தில்வேல் சிவராஜ் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற