திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

ஒரே சமயத்தில் ஓடிய சிவாஜியின் 20 படங்கள்

ஞான ஒளி

வெகுஜன மக்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும்  படைப்பு ஞான ஒளி என்றால் அது நிஜம்தான்.
இந்தப் படம் விளைவித்த தாக்கம் மிகவும் அதிகமானது.

ஞான ஒளி படம் வெளிவந்த ஆண்டு 1972.
.
ஞானஒளி  வெளிவந்த சமயத்தில்
சென்னையில் சிவாஜியின் படங்கள் ஒரு மகத்தான சாதனை செய்தது.அந்த சாதனை ஒரு சாதாரணமான சாதனை கிடையாது.
 ஞான ஒளி 1972 ஆம் ஆண்டு சென்னையில் நான்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.அந்தத் திரையரங்குகள் பிளாசா பிராட்வே சயானி கமலா .
அந்தக் காலத்தில் ஒரு நடிகரின் ஒரு படம் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும்போது சில சமயங்களில் அந்த நடிகரின் அதற்கு முன் வெளியான பழைய திரைப்படங்கள் இரண்டு அல்லது மூன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும். மிகவும் பிரபலமான நடிகர் என்றால் நான்கு அல்லது ஐந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.இது அந்த காலத்தில் வழக்கமான ஒன்றுதான்.  எல்லா நடிகர்களுக்கும் எப்போதாவது நிகழும் ஒரு விஷயம் தான்.
ஆனால் நடிகர் திலகத்தின் ஞான ஒளி திரைப்படம் வெளிவந்த அந்த 1972 ஆம் காலகட்டத்தில் ஒரே சமயத்தில் சென்னை நகரில் மட்டும் 20 திரையரங்குகளில் நடிகர் திலகத்தின் 20 திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதுதான் மலைக்க வைக்கும் செய்தி .இந்த சாதனை எந்த ஒரு சிவாஜி மன்றமும் நோட்டீஸ் அடித்து வெளியிடப்பட்ட ஆவணத்தில் இருந்து சொல்லப்படவில்லை. ஞான ஒளி படத்தின் தயாரிப்பாளரே இதை ஒரு பத்திரிக்கையில் விளம்பரமாக வெளியிட்டுள்ளார். இது ஒரு அதிகாரப்பூர்வமான ஊர்ஜிதமான ஆவணம் ஆகும்.
அந்த 20 திரைப்படங்கள் என்னென்ன என்பதையும் அந்த அந்த பத்திரிக்கை விளம்பரத்தில் படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 
அவை என்னென்ன படங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை பார்க்கலாம்.
1.பாசமலர் இரண்டு தியேட்டர்
2.பாகப்பிரிவினை
3.உத்தமபுத்திரன் 6 தியேட்டர்கள்
4.தூக்குத்தூக்கி 
5.குங்குமம்
6. வணங்காமுடி 
7.வளர்பிறை 
8.இருவர் உள்ளம் 
9.ராஜா ஐந்து தியேட்டர்கள்
10.மக்களைப் பெற்ற மகராசி 11.தங்கைக்காக 
12.சொர்க்கம் 
13.தேனும் பாலும் 
14.காவேரி 
15.பாபு 
16.மனோகரா
17. குலமகள் ராதை 4 தியேட்டர்கள் 18.பாலும் பழமும் 2 தியேட்டர்கள் 
19.உயர்ந்த மனிதன் 
20.புதிய வெளியீடான ஞான ஒளி நான்கு திரையரங்குகள் ..
இதுதான் அந்த இமாலய மலைக்க வைக்கும் சாதனை பட்டியல் ..

இந்த சாதனை ஒரு பக்கம் இருந்தாலும் சென்னையில் இருந்த சபாக்களும் ஞான ஒளி படத்தை திரையிட்டு ஒரு பெரும் சாதனையை செய்தது.
அது என்னவென்றால் ...
அப்போதெல்லாம் சபாக்களும் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அந்தத் திரைப்படங்களை திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து திரைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வருமானம் பார்த்தார்கள்.
அப்படி..
சென்னையிலுள்ள சபாக்களில் பெரும்பாலான சபாக்கள் நகரெங்கும் உள்ள திரையரங்குகளில் இரண்டு நாட்களும் சேர்த்து கிட்டத்தட்ட 55 காலைக் காட்சிகளாக ஞான ஒளி திரைப்படத்தைத் திரையிட்டது எந்த நடிகராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று.

முதல் இரண்டு நாட்களிலும் 55 காலைக் காட்சிகள், இப்படம் வெளியானபோது போட்டியாக நகரெங்கும் கிட்டத் தட்ட 20 நடிகர் திலகத்தின் படங்கள் என்று இந்த சோதனைகள் அனைத்தையும் தாண்டி ஞான ஒளி திரைப்படம் பெற்ற வெற்றி தமிழ்த் திரையுலக வரலாற்றில் எவராலும் நடத்தியிருக்க முடியாத மிகப் பெரிய சாதனை. ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஆறு மாத காலத்திற்கு இடைவெளி விடாமல், ஆறு வாரத்திற்குள்ளாகவே அடுத்த படம் வெளியிட்டு வெற்றி பெறக்கூடிய வலிமை நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. அப்படிப் பார்த்தால் ஞான ஒளி திரைப்படத்தின் வெற்றியைத் தமிழ்த் திரையுலக வரலாறு காணாத வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

1971ஆம் ஆண்டின் இறுதியில் புகழின் உச்சியில் நடிகர் திலகம் கொடி கட்டிப் பறந்த அந்த நேரத்தில் விரைவில் ஞான ஒளி திரைப்படம் வெளியிடப்பட்டது என்கிற செய்தி பரவத் தொடங்கியது. அதற்கேற்றாற் போல் அருணோதயம் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருந்த போதே தேவனே என்னைப் பாருங்கள் பாடல் சென்னை வானொலியில் ஒலிபரப்பி விட்டனர். ஓரிரு மாதங்கள் கழித்து இலங்கை வானொலியிலும் இப்பாடல் ஒலிபரப்பப் பட்டது.

பாபு படம் வெளியான போது தேவனே என்னைப் பாருங்கள் பாடல் மிகப் பிரபலமாகி விட்டு எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் உண்டாக்கி விட்டது. ராஜா வெளியீட்டின் போதே இதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் தேவி பேரடையில் ராஜா அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே பிளாசாவில் ஞான ஒளி வெளியீடு. ஆஹா... இது வல்லவோ வரவேற்பு என்ற மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் நடைபோட்டது ஞான ஒளி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற