திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

இதை விடவா பெரிய விருது ?

சிவாஜிக்கு சரியான விருது பாரத பூமியில்  கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?

என்னுடைய படத்தை ஏன் போஸ்டரில் அடித்துள்ளனர் என்று சிவாஜியின் திருநாவுக்கரசர் உருவத்தை பார்த்து காஞ்சிப் பெரியவர் சொன்னாரே?
அதை விடவா பெரிய விருது?

சிவாஜியின் நடையை பார்க்க அவரை காக்க வைத்து பின் சிவாஜி நடந்து வருவதை பார்த்து ரசித்து ,உங்கள் நடையழகை பார்க்கவே நான்  உங்களை நடந்து வரச் சொன்னேன் என்று விளக்கம் சொன்னாரே புட்டபர்த்தி சாய்பாபா? அதை விடவா பெரிய விருது? 

"என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா.வ.உ.சிதம்பரனாரின்  மகன் சொன்னாரே?
அதை விடவா பெரியவிருது ? 

"என் தந்தையின் காலில் விழக்கூட இடம் காலம் பார்ப்பேன். ஆனால் அவரை எங்கு கண்டாலும் காலில் விழுந்து வணங்குவேன்!" என தன் தந்தையின் மேல் அன்பும் மரியாதையும் வைத்துள்ள ஒரு சிவாஜி ரசிகன்சொன்னது இது..
இதைவிடவா பெரிய விருது! 

சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் "பத்மநாபா! போய் விட்டாயா?" என  ஒரு முதியவர் உருகி சத்தமிட்டாரே? அதை விடவா பெரிய விருது? 

இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? என்று தங்கச் சாவி கொடுத்ததே அமெரிக்க அரசாங்கம்!
அதைவிடவா பெரிய விருது ..

நீங்கள் மேடையில் வீற்றிருந்த போது ஓடி வந்து ஒரு பெண்மணி கையை கிழித்து  தன் ரத்தத்தை 
உங்கள் நெற்றியில் திலகம் இட்டாளே ஒரு பெண்மணி!
அதைவிடவா பெரிய விருது ..

சிவாஜி நடித்ததை படமாக்கும் போது என் கண்களில் வழியும் கண்ணீர் கேமராவின் 
லென்ஸ்களில் படிந்து என்னால் படமாக்க முடியவில்லை என்று உணர்ச்சி பொங்க கூறினாரே ஒளிப்பதிவாளர் விட்டல் ராவ்!
அதைவிடவா பெரிய விருது? ..

பிரமாண்ட பிரமிடுகளைக் கொண்ட எகிப்திய பூமிக்கு அதிபராக விளங்கிய நாசர்
அதிபருக்குண்டான ஒரு நாட்டின்  சட்ட திட்டங்களை மீறி தியாகராயநகர் அன்னைஇல்லத்தின் அன்பு பிடியில் கட்டுண்டு விருந்துண்டு மகிழ்ந்து,எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காத பெருமையை நடிகர் திலகத்திற்கு கொடுத்துச் சென்றாரே!
அதைவிடவா பெரிய விருது?

ஆசிய ஆப்பிரிக்கப்பட விழாவில்
உலகப் புகழ்வாய்ந்த கெய்ரோ விருதை 
உலக நடிகர்களின் நடிப்புகளை எல்லாம் புறம் தள்ளி ஆறடிக்கும் குறைவான சிவாஜிகணேசன் பெற்று வந்தாரே!
அதைவிடவா பெரிய விருது! ..

சிவாஜி  போல என்னால் நடிக்க முடியாது என்று உலக நடிகன் மார்லன் பிராண்டோ கூறி விட்டாரே! 
அதை விடவா பெரிய விருது? ..


சிவாஜிக்கு மேலே ஒரு நடிகரை பார்க்க முடியாது என்று இந்திய பிரதமர் நேரு சொல்லிய பின்பு 
அதை விடவா பெரிய விருது ?

இந்திய நடிகன் எவருக்குமே செய்யாத பெருமையாக சிவாஜியின் வருகைக்காக அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் வரவேற்பு தீர்மானம் போட்டு சிவாஜிக்கு சிறப்பு செய்ததே சிங்கப்பூர் அரசாங்கம் ..
அதைவிடவா பெரிய விருது ...

அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் திலகத்தை வரவேற்க விமான நிலையத்திலிருந்து அன்னை இல்லம் வரை பல கிலோமீட்டர் தூரம் வரை இருபுறமும் மக்கள் கூட்டம் திரண்டு நடிகர்திலகத்துக்கு மரியாதை செய்ததே!
அதைவிடவா பெரிய விருது!

எந்த விருது சிவாஜிக்கு கிடைக்கவில்லை என்று நாம் வசை  பாடுகிறோமோ அந்த விருதைப் பெற்ற இயக்குனர் ,
எங்களின் கலை வாழ்க்கை சிவாஜி போட்ட பிச்சை என்று கூறினாரே..
அதை விடவா பெரிய விருது ..

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியின் நாதஸ்வர வாசிப்பு நடிப்பை பார்த்த அந்தப் படத்திற்கு நாதஸ்வரம் வாசித்த நிஜக் கலைஞரான உமையாள்புரம் சிவராமன் சொன்ன வார்த்தை, "சிவாஜி வாசித்ததே  அசல் " என்று...
அதைவிடவா பெரிய விருது ..

எந்த தயாரிப்பாளர் சிவாஜியை வேண்டாம் என்று சொன்னாரோ, அதே தயாரிப்பாளர் பிற்காலத்தில் நான் உலகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன் சிவாஜியை போல் ஒரு நடிகனை கண்டதில்லை என்று சொன்னாரே..
அதைவிடவா பெரிய விருது ...

எப்போது சிவாஜியின் நடிப்பை பார்த்து ரசிக்க ஆரம்பித்தேனோ,அப்போது இருந்து இன்று வரை அவருடைய நடிப்பைத் தவிர வேறு எந்த நடிப்பையும் ரசிப்பதில்லை என்று  தன்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை இன்று வரை உருக உருக வைத்திருக்கிறாரே 
நடிகர் திலகம்,
அதைவிடவா பெரிய விருது ...

செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற