திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

வெள்ளிவிழா கண்ட சிவாஜி படங்ளின் பார்முலா


இந்தப் பதிவில் சொல்லப்படும் சிவாஜியின் வெள்ளி விழா படங்களில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது ' பிரிவு ' என்பதை மையமாக வைத்து அமைந்த திரைப்படங்கள். அவை என்னென்ன படங்கள் என்னென்ன வகையில் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

சிவாஜியின் மூன்று வெள்ளி விழா படங்களில் நடித்த நடிகை K.R.விஜயா.
தங்கப்பதக்கம் ,திரிசூலம்,
நீதிபதி.தங்கபதக்கம் படத்தில் சில காலம் மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.திரிசூலம் படத்தில் மனைவி மகனை பிரிந்து இருப்பார் சிவாஜி.நீதிபதி படத்திலும் காதலி சுஜாதா ,மகன் பிரபுவை பிரிந்து இருப்பார் சிவாஜி.இந்த மூன்று படத்திலும் உள்ள ஒற்றுமை இது.தங்கபதக்கம் வெளியான போது அதுவரை வெளியான வசூல் சாதனைகளை முறியடித்தது.திரிசூலம் வெளியான போது அதற்கு  முன் வெளியான அத்தனை படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது.
இந்த மூன்று படங்களிலும் மனைவியோ அல்லது மகனோ பிரிந்திருக்கும் காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும் 

பாவமன்னிப்பு. 177 நாட்கள் ஓடி வெள்ளிவிழா சாதனை செய்த படம் பாவ மன்னிப்பு. இந்தப் படத்தில் சிவாஜி ,அப்பா 
எம் .ஆர். ராதா ,அம்மா எம் வி ராஜம்மா, தம்பி ஜெமினி கணேசன் ஆகியோரை சிறுவயதிலேயே பிரிந்து வாழ்வது போல படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கும். 

சிவாஜியின் முதல் படமான பராசக்தி வெள்ளிவிழா ஓடி வெற்றி கண்ட சித்திரமாகும்.
இந்தப் படம் தொடங்கி சிறிது நேரத்திலேயே தன் சகோதரர்களை பிரிந்து வாழக்கூடிய காட்சி அமைப்புகள் படத்தின் கடைசி வரை  இருக்கும்.

சிவாஜியின் மகத்தான வெள்ளி விழா வெற்றி கண்ட 
கிராமிய கருப்பு வெள்ளை திரைகாவியம் பாகப்பிரிவினை. பெயரிலேயே 'பிரிவினை ' என்ற வார்த்தையை கொண்ட இந்தப் படத்தில் இரு குடும்பங்கள் பிரிந்து வாழ்வது போன்ற காட்சி அமைப்புகள் இருக்கும். 

பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி ஜெயலலிதாவை திருமணம் செய்து கொள்வார். திருமணத்திற்கு பின்பு சிவாஜியை விட்டு  ஜெயலலிதா பிரிந்து சென்று விடுவார்.
இந்தப் படத்திலும் மனைவி ஜெயலலிதாவை சிவாஜி பிரிந்திருக்கும் காட்சி அமைப்பு இருக்கும்.
கருப்பு வெள்ளை கிராமிய படங்களில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படம் பட்டிக்காடா பட்டணமா. 

இலங்கையில் 203 நாட்கள் ஓடி 
வெள்ளி விழா சாதனை படைத்த படம் உத்தமன்.சிவாஜி மஞ்சுளா ஆகிய இருவரும் காதலர்கள்.மஞ்சுளாவின் அப்பாவாக வரும் விகே ராமசாமியின் சூழ்ச்சியால் மஞ்சுளா சிவாஜியை விட்டு பிரிந்து வாழ்வது போல காட்சி அமைப்புகள் இடம் பெற்று இருக்கும்.

காதல் படங்களின் தாஜ்மஹால் ஆன வசந்த மாளிகை திரைப்படத்தில் வாணிஸ்ரீயை பிரிந்து இருப்பார் சிவாஜி .சிவாஜியின் 125 வது படமான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் தான் முதன் முதலாக வாணிஸ்ரீ ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். அதில் அப்பா சூழ்ச்சி செய்து சிவாஜி வாணிஸ்ரீயை  பிரிப்பார் .வசந்த மாளிகை திரைப்படத்தில் அம்மா சூழ்ச்சி செய்து சிவாஜி வாணிஸ்ரீயை பிரிப்பார் .

வெள்ளி விழா கண்ட புராணப்படமான திருவிளையாடல் படத்தில் சிவனாக வரும் சிவாஜியின் மகன் முருகன் கோபித்துக் கொண்டு பிரிந்து போவார் .

சிவாஜியின் வெள்ளி விழா படமான தியாகம் திரைப்படத்தில் சிவாஜி லட்சுமி ஜோடியாக நடித்திருப்பார்கள் .
இதில் சிவாஜியின் மேல் தவறான அபிப்ராயம் கொண்டு லட்சுமி சிவாஜியை விட்டு பிரிந்து இருப்பார்.

சிவாஜி புரொடக்சன் தயாரித்த வெள்ளிவிழா படமான சந்திப்பு திரைப்படத்தில் மனைவி சுஜாதா மகன்  பிரபு ஆகியோரை பிரிந்து வாழ்வார் சிவாஜி.

சிவாஜி ரஜினி சேர்ந்து நடித்து வெள்ளிவிழா கண்ட திரைப்படம் படிக்காதவன். இந்த திரைப்படத்தில் தம்பி ரஜினியை பிரிந்து இருப்பார் சிவாஜி.

செந்தில் வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற