திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜியுட நடித்த கதாநாயகிகளுக்கு எத்தனை படங்கள் 100 நாள் ஓடியது

சிவாஜியுடன் ஜோடியாக  நடித்த கதாநாயகிகளின் திரைப்படங்களில்  100 நாள் ஓடிய  பட விபரங்களை இந்த பதிவில்  பார்க்கலாம்.சிவாஜியுடன் 
கதாநாயகிகளாக நடித்த திரைப்படங்கள் மட்டும் இந்த பதிவில்  குறிப்பிடுகிறேன்.
சிவாஜியுடன் நடித்த முதல் கதாநாயகி பண்டரிபாய் .
இவருடன் இணைந்து நடித்த பரராசக்தியான முதல்படமே 280 நாட்கள் ஓடியது.இதைத் தொடர்ந்து சிவாஜியுடன் பண்டரிபாய் நடித்த அன்னையின் ஆணை,தெய்வமகன்,
கௌரவம் ஆகிய நான்கு படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி கிரிஜா நடித்த இரண்டு படங்களில் மனோகரா  100 நாள் திரைப்படம் ஆகும்.

சிவாஜி பத்மினி நடித்த 100 நாள் படங்கள்:கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தூக்குத்தூக்கி எதிர்பாராதது அமரதீபம் புதையல் உத்தமபுத்திரன் தங்கப்பதுமை தெய்வப்பிறவி இரு மலர்கள் தில்லானா மோகனாம்பாள் வியட்நாம் வீடு குலமா குணமா 
ஆகிய 12 படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி ஜி வரலட்சுமி நடித்த நான் பெற்ற செல்வம் 100 நாள் ஓடிய திரைப்படம்.

சிவாஜி ஜமுனா நடித்த தெனாலிராமன் தங்க மலை ரகசியம் ஆகிய 2 படங்கள் 100 நாள் திரைப்படங்கள் .

சிவாஜி எம் என் ராஜம் நடித்த 
பெண்ணின் பெருமை பதிபக்தி
பாசமலர் ஆகிய 3 திரைப்படங்கள் 100 நாள் ஓடியவை ஆகும்.

சிவாஜியுடன் பானுமதி நடித்த மக்களைப் பெற்ற மகராசி 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும்.

சிவாஜி சாவித்திரி நடித்த வணங்காமுடி அன்னையின் ஆணை காத்தவராயன் கை கொடுத்த தெய்வம் நவராத்திரி திருவிளையாடல் ஆகிய 5 திரைப்படங்கள் 100 நாள் ஓடியவை ஆகும்.

சிவாஜி மாலினி நடித்த சபாஷ் மீனா 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும்.

சிவாஜி S. வரலட்சுமி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும் .

சிவாஜி கணேசன் சரோஜாதேவி நடித்த பாகப்பிரிவினை விடிவெள்ளி பாலும் பழமும் பார்த்தால் பசி தீரும் ஆலயமணி இருவர் உள்ளம் புதிய பறவை 
என் தம்பி ஒன்ஸ்மோர் ஆகிய 9 திரைப்படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி கணேசன் வைஜெயந்திமாலா நடித்த இரும்புத்திரை 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும்.

சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி நடித்த படிக்காத மேதை
பச்சை விளக்கு புதிய பறவை மோட்டார் சுந்தரம் பிள்ளை எங்க ஊர் ராஜா உயர்ந்த மனிதன் ஆகிய 6 திரைப்படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி கணேசன் ராஜ சுலோசனா நடித்த படித்தால் மட்டும் போதுமா 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும். 

சிவாஜி தேவிகா நடித்த பாவமன்னிப்பு பலே பாண்டியா பந்த பாசம் அன்னை இல்லம் கர்ணன் சாந்தி ஆகிய 6 திரைப்படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜியுடன் மணிமாலா நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும்.

சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா நடித்த இரு மலர்கள் ஊட்டி வரை உறவு திருடன்
ராமன் எத்தனை ராமனடி சொர்க்கம் தவப்புதல்வன் பாரதவிலாஸ் தங்கப்பதக்கம் ஜெனரல் சக்கரவர்த்தி திரிசூலம்
 நான் வாழவைப்பேன்
 ரிஷி மூலம் சத்திய சுந்தரம்
நீதிபதி  கல் தூண் மிருதங்க சக்கரவர்த்தி சாதனை ஆகிய 17 திரைப்படங்கள் 100 நாள் திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி கணேசன் ஜெயலலிதா நடித்த கலாட்டா கல்யாணம் எங்க ஊர் ராஜா தெய்வமகன் எங்கிருந்தோ வந்தாள் சவாலே சமாளி ராஜா பட்டிக்காடா பட்டணமா நீதி அவன்தான் மனிதன் ஆகிய 9 திரைப்படங்கள் 100 நாள் திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி கணேசன் காஞ்சனா நடித்த சிவந்தமண் 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும்.

சிவாஜி விஜய் ஸ்ரீ நடித்த பாபு திரைப்படம் 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும்.

சிவாஜி கணேசன் விஜய நிர்மலா நடித்த ஞான ஒளி திரைப்படம் 100 நாள் திரைப்படம்.

சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ நடித்த உயர்ந்த மனிதன் வசந்த மாளிகை சிவகாமியின் செல்வன் வாணிராணி ஆகிய 4 திரைப்படங்கள் 100 நாள் திரைப்படங்கள்.

சிவாஜி கணேசன் மஞ்சுளா நடித்த எங்கள் தங்க ராஜா என் மகன் அவன் தான் மனிதன் மன்னவன் வந்தானடி உத்தமன் ஆகிய 5 படங்கள் 100 நாள் திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி கணேசன் உஷா நந்தினி நடித்த ராஜபார்ட் ரங்கதுரை கௌரவம் ஆகிய 2 திரைப்படங்கள் 100 நாள் திரைப்படங்கள்.

சிவாஜி கணேசன் சுஜாதா நடித்த தீபம் அண்ணன் ஒரு கோவில் அந்தமான் காதலி விஸ்வரூபம் வா கண்ணா வா தீர்ப்பு நீதிபதி சந்திப்பு  திருப்பம் ஆகிய 9 படங்கள்  100 நாள் திரைப்படங்கள்.

சிவாஜி கணேசன் லட்சுமி நடித்த தியாகம் படையப்பா ஆகிய 2 திரைப்படங்கள்  100 நாள் ஓடிய திரைப்படங்கள்.

சிவாஜி கணேசன் மாலினி பொன்சேகா நடித்த பைலட் பிரேம்நாத் 100 நாள் திரைப்படம் ஆகும்.

சிவாஜி கணேசன் ஜெயசுதா நடித்த பட்டாகத்தி பைரவன் 100 நாள் திரைப்படம் ஆகும்.

சிவாஜி கணேசன் ஸ்ரீபிரியா நடித்த திரிசூலம் 100 நாள் ஓடிய திரைப்படமாகும்.

சிவாஜி கணேசன் ஸ்ரீதேவி நடித்த விஸ்வரூபம் சந்திப்பு ஆகிய 2 படங்கள் 100 நாள் திரைப்படங்கள் ஆகும்.

சிவாஜி கணேசன் அம்பிகா நடித்த வாழ்க்கை திரைப்படம் 100 நாள் ஓடிய திரைப்படமாகும்.

சிவாஜி கணேசன் ராதா நடித்த முதல் மரியாதை திரைப்படம் 100 நாள் ஓடிய திரைப்படம் ஆகும் 

சிவாஜி கணேசன் வடிவுக்கரசி  நடித்த  படிக்காதவன் முதல் மரியாதை ஆகிய 2 திரைப்படங்கள் 100 நாள் ஓடிய திரைப்படங்கள் ஆகும்.

தொகுப்பு :
செந்தில்வேல் சிவராஜ் 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற