திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜியின் 64 வகை முக பாவங்கள்

சிவாஜியின் 64 வகை முக பாவனைகள் 

ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!இத்தகைய அரிய திறமை வாய்ந்த நடிகர் நடிகர்திலகம் மட்டுமே! 
மனிதனின் முக உணர்ச்சி பாவங்கள் என்பது 8 வகை தான்.
அவை..
1சிரிப்பு 
2அழுகை
3பயம் 
4மகிழ்ச்சி 
5கோபம் 
6வீரம் 
இகழ்ச்சி 
8வியப்பு ..
இந்த எட்டு வகை பாவங்களை மெய்ப்பாடுகள் என்பார்கள்.
இப்படி எட்டு வகை பாவங்கள் தானே உள்ளது.பின் எப்படி 64 வகை பாவங்கள் என்ற கேள்வி பலருக்கும் வரலாம்.
அது பற்றிய விளக்கத்தை காண்போம்.
சிவாஜி  சிரித்துக் கொண்டே அழுவார்.அழுதுகொண்டே
சிரிப்பார் பல படங்களில்.கண்ணதாசனே பாவமன்னிப்பு படத்தில் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என்று பாடல் எழுதியிருப்பார்.
இதில் சிரிப்பும் அழுகையும் கலந்துள்ளது.
இப்படித்தான் இந்த எட்டுவகை பாவங்களில் இன்னொரு பாவமும் கலந்து வெளிப்படுத்துவது.
சிரிப்புடன் அழுகை 
சிரிப்புடன் கோபம் 
சிரிப்புடன் வியப்பு 
கோபமான சிரிப்பு 
கோபமான அழுகை
 கோபமான வீரம் 
என்பது போன்றவை...
முக்கியமாக எட்டுவகை பாவங்களும் அதன் ஒவ்வொன்றிலும் மற்ற ஒவ்வொரு பாவங்களும் கலந்து மொத்தம் 64 வகையான பாவங்கள் ஆகும்.
மிகப்பெரிய நடிகர்களாக இருந்தவர்கள் கூட இந்த எட்டு வகை பாவங்களையும் மீறினால் இதனுடன் ஒன்று அல்லது சில முக பாவங்களை தான் வெளிப்படுத்தி உள்ளார்கள். 
நடிகர் திலகத்தை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு முக பாவங்களை காட்ட முடியவில்லை.
அதனால்தான் கண்ணதாசன் கூட சிவாஜி பற்றி சொல்லும்போது, 90 வகையான பாவத்தை காட்டும் உன்னதத்தைச் சொல்வேனா ?என்று சொல்லி இருக்கிறார். 
இந்த 64 வகை முக பாவங்களுடன் மேலும் நுண்ணிய மெல்லிய விரிந்த உணர்ச்சிகள் என்று மூன்று வகை உணர்ச்சி பாவங்கள் உள்ளது .இந்த மூன்று பாவங்களையும் அந்த 64 வகை பாவங்களுடன் கலந்து வெளிப்படுத்தும் பாவங்களாக 192 வகை உணர்ச்சி பாவங்கள் 
இருக்கின்றன. இந்த 192 வகை உணர்ச்சி பாவங்களையும் நடிகர் திலகம் தன் முகத்தில் வெளிப்படுத்தி படங்களில் நடித்துள்ளார் என்பது பெரும் அதிசயம். அவற்றையெல்லாம் விவரித்து சொல்வது என்பது சாதாரண காரியம் அல்ல .
அதனால் நடிகர் திலகம் வெளிப்படுத்திய அந்த 64 வகை உணர்ச்சி பாவங்கள் என்னென்ன என்பதை புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். 


1சிரிப்பு 
2அழுகை
3பயம் 
4மகிழ்ச்சி 
5கோபம் 
6வீரம் 
7இகழ்ச்சி 
8வியப்பு ..

9 சிரிப்பும் அழுகையும்
10. சிரிப்புடன் கலந்த பயம் 
11. சிரிப்புடன் கலந்த மகிழ்ச்சி 
12 .சிரிப்புடன் கலந்த கோபம் 
13 .சிரிப்புடன் கலந்த வீரம் 
14. சிரிப்புடன் கலந்த இகழ்ச்சி 
15.சிரிப்புடன் கலந்த வியப்பு ..

16.அழுகையுடன் சிரிப்பு 
17.அழுகையுடன் கலந்த பயம்
18.அழுகையுடன் கலந்த மகிழ்ச்சி 
19.அழுகையுடன் கலந்த கோபம்
20.அழுகையுடன் கலந்த வீரம் 21.அழுகையுடன் கலந்த இகழ்ச்சி 
22.அழுகைடன் கலந்த வியப்பு ..

23.பயத்துடன் கலந்த சிரிப்பு 24பயத்துடன் கலந்த அழுகை 25.பயத்துடன் கலந்த மகிழ்ச்சி 26.பயத்துடன் கடந்த கோபம் 27.பயத்துடன் கலந்த வீரம் 28..பயத்துடன் கலந்த இகழ்ச்சி 29..பயத்துடன் கலந்த வியப்பு. 

30.மகிழ்ச்சியுடன் கலந்த சிரிப்பு 31.மகிழ்ச்சியுடன் கலந்த அழுகை 
32.மகிழ்ச்சியுடன் கலந்த பயம் 33.மகிழ்ச்சியுடன் கலந்த கோபம் 
34.மகிழ்ச்சியுடன் கலந்த வீரம் 
35.மகிழ்ச்சியுடன் கலந்த இகழ்ச்சி 
36.மகிழ்ச்சியுடன் கலந்த வியப்பு ..

37..கோபத்துடன் கலந்த சிரிப்பு 38.கோபத்துடன் கலந்த அழுகை
39. கோபத்துடன் கலந்த பயம் 40.கோபத்துடன் கலந்த மகிழ்ச்சி 
41.கோபத்துடன் கலந்த வீரம் 42.கோபத்துடன் கலந்த இகழ்ச்சி
43. கோபத்துடன் கலந்த வியப்பு ..

44.வீரத்துடன் கலந்த சிரிப்பு 45..வீரத்துடன் கலந்த அழுகை 46.வீரத்துடன் கலந்த பயம் 47.வீரத்துடன் கலந்த மகிழ்ச்சி 48.வீரத்துடன் கலந்த கோபம் 49.வீரத்துடன் கலந்த இகழ்ச்சி 50.வீரத்துடன் கலந்த வியப்பு 

51.இகழ்ச்சியுடன் கலந்த சிரிப்பு 52.இகழ்ச்சியுடன் கலந்த அழுகை 
53.இகழ்ச்சியுடன் கலந்த பயம் 54.இகழ்ச்சியுடன் கலந்த மகிழ்ச்சி 
55.கிழ்ச்சியுடன் கலந்த கோபம் 56.இகழ்ச்சியுடன் கலந்த வீரம் 57.இகழ்ச்சியுடன் கலந்த வியப்பு ...

58.வியப்புடன் கலந்த சிரிப்பு 59.வியப்புடன் கலந்த அழுகை 60.வியப்டன் கலந்த பயம்
61.வியப்புடன் கலந்த மகிழ்ச்சி
62.வியப்புடன் கலந்த கோபம்
63.வியப்புடன் கலந்த வீரம்
64.வியப்புடன் கலந்த இகழ்ச்சி.

இவைதான் அந்த 64 வகை முக பாவங்கள். 

மேற்கூறிய இந்த 64 வகை முக உணர்ச்சி பாவங்களையும் திரைப்படங்களில் நடித்து காட்டிய நடிகர்  உலகிலேயே சிவாஜி தான் .

செந்தில்வேல் சிவராஜ்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற