திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி படப்பிடிப்புகளில் நடந்த விபத்துக்கள்

சிவாஜிகணேசனுக்கு விபத்து ஏற்பட்ட திரைப்படங்கள்.
வணங்காமுடி திரைப்படத்திற்காக உயரமான மலைப்பகுதிகளில் படப்பிடிப்புநடைபெற்றது.
படத்தின் கதைப்படி வேறு நாட்டுக்கு நாடு கடத்தப்படும் சிவாஜி ஒரு மலைநாட்டுக்கு செல்வார்.அங்கே சிவாஜிக்கும் 
அந்த நாட்டை சேர்ந்த வீரனுக்கும் சண்டை நடக்கும்.பெரிய பாறைகள் மலை சரிவுகளில் அந்த சண்டை நடைபெறும்.அப்போது 100 அடி உயரத்தில் இருந்து சிவாஜி அவர்கள் கீழே விழுந்திருப்பார்.அதிலிருந்து தப்பித்து விட்டார்.இதைபற்றி நடிகர்திலகமே கூறும்போது 100 அடி உயரத்தில் இருந்து விழுந்திருப்பேன்.ரசிகர்களின் நல்லாசியால் நான் தப்பி பிழைத்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.சிவாஜியவர்கள் கடவுள் பக்தி மிக்கவராக இருந்தாலும் தான் தப்பியதற்காக ரசிகர்களைத்தான் சொல்லிஇருக்கிறார் இது குறிப்பிட வேண்டியது.இறை நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைத்தான் குறிப்பிடுவார்கள்.
இது 1957 ல்..


முரடன் முத்து படத்தில் ஒரு சண்டை காட்சியில் காலில் நல்ல அடி பட்டு விட்டது.அந்த வலியுடன் தொடர்ந்து அந்த சண்டை காட்சியில் நடிக்க முற்பட்ட போது வலி அதிகமாக இருந்தது.பிசியாக இருந்த சிவாஜி அந்த கால்ஷீட்டை வீணாக்காமல் நவராத்திரி படத்தில் வரும் குஷ்டரோகி கேரக்டரில் நடித்து முடித்தார்.குஷ்டரோகி தரையில் தவழ்ந்து வருவது போன்ற காட்சி அந்த சமயத்தில் தான் எடுக்கப்பட்டது.

உயர்ந்தமனிதன் திரைப்படத்துக்காக க்ளைமாக்ஸ் காட்சியில் தீப்பற்றிஎரியும் குடோனுக்குள் இருக்கும் சிவக்குமாரை சிவாஜி சென்று  காப்பாற்றுவது போல் காட்சி படமாக்கப்பட இருந்தது.எரியும் குடோனுக்குள் இருக்கும் பீப்பாய்களை காலால் தட்டிவிட்டு சிவக்குமாரை காப்பாற்ற வேண்டும்.உள்ளே சென்ற சிவாஜி 
சிவக்குமாரை தோளில் தூக்கி ஓடி வருவார். இந்த காட்சி படம் ஆக்கத்தின் போது நடிகர்திலகத்தின் உடலில் சிறிது தீக்காயமும் ஏற்பட்டது. உடனே சுதாரித்து  செய்ததால் பெரிய தீக்காயம் ஏற்படாமல் தப்பித்தார். 

நடிகர்திலகம் நடித்த முதல் மலையாள படமான தச்சோளிஅம்பு படத்திற்கு 
1977 ல் படப்பிடிப்புக்காக கேரளா சென்று இருந்தார் .சரித்திர கதை திரைப்படம் இது.இந்த படத்திற்காக வாள் சண்டை காட்சி ஒன்று படம் பிடிக்கப்பட்டபோது ,கையில் வாளுடன் உயரமாக குதித்து சண்டை செய்யும் காட்சியின் போது நடிகர்திலகம் தவறுதலாக கீழே விழுந்து கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது.இதற்காக சிகிச்சை 
எடுத்துக் கொண்ட போது கையில் பிளேட் வைக்க வேண்டியதாகி விட்டது.


சிவந்தமண் திரைப்படத்தில் புரட்சி செய்யும் வீரனாக நடித்திருப்பார்  நடிகர்திலகம்.இப் படத்தின் காட்சியொன்றில் மலையடிவாரத்தில் புரட்சிகாரர்களை அடக்குவதற்காக ஹெலிகாப்டரில் வந்து குண்டுகளை வீசுவதான  காட்சியில் நடிகர்திலகம் ஓடி வருவார்.அப்போது விரைந்து வரும் ஹெலிகாப்டர் நடிகர்திலகத்தின் தலையை உரசி செல்வது போல் வரும்.அந்த நேரத்திலும் நடிகர்திலகம்  ஹெலிகாப்டர் மிக நெருக்கமாக வருவதை அதன் சத்தத்தை வைத்தே அறிந்து திடீரென்று அங்கே இருந்த குழியில் குதித்து தப்பி விட்டார் .ஒரு விநாடி தாமதம் செய்திருந்தாலும் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.படத்தில் இந்த காட்சியை பார்க்கும் போது நம்மால் நன்றாக உணர முடியும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம் பெற்ற போர்க்கள காட்சி ஒன்றில் காட்சிக்காக நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
நடிகர்திலகம் குதிரையில் வரும் போது மிக அருகில் ஒரு குண்டு வெடித்துவிட ஒரே புகை மூட்டம் ஏற்பட்டுவிட்டது.அந்த புகை மூட்டத்தில் நடிகர்திலகத்திற்கு என்ன ஆனது என்றே படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு தெரிய முடியாமல் போனது.இயக்குனர் பந்துலு மிகவும் பதறிப் போய்விட்டார்.சிறிது நேரம் கழித்து கையிலும் காலிலும் சிராய்ப்பு காயங்களுடன்திரும்பி வந்ததை பார்த்து அங்கே இருந்தவர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள் .குண்டு அருகில் வெடித்ததால் குதிரை மிரண்டு தாறுமாறாக ஓடிச் சென்றதாகவும் புகை மூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியவில்லை எனவும்,குதிரை கீழே விழுந்ததில் தனக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாகவும்,பிறகு ...
தான் சமாளித்து குதிரையில் ஏறி வந்ததாகவும் சிவாஜி அவர்கள் கூறினார்.இதைக் கேட்ட படப்பிடிப்பு குழுவினர் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள்.

ரோஜாவின் ராஜா படப்பிடிப்பின் போது படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டை காட்சியில் நடித்த போது எதிர்பாராத விதமாக காலில் பாதத்தில் அடி பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.காலில் அடிபட்டதற்கு கட்டு போட்டிருந்த நிலையில் டெல்லி சென்று இந்திராவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் பிளவுபட்டிருந்த இரு பிரிவினையும் இணைக்க வைக்கும் முயற்சிகளில் சிவாஜியவர்கள் முயற்சி செய்தது இந்த சமயத்தில்தான்.

அந்தமான்காதலி படத்தில் வரும் பணம் என்னடா பணம் பணம் என்ற பாட்டுக்கும் ,
தியாகம் படத்தில் வரும் உலகம் வெறும் இருட்டு பாட்டுக்கும் அதற்கு முன் நடித்த படங்களில் காலில் அடிபட்ட  காயம் ,வலியுடனே நடித்திருப்பார்.

செந்தில்வேல் சிவராஜ்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற