திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி அம்சம் என்பது இதுதான்...

சிவாஜி அம்சம் என்பது இதுதான்..
அந்த மலை பாரு எவ்வளவு பெரிசா இருக்கு.அந்த மலை மாதிரி எதுவும் இல்லையே.அந்த மலை உருவாகறதுக்கு முன்னாலேயே  மலைகள் இருந்துச்சே .ஆனா அந்த மலை மாதிரி இல்லையே .
அந்த மலை மாதிரி எத்தைனையோ மலைகளும் உருவாகியிருகே.ஆனாலும் அந்த மலை மாதிரி உயர்வா இல்லையே .ஏன்?
அது ..மலைன்னா என்னான்னா தெரிஞ்சுக்தான் முதல்ல உருவான மலைகள்.ஆனா ஒரு மலை எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுக்க உருவான மலைதான் ஆரம்பத்துல சொன்ன அந்த உயர்ந்த மலை.
அந்த மலை மாதிரித்தான் கலையுலகத்துலே சிவாஜிகணேசனும்.
சிவாஜியைப் போலே எத்தனையோ கலைஞர்கள் இருக்கலாம்.ஒரு கலைஞன் எப்படி இருக்கணும்னு  உருவானவர்தான் சிவாஜிகணேசன்.

குளம் ,குட்டை ,கடல்னு பல விதத்தில தண்ணி இருக்கு.கடல்  பெரிசா இருந்தாலும் உப்பு கரிக்கும் .குடிக்க முடியாது .குளம் குட்டையெல்லாம் தேங்கி நிக்கற தண்ணி.
சுத்தமிருக்காது.
ஆறு அப்படியில்லே .
ஓடிக்கிட்டே இருக்கும்.போற இடமெல்லாம் விவசாயம் நல்லா நடக்கும்.ஓடிக்கிட்டே இருக்கறதாலே கிருமிகள் சேராது.குடிக்கவும் உபயோகமாகும்.அதை போலத்தான் நல்ல கலைஞனோட உபயோகமும் இந்த சமூகத்துக்கு பயன்படறதா இருக்கணும்.சிவாஜி படங்களும் ஓடற ஆத்துத் தண்ணி மாதிரித்தான்.

சூறைக்காத்து குப்பை கூளத்தையெல்லாம் கலந்தடிச்சு கொண்டு வந்து சேக்கும்.ஊழிக்காத்து பேயாட்டம் ஆடி அந்த இடத்தை நாசமாக்கும்.இந்த தென்றல் காத்து,அது வீசுனா வீசிக்கிட்டே இருக்கக்கூடாதான்னு ஏங்க வைக்கும்.இது நிக்கக்கூடாதுன்னு நெனக்க வைக்கற காத்து.அந்த மாதிரியான கலைப் படைப்புக்களைத்தான் ரசிக ஜனங்களும் எதிர் பார்ப்பாங்க.அந்த தென்றல் காத்து மாதிரித்தான் சிவாஜி படங்கள்.

மழை மனுஷ குலத்துக்கு அவசியமான ஒண்ணுதான்.அதுவே நொசநொசன்னு பேஞ்சுகிட்டே இருந்தா இதென்னடா விவஸ்தை கெட்ட மழையா இருக்கேன்னு சொல்ல வெச்சிடும்.அடிச்சு நொறுக்கற மழை எல்லாத்தையும் அழிச்சுடும்.விளைஞ்ச பயிர் பச்சையெல்லாம் நாசமாகிடும்.விதைப்புக்கு தேவையான மழை வந்தா வயிறு நெறையும்.
குளிர்ச்சிக்கு தேவையான மழை வந்தா மனசு நெறையும்.இந்த ரெண்டையும் செய்யற மாதிரி ஒரு கலைஞனோட கலைப்படைப்புகள் இருக்கணும்.இதுல நெறஞ்சி வழிஞ்ச சினிமா சிவாஜி சினிமா.

நெருப்புனா சுடத்தான் செய்யும்.பொங்கி சாப்பிட நெருப்பில்லாமே ஆகுமா?
அழிக்கிற நெருப்பும் இருக்கு.காட்டு நெருப்பு போலே.சினிமாலே வன்முறை ,கெட்டதை பாத்து  தப்பா போனவங்க இருக்காங்க.ஒரு கலைஞனோட சேவை சமுகத்துக்கு பயன்படறமாதிரி இருக்கணும்.உலை வைக்க நெருப்பு பயன்படறமாதிரி.அந்த வகையிலே தான் சிவாஜி படங்களும்.

இந்த ஆகாயத்தை பாருங்க.பாத்துகிட்டே இருக்கலாம்.போரடிக்குதா? 
அது சூட்சுமமான விஷயம் .நாம புரிஞ்சிக்கிறதுலே இருக்குது.ஒண்ணுமே இல்லைன்னா ஒண்ணுமே இல்லைதான்.அந்த ஆகாயம்தான் எல்லா நட்சத்திரங்களையும் பல கோள்களையும் வெச்சிருக்கிற இடமா இருக்குது.ஆகாயம் ஒரு அதிசயம்.புரிஞ்சவங்களுக்கு  அது பேரதியம்.
புரியாதவங்களுக்கு அது ஒண்ணுமேயில்லே.அது அவங்கவங்க அறிவை பொறுத்தது.அது போலத்தான் சிவாஜியை புரிஞ்சிக்கிறது.சிவாஜி படங்களை புரிஞ்சிக்கிறது.

திருக்குறளை வள்ளுவர் பத்து பத்து அதிகாரமா உலகத்துக்கு வேண்டியதை சொல்லியிருப்பார்.ஒரு நல்ல கருத்தையே பத்து விதமா சொல்லலாம்.சிவாஜி படங்களை எடுத்துக்கங்க.
பாசம்னா பத்து படம்.கடமைன்னா ஒரு பத்து படம்.வீரம்னா ஒரு பத்து படம்.சிநேகம்னா பத்து படம்.இப்படி  பல.ஒரு நல்ல விஷயத்தையே பத்து விதமா சொன்னது சிவாஜி படங்கள்.

நாம எப்படி வாழணும் ,எப்படி நடக்கணும்னு நாம தெரிஞ்சுக்கத்தான் மகான்கள் ,தியாகிகள் வாழ்ந்தது, பேசுனது ,எல்லாம் .
அதெல்லாம் தான் மனுஷ வாழ்க்கைக்கு உபயோகமா இருந்துச்சு.மகான்களை அதிகமா தெரிஞ்சுக்க முடிஞ்சதுக்கு காரணம் எழுத்தும் ,நாடகமுந்தான் .
எழுத்து பல பேருக்கு தெரியாம இருக்கலாம்.ஆனா நாடகம் அப்படியில்லே.அப்படி நாடகத்துலே அதிகமா செஞ்சது  யாரு? அதுலே தான் நிக்கறாரு கணேசமகா கலைஞன்.

மகாகணபதியை அந்த கணேசனை முதலில் துதி
அவன் பார்த்துக் கொள்வான் மீதி
கலையுலகில் கணேசன் தான்  முதல்  படி 
அவன் சொல்வான் உனக்கொரு கோடி..

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற