திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

அன்னைஇல்லத்தின் அரசனடா

அன்னைஇல்லத்தின் அரசனடா
அவருக்கு இணையில்லை எவருமடா
ராஜாமணி ஈன்ற சிங்கமடா
சின்னையா போலே தங்கமடா
நடிப்பில் அவனே வேந்தனடா
ரசிகனுக்கு அவனே திலகமடா!
(அன்னை இல்லத்தின்..)

உலகம் போற்றிய கலைஞனடா
உயர்பண்பில் அவன்தான்மனிதனடா 
கலைகளும் அவனிடம் தஞ்சமடா
கற்காத அவனோரு மேதையடா 
எதிரியும் மயங்கும் நடிகனடா
எல்லைகள் இல்லா சிகரமடா
(அன்னை இல்லத்தின்..)

நடிப்பே அவனுக்கு வேதமடா
நடிகருக்கெல்லாம் அவனே பாடமடா
தேவர்க்கெல்லாம் பொருந்திய உருவமடா
தேகமெல்லாம் நடிப்பை கொண்டவனடா
மண்ணில் உதித்த அதிசயமடா
மகேசனை காட்டிய முகமடா
(அன்னை இல்லத்தின்..)

எவனடா இவரைப் போலே எவனடா 
என்றுமே இவரே உச்சமடா
தமிழனுக்கு இவரால் பெருமையடா 
தரணியெல்லாம் வியந்த மனிதனடா
இல்லை இவருக்கோர் இணையடா 
இவர் பெயரே ஆண்ட மன்னன் சிவாஜியடா..
(அன்னை இல்லத்தின் ..)

செந்தில்வேல் சிவராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற