திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி பத்மினியின் 100 நாள் திரைப்படங்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்மினி ஜோடியாக நடித்து 100 நாள் ஓடிய திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை இந்த பதிவில்  பார்க்கலாம்.
சிவாஜி கணேசன் பத்மினி சேர்ந்து நடித்த  திரைப்படங்கள்.

பணம்
அன்பு
இல்லறஜோதி
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
தூக்கு தூக்கி
எதிர்பாராதது 
காவேரி
கோடீஸ்வரன்
மங்கையர் திலகம்
ராஜா ராணி 
அமர தீபம்
புதையல்
 பாக்கியவதி
உத்தம புத்திரன்
 தங்கப்பதுமை
மரகதம்
தெய்வப்பிறவி
புனர்ஜென்மம் 
ஸ்ரீவள்ளி 
செந்தாமரை
 நான் வணங்கும் தெய்வம்
பேசும் தெய்வம்
பாலாடை
 திருவருட்செல்வர்
இருமலர்கள்
திருமால் பெருமை
தில்லானா மோகனாம்பாள் விளையாட்டு பிள்ளை
வியட்நாம் வீடு
இரு துருவம்
குலமா குணமா
தேனும்  பாலும்
தாய்க்கு ஒரு தாலாட்டு 
லட்சுமி வந்தாச்சு. 
என்று கிட்டத்தட்ட 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள்.

மேலே சொன்ன திரைப்படங்களில் 
13/4/1954ல் வெளிவந்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்மசாரி 100 நாள் ஓடி வெற்றி கண்ட திரைப்படம் ஆகும் .இது பந்துலு தயாரித்த திரைப்படம் ஆகும் .இந்தப் படத்தை டைரக்ட் செய்தவர் 
பா.நீலகண்டன் .சிவாஜி நடித்த முழு நீள நகைச்சுவை திரைப்படம் ஆகும்.

சிவாஜி பத்மினி நடித்து அடுத்து 100 நாள் ஓடிய வெற்றி வாகை சூடிய திரைப்படம் தூக்கு தூக்கி.
இந்த திரைப்படத்தில் பத்மினியின் சகோதரி லலிதாவும் நடித்திருப்பார் .
டி எம் சௌந்தரராஜன் இந்தப் படத்தில் இருந்துதான் சிவாஜிக்கு பாடத் தொடங்கினார். இந்த திரைப்படம் வெளிவந்த தேதி 26 8 1954 .

இந்தப் படத்துக்கு அடுத்தபடியாக வெளிவந்த எதிர்பாராதது திரைப்படமும் 100 நாள் ஓடி வெற்றி கண்ட திரைப்படம்.இந்த திரைப்படம் வெளிவந்த தேதி 9 12 54. இது தேசிய விருது வாங்கிய திரைப்படம். ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய திரைப்படம். யாரும் எதிர்பாராத கதை அமைப்பில் உருவான படம் எதிர்பாராதது.

அடுத்ததாக 13 1 1955 இல் சிவாஜி பத்மினி நடித்து வெளியான திரைப்படம் காவேரி .இந்தத் திரைப்படம் 100 நாள் ஓடி  வெற்றி கண்ட திரைப்படம் ஆகும் .இதில்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதன்முதலாக பரதநாட்டியம் ஆடும்படி காட்சி அமைக்கப்பட்டிருந்தது .
இந்தத் திரைப்படத்திலும் பத்மினியின்  சகோதரி லலிதா நடித்திருப்பார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்மினி சாவித்திரி ஆகிய மூவரும் இணைந்து நடித்து 29 6 56 இல் வெளிவந்த படம் அமரதீபம்.இந்தத் திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படமாகும்.  ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய இந்த திரைப்படம் மிகப்பெரிய பெயரை  பெற்றுத்தந்தது.இந்தப் படத்தின் இயக்குனர் 
T.பிரகாஷ் ராவ். தமிழில் நல்ல வெற்றி அடைந்ததால் இந்தப் படத்தை  சிவாஜி ஹிந்தியில் அமர்தீப் என்ற பெயரில் சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். ஆனால் ஹிந்தியில் சிவாஜி நடிக்கவில்லை.

அடுத்து சிவாஜி பத்மினி நடித்து 100 நாள் ஓடிய வெற்றி திரைப்படம் புதையல் .இந்தப் படம் வெளிவந்த தேதி 10.5.57.இந்தப் படத்துக்கு வசனம் கருணாநிதி. திரைப்படத்தில் கண்டிராஜா கூத்து ஓரங்க நாடகமாக அமைக்கப்பட்டு இருந்தது.
கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்கிய திரைப்படம் இது .

சிவாஜி பத்மினி நடித்த அடுத்து 100 நாள் ஓடிய திரைப்படம் பாக்கியவதி. இந்த திரைப்படம் வெளிவந்த தேதி 27 12 57.
சிவாஜி Antihero வாக  நடித்த படங்களில் இதுவும் ஒன்று .இந்தப் படத்தின் இயக்குனர் எல் வி பிரசாத்.

சிவாஜியின்  45 வது திரைப்படம் உத்தமபுத்திரன். சிவாஜி இரட்டை வேடங்களில் தூள் கிளப்பிய படம். இதில் கதாநாயகியாக நடித்தவர் பத்மினி. வெளிவந்த தேதி
 7 2 58 .சிவாஜி தன் மாறுபட்ட நடிப்பால் திரையுலகை அதிர வைத்த படம். 100 நாள் ஓடியதுடன் நல்ல வசூலை பெற்று தந்த படம்.

10 1 1958 ல் வெளியான சிவாஜி பத்மினி ஜோடியாக நடித்த தங்கப்பதுமை 100 நாள் ஓடிய வெற்றி  படம் .இது தேசிய விருது பெற்ற படம்.

சிவாஜி பத்மினி நடித்த 21.8.59ல் வெளிவந்த திரைப்படம் மரகதம் .இந்த படம் இலங்கையில் 100 நாள் ஓடிய திரைப்படம். அந்தக் காலத்தில் பிரபலமான,பரபரப்பான  கருங்குயில் குன்றத்து கொலை என்ற நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் .

13.4. 60 இல் வெளிவந்த சிவாஜி பத்மினி ஜோடியின் தெய்வப்பிறவி திரைப்படம் 100 நாள் வெற்றி திரைப்படம் ஆகும். தேசிய விருது பெற்ற திரைப்படம். இந்தப் படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன் பஞ்சு.

1 7 61 வெளிவந்த சிவாஜி பத்மினி நடித்த திரைப்படம் ஸ்ரீள்ளி. இது இலங்கையில் 100 நாள் ஓடிய படம்.

1. 11 .67 இல் வெளிவந்த திரைப்படம் இருமலர்கள். இதில் கே ஆர் விஜயா பத்மினி ஆகிய  இருவரும் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்திருந்தார்கள் .இது 100 நாள் ஓடி வெற்றி கண்ட திரைப்படம் .

இது போன்ற ஒரு படம் உதாரணம் சொல்ல தமிழ் சினிமாவில் இல்லை என்னும்படி வெளிவந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். 27.7.68ல் வெளிவந்த சிவாஜி பத்மினி ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் 
100 நாள் ஓடிய படம் .

சிவாஜி ப்ரொடக்சன் தயாரித்த படம் வியட்நாம் வீடு. வெளிவந்த தேதி 11. 4. 70 .
பிராமண தம்பதியர்களாக சிவாஜி பத்மினி நடித்த இந்த காவியம் 100 நாள் ஒடி வெற்றி கண்ட சித்திரம் ஆகும்.

அடுத்து சிவாஜி பத்மினி ஜோடியாக நடித்து 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம் குலமா குணமா .குலமா குணமா வெளியான தேதி 26. 3.71 .
கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம் இது .

செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற