திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

மாதம் 2 படமாக 40 முறை ரிலிசான சிவாஜி படங்கள்

ஒரே மாதத்தில் நடிகர் திலகம் இரண்டு  படங்களை வெளியிட்ட சாதனைகள் .
இந்த சாதனையை 40 முறை நிகழ்த்தியுள்ளார் நடிகர் திலகம். தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து கடைசிவரை இந்த சாதனைகளை இடை விடாமல் செய்துள்ளார் நடிகர் திலகம். திரை உலகில் அபூர்வமான அதிசயமான இந்த சாதனைகளின் விபரம். 
 
1..
1953 ஆம் ஆண்டு ..
ஜூலை மாதம்..
 நடிகர் திலகம் நடித்த இரண்டு படங்கள் வெளியானது.
முதன் முதலாக 10.7.53 ல் 
திரும்பிப்பார் திரைப்படமும் ,
24.7.53 ல் அன்பு திரைப்படமும் வெளியானது .

2...
இதே ஆண்டு  நவம்பர் மாதம்  ..
நடிகர் திலகம் நடித்து இரண்டு படங்கள் வெளியானது.
5.11.53 ல் கண்கள் திரைப்படமும்,
12.11.53 ல் 'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படமும் வெளியானது .
53 ஆம் வருடம் இச்சாதனை இரண்டு முறை நிகழ்த்தப்பட்டது 

3...
1954 ஆம் ஆண்டு..
9.4. 54 இல் இல்லற ஜோதி திரைப்படம்,
13.4.54ல் அந்த நாள் திரைப்படம்,
13.4.54 ல் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என
இந்த மாதத்தில் மூன்று படங்கள் வெளியானது.
அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்கள் ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது .

4...
3.6.54 ல் மனோகரா தெலுங்கு திரைப்படம் ,மனோகரா ஹிந்தி திரைப்படம் வெளியானது.

5...
இதே ஆண்டில் 26.8.54 ல்
கூண்டுக்கிளி ,தூக்குத் தூக்கி ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த வருடம்  மூன்று முறை இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

6..
1955 ல்...
13 .11. 55 ல் கோடீஸ்வரன் ,கள்வனின் காதலி ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியானது. 

7...
1956 ல்..
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் மூன்று படங்கள் வெளியானது.
14. 1 .56 ல் நான் பெற்ற செல்வம் ,நல்ல வீடு ஆகிய இரு படங்கள் ஒரே நாளிலும் ..
25.1.56 ல் நானே ராஜா திரைப்படமும் வெளியானது.
இதே ஆண்டில் பிப்ரவரி மாதம் 
நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் வெளியானது.

8....
3. 2. 56 இல் தெனாலிராமன், 
17 .2 .56 இல் பெண்ணின் பெருமை ,
25 .2. 56ல் ராஜா ராணி ஆகிய மூன்று படங்கள் வெளியானது .
1956 ல் ஜனவரி மாதம் மூன்று படங்கள், பிப்ரவரி மாதம் மூன்று படங்கள் என இரண்டு மாதத்தில் ஆறு படங்களை வெளியிட்டு  சாதனை செய்தார் சிவாஜி ..
இந்த வருடம் இச் சாதனை 2 முறை...

9......
1957 ஆம் ஆண்டு..
10. 5 .57 ல் புதையல் திரைப்படமும் ,
17 .5. 57 இல் மணமகன் தேவை திரைப்படமும் வெளியானது .

10....
1959 ஆம் ஆண்டு...
30 .10 .59 இல் அவள் யார் திரைப்படமும் 
31.10.59 இல் பாகப்பிரிவினை திரைப்படமும் வெளியானது .

11....
1960 ஆம் ஆண்டு..
19. 10 .60 ல் பாவை விளக்கு திரைப்படம் ,பெற்ற மனம் திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது .

12...
1961.ஆம் ஆண்டு..
1. 7 .61 ல் எல்லாம் உனக்காக ஸ்ரீவள்ளி  ஆகிய இரண்டு படங்கள் வெளியானது .

13....
1963 ஆம் ஆண்டு..
1.3.63 ல் அறிவாளி திரைப்படமும்,
29.3.63 ல் இருவர் உள்ளம் திரைப்படமும் வெளியானது.

14....
இதே ஆண்டில் செப்டம்பர் மாதம்,
14. 9 63 ல்  ரத்தத் திலகம் திரைப்படம் ,
20.9.63 ல் கல்யாணியின் கணவன் படங்கள் வெளியானது .
இந்த ஆண்டில் இந்தச் சாதனை இரண்டு முறை ..

15....
1964ஆம் ஆண்டு..
3.11.64 ல் முரடன் முத்து நவராத்திரி ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியானது.

16....
1967 ஆம் ஆண்டு..
1.11.67 ல் இரு மலர்கள், ஊட்டி வரை உறவு ஆகிய இரு  படங்கள் ஒரே நாளில் வெளியானது.

17.....
1968 ஆம் ஆண்டு...
11.4.68 ல் ஹரிச்சந்திரா திரைப்படமும்,
12.4.68 ல் கலாட்டா கல்யாணம் திரைப்படமும் வெளியானது.

18..
இதே ஆண்டில் ,
15.11.68 ல் லட்சுமி கல்யாணம் திரைப்படம்,
29.11.68 ல் உயர்ந்த மனிதன் திரைப்படம் வெளியானது.
இந்த வருடத்தில் இந்தச் சாதனை இரண்டு முறை ..

19....
1969 ஆம் ஆண்டு..
14.6.69 ல் குரு தட்சணை திரைப்படம்,
27.6.69 ல் அஞ்சல் பெட்டி 520 திரைப்படம்  வெளியானது .

20....
1970 ஆம் ஆண்டு...
6.2.70 ல் தர்த்தி  ஹிந்தி திரைப்படம் ,
20.2.70 ல் விளையாட்டு பிள்ளை திரைப்படம்  வெளியானது .

21....
இதே ஆண்டில் ,
29.10.70 ல் எங்கிருந்தோ வந்தாள் , சொர்க்கம் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியானது .
இந்த வருடத்தில் இந்தச் சாதனை இரண்டு முறை. 

22...
1971 ஆம் ஆண்டு...
5.3.71 ல் அருணோதயம் திரைப்படம்,
26.3.71 ல் குலமா குணமா திரைப்படம் வெளியானது.

23....
இதே ஆண்டில் தொடர்ச்சியாக 
மறு மாதமே ,
13.4.71 ல் பிராப்தம், சுமதி என் சுந்தரி ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியானது .

24...
இந்த  ஆண்டில்  ஜூலை மாதம் நடிகர் திலகம் நடித்து இரு படங்கள் வெளியானது.
3.7.71 ல் சவாலே சமாளி திரைப்படம்,
22.7.71 ல் தேனும் பாலும் திரைப்படம் வெளியானது .
இந்த ஆண்டு இந்த சாதனை மூன்று முறை நிகழ்த்தப்பட்டது ..

25....
1973 ஆம் ஆண்டு ...
மார்ச் மாதம்..
24.3.73 ல் பாரதவிலாஸ் திரைப்படமும்,
31.3.71 ல் ராஜராஜ சோழன் திரைப்படமும் வெளியானது.

26....
இதே  ஆண்டிலேயே டிசம்பர் மாதம் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் வெளியானது.
7. 12. 73 ல் மனிதரில் மாணிக்கம் திரைப்படம் ,
22.12.73 ,ல் ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம் வெளியானது.
இந்த வருடத்தில் இச் சாதனை இரண்டு முறை ..


27...
1975 ஆம் ஆண்டு...
நவம்பர் மாதம்...
2.11.75 ல் வைர நெஞ்சம், டாக்டர் சிவா ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியானது.

28....
1977 ஆம் ஆண்டு...
ஜனவரி மாதம் ..
.14.1.77 ல் அவன் ஒரு சரித்திரம் திரைப்படம்,
26.1.77 ல் தீபம் திரைப்படம் வெளியானது.

29......
1978 ஆம் ஆண்டு...
மார்ச் மாதம் ..
4.3.78 ல் தியாகம் திரைப்படம்,
18.3.78 ல் என்னைப் போல் ஒருவன் திரைப்படம் வெளியானது .

30....
1982 ஆம் ஆண்டு..
பிப்ரவரி மாதம் மூன்று படங்கள் வெளியானது.
5.2.82 ல் ஊருக்கு ஒரு பிள்ளை திரைப்படம்,
இதற்கு மறுநாள் 6.2.82 ல்
வா கண்ணா வா திரைப்படம்,
25.2.82 ல் கருடா சௌக்கியமா என இந்த மாதத்தில் மூன்று படங்கள் வெளியானது.

31....
இதே ஆண்டு மே மாதம் ...
7.5.82 ல் வசந்தத்தில் ஒரு நாள் திரைப்படம்,
21.5.82 ல் தீர்ப்பு திரைப்படம் வெளியானது.

32...
இதே  ஆண்டில் இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம், 
3.9.82 ல் தியாகி திரைப்படம்,
12.9.82 ல் 'நிவுரு  கப்பின நிப்பு' தெலுங்கு திரைப்படம் வெளியானது .

33..
இதே  ஆண்டில் இதன் தொடர்ச்சியாக நான்காவது முறையாக நவம்பர் மாதத்தில் 
14.11.82 ல் பரீட்சைக்கு நேரமாச்சு, ஊரும் உறவும் ஆகிய  இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிட்டார் .
1982 ஆம் ஆண்டில் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை நான்கு முறை வெளியிட்டு சாதனை செய்துள்ளார் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
திரையுலகில் யாரும் செய்யாத சாதனை இது. நடிகர் திலகம் தன்னுடைய 54 ஆவது வயதில் செய்த சாதனை இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

34...
1983 ஆம் ஆண்டு...
ஜனவரி மாதம் ..
14.1.83 ல் 'பெஜவாடா பெப்புலி' என்ற தெலுங்கு திரைப்படம்,
26.1.83 ல் நீதிபதி திரைப்படம் வெளியானது.

35....
1984 ஆம் ஆண்டு ..
செப்டம்பர் மாதம் ...
14.9.84 ல்..
இரு  மேதைகள், தாவணிக்கனவுகள் ஆகிய இரண்டு படங்கள்  ஒரே நாளில் வெளியானது .

36...
1985 ஆம் ஆண்டு..
மார்ச் மாதம் ..
8.3.85 ல் நாம் இருவர் திரைப்படம்,
23.3.85 ல் படிக்காத பண்ணையார் திரைப்படம் வெளியானது.

37...
1986 ஆம் ஆண்டு..
ஜனவரி மாதம் ..
10.1.86 ல் சாதனை திரைப்படம்,
26.1.86 ல் மருமகள் திரைப்படம் வெளியானது.

38....
1987 ஆம் ஆண்டு...
ஜனவரி மாதம் ..
14.1.87 ல் ராஜ மரியாதை திரைப்படம்,
26.1.87 ல் குடும்பம் ஒரு கோவில் திரைப்படம் வெளியானது.

39....
இதே ஆண்டில் மே மாதம் இரண்டு படங்கள் வெளியானது.
1.5.87 ல், விஸ்வநாத நாயக்கடு' தெலுங்கு திரைப்படம் ,
16.5.87 ல் அன்புள்ள அப்பா திரைப்படம் வெளியானது.

40...
இதே ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதம் மூன்று  படங்களை வெளியிட்டார் .
14.8.87 ல் 'அக்னிபுத்ருடு'  தெலுங்கு திரைப்படமும்,
28.8.87 ல் ஜல்லிக்கட்டு திரைப்படமும் ,
இதே நாளில் மற்றொரு படமான கிருஷ்ணன் வந்தான் திரைப்படமும் வெளியானது.
1987 ஆம் வருடம் இந்தச் சாதனை மூன்று முறை நிகழ்த்தப்பட்டது.

இப்படி ஒரே மாதத்தில் இரண்டு படங்களை 40 முறை வெளியிட்டு அரிய சாதனை செய்திருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ..

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற