திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜியின் சம்பவங்கள்

இது முதல் படமா ?
தமிழ் திரை மண் அதிர்ந்த சம்பவம்.
1952...

வசனமா ? நடிப்பா ?
யாரிந்த வி.சி.கணேசன்.
கணேசனுக்கு முன் இருந்த பட்டம் சொல்லியது..
அவர் சிவாஜி என்று...
திரையுலகில் இனி அவர் தவிர்க்க முடியாத நடிகர் மட்டுமல்ல,யாராலும் தடை செய்ய முடியாத நடிகர் என்று ஓர் நாளில் முடிவானவர்...

பராசக்திக்கு பின்பு வந்த பணம்.இதில்தான் அறிமுக நடிகர் போலே நடிப்பு.பராசக்தியில் 100 படம் நடித்ததை போல் நடிப்பு.ஆனால்  அதற்கு அடுத்த வெளியான பணம் படத்தில் அவ்வளவு ஆள் மாறாட்டம்.நம்பவே முடியவில்லையே ..அறிமுக படத்தில் புயலாக வந்த நடிகனா இவன் ?

தமிழ்திரை கலையிலே புரட்சி நடிப்பை கொடுத்து தமிழ் மண்ணை கிடு கிடுக்க வைத்து 
ராஜ அரியாசனத்தில் அமர்ந்து விட்டான் கணேசன் .அவரை சமுதாய பாபியாக,வில்லனாக நடிக்க வைத்தால் திரையுலகம் ஏற்குமா ?அதற்கு முன் கணேசன் நடிக்க ஒத்துக் கொள்வாரா ?இரண்டும் நடந்தது திரும்பிப்பார் படத்தில்.

சமூக படங்களுக்குத்தான் கணேசன் சரிப்படுவான் என்றும் பேசப்பட்டது.பிரசாத் எடுத்த மனோகரா அதை உடைத்தது.செந்தமிழும் 
நாப்பழக்கம் என்றாலும் ,கணேசனுக்கு அது ஓர் பிறவி வரம்.

பாட்டில்லாத படத்தை யார் பார்ப்பார்கள் ?ரசிப்பார்கள் என்ற விதியும் கணேசனால் மாற்றப்பட்டது.எந்த நாள் ஆனாலும் இப் படத்தை பற்றி சொல்ல அந்தநாள் என்று பெயர் வைத்தார்களோ ? பாட்டில்லாத படம்,தேச எதிரி என்று நடிக்க அந்தநாளில் யாருக்கும் இல்லாத தைரியம் கணேசனுக்கு இருந்தது.

ரயில் போலே சீராக சிவாஜி படங்கள் வந்து கொண்டிருந்தது..
ஒவ்வொரு படத்திலும் புதிது புதிதான சிவாஜியை மக்கள் பார்த்தார்கள்.
இந்த வரிசையில்...

இருவரும் ஒரே உருவம்.இருவரும் சகோதரர்கள்.குணம் வேறு வேறு..வளரும் விதம் அப்படி.
விக்ரமன்..
பார்த்திபன்..
மக்கள் சொன்ன தீர்ப்பு..
இதுவரை நாங்கள் பார்த்திருக்காத நடிப்பு இது ...
உத்தமபுத்திரன்..
நடிப்பில் உலக மகா உன்னதம்...

அந்த தெருக்கூத்து  கணேசனால் பார்க்கப்பட்டது.
அது அவருக்காகவே படைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது அவர் நடித்த பிறகு.தெருக்கூத்து பார்த்ததுக்கும் ,அவர் திரையில் நடித்ததற்கும் இடைவெளி 20 வருடங்களுக்கு மேல் இருக்கலாம்.கட்டபொம்மனை தன் உடம்பில் பொருத்திக் காட்டிய போது தான் உலகம் வியந்தது..போற்றியது..
உலகிற் சிறந்த கலைஞனை இந்திய திரு நாடு வைத்திருக்கிறது என்று...

'ப ' எழுத்து தொடக்கத்தில் படையெடுத்தன சிவாஜி படங்கள்.ஒவ்வொன்றும் சிகரங்கள்.
பாசத்தை சொன்னது...
பணிவைச் சொன்னது..
பண்பாட்டை சொன்னது...
கர்வம் இல்லாத கலைஞனைப் பார்த்து கர்வம் கொண்டது தமிழ் சினிமா ..
வாடாத பாசமலர்
 திகட்டாத பாலும் பழமும்
மனிதம் சொன்ன பாவமன்னிப்பு...
என்று பலப்பல...

முந்தைய தலைமுறை பார்த்த மனிதப் புனிதரை,தன் தலைமுறையில் பார்க்க வைத்த நடிப்பு புனிதன் நடிகர்திலகம்.
வ.உ.சிதம்பரனார்..
வெள்ளையனை எதிர்த்து...
அலையெழும் கடலிலே கப்பல் ஓட்டினார் வஉ.சி..
தமிழன் வீரம் காட்டினார் ..
தன்மானத்தை ஊட்டினார் ..
அவரை பிரதியெடுத்தார் ... திரைக்கடலிலே தோற்றுவித்தார் ..
நடிகர்திலகம் சிவாஜி...

ஒரு தேரோட்டி மகனா சபையேறுவது ?அர்ஜுனனுக்கு எதிராக வில்லெடுப்பது ?
அவன் புஜ பல பராக்கிரமம் பார்த்து அரசையே கொடுத்தான் துரியோதனன்.
அவன் சூரிய குலத்தவன் .
யாரையும் சுட்டெரிக்க முடிந்தவன்.
கொடுப்பதிலே வஞ்சம் வைக்காதவன்.
அவன் கர்ணன்..
மா..பாரதம் மகாபாரதம்..
மகா காவியம் கர்ணன்...
கர்ணனுக்கு கவசம்
சிவாஜிக்கு நடிப்பு..

சிவாஜியின் சதம்...
தமிழ் திரைக்கே அது உன்னதம்
நவராத்திரி...
நடிப்புக்கும் நடிகனுக்கும் போட்டி..
சிவாஜி செய்ததெல்லாம் வேடமா ?
கூடு விட்டு கூடு பாய்ந்த விஷயமா ?
அவர் செய்துவிட்டார் சாதாரணமாக !
நினைக்க தான் தோன்றுகிறது ...
இது சாத்தியமா ?

சிவாஜியின் ஒரு நூறு..
அது..
அதிசயமான வரலாறு...

செந்தில்வேல் சிவராஜ்..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற