கௌரவம் படத்துலே பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேஷத்துக்கு சிவாஜி படம் பூராவூம் புல்ஹேன்ட் சர்ட்தான் போட்டிருப்பாரு.அந்த முழுக்கை சட்டன் பட்டனை லாக் செய்யாமா போட்டிருப்பாரு.படத்துலே ஒரு காட்சியிலே டைம் பாக்கறதுக்காக கீழ்க்கையிலிலே இருந்து சட்டையை மேலே உருவுவார் பாருங்க. அதை கூட எவ்வளவு ஸ்டைலிசா பண்ணியிருப்பாரு.
இது ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் படத்துலே அவர் பண்ணுத பாக்க ரொம்ப அழகாயிருக்கும்.இதைப் பாத்து ரொம்ப பேர் பாலோவும் பண்ணியிருக்காங்க.
அதே மாதிரி புதிய பறவை படத்துலே வெள்ளை கலர் பேன்ட் சட்டை போட்டுகிட்டு ,சட்டை ரொம்ப மெல்லிசா ,டிரான்ஸ்பரண்டா இருக்கும்.,சட்டைய இன்பண்ணி மேல்பட்டன் போடாம அவர் நடிச்சதும் ரொம்ப பேருக்கு பேஷனா இருந்துருக்கு.
நீதி படத்துலே ஒரே டிரஸ்தான் போட்டு நடிச்சிருப்பாரு.
எங்களது பூமி பாட்டுக்கு மட்டும்
வெள்ளை சட்டை பேன்ட்லே வருவாரு.நீதி படத்துலே கர்சீப்பை தலையிலே கட்டி நடிச்சதும் ஒரு ஸ்டைலா இருக்கும்.
பராசக்தி படத்துலே கூட பைத்தியக்கார வேஷத்துக்கு மாறுனதுக்கு அப்புறம் ,அந்த தொப்பியை போட்ட பின்னாலே அவரோட ஸ்டைலும் மாறிப் போயிரும்.
தெய்வமகன் படத்துலே ஆரம்பகாட்சிலே அப்பாவா வர்ற சிவாஜி புல் கோட் சூட்டோட அறிமுகம் ஆகற காட்சி ரொம்ப ஸ்டைலிசா இருக்கும்.சிவாஜியோட ஸ்டைலுக்காகவே அந்த காட்சியை மறுபடி மறுபடி பாக்க வைக்கும்.இந்த புல் கோட்சூட்டை மகன் கண்ணன் கடைசி காட்சிலே போட்டு நடிச்சிருப்பார்.அதுவும் ஒரு ஸ்டைலிசா இருக்கும்.
வசந்தமாளிகை படத்துலே வர்ற ஏன் ஏன் ஏன் பாட்டுக்கு சிவாஜி போட்டுட்டு வந்த டிரஸ் ஏக அமர்க்களமா இருக்கும்.இந்த போட்டோ பிரிண்ட் ஆன அளவுக்கு,பப்ளிசிட்டி ஆன அளவுக்கு வேற எதும் இருக்காது.இந்த கலர்லே கோட்சூட் போட்டு வேற யாரும் நடிச்ச மாதிரி தெரியலே.
சுமதி என் சுந்தரி படத்துலே பொட்டு வைத்த முகமோ பாட்டுக்கு கலர் செக்டு ஆப் ஹாண்ட் சர்ட் போட்டு நடிச்சிருப்பாரு சிவாஜி.ரொம்ப சிம்பிளா இருக்கும்.படம் வந்தப்போ இந்த டைப் ஷர்ட்டுக ரொம்ப பேஷனா இருந்துச்சு.
ராஜா படத்துல வித விதமா கலர் கலரா கோட் சூட் போட்டு சிவாஜி நடிச்சிருந்தாலும் க்ளைமாக்சுக்கு முன்னாலே பாலாஜியோட சண்டை போடற காட்சியிலே போட்டுட்டு வர்ற டிரஸ்ஸோட அழகே தனிதான்.மஞ்சள் சட்டை மஞ்சள் பேன்ட்டோட கூடுதலா கழுத்துலே கட்டுன அந்த பிளாக் கலர் ஸ்கார்ப்பும் ,சிம்பிளா இருந்தாலும் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கும்.
ஞான ஒளியிலே பணக்கார வர்ற சிவாஜியோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் ரொம்ப நீட்டா இருக்கும்.இருந்தாலும் படத்துலே முற்பாதியிலே வர்ற ஆன்டனியோட காஸ்ட்யூம் அது வேற அட்ராக்க்ஷனா இருக்கும்.ஒரு கண்ண மறைச்சு கட்டுனஅந்த கறுப்பு மாஸ்க்,முக்கால் கால் பேன்ட்,பனியன்லே வர்ற சிவாஜி வேற லெவலா தெரிவார்.
எங்கள் தங்க ராஜா படத்துலே டாக்டரா வர்ற சிவாஜி ரொம்ப சிம்பிள் டிரஸ்சுலே வருவார்.பைரவனா வர்ற சிவாஜிக்காக காஸ்ட்யூம் எல்லாம் நல்லா கவனம் செஞ்சு செலக்ஷன் பண்ணியிருப்பாங்க.எல்லா காஸ்ட்யூமுமே அசத்தலா இருக்கும்.அதிலயும் குறிப்பா பச்சை கலர் கோட் போட்டு,கூலிங்கிளாஸ் மாட்டிட்டு வர்ற சிவாஜி ரொம்ப ரொம்ப ஸ்பெசல்.அட்டகாச பைரவனுக்கு ஏத்த மாதிரி இருக்கும் .
காஸ்ட்யூம்லே ஒரு பிரம்மாண்டத்தை சொல்லணும்னா கர்ணன் படத்தை சொல்லணும்.அவ்வளவு வெயிட்டான கவசம் மாதிரி ரொம்ப ஆபரணங்களை போட்டுகிட்டு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமா நிக்கறதும் ,வசனங்களை ஹை பிட்ச்சுலே பேசறதெல்லாம் சாதாரணமா? அடேங்கப்பான்னு சொல்லாமே இருக்க முடியுமா?
தங்கச்சுரங்கத்துலே நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது பாட்டுலே போட்டுட்டு வருவாரே .வொயிட் அண்ட் வொயிட்லே! அதுக்கு மேலே அந்த கேப்பு ..
தங்கச்சுரங்கத்துலே அத மறக்க முடியுமா?
ஊட்டி வரை உறவு படத்துலே காஸ்ட்யூம் எல்லாமே ரசிக்கிற மாதிரி இருக்கும்.வித விதமான டிரஸ்சுல சிவாஜி வருவார்.இருந்தாலும் கே ஆர் விஜயா பாடற தேடினேன் வந்தது பாட்டுலே அந்த வொயிட் அண்ட் வொயிட் டிரெஸ்ஸோட கவர்ச்சியே தனிதான்.
சிவந்தமண் படத்துலே ஹெலிகாப்டர் குண்டு வீசற காட்சியிலே சிவாஜி போட்டுட்டு வர்ற அந்த அரக்கு நிற டிரஸ்சுலே சிவாஜி ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பாரு..அது ஒரே கலர் பேன்ட் சட்டை தான்.
ராமன் எத்தனை ராமனடி படத்துலே நடிகரான பின்னாலே நம்பியார் வீட்டுக்கு வர்றப்போ சிவாஜியோட டிரஸ் அழகா இருக்கும்.
இப்படி நிறைய படங்கள்லே ரொம்ப சொல்லிகிட்டே போகலாம்.
இந்த இடத்துலே ஒரு சம்பவத்தை சொல்லணும்.குறவஞ்சி பட ஷூட்டிங் சமயத்துலே பைத்தியக்கார வேஷத்துலே நடிச்ச சிவாஜி அந்த ஷுட்டிங் டயத்துலே செஞ்ச சம்பவத்தை மறக்க முடியாது.அந்த காட்சி படமாகுற நாளிலே சிவாஜி போட்டு நடிக்க வேண்டிய டிரஸ்ஸை படப்பிடிப்பு குழுவை சேந்தவங்க கொண்டு வந்தாங்க.அது விலை உயர்ந்த துணியிலே தைச்சிருந்தாங்க.
அதப் பாத்த சிவாஜி,
ஏப்பா ,நானோ இப்ப நடிக்கப் போறது பைத்தியக்கார வேஷத்துலே.இந்த வேஷத்துக்கு இவ்வளவு காஸ்ட்லியா டிரஸ் போட்டு நடிச்சா பாக்கறவங்களுக்கு உறுத்தாதான்னு சொன்ன சிவாஜி பக்கத்துலே பாத்தார்.அங்க கீழே ஒரு சாக்கு இருந்துச்சு.நான்இந்த காட்சியிலே பைத்தியக்காரனாத்தானே நடிக்கப் போறேன் .அதனாலே இந்த காஸ்ட்யூம்தான் பொருத்தமா இருக்கும்னு சொல்லி அந்த சாக்கு கட்டிகிட்டு நடிச்சார்.இதான் சிவாஜி..
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக