திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி படங்களை காப்பியடித்த தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவுல நடிகர் திலகம் நடிச்ச படங்களை காப்பி அடிச்சு பல படங்கள் வந்திருக்கு.
அதுல முக்கியமான சில படங்களை இந்த பதிவுலே நாம பாக்கலாம்.

1958 ல் வந்த சிவாஜி படம் சபாஷ் மீனா. இதுல சிவாஜியோடு சந்திரபாபு நடிச்சிருப்பார் .இந்த படத்துல சிவாஜி பணக்கார இளைஞனா இருப்பார். சிவாஜியோட நண்பரா சந்திரபாபு நடிச்சிருப்பார்.
இந்த கதையை அப்படியே உல்டாவாக்கி கார்த்திக் கவுண்டமணி நடிச்சு 1996 லே உள்ளத்தை அள்ளித்தா அப்படிங்கற படம் வந்துச்சு .
இந்தப் படத்துல கார்த்திக் பணக்கார இளைஞனா நடிச்சிருப்பார்.இந்தப் படத்தோட காட்சி அமைப்புகள் பெரும்பாலும் சபாஷ் மீனா படத்தை மையமாக வைச்சு எடுத்து இருப்பாங்க .


1963 வது வருஷம் வெளிவந்த சிவாஜி படம் நான் வணங்கும் தெய்வம்.  இந்த படத்துல விஞ்ஞானியா வர்ற நாகையா தான் கண்டுபிடிச்ச வித்தியாசமான மருந்தை சிவாஜி உடம்புக்குள்ளே செலுத்துவார்.அந்த மருந்தோட வீரியத்தாலே சிவாஜி விகாரமா  மாறி மிருக குணத்துக்கு மாறிடுவார்.இந்த ஒரு கருவை வைச்சு  பிரபு நடிச்சு 1989 லே ஒரு படம் வந்துச்சு.அந்தப் படத்துல இறந்து போன ஒரு மனிதனுக்கு செலுத்தற மருந்து அவனை உயிர் பிழைக்க  வெச்சு மிருக குணத்துக்கு மாத்திரும்.நான் வணங்கும் தெய்வம் படத்தில ஒரு சின்ன பகுதியா வர்ற இந்த சம்பவ காட்சி நாளை மனிதன் படத்துலே புல்லா அமைச்சிருப்பாங்க.

1958 ல் வந்த சிவாஜியோட பெரிய வெற்றி படம் உத்தமபுத்திரன். 
இதுல சிவாஜி இரண்டு வேஷம் செஞ்சு  இருப்பார். அரச குலத்தில் பிறக்கிற ரெண்டு குழந்தைகளும்,
ராணியின் தம்பி அரசாள்வதற்காக இரட்டை குழந்தைகளை பிரிப்பதும், அதற்காக நம்பியார் செய்யும் சூழ்ச்சிகளும், படத்தின் கதையமைப்பாக இருக்கும்.இந்த மைய கருவை வைச்சு 2006 ல் வடிவேலு இரட்டை வேடங்களில் நடிக்க இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசின்னு  ஒரு படம் வந்துச்சு. இதை காமெடி படமாக எடுத்திருப்பாங்க.
உத்தமபுத்திரன் படத்துல சூழ்ச்சி செய்யறவரா நம்பியார் நடிச்சிருப்பார். இந்த வேசத்தை 23 ஆம் புலிகேசிலே நாசர் செஞ்சு இருப்பார். 

1960 லே சிவாஜி நடிச்சு பீம்சிங் இயக்கி வெளிவந்த படம் படிக்காத மேதை. ஒரு பணக்கார குடும்பத்துல தத்துப் பிள்ளையா சிவாஜி நடிச்ச  படம் படிக்காத மேதை. குடும்பத்துல நடக்குற பிரச்சனைகளால சிவாஜி அந்த வீட்டை விட்டு வெளியே போய் வாழற மாதிரி கதை.இந்தக் கதை அமைப்புல கமல் நடிச்சு வெளிவந்த படம் பேர்  சொல்லும் பிள்ளை. இந்தப் படம் 1987இல் வந்துச்சு. படிக்காத மேதைல சிவாஜி செஞ்ச கதாபாத்திரம் மாதிரி தான்  பேர் சொல்லும் பிள்ளை படத்தில் கமலோட பாத்திரமும் இருக்கும்.

1962 இல் வெளிவந்த சிவாஜி படம் ஆலயமணி. சிவாஜி சரோஜாதேவி எஸ்எஸ் ராஜேந்திரன் நடிச்ச படம் இது. சிவாஜி பணக்காரரா நடிச்சிருப்பார். சிவாஜியோட பிரண்டா எஸ் எஸ் ஆர் நடிச்சிருப்பார்.சிவாஜி சரோஜா தேவியை காதலிப்பார் சரோஜாதேவி எஸ் எஸ் ஆரை காதலிப்பார் .ஆனா சரோஜா தேவியை சிவாஜிதான் கல்யாணம் பண்ணிக்குவார். இந்தக் கதை அமைப்பில 1978லே ரஜினி கமல் ஸ்ரீபிரியா நடிச்சு வெளியான படம் இளமை ஊஞ்சலாடுகிறது .
இந்தப் படத்துல ரஜினி பணக்காரர்.ரஜினியோட பிரண்டா கமலும் கமலோட காதலியா ஸ்ரீபிரியாவும் நடிச்சிருப்பாங்க. ஆனா ஸ்ரீப்ரியாவை  ரஜினி கல்யாணம் செஞ்சுக்குவார். ஆலயமணியோட மைய கதையை வைச்சு  எடுத்த படம் தான் இளமை ஊஞ்சலாடுகிறது .

1969 லே வெளியான சிவாஜி படம் அன்பளிப்பு .சிவாஜி ஜெய்சங்கர் ரெண்டு பேரும் நண்பர்கள். சிவாஜியோட விவசாய நிலத்தை பாக்டரி கட்ட கேப்பாரு ஜெய்சங்கர் .அந்த விவசாய நிலத்த அப்படியே வேணாலும்  தரேன், ஆனா ஃபேக்டரி கட்ட வேண்டாம் அப்படின்னு சொல்லுவாரு சிவாஜி .இந்தப் பிரச்சனையால சிவாஜி ஜெய்சங்கர் ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க. அன்பளிப்பு படத்துல வர்ற இந்த முக்கியமான மையக் கருவை வைச்சு பல மாற்றங்களை செஞ்சு  ரஜினிய வச்சு அண்ணாமலை படம் வெளிவந்துச்சு. அண்ணாமலையில் ரஜினி சரத் பாபு ரெண்டு பேரும் நண்பர்களா வருவாங்க. அவங்க பிரிஞ்சு கடைசியில  ஒண்ணு சேருவாங்க .

சிவாஜி நடித்த வசந்த மாளிகை படத்தோட பாதிப்பு தான் கமலஹாசன் நடிச்ச வாழ்வே மாயம்.

1977 லே சிவாஜி நடிச்ச வெளிவந்த படமான நாம் பிறந்த மண் படத்தோட பாதிப்பு தான் 1996ல கமலஹாசன் நடிச்சு ஷங்கர் இயக்கி வெளிவந்த படம் இந்தியன். 
நாம் பிறந்த மண் படத்துல சுதந்திரப் போராட்ட வீரரா படத்தோட முற்பகுதியிலயும் ,நாடு சுதந்திரம் அடைஞ்ச  பின்னாலே நேர்மையான தியாகியாகவும் சிவாஜி செஞ்ச வேஷத்தைதான் இந்தியன் படத்துலே கமல் செஞ்சிருப்பார்.
தப்பான வழியிலே போற மகனை நாம்பிறந்த மண் படத்துலே சிவாஜி சுட்டுத் தள்ளிடுவார்.அதே மாதிரியே இந்தியன் படத்துலயும் அப்பா கமல் மகன் கமலை கொல்லற மாதிரி க்ளைமேக்ஸ் வெச்சிருப்பாங்க.

1969 ல சிவாஜி நடிச்ச வெளியான படம் நிறைகுடம். 
கதாநாயகனோட ஒரு செயலாலே நாயகியோட கண் பார்வை  பறி போயிடும்.கண் பார்வை பறி போன நாயகிக்கு கதாநாயகன் என்ன செய்கிறார் அப்படிங்கறது தான் நிறைகுடம் படத்தோட கான்செப்ட்.
இந்தப் படத்தோட இந்த ஒரு வரி கான்செப்ட் விஜய் நடிச்சு  வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தோட பொருந்தி போகும். 

தேசத்துக்கு துரோகம் பண்ற மகனை சுட்டுக் கொல்வார் காவல் அதிகாரியா வர்ற சிவாஜி தங்கப் பதக்கம் படத்தில.இந்த ஒரு வரி கான்செப்ட் தான் ரஜினி நடிச்ச வெளியான ஜெய்லர் படத்தோட பொருந்திப் போகும்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற