திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி படங்களில் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்



பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.பாட்டுக்கோட்டையார் என சிறப்புடன் அழைக்கப்பட்டவர்.இவர் சினிமாவுக்கு 1955 ல் இருந்துதான் எழுதத் தொடங்கினார்.1959 ல் இயற்கை எய்தி விட்டார்.அவர் மரணித்த போது வயது 29 தான்.சினிமாவுக்குகாக 180 பாடல்களுக்கு மேல்தான் எழுதி இருந்தார்.அவர் எழுதிய இந்த மொத்த பாடல்களில் 42 பாடல்களை சிவாஜி படங்களுக்கு எழுதி  இருக்கிறார்.இந்த வகையில் சிவாஜி படங்களுக்கு தான் 
அவர் அதிக பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கோன்ராதா ,மக்களை பெற்ற மகராசி,அம்பிகாபதி,புதையல்,உத்தமபுத்திரன்,பதிபக்தி,
தங்கப்பதுமை,அவள் யார்?பாகப்பிரிவினை,
இரும்புத்திரை,புனர் ஜென்மம் ஆகிய சிவாஜி படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார்.
இவருடைய பாடல்களில் பெரும்பாலும் சமூக சித்தாந்த கருத்துக்கள் மேலோங்கி இருக்கும்.எளிமையான வார்த்தைகளில் பொட்டில் அடித்தாற் போலே எழுதுவது இவருடைய பாணி...
நடிகர்திலகத்தின் எந்தெந்த படங்களுக்கு என்னென்ன பாடல்களை இவர் எழுதியுள்ளார் என்பதை பார்க்கலாம்.

ரங்கூன் ராதா (1956)
பட்டுக்கோட்டையார் 
நடிகர்திலகத்தின் படத்துக்கு பாடல் எழுதிய முதல் படம் ரங்கோன் ராதா.இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருந்தார்.
ஊரடங்கும் வேளையிலே உள்ளம் கவரும் சோலையிலே"
என்ற சுசீலா பாடிய பாடல்.
இரண்டாவது ,நாட்டுக்கொரு வீரன் பாடல்.இந்த பாடலை பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் ,ரத்னமாலா .

மக்களை பெற்ற மகராசி (1957)படத்துக்காக ,
ஓ மல்லியக்கா மல்லியக்கா எங்கிட்டு போறே என்ற ஒரு பாடலை இப்படத்துக்காக எழுதினார்.படத்தில் இடம் பெற்ற நாடக பாட்டு இது

அம்பிகாபதி (1957)படத்தில் வரும் ..
வரும் பகைவர் படை கண்டு என்ற இந்த பாடல் பட்டுக்கோட்டையார் எழுதியது .கவிதை வசன பாடலமைப்பில் TMS பாடடியிருப்பார்.

புதையல் (1957)
இந்த படத்துக்கு 3 பாடல்களை எழுதினார் பட்டுக்கோட்டையார்.
உனக்காக எல்லாம் உனக்காக பாடல் .சந்திரபாபு பாடிய பாடல்.சின்னச்சின்ன இழை பின்னி வரும் பாடல் .சுசீலா பாடியது.ஹலோ மைடியர் ராமி பாடல் .இதுவும் சந்திரபாபுவிற்காக...

உத்தம புத்திரன் (1958)
இந்த படத்துக்கு ஒரு பாடலை எழுதினார்.
மூளை நெறஞ்சவங்க என்ற இந்த பாடலை சீர்காழியும் ,TMSசும் பாடியிருந்தார்கள்.

பதி பக்தி (1958)
இந்த படத்தில் இடம் பெற்ற 10 பாடல்களையும் 
பட்டுக்கோட்டையார் எழுதினார்.
முதன்முதலாக நடிகர்திலகத்தின் படத்துக்கு எல்லா பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது
 இந்த படத்துக்குத்தான்.
இந்த பத்து பாடல்களில் ,வீடு நோக்கிஓடி வந்த நம்மையே,இந்த திண்ணைப்பேச்சு வீரரிடம் ,கொக்கரக்கோ சேவலே ,இறை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே பாடல்கள் மிகுந்தை வரவேற்பை பெற்றவை.சந்திரபாபு தனித்து பாடும் ராக் ராக் ராக் அண்ட் ரோல் பாடலும் பாப்புலர்.

தங்க பதுமை (1959)
இந்த படத்தில் மொத்தம் 15 பாடல்கள் .இதில் பத்து பாடல்களை எழுதி அசத்தினார் பட்டுக்கோட்டை கல்யாணசந்தரம்.
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே ...
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்....
பறித்த கண்ணைப் பதித்து விட்டேன்..
மருந்து விக்கிற மாப்பிளைக்கு..
பூமாலை போட்டு போன..
ஒன்றுபட்ட கணவனுக்கு...
முகத்தில் முகம் பார்க்கலாம்..
இல்லற மாளிகையில்...
விதி எனும் குழந்தை...
கொற்றவன் மூதுரை...
ஆகிய 10 பாடல்கள் பட்டுக்கோட்டையார் எழுதியவை.

அவள் யார் (1959)
இந்தப் படத்தில் மூன்று பாடல்களை எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .
அடக்கிடுவேன்"எஸ்.சி.கிருஷ்ணன் & டி.வி.ரத்னம் பாடியது.
சுகம் வருவது"ஜிக்கி & குழு பாடுவது 
"புது அழகை ரசிக்க வரும்"பிபி ஸ்ரீனிவாஸ் ஜிக்கிபாடியது..

பாகப்பிரிவினை (1959)பிள்ளையாரு கோயிலுக்கு"டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா பாடியது..
ஆட்டத்திலே பலவகை உண்டு"ஏ. எல். ராகவன், கே. ஜமுனா ராணி பாடியது என இரண்டு பாடல்களை எழுதினர்.

இரும்புத்திரை (1960) படத்துக்காக...
நெஞ்சில் குடியிருக்கும்"டி.எம்.சௌந்தரராஜன் & பி. லீலாபாடியது..
"ஆசை கொண்ட நெஞ்சு ரெண்டு"
பி. லீலா பாடியது..
மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய்"சீர்காழி கோவிந்தராஜன் பாடியது..
"கையிலே வாங்கினேன் பையிலே போடலை"திருச்சி லோகநாதன் பாடியது ..
ஆகிய நான்கு பாடல்களை எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ..

புனர் ஜென்மம் (1961)
கண்ணாடி  பாத்திரத்தில்",
"உருண்டோடும் நாளில் ,
என்றும் துன்பமில்லை" ,
ஆகிய மூன்று சுசீலா பாடிய பாடல்களும்..
எங்கும் துன்பமில்லை" டி.எம்.சௌந்தரராஜன் பாடியது..
உள்ளங்கள் ஒன்றாகி பாடல்,"ஏ.எம்.ராஜா &சுசீலா பாடியது..என இந்த படத்தில் 5 பாடல் எழுதினார்.

செந்தில்வேல் சிவராஜ்..
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற