திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

ராமாயண வரியை பாடலுக்கு எழுதிய கண்ணதாசன்

மயக்கமென்ன இந்த மௌனமென்ன ..
வசந்தமாளிகையில் இடம் பெற்ற இந்த பாடலின் மிக முக்கியமான வரி ஒன்றுஉண்டு.
இந்த வரியை கண்ணதாசன் எதிலிருந்து எடுத்து இந்த பாடலை உருவாக்கினார் என்பதை அறிந்தால் நாம் ஆச்சர்யப்படுவோம்.
கண்ணதாசன் கையாண்ட அந்த வரி என்ன?  எதை உதாரணமாக எடுத்து அந்த வரியை எழுதினார் என்பதை பார்க்கலாம்.
அதற்கு முன்பு இதற்கு ஆதாரமான ராமாயணக்கதை ஒன்று .
சீதையை கடத்தி சென்ற ராவணன் சீதையை ஒரு வனத்தில் சிறை வைத்தான் அது தான் அசோக வனம் ஆயிற்று.
சீதை எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க பலரையும் பல பகுதிகளுக்கு ராமன் அனுப்பி வைத்தான். அவர்களில் அனுமனும் ஒருவன்.அனுமனும் இலங்கையில் சீதையை சந்தித்து விட்ட பின் ,ராமன் எவ்வாறேனும் உன்னை மீட்பான் என்று சீதையிடம் சொல்கிறான்.சீதையும் அனுமன் மேல் நம்பிக்கை கொண்டாள்.
"சீதையை கண்டேன் "என்று ராமனிடம் சொல்ல என்ன சேதி சொல்கிறீர்கள் ? என்று சீதையிடம் அனுமன் கேட்க,திருமண இரவன்று ராமன் சொன்ன, இனி சிந்தையிலும் பிறிதொரு மாதை தொடேன் என்ற சத்தியத்தை சொல்லி ,கூடவே தன் கணையாளியையும் கொடுத்து அனுப்புகிறாள்.
கம்பனின் இந்த வரிகள் கண்ணதாசனின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.அந்த வரிகளின் பாதிப்பால் கவிதையும் எழுதி வைத்திருந்தார்.
இந்த இடம் இந்த ஒரு வரிதான் ,கம்பன் கையாண்ட இந்த வார்த்தைகளைத்தான் கண்ணதாசன் ,மயக்கமென்ன பாடலில் புகுத்தினார்.
மயக்கமென்ன இந்த மௌனமென்ன பாடலில் வரும் வரிகளான ,
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தில் நானும் தொடமாட்டேன் என்று கவிதையாக்கி வைத்திருந்தார்.
வசந்த மாளிகை படத்திற்காக கண்ணதாசன் எழுதி வைத்திருந்த கவிதைகள் தான் பாடல்களாக உருப்பெற்றது.யார் யாரோ கேட்டும் கொடுக்காத கண்ணதாசன் இந்த படத்துக்கு மட்டும் ஏன் தந்தார் ..
இந்த வரிகளை எந்த கதாநாயகன் பாடினால் உயிர் வரும் என்று ,தான் அறிந்து வைத்ததால்தான் வசந்தமாளிகை படத்துக்கு கொடுத்தார் கண்ணதாசன்.
கம்பனின் இதிகாச ராமாயண வரிகளை ஒரு காதல் பாடலுக்கு மாற்றிய   கண்ணதாசனின் சிறப்பை என்னவென்று சொல்வது .அதை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவர் போட்டு வைத்திருந்த கணக்கையும் என்னவென்று சொல்வது ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற