நடிகர்திலகம் குழந்தையை பாட்டுப்பாடி தாலாட்ட வெக்கறமாதிரி பல பாடல்கள் இருக்கு.அந்த ஒவ்வொரு பாட்டுமே ஒவ்வொரு விதமா வேற வேற நடிப்புல நடிச்சிருப்பார்.
நடிகர்திலகத்தோட எத்தனையோ தாலாட்டுப் பாட்டுக இருந்தாலும் இந்த வீடியோவுலே சொல்லப் போற இந்த ரெண்டு பாட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.ரெண்டுமே ஒரே சிச்சுவேசனுக்காக பாடற மாதிரி பாட்டுகள் தான்.ஆனா படங்க வெளி வந்த காலகட்டமும் சிவாஜியோட நடிப்பும் ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமா இருக்கும்.அந்த ரெண்டு பாட்டுகள் என்னென்ன ?
என்னென்ன படங்கள் ?அப்படிங்கறதை இந்த பதிவுலே பாக்கலாம்.
நடிகர்திலகம் நடிச்சு 1968 லே வெளியான படம் கலாட்டா கல்யாணம்.இதுலே சிவாஜி ஜெயலலிதா நாகேஷ் மற்றும் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிச்சிருப்பாங்க.
இந்த படத்துலே சிவாஜியும் நாகேசும் ,
அழுகின்ற குழந்தையை தாலாட்டு பாடி தூங்க வெக்கற மாதிரி பாட்டு.
வழக்கமா தான் பெத்த குழந்தையை தான் தாலாட்டு பாடற மாதிரி பாட்டுகள் தமிழ்சினிமாவுலே இருக்கும்.ஆனா இதுலே சிவாஜி வேற ஒரு குழந்தைக்காக தாலாட்டு பாடற மாதிரியான கதையமைப்பு.
வில்லனை மிரட்டறதுக்காக நாகேஷ் அவனோட குழந்தையை தூக்கிட்டு வந்துடுவார்.அந்த குழந்தை அழ ஆரம்பிக்கும்.இப்ப குழந்தையோட அழுகையை நிப்பாட்டணும்.இதுதான் இந்த பாட்டோட சிச்சுவேசன்.இதுக்காக சிவாஜி பாடற பாட்டுதான் அப்பப்பா நான் அப்பனல்லடா பாட்டு.இது தாலாட்டு பாட்டா இருக்கணும். ஆனா தேவை இல்லாமே வந்த பிரச்சினை வேற இது. அதனாலே தாலாட்டோட கலந்து அவங்க படற அவஸ்தையும் புலம்பி பாடற மாதிரி பாட்டிருக்கும்.இது கலாட்டா கல்யாணம் படத்துலே வர்ற பாட்டு.
சிவாஜி நடிச்சு 1981 லே வந்த படம் சத்தியசுந்தரம்.இந்த படத்துலேயும் அதே மாதிரி ஒரு பாட்டு இருக்கு. இந்த படத்துலே வர்ற ஒரு கதாநாயகி மாதவி.மாதவியோட கணவரா ஜெய்கணேஷ் நடிச்சிருப்பார்.மாதவி தான் பெத்த குழந்தையை கவனிக்காமே அடிக்கடி சினிமா கிளப்னு சுத்திட்டு இருக்கற பகட்டான கேரக்டர்.
இதுலே நடிகர்திலகம் வர்றதுக்கு உண்டான பார்ட் என்ன? சிவாஜியும் கே ஆர் விஜயாவும் ஆதர்ஷண தம்பதிகள்.ஒரு பிரச்சினையாலே அவங்க மகள் இறந்துடுவாங்க.சிவாஜி தம்பதி தங்களாலே முடிஞ்ச உதவிகளை பிரச்சினைகள் இருக்கற தம்பதிகளுக்கு செய்யற கேரக்டர்.இப்படி மாதவியை திருத்தி நல்லபடியா வாழ வைக்க அந்த குடும்பத்துக்குள்ளே வருவாங்க.
வழக்கம்போலே மாதவி வெளியே போயிடுவாங்க. அந்த குழந்தை, சிவாஜி,
VS ராகவன் தான் அப்ப இருப்பாங்க.குழந்தை அழ ஆரம்பிக்கும்.அதனாலே சிவாஜி அந்த குழந்தையை எடுத்து தாலாட்டுற பாடற மாதிரியும் , அதே சமயம் அந்த குடும்பத்து நிலைமையையும் கலந்து பாடற மாதிரி பாட்டு இருக்கும். அந்த பாட்டு அடங்கொப்பன் மவனே மம்மி உனக்கு டம்மி தானப்பா ..
கலாட்டா கல்யாணம் படத்துலே நடிச்சப்போ சிவாஜிக்கு வயசு 40.ரொம்ப ஸ்லிம்மா ஹேன்ட்சம்மா இருப்பார்.சத்தியசுந்தரம் படத்துலே நடிச்சப்போ வயசு 51.
ரெண்டு பாட்டோட சிச்சுவேசன் ஒண்ணா இருந்தாலும் கதைக்களம் வேற வேற.கலாட்டா கல்யாணம் படத்துலே தேவையில்லாமே வந்து சேந்த குழந்தைக்காக பாட்டு பாடற மாதிரி காட்சி அமைப்பு.சத்திய சுந்தரம் படத்துலே தேவையறிஞ்சு போன ஒரு குழந்தைக்கு பாடற பாட்டு.
இந்த ரெண்டு பாட்டுமே ஒரு வீடு ,ஒரு ரூம்னு ஒரே செட்டுக்குள்ளேயே பாட்டை எடுத்திருப்பாங்க.
ரெண்டு பாட்டுக்கும் இசை MS.விஸ்வநாதன்.ரெண்டு பாட்டையும் பாடியவர் TMS.ரெண்டு பாட்டையும் எழுதியவர் கண்ணதாசன்னு ஒரே யூனிட் வேலை செஞ்சிருப்பாங்க ரெண்டு பாட்டுக்கும்.
அப்பப்பா நான் அப்பனல்லடா பாட்டுலே ,குழந்தையை வெச்சுகிட்டு கதாநாயகன் படுகிற அவஸ்தையை சொல்லி , அது கூடவே பல சுவாராஸ்யமான விஷயங்களையும் பாட்டுலே எழுதியிருப்பார் கண்ணதாசன்.
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்,
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும் என்ற வரிகளில் அழகாக சொல்லியிருப்பார் கவிஞர்.
அதேபோலே ,
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன் என்று சொல்லி...
போகிற போக்கில் ..
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம் என்று..
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் சொல்லியிருப்பார்...
சத்திய சுந்தரம் பட பாட்டில்..
கடவுள் இதிலே உனக்கும் உறவோ
அவனின் அம்மா அப்பா எவரோ ..என்றும்...
தாயின் மடியே தமிழின் பெருமை
தாயின் மடியில் அமர்ந்தால் பெருமை..என்றும்..
பாடலை சிறப்பாக்கி இருப்பார்.
ரெண்டு பாட்டோட சூழ்நிலையும் ஒரு வகையிலே சோகமான சூழ்நிலை அப்படின்னு சொல்லலாம்.ஆனால் ,அந்த மாதிரி ஒரு எண்ணத்தையே இந்த ரெண்டு பாட்டுக்களும் வரவழைக்காது..
.ஒரு சோக சூழ்நிலையை கிண்டல், நகைச்சுவையா காமிச்சு ரொம்ப ரசிக்க வைக்கிற தாலாட்டு மாதிரியான பாட்டுகள் அப்படின்னுதான் சொல்லணும்.
ரெண்டு பாட்டுகளும் ஆரம்பிக்கறது தான் தெரியும்.சீக்கிரம் முடிஞ்சு போற மாதிரி இருக்கும்.அவ்வளவு ஸ்பீடு..
செந்தில்வேல் சிவராஜ்..
கருத்துகள்
கருத்துரையிடுக