திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி ரசிகன் சசிகுமார்

நடிகர் சசிகுமார் நடிகர் திலகத்துடன் இணைஞ்சு பல படங்களில் நடிச்சு இருக்கிறார் .
பாரத விலாஸ் ராஜபார்ட் ரங்கதுரை மனிதனும் தெய்வமாகலாம் என்னை போல் ஒருவன் போன்ற படங்களில் நடிகர் திலகத்துடன் நடிச்சவர் சசிகுமார் .
இவர் ராணுவத்தில் வேலை செய்தவர். சினிமா பீல்டுலே இருந்த ஆர்வத்தால சினிமாவில் நடிக்க வந்தார் .
நடிகர் சசிகுமாருக்கு சினிமாவுல ஒரு நல்ல பெயர் இருந்துச்சு.அரசியலை பொறுத்த வரை 
காமராஜர் மேல ரொம்ப பக்தி வைச்சிருந்தார் சசிகுமார் .சினிமா துறையில் தன்னோட குருவா சிவாஜிய ஏற்றுக்கொண்டவர்.
ராணுவத்தில் வேலை செஞ்சதால தேசியத்து மேல இவருக்கு  அக்கறை கொண்டவரா இருந்தார் .

காமராஜரோட ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காக ஊர் ஊராக போயி பிரச்சாரம் செஞ்சு அந்தக் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் சசிகுமார்.
சிவாஜி ரசிகர்  மன்றங்களை அதிகமா திறந்து வச்சசிருக்கார் சசிகுமார் .
நடிகர் சசிகுமார் போலவே நடிகர் ஸ்ரீகாந்த் சுருளிராஜன் குலதெய்வம் ராஜகோபால் பிரேம் ஆனந்த் இப்படி பல பேர் ஸ்தாபன காங்கிரசில் இருந்தாங்க.
சிவாஜி ரசிகர்கள் தங்களோட ஏரியாவுல சிவாஜி மன்றத்தை திறந்து வைக்கிறதுக்கு இவங்களத்தான் கூப்பிடுவாங்க. இதுல ரொம்ப முக்கியமானவர் சசிகுமார்.
சசிகுமார் எதை செஞ்சாலும் சிவாஜி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு அவரோட அனுமதியோடு செய்வார்.

1974 லே சசிக்குமார் சினிமா எடுக்க விருப்பமா இருந்தார்.அதுக்காக ஒரு கதையெல்லாம் ரெடி செஞ்சு வெச்சிருந்தார்.
சிவாஜியை மனசுலே வெச்சுகிட்டு அந்த கதையை எழுதியிருந்தார் சசிக்குமார்.சிவாஜியோட அப்பா சுதந்திரப் போராட்ட தியாகியா இருந்ததால, அவரையும் அவங்க அப்பாவையும் அதாவது சிவாஜியோட தாத்தாவையும் ..
அவங்க தலைமுறை வரலாறுகளை அந்த கதையிலே வர்றமாதிரி கதையெல்லாம் ரெடி பண்ணி வெச்சிருந்தார்.இந்த படத்துலே நடிகர்திலகம் சிவாஜியை ஒரு கௌரவ வேஷத்துலே நடிக்க வைக்கணும்கூட ஜடியாவெல்லாம் ரெடி பண்ணி வச்சிருந்தார்.

அந்த படத்துலே ஸ்ரீகாந்த் குலதெய்வம் ராஜகோபால் சுருளிராஜன் பிரேம் ஆனந்த் உள்பட சிவாஜி க்ரூப்பை சேந்தவங்களை நடிக்க வெச்சு அதை தேசிய படமா எடுக்குறதுக்கும் முயற்சி எடுத்துகிட்டு இருந்தார்.

படத்தோட ஆரம்பக்காட்சியா,ஒரு பூமி உருண்டை சுத்தற மாதிரியும் ,அந்த பூமி உருண்டை மேலே நடிகர்திலகம்  நின்னு ,
என்னோட பிள்ளைகளின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள், அப்படின்னு சிவாஜியை பேச வைக்கிற மாதிரியெல்லாம் படத்தை எடுக்கணும்னு பிளான் பண்ணி வெச்சிருந்தார்.

இப்படி படம் பண்ணுவதை சிவாஜியோட தம்பி சண்முகத்திடம் சொல்லி பெர்மிஷன் வாங்கவும் சசிக்குமார் இருந்தார்.இப்படி பண்ணப் போற விஷயத்தை தன்னோட நண்பரான சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஜெயமணி அவர்கள்கிட்டே சொல்லி வெச்சிருந்தார்.
சசிக்குமார் "எண்ணங்கள் ஆயிரம் ' ங்கற தலைப்புலே நாடகம் ஒண்ணையும் நடத்த திட்டமிட்டு இருந்தார்.அந்த நாடகத்தை அப்ப வந்துகிட்டு இருந்த சிவாஜி ரசிகன் புத்தகத்துலே தொடராக வெளியிடவும் ஐடியா பண்ணி வெச்சிருந்தார்.
சசிக்குமார் இப்படி பிளான் பண்ணி வெச்சி இருந்த நேரத்துல தான்,நகர சபை எலக்சன் நடக்க இருந்த நேரம்.
அந்த எலக்சன் பிரச்சாரத்திற்காக போயிட்டு வந்து இந்த வேலைகளை கவனிக்கிறதா பிளான் பண்ணி வச்சிருந்தார். பெரியவர் காமராஜரோட ஆட்சியை கொண்டு வரணும். அதுக்காக ரொம்ப உழைக்கணும். நம் அண்ணன் சிவாஜியோட முயற்சியில தான் இது எல்லாம் நடக்கும்னு ஜெயமணி கிட்ட பேசி வச்சிருந்தார்.
எண்ணுர்லே நடக்கிற கூட்டத்துலே சசிகுமார் கலந்துக்க முடிவு செஞ்சு வெச்சிருந்தார். ஒவ்வொரு தொகுதியா போயி புதிய உறுப்பினர்களை சேர்க்கணும், நீங்களும் என் கூட வாங்கன்னு ஜெயமணி கிட்ட சொல்லி இருந்தார்.
இந்த விஷயம் எல்லாம் அடுத்த மாச சிவாஜி ரசிகன் புத்தகத்தில் வந்தப்ப சசிகுமார் உயிரோட இல்ல. 22.8.1974 அன்னைக்கி சசிகுமாரோட மனைவி சமையல் செஞ்சுகிட்டு இருந்தாங்க .கேஸ் அடுப்பு திடீர்னு வெடிச்சு தீ வேகமாக பரவி சசிகுமார் மனைவி அதுல சிக்கிட்டாங்க .சசிகுமார் அப்போ  பக்கத்துல தான் இருந்தார். ஓடிப்போய் தன்னோட மனைவிய காப்பாத்த முயற்சி செஞ்சு அந்த தீயில அவரும் மாட்டிகிட்டார் .
தீக்காயம்  20% மட்டும் இருந்திருந்தா அதுல இருந்து மீண்டு வந்து விடலாம். சசிகுமார் அவருடைய மனைவி உடம்புல 50 சதவீதத்திற்கும் மேல தீக்காயம் பரவி இருந்ததால காப்பாத்துறது ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு. சசிகுமாரையும் மனைவியையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தாங்க.
சசிகுமார் பொழைக்கறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க டாக்டர்கள்.
தான் பொழைக்கிறது கஷ்டம்னு சசிகுமாருக்கு தெரிஞ்சே இருந்துச்சு.
கடைசி கடைசியா காமராஜரரையும் அண்ணன் சிவாஜியையும்  பார்க்காம தன்னோட மரணம் நிகழக் கூடாதுன்னு ,பக்கத்துல இருந்தவங்க கிட்ட காமராஜரையும் சிவாஜியையும்  கூப்பிட்டு வாங்கன்னு சொன்னார் சசிகுமார்.
இந்த விஷயம் காமராஜருக்கும் சிவாஜிக்கும் தெரிஞ்சது.
கண்ணீரோட  ஓடி வந்தார் காமராஜர் .
அந்த நேரத்துல கூட, எலக்சன் பிரச்சாரம் செய்ய தன்னால போக முடியாத நிலைமை ஏற்பட்டுடுச்சுன்னு சொல்லி ,கடைசியா 
"வந்தே மாதரம்"ன்னு  முடிச்சார்.
அந்த நேரத்திலும் சசிகுமாரோட  தேசிய உணர்வை பார்த்து காமராஜர் கண் கலங்கினார்.
அந்த நேரத்துல சிவாஜி வெளியூர்ல இருந்தார் .அதனால சசிகுமாரோட கடைசி உயிர்த்துடிப்பை சிவாஜியால பார்க்க முடியல .

23.8.1974 அன்னைக்கு சசிகுமார் இறுதிச் சடங்கு சிவாஜி மன்றத்தோட சார்பில் நடந்தது.இந்த இறுதிச் சடங்குல சிவாஜி மன்றத்தை சேர்ந்தவங்க 50 ஆயிரத்துக்கு மேல கலந்துட்டாங்க. சிவாஜி சிவாஜியோட தம்பி சண்முகம் சின்ன அண்ணாமலை மேஜர் சுந்தர்ராஜன் முத்துராமன் விகே ராமசாமி உள்பட பல பேர் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை கவனிச்சிட்டாங்க .
நடிகர் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகுமார் உடலை சிவாஜி முதல் முதலா பார்த்தப்போ துக்கம் தாங்காம மயக்கம் ஆனார்.சசிகுமாரோட இறுதி ஊர்வலத்தை சென்னை மாவட்ட சிவாஜி மன்ற துணைத் தலைவர் ஆர் பாண்டியன் புரசை குமரன் சைதை கோபால கிருஷ்ணன் எழில் மணி ஜெயமணி துரைக்கண்ணு தண்டாயுதபாணி உள்பட பலரும் முன்னால நின்னு செஞ்சு முடிச்சாங்க. சசிகுமாரோட  மனைவியோட உடலும் சசிகுமார் உடலோடு இறுதித் தகனம் செய்யப்பட்டது.
மாபெரும் தேசிய கலைஞனாக வாழ்ந்தவர் சசிகுமார்.
காங்கிரஸ் கட்சிக்காக ரொம்ப பாடுபட்டவர். காமராஜருக்கு அடுத்த படி சிவாஜியை தான் தொண்டர்கள் கொண்டாடி வர்றாங்கன்னு சசிகுமாருக்கு தெரியும்.

சிவாஜியோட உதவி இல்லாம அந்த காலகட்டத்துலே ஸ்தாபன காங்கிரசை கோட்டை ஏத்த முடியாதுன்னு  பல மேடைகள்ல பேசி இருக்கிறார் சசிகுமார்.

சசிகுமாரோட இழப்பு சிவாஜி  ரசிகர்களுக்கு ரொம்ப மன வருத்தத்தை தந்த நிகழ்வு ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற