நடிகர்திலகத்தின் சிறப்பு நெம்பர் பட வரிசையில் அமைந்த 1 25 50 75 100 125 150 175 200 225 250 275 வது திரைப்படங்கள் பற்றிய சிறப்பு விசேஷமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.பராசக்தி ..
திருச்சியிலே இருக்கற ஒரு நாடக கம்பெனியிலே சிவாஜியை டைரக்டர் ASA சாமி வந்து சந்திச்சு ஒரு விஷயத்தை சொல்றாரு.கணேஷ் நீ உடனடியா மெட்ராசுக்கு போகணும்.பராசக்தி படத்துக்காக போட்டோ ஷுட் எடுக்கறாங்கலாம்.நீ உடனடியா பிளைட்லே போன்னு சொல்றார்.
இதை பத்தி பின்னாலே சிவாஜி சொன்னப்போ போட்டோ ஷுட்டுக்காக பிளைட்லே போன நடிகன் நானாத்தான் இருப்பேன்.சிவாஜி அப்ப எந்த சினிமாலேயும் நடிச்சதில்லே.ஒரு சாதாரண நாடக நடிகனாத்தான் அப்ப இருந்தார்.படம் முடியறதுக்குள்ளே பல பிரச்சினைகள் சிவாஜிக்கு .
இந்த ஒரு படம் முடிஞ்சு அதுக்கு மேலே என்ன ஆகப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது.சிவாஜிக்கு முன்னாலேயே பல வருஷமா சினிமாலே நடிச்சிட்டு இருந்தாங்க.அப்படி பல பேரு துண்டு துக்கடா வேஷத்துலேதான் நடிச்சுட்டு இருந்தாங்க.அவங்க கூட கொஞ்சம் பிரபலமா இருந்தாங்க.சிவாஜி அப்படி கூட இல்லே.இப்படி இருந்த நிலை அன்னைக்கு.
இதெல்லாம் பராசக்தி ரிலிசாகி சாயந்தரம் வரைக்கும் இருந்த நிலைமை.
எல்லாமே மாறிப் போச்சு.அந்த படத்தாலே.
அடுத்த வருசமே 7 படங்கள்லே நடிச்சார் சிவாஜி.எப்பவுமே தயாரிப்பாளர்கள் சிவாஜியை சுத்தியே வந்தாங்க.
பராசக்தி முதல் வெளியீட்டுலேயே 40 வாரத்துக்கு மேலே ஓடுச்சு. இதை விட ஆச்சர்யம் என்னான்னா சிவாஜி நடிச்ச 125 வது படமான உயர்ர்ந்த மனிதன் வெளியானப்போ பராசக்தி செகண்ட் ரிலீஸ் ஆகி 100 நாள் ஓடுனது.பரபரப்பான ஒரு படமா எப்பவுமே பேசப்பட்டு வர்ற படமா பராசக்தி இருக்கு.
25 வது படம் கள்வனின் காதலி.பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு நாவல் எல்லாம் எழுதி ரொம்ப பெயர் வாங்குனவர் கல்கி .அவரோட ஒரு சமூக நாவல்தான் கள்வனின் காதலி.
சினிமாலே சகலகலாவல்லின்னு பானுமதியை சொல்வாங்க.அந்த பானுமதி கூட நடிக்க பெரிய நடிகர்களே தயங்குவாங்க.அப்படிபட்டவங்க தான் கள்வனின் காதலி படத்துலே சிவாஜிக்கு ஜோடியா நடிச்சாங்க.இதே பானுமதி சிவாஜியோட நடிச்ச ஒரு படத்துலே சிவாஜியோட நடிப்பை பாத்து அசந்து,அந்த பையனை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கன்னு சொல்லியிருக்கார்.
கல்கி இந்த கதையை 1937 ஆம் வருஷம் ஆனந்த விகடன்லே தொடரா எழுதுனார்.சினிமாவா சிவாஜி நடிப்புலே 1955 ஆம் வருஷம் வெளியாச்சு.
50 வது படம் சாரங்கதாரா.
1935 லே வெளி வந்த படம் சாரங்கதாரா.1936 லே மறுபடி நவீன சாரங்கதாரான்னு வெளியாச்சு.மூணாவது தடவையா சிவாஜி நடிச்சு 1958 லே வெளியான படம் இந்த சாரங்கதாரா.
இந்த படத்தை பத்தி ஆனந்த விகடன் தன்னோட விமர்சனத்துலே,ஒரு நாடகம் பாக்கற மாதிரி இருக்கு.சினிமா மாதிரி இல்லேன்னு எழுதி இருந்துச்சு.
நடிகர்திலகமே இந்தபடத்தை தயாரிச்சு இருக்கவே வேண்டாம்னு கருத்து தெரிவிச்சு இருந்தார்.
இந்த படத்தை பத்தி பேசறப்போ இதுலே வந்த
வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே பாட்டை சொல்லாமே இருக்க முடியாது.அவ்வளவு பேமசான பாட்டு.
இந்த படத்துக்கான சிறப்புன்னா சிவாஜியோட 50 வது படம் ,வசந்த முல்லை பாட்டு தான்.
75 வது படம் பார்த்தால் பசி தீரும்.
சிவாஜி ஜெமினின்னு ரெண்டு பெரிய கதாநாயகர்கள் நடிச்சிருப்பாங்க.சாவித்திரி சௌகார் ஜானகி சரோஜாதேவின்னு மூணு பெரிய நடிகைகள் நடிச்சிருந்தாங்க.
இந்த பட டைடட்டில் கார்டுலே என் பேரைத்தான் முதல்லே போடணும்னு, மூணு நடிகைகளும் பிரச்சினை செஞ்சாங்க.அதனாலே AVM ,உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்னு டைட்டில்லே போட்டுருச்சு.சிவாஜி பேரு கூட இல்லே .இது பத்தி சாவித்திரி சொன்னப்போ ,நான்தான் சீனியர்,என் பேரைத்தான் முதல்லே போட்டு அடுத்ததா சரோஜாதேவி பேரை போட்டு ,அதுக்கு அடுத்ததா சௌகார் பேரை போட்டிருக்கலாம்.ஆனா சரோஜாதேவி பிரச்சினை பண்ணி இருக்கலாம்.படத்துலே நம்ம நடிப்புதான் முக்கியம் .பேருக்காக சண்டை போட வேண்டிய அவசியம் இல்லேன்னு இதை பத்தி சொல்லியிருந்தார் சாவித்திரி.
பட டைட்டில்லே முதல்ல சரோஜாதேவி போட்டோ அடுத்ததா சிவாஜி ஜெமினி சாவித்திரி மேலேயும் அதுக்கு கீழே சௌகார் தங்கவேலு சரஸ்வதி மாஸ்டர் கமல் போட்டோக்களை காட்டியிருப்பாங்க.
இந்த படம் திருலோகசந்தர் டைரக்ஷனலே உருவாக இருந்துச்சு.படத்தோட பார்ட்னர் பீம்சிங்தான் டைரக்ஷன் பண்ணனும் சொன்னதாலே திருலோக சந்தர் கதை மட்டும் எழுதினார்.பீம்சிங் டைரக்சன் செஞ்சார்.ராணுவ வீரனா ஆரம்ப காட்சிகள்லே நடிச்சிருப்பார் சிவாஜி. படம் முழுக்க கால் ஊனமுற்ற வேஷத்துலே காலை இழுத்து இழுத்து சிவாஜி நடிச்ச நடிப்பு ரொம்ப பேசப்பட்ட ஒரு விஷயம்.
இந்ததிரைப்படம் தெலுங்கு மொழியில பவித்ர பிரேமாங்கற பேருலே டப்பிங் செஞ்சு வெளியாச்சு.
100 வது படம் நவராத்திரி.
AP.நாகராஜன் மேலே சின்ன சங்கடம் இருந்தது சிவாஜிக்கு.
இடையிலே நாகராஜனோட சில நடவடிகக்கைககள் தான் காரணம்.நாகராஜன் ஒரு வித்தியாசமான கதையை ரெடி செஞ்சு வெச்சிருந்தார்.அந்த கதையிலேசிவாஜி மட்டும் தான் நடிக்க முடியும்னு நம்பிக்கை அவருக்கு.தான் நேரிடையா போயி சிவாஜியை பாத்து பேச முடியாத நிலைமை அந்த கால கட்டம்.விகே ராமசாமி சிவாஜியோட பெஸ்ட் பிரண்டு அப்படிங்கறதாலே அவர் மூலமா டிரை பண்ணினார்.விகே ராமசாமிக்காக நாகராஜன்கிட்டே கதை கேட்டார் சிவாஜி.கதை ரொம்பவே வித்தியாசமா இருந்தது.அது சிவாஜியோட நடிப்பு வெறிக்கு சரியான தீனி போடற மாதிரி அமைஞ்ச கதை. சிவாஜியோ பயங்கர பிஸி அப்போ. நாள் கணக்குலே கூட அட்ஜஸ்ட் பண்ண முடியாத கால்ஷீட் பிஸியிலே இருந்த நேரம்.சிவாஜியோட நிலைமை நாகராஜனுக்கு தெரிஞ்சிதான் இருந்தது.அதுக்கெல்லாம் அவர் முன்னாலேயே ஜடியா பண்ணி தான் சிவாஜிகிட்டே பேச வந்தார்.நீங்க பகல் கால்ஷீட் தர வேண்டாம் ,நைட்லே மட்டும் நடிச்சு கொடுங்க. நான் படத்தை எடுத்து முடிச்சிடுவேன்னு சொல்ல ,சிவாஜி ஒப்புகிட்டு நடிச்ச படம் தான் நவராத்திரி.நாகராஜனோட அந்த கதைக்காகத்தான் சிவாஜி நடிக்க ஒப்புக்கிட்டார்.உலக சரித்திரத்துலேயே ஒரு உயர்ந்த படமா அமைஞ்சது எல்லாருக்கும் தெரியும்.நாகராஜனுக்கு சிவாஜி செஞ்ச இந்த விஷயத்தாலே தன்னோட இன்னொரு பெஸ்ட் பிரண்டான பந்துலு சிவாஜியை விட்டு பிரிய காரணமா ஆயிடுச்சு.ஒரு நல்லது ஒரு கெட்டது நடந்தது இந்த படத்தாலே.நவராத்திரி படம் பெரிய லெவல் படம்,ஒரு அதிசயமான படம்னு சொல்லலாம்.
நவராத்திரி ஒன்பது ராத்திரி கதையா இருந்தது.இந்த படத்துக்கு பின்னாலே அதுக்கு மேலே பல கதைகள் இருக்குது.
125 வது படம் உயர்ந்த மனிதன்.
இந்தப் படத்துல அசோகன் வேஷம் ஒரு சின்ன வேஷம் .அதுவும் குடிகார டாக்டர் வேஷம். இந்த வேசத்தை போய் தான் செய்ய விரும்பறார்னு சிவாஜி சொன்னதைக் கேட்டு ஏவிஎம் சரவணனுக்கு ரொம்ப ஆச்சரியம். சார் இந்த படத்தோட தலைப்பே உயர்ந்த மனிதன். இந்த கேரக்டர்ல நீங்க நடிச்சா தான் படமே நிற்கும். அதனால நீங்க தான் இதுல கதாநாயகனா நடிக்கணும்னு சரவணன் சிவாஜியை வலுக்கட்டாயமா நடிக்க வச்சார்.
இந்த பட சூட்டிங் நடந்தப்போ சிவாஜியும் அசோகனும் பேசிக்கமாட்டாங்க.டாக்டர் வேஷத்துலே ஒரு காட்சியிலே அசோகனுக்கு நடிக்கவே வரல. அந்த காட்சிலே எப்படி நடிக்கணும்னு சிவாஜி அசோகனுக்கு சொல்லி தந்த விஷயமெல்லாம் நடந்துச்சு.படத்தை பாத்தா அப்படியா தெரியுது.ஒரு சாதாரண வேஷமா சிவாஜியாலே பாக்கப்பட்ட அந்த வேஷத்தை சிவாஜி எந்தளவு உயரத்துக்கு கொண்டு போய் நிறுத்தியிருப்பார் சிவாஜி.
150 வது படம் சவாலே சமாளி.
தமிழ்நாட்டுலே இருந்த நிலப்பிரபுகளுக்கும்,அந்த நிலத்தை தங்களுக்கு சாதகமா பயன்படுத்தி ,அதுலே விவசாயம் பண்ற குத்தகை விவசாயிகளுக்கும் இடையிலே நடக்க பிரச்சினைகளை மைய கருவா வெச்சு எடுத்த சினிமா சவாலேசமாளி.நிலப்பிரபு மகள் ஜெயலலிதா.விவசாயி மகன் சிவாஜி.சமுதாயத்தோட ரெண்டு வர்க்கமும் சரி சமமா இருந்தாத்தான் அந்த சமூகம் உயர்ந்த நிலைக்கு வரும்ங்கற கருத்தை சொல்ல வந்த படம்.படத்துலே அரசியல் கம்யூனிச கருத்துக்கள் நிறையவே இருக்கும்.சிவாஜி க்ளாசிக்கா பண்ணுன கமர்ஷியல் படம் .
இந்த ஒரு காட்சி சரியில்லேன்னு எந்த காட்சியையும் தப்பு சொல்ல முடியாத படி இந்த படத்தை நல்ல ரசனையா எடுத்திருப்பாங்க.சிவாஜியோட 150 வது படம்ங்கற கௌரவத்துக்கு ரொம்பவே சிறப்பா அமைஞ்ச படம் இந்த சவாலே சமாளி.
175 வது படம் அவன்தான் மனிதன்.
இந்த படத்துக்காக சிவாஜி சிங்கப்பூர் போனார் .சிவாஜி வர்றார் என்பதற்காக அவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கொடுக்ணும்னு சிங்கப்பூர் அரசாங்கம் அதோட பார்லிமெண்ட்லே ஒரு தீர்மானம் போட்டாங்க. இப்படி வேற நாட்டை சேர்ந்த ஒரு நடிகருக்காக, வரவேற்கிறதுக்காக ,
ஒரு அயல்நாட்டு பார்லிமெண்ட்லே தீர்மானமே போட்டது அப்படிங்கறது நடிகர்திலகம் ஒருத்தருக்குத்தான்.
அவன் தான் மனிதன் படத்துலே சிவாஜி வர்ற ஏர்போர்ட் காட்சியிலே இருக்கற மக்கள் கூட்டம் உண்மையிலேயே சிவாஜியை வரவேற்கிறதுக்காக கூடுன கூட்டம்.மஞ்சுளா ஜெயலலிதா ரெண்டு பேரும் சிவாஜி படத்துலே நடிச்சது இந்த படத்துலேதான்.கன்னடத்துலே ராஜ்குமார் நடிச்சு பெரிய ஹிட் ஆன கஸ்தூரி நிவாசாங்கற கன்னப்படத்தோட ரீமேக்தான் அவன்தான் மனிதன்.
200 திரிசூலம்.
சிவாஜி அது வரைக்கும் அதாவது 200 படம் வரைக்கும் அவரோட மத்த எந்த படங்களும் செய்யாத வசூல் ..
மத்த சாதனைகள் இந்த படம் மூலமா நடந்தது.
ஆனா அது என்னான்னா தமிழ் சினிமாலேயே அது வரைக்கும் எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை செஞ்சு பெரிய ரெக்கார்ட் படமா ஆகிப் போச்சு.
அதுக்காக இந்த படத்துக்கான கதையை தேர்ந்தெடுக்கறதுக்கு ரொம்ப மெனக் கெடலேன்னுதான் சொல்லணும்.கன்னடத்துலே ஹிட்டடிச்ச ராஜ்குமார் நடிச்ச சங்கர் குரு கதையைதான் செலக்சன் பண்ணுணாங்க.படம் வெறித்தனமா ஹிட்டாச்சு.இன்டஸ்ட்ரி ஹிட் ஆன படம். அதுவரைக்கும் சில ஊர்கள்லே 100 நாள் பாக்காத தியேட்டர் எல்லாம் இந்த படம் 100 நாள் ஓடுன சாதனையை செஞ்சது .அப்படி என்னதான் இந்த படத்துலே இருக்குது.படத்தோட ஸ்கிரீன்பிளே...
பாட்டுகளும் ஒரு காரணம்.
ஒரு சீன் கூட போரடிக்காத சுவராஸ்யமான காட்சி அமைப்புகள் தான்.சிவாஜியோட நடிப்பும் தங்கப்பதக்கம் கௌரவம் மாதிரி ரிஸ்க் எடுத்த நடிப்பல்ல.புல் அண்ட் புல் கமர்சியல் தான்.
தாடி வெச்ச சிவாஜியோட பெர்சனாலிட்டியை ரொம்ப ரொம்ப ஒரு ராயல் லுக்குனு சொல்லலாம்.அந்தளவுக்கு அம்சமா அழகா யாருக்கும் அமைஞ்சதில்லேன்னும் சொல்லலாம்.மதுரையிலே நடந்த திரிசூலம் பட வெற்றிவிழாவுக்கு அன்னைக்கு இருந்த அரசாங்கம் சில இடைஞ்சல் செஞ்சது.அது பத்தி சட்டசபையிலே எல்லாம் விவாதம் நடந்தது ,அது பத்தின செய்தி பத்திரிக்கையிலும் வந்து பரபரப்பான விஷயம்.
225 வது படம் தீர்ப்பு.
k.பாலாஜி தயாரிச்சு வெள்ளிவிழா ஓடுன படம் இந்த தீர்ப்பு.இந்தப்படம் வெளியான வருஷம் 1982.இந்த வருஷத்துலே சிவாஜி நடிச்சு 13 படங்கள் வெளியாச்சு.1982லே சிவாஜியோட வயசு 54 .அதை பாக்கணும்.இந்த வருஷம் 3 படத்துலே போலீஸ் வேஷம் செஞ்சார் சிவாஜி.அதுலே தீர்ப்பும் ஒண்ணு.
250 வது படம் நாம் இருவர்.சிவாஜியோட முதல் படம் 75 வது படம் 125 வது படங்களை தயாரிச்ச AVM தான் இந்த படத்தை தயாரிச்சது.இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லைன்னுதான் சொல்லணும். இளையதிலகம் பிரபுவும் நடிச்ச படம் நாம் இருவர்.
275 வது படம் புதியவானம்.
சத்யா மூவீஸ் தயாரிப்புலே நடிகர்திலகம் நடிச்ச படம்.இதுலே நடிக்க காரணமே அன்னைக்கு இருந்த அரசியல் சூழ்நிலைதான்.அன்னைக்கு இருந்த முதலமைச்சர் மரணம் அடைய ,அவரோட கட்சிக்கு சாதகமா சிவாஜி இருக்க,
அவரோட சார்பு பட நிறுவனமான சத்யா மூவீஸ்லே நடிச்சதுக்கு காரணம் இது தான் .
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக