திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

காமராஜர் பிறந்த நாள் விழா

ஜவஹர்லால் நேரு இறந்த பின்பு பிரதமர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பதில் பல போட்டிகளும் சிக்கல்களும் இருந்தன.
இது ஒரு சிக்கலான நேரம்.யாரை பிரதமராக தேர்ந்தெடுத்தாலும் பிரச்சினைகள் வரும்.எல்லோரும் குழம்பி நன்ற நேரம் அது.அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியை உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பல சக்திகள் முயன்று கொண்டிருந்தன.
காமராஜர் டெல்லி போனார்.சில விவேகமான செயல்களை செய்தார்.லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக  தேர்ந்தெடுத்தார் காமராஜர்.கேள்வி கேட்டவர்களுக்கு சரியான பதிலை காமராஜர் சொன்னபோது யாராலும் எதுவும் பேச முடியவில்லை.இது சிலவரிகளில் சாதாரணமாக சொல்லப்பட்டாலும் இது எவ்வளவு பெரிய அரசியல் சாதனை என்பது அன்றைய அரசியலை அறிந்தவர்களுக்கு தெரியும்.அப்படிப்பட்ட அரசியல் சுழ்நிலை இந்தியாவில் இருந்த சமயம் அது.கிங் மேக்கர் என்று காமராஜரை போற்ற காரணமே அதுதான்.உலகமே காமராஜரை உற்றுப் பார்த்து வியந்து போனது.
இந்த சமயத்தில்தான் காமராஜர் பிறந்தநாள் வந்தது.

கிங்மேக்கராக அரிய சாதனை செய்து தமிழகம் திரும்பும் காமராஜரின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட தமிழக காங்கிரஸ் முடிவு செய்தது.

சிவாஜியுடன் கலந்து ஆலோசித்து பிறந்தநாள் ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார் கண்ணதாசன்.
காமராஜர் பிறந்த நாள் விழாவுக்காக விழாக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.இதற்காக ரானடே அரங்கில் அலுவலகமும் திறக்கப்பட்டது. 
கண்ணதாசன் மிகவும் மும்முரமாக பிறந்த நாள் விழா கொண்டாட்ட பணிகளில் ஈடுபட்டார்.சிவாஜியும் தனது ரசிகர் மன்றங்களை காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்த வேண்டுகோள் விடுத்தார்.
பிறந்தநாள் விழாவுக்காக சிவாஜிகணேசன் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக வழங்கினார்.சிவாஜியின் அண்ணன் தங்கவேலு நன்கொடை பணத்தை சிவாஜி சார்பாக விழா குழுவிடம் கொடுத்தார்.

விழா எற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது..காமராஜர் இதற்கு ஒப்பதல் தருவாரோ என்ற சந்தேகம் இருந்தது.கட்சி வளர்ச்சிக்காக காமராஜரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

திமுக கட்சி பக்கம் அதிகமான இளைஞர் கூட்டம் சென்றுகொண்டிருந்த நேரம் அது.அந்த இளைஞர் கூட்டத்தை காங்கிரஸ் பக்கம் இழுப்பதற்கும் இந்த காமராஜர் விழா அமையும் என்று காங்கிரஸ் செயல்பட்டது.சின்னஞ் சிறு ஊர்களில் இளைஞர் பட்டாளத்தை திரட்டும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றது.இதில் சிவாஜி ரசிகர் மன்றங்கள் பெரும் பங்கு வகித்தது.
சிவாஜி மன்றத்தை சேர்ந்தவர்கள்  கண்ணதாசன் கலந்து கொண்ட கூட்ட ஏற்பாடுகளை செய்தார்கள்.
காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று சிவாஜி அறிக்கைககள் வெளியிட்டார்.
சிவாஜி  மன்ற இதழான சிவாஜி ரசிகன் 
புத்தகத்திலும் சிவாஜி வெளியிட்ட கட்டுரைகள் இடம் பெற்றன.
'காலாகாந்தி சென்னை வருகிறார்.அவரை வாழ்த்த ஒன்று கூடுவோம் ,என்று சிவாஜி வெளியிட்ட அறிக்கை கூடுதல் பலமாக அமைந்தது.

விழா நடந்த நாளில் காமராஜர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.விமான நிலையத்தில் இருந்து காமராஜர் விழா நடந்த இடம் வரை ஊர்வலமாக அழைதத்து வரப்பட்டார்.
பிரமாண்ட கூட்டமாய் இருந்தது.சிவாஜி ரசிகர்கள் அதிகளவில் விழாவில் பங்கெடுத்தார்கள்.காமராஜர் வாழ்க ,சிவாஜி வாழ்க கோஷங்கள் அதிர அதிர எங்கும் ஒலித்தது.

ஊர்வலத்தின் முன்னால் பல வகையான அணிவகுப்புகள் நடந்தது.மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு ,குதிரை ஊர்வல அணிவகுப்பு ,கொடியேந்திய தொண்டர்களின் அணி வகுப்பு என்று விமர்சையாக நடந்து பேரணி உர்வலம்.

குதிரை போட்டிகளை நடத்திக் கொண்டிருந்த பிரபல மனிதர் MM.ராமசாமி ஒரு குதிரையிலும்,நடிகர் MR.ராதா ஒரு குதிரையிலும் காமராஜர் சென்ற ஜீப்புக்கு முன்னால் வந்தது.
 
சின்னப்பாதேவர் ,
A.L..சீனிவாசன் ,ஏவிஎம்,
நாகிரெட்டி ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து விழா நடந்த அரங்கு வரை காமராஜரை வரவேற்று அலங்கார வளைவுகளை அமைத்திருந்தார்கள்.
காமராஜருக்கு கொடுத்த வரவேற்பு அண்ணாவால் ஏற்க முடியவில்லை.இதை பற்றி விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் ,நான் நினைத்தால் எனது தோழர்களையே வளைவாக நிறுத்துவேன் என்று அண்ணா பேசினார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.அப்போது அந்த அதிர்வையும் தாண்டி பெரிய ஆரவாரம் ஏற்பட்டது.அது சிவாஜி வந்த போது ஏற்பட்ட ஆரவாரம்.

இந்த விழாவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மேடையில் பேசியபோது  ,இந்த விழாவுக்கு சிவாஜி வாரி வழங்கிய நன்கொடையை அவர் பேசிய போதுதான் ,இந்த விழா நடைபெறுவதற்கு மிகுந்த ஊக்கமாக இருந்தவரே சிவாஜி கணேசன் தான் என்பதே அப்போதுதான் பலருக்கும் தெரிய வந்தது..
 திமுகவை மிரள வைத்த காமராஜரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்த காரணமானவர்கள் சிவாஜிகணேசனும் ,
கண்ணதாசனும் தான் மிக முக்கியமானவர்கள் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற