திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி அப்படித்தான்

சிவாஜி தானே! அவர் அப்படித்தாம்பா .ஒண்ணும் சொல்ல முடியாது.பத்து படத்துலே நடிக்க வேண்டியதை ஒரு படத்துலேயே நடிச்சு முடிச்சுருவார்.
இதுலே இன்னும் ஏதாவது செய்யணுமா ,
பண்ணனுமான்னு வேற கேப்பார்.
இது மட்டுமா ..இன்னும் சில வேடிக்கையும் அவர் படங்களாலே நடக்கும்யா..
ஒரு படம் ஓடிட்டு இருக்கும். அது ஓடி கொஞ்ச நாள் கூட ஆகியிருக்காது. அடுத்த படம் தியேட்டர்லே வந்து உக்காந்துக்கும்.100 நாள் ஓடறதுக்குள்ளேயே மூணு படம் வந்துரும் .இதை என்னய்யா சொல்லறது.

அவரென்ன மெஷினாப்பா...
ரெண்டு மாசம் நடிக்க வேண்டிய படத்தை 13 நாள்லே நடிச்சுட்டு போயிட்டாரு. மெஷினா இருந்தா கூட கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும். புல் சார்ஜ் போட்ட பேட்டரி கணக்கா ஸ்விட்ச் ஆன் கணக்காவே வேலை ஓடிட்டு இருந்துச்சு.

அவங்கவங்க பொழப்பை கவனிக்கவே இங்கே அவனவனுக்கு நேரமும் பத்தறதில்லே.கவனமும் இல்லே. இதுலே இவர் என்னடான்னா ,கூட நடிக்கறவங்களை கவனிச்சு ,இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு டீச்சிங் கிளாஸ் எடுப்பாராம். சம்பளம் வாங்காத மாஸ்டரா இருப்பார்..

இதெல்லாம் என்னாப்பா? நேரத்தையே நடுங்க வைக்கற விஷயமெல்லாம் தினம் தினம் நடக்கறதுதான்.கூட வேலை செய்யறவங்க துண்டை காணோம் துணியை காணோம்னு  ஓடி வர வெச்சிருவார்.நேரத்தையே நெளிய வெச்சுடுவார்.
சார் காலையிலே 6 மணிக்கு சூட்டிங் ஆரம்பம்னு சொல்லிட்டா போதும்.கடிகாரத்துலே சின்ன முள்ளு 5 பெரிய முள்ளு 11 லே நிக்கறப்போ அந்த பெரிய முள்ளுலே சிவாஜி வந்து உக்காந்திருப்பார்.
இதையல்லாம் மாத்த முடிஞ்சதில்லேப்பா அவர் கிட்டே.அவர் இப்படித்தாம்பா.

இந்த க்ளைமேட் சேஞ்ச் ஆகறதுக்குள்ளே படம் புடிச்சாகணும்னு டைரக்டர் பர பரப்பா இருப்பார். மேகமெல்லாம் ஸ்பீடா போகும்.அந்த ஸ்பீடுக்குள்ளே ஸ்பீடா சிவாஜி நடப்பார். நடிப்பார்.
எப்ப நடந்தப்பா இது! 
தேவனே என்னை பாருங்கள் பாட்டையெல்லாம் இப்படித்தான் எடுத்தாங்களாம். உதாரணத்துக்தான் இது. இது மாதிரி பல தடவை நடந்திருக்குப்பா. 
அடடா தயாரிப்பாளர்க்கு பர்ஸ் பணம் மிச்சமாயிருக்குமே..
அப்ப மட்டுமா மிச்சம்.
போடற டிரஸ்சுலே கூட மிச்சம் செஞ்சு கொடுத்திருக்காரு.
அதெப்படி...
சீனுக்கு தேவைன்னா அது படி டிரெஸ் பண்ணிக்க வேண்டியதுதான்.இப்ப வசந்தமாளிகை எடுத்துக்க.ஜமீன்தாரரா நடிக்கறாரு. அதனாலே கோட் சூட்டுன்னு எல்லாம் காஸ்ட்லியா போட்டு நடிச்சாரில்லே. இன்னொரு படத்துலே பரதேசி வேஷத்துலே  நடிக்க வேண்டி இருந்துச்சு.
பெரிய கதாநாயகனா இருந்தா கொஞ்சம் செலவழிச்சுத்தான் டிரெஸ் தைப்பாங்க. இவர் என்னடான்னா ஒரு படத்துலே பரதேசியா நடிச்சப்போ கீழே கிடந்த சாக்குப்பையை எடுத்து இடுப்புலே கட்டிகிட்டு இதுதான் பெர்பெக்ட் மேட்ச்சுன்னு சொன்னாராம்.இன்னும் சில படத்துலே ரெண்டு சட்டை பேன்ட்னு படத்தை முடிச்சிருக்கார்.
இதெல்லாம் பெரிய விஷயமாப்பான்னு கேக்க தோணுதில்லே.அதனாலே ஒண்ணும் தப்பில்லேப்பா.பல பெரிய தயாரிப்பு செலவு விஷயங்களிலும்  இப்படிதாம்பா.
தயாரிப்பாளர்க்கு வெட்டி செலவு வெக்க மாட்டார்னு அர்த்தம்பா.வந்தமா நடிச்சமா காசு வாங்கிட்டமான்னு இருக்கற சினிமா பீல்டுலே இப்படியும் ஒருத்தர்.

அவனவன் பணத்துக்கு ஆளா பறக்கற சினிமா உலகத்துலே இவரோட சில விஷயத்தை கேள்விப்படறப்போ அதை என்னான்னு சொல்றது.ஒரு சமயம் ஒரு தயாரிப்பாளர் சிவாஜிகிட்டே வந்து ,உங்களுக்கு சம்பளம் கொடுக்கற அளவுக்கு பணமில்லே.ஆனாலும் எனக்கொரு படம் பண்ணி கொடுங்கன்னு கேட்டாரு.. அதனாலென்ன உன்னாலே முடிஞ்சதை கொடுன்னு சிவாஜி  சொல்லிட்டாரு.
படம் எடுத்து நல்ல லாபம் பாத்தாரு அந்த தயாரிப்பாளர்.இவ்வளவு லாபம் வந்திருக்குன்னு அந்த தயாரிப்பாளர் சிவாஜிகிட்டே வந்து சொல்லி ,சிவாஜி அப்ப வாங்கிட்டு இருந்த சம்பளத்தை மனசுலே வெச்சுட்டு அன்னைக்கு கொடுத்தது போக மிச்சத்தை கொடுத்தாரு.அவரோட நல்ல மனசை புரிஞ்ச சிவாஜி ,கொடுத்த பணத்தை நீயே லாபமா வெச்சுக்கோன்னு சொல்லிட்டாரு.இப்படி ஒரு தயாரிப்பாளர். இப்படி ஒரு நடிகர்.
இதே மாதிரித்தான் இன்னொரு  விஷயமும். கஷ்டப்படற தயாரிப்பாளர்க்கு நடிச்சுத் தந்தார். சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டார்.அந்த தயாரிப்பாளர் சிவாஜி சாப்பிடற டிபன் பாக்ஸ்லே கொஞ்சம் பணத்தை வெச்சு அனுப்பிச்சுட்டார்.டிபன் பாக்ஸை தொறந்து பாத்த சிவாஜிக்கு அதிர்ச்சி.நாமதான் பணமே வேண்டாம்னு சொல்லிட்டோமே .இது என்ன தப்பா பண்ணிட்டாருன்னு கோபம்.என்னப்பா பண்றது. அந்த தயாரிப்பாளருக்கு புத்தி அவ்வளவுதான்.
பணத்தை வெச்சு என்னை வெலைக்கு வாங்க முடியாதுன்னு ஒரு படத்துலே சிவாஜி பேசற மாதிரி டயலாக் இருக்கும். இத மனசுல வெச்சுத்தான் ரைட்டர் எழுதுனாரோ என்னவோ...

யாரா இருந்தாலும் பெரிய ஹீரோ ஆயிட்டா பெரிய பந்தா கௌரவம் எல்லாம் வந்து சேந்துரும்.கதாநாயகனை விட ஒரு காமெடி ஆக்டருக்கு அதிக சம்பளம் கொடுத்து நடிக்க வெச்ச கதையெல்லாம் இருக்கு. இதுலே ஒரு வேடிக்கை என்னான்னா அந்த படத்தை தயாரிச்ச தயாரிப்பாளரே வந்து ஹீரோ கிட்டே இப்படி அந்த காமெடி ஆக்டர் உங்களை விட அதிக சம்பளம் கொடுக்கணும்னு கேட்டதா சொன்னாரு. அந்த ஹீரோ என்ன சொன்னாரு ? சரி அவர் கேக்கறதை கொடுங்கன்னு சொல்லிட்டாரு. அந்த ஹீரோ வேற யாரு சிவாஜிதான்.காமெடி ஆக்டர் சந்திரபாபு. யாருப்பா இதை ஒத்துக்குவாங்க. இதுலே என்ன  கௌரவம் வந்துடப் போகுதுன்னு சிவாஜி இருந்தாரே .அதுதான் கௌரவம்.பந்தாவா அது என்ன விலைன்னு கேக்கற மாதிரி இல்ல இது இருக்குது.

சினிமா பீல்டுலே ரெண்டு நடிகர்கள் நிஜமாவே பேசாமே இருந்தா அவங்க ரெண்டு பேரும் சேந்து நடிச்சதா சரித்திரமே இல்ல. இதுலயும் வித்தியாசமானவராத்தான் சிவாஜி இருந்திருக்கார்.
உயர்ந்தமனிதன் படத்துலே அசோகன் கூட நடிச்சதை பாத்தா யார் நம்புவாங்க? அப்படியெல்லாம் விசித்திரம் நடந்திருக்கு.அவர் இப்படித்தான்யா..

பத்துநாள் கால்ஷீட் கொடுத்தார்  சிவாஜி ஒரு படத்துக்கு .எட்டே நாள்லே நடிச்சு முடிச்சுட்டார்.டைரக்டர் வந்து உங்க போர்ஷன் முடிஞ்சிருச்சுன்னு சொல்லியிருக்கார்.நம்ம போர்ஷன் முடிஞ்சா சந்தோசமா போற சினிமா உலகத்துலே ,சிவாஜி என்ன கேட்டார் தெரியுமா ?இன்னும் ரெண்டு நாள் இருக்கே.ஷுட்டிங் இல்லாமே நான் சும்மா இருக்கறதான்னு கேட்டார்.

இப்படித்தாம்பா சிவாஜி கடைசி வரைக்கும் இருந்திருக்கார்.அப்படித்தாம்பா சிவாஜி .

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற