திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

நீல வானம்

சிவாஜி தியேட்டரான சாந்தி திரையரங்க ஸ்கிரீனை காண்பித்து அந்த ஸ்கிரீனில் டைட்டில் ஓடுவதாக காட்டப்பட்ட திரைப்படம் நீலவானம்
அந்த டைட்டில் வரும்முன்பு சிவாஜியின் புதிய பறவை பாடலான சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல் ஒலிக்கும்.
சாந்தி திரையரங்கில் டிக்கட் கிழிக்கும் தியேட்டர் ஊழியராக
சிவாஜி நடித்திருப்பார்.
நீச்சல் குளத்திலேயே முழுப்பாடலும் எடுக்கப்பட்ட நடிகர்திலகத்தின் திரைப்படமும் நீலவானம் ஆகும்.இது படத்தின் முதல் பாடல்.
சாந்தி தியேட்டருக்கு தேவிகாவுடன் படம பார்க்க வருவார் சிவாஜி. அப்போது தியேட்டரில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் பார்த்த ஞாபகம் இல்லையோ   ...

மிக வித்தியாசமான நடன அசைவுகளுடன் அழகாக எடுத்த பாடல் ஓ லிட்டில் பிளவர் ..

1965 ல் வெளிவந்த சிவாஜியின்  எல்லா( 5 )படங்களிலும் தேவிகா நடித்திருப்பார். பழனி அன்புக்கரங்கள் சாந்தி...திருவிளையாடல் ..
நீலவானம் தேவிகாவுக்கு மிக நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நீலவானம் உச்ச நிலையில் கடைசி ஜோடிப்படமானது ஆச்சர்யமாக இருக்கிறது. நீண்ட வருடம் கழித்து சத்யம் படத்தில் ஜோடியாக நடித்திருப்பார்.

ராஜஸ்ரீயை லவ் பண்ணும் போது, ஒரு ஹேர் ஸ்டைலும், தேவிகாவை திருமணம் செய்த பின் வேறொரு ஹேர் ஸ்டைலும், தேவிகா இறந்த பின் பழைய ஹேர் ஸ்டைலுமாக! கலக்கி இருப்பார்  நடிகர் திலகம் .

சிவாஜி நடிப்பதில் இமேஜ் பார்க்காதவர் .தன் உருவத்தை வைத்து எழுதப்பட்ட வரியையும்  இமேஜ் பார்க்காமல் தான் நடித்திருப்பார் இந்த பட பாடலில்.உதாரணம் :உனக்கும் எனக்கும் உருவ பொருத்தமே என்று ஓ லிட்டில் பிளவர் பாடல் வரி வரும்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற