திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

பூ முடித்தாள் இந்த பூங்குழலி




தமிழ் சினிமாலே கண்ணதாசன் எழுதி விஸ்வாநாதன் மியூசிக் அமைச்சு TMS பாடுனா அந்த பாட்டு கொடுக்கற சுகமே தனிதான். மேக்சிமம் பாட்டுக சூப்பர் ஹிட்டுதான்.இதுலயுமே வித்தியாசமான பாட்டுக ஒரு தனி வரிசையா இருக்கு.இந்த தனி வரிசையிலே ஒரு முக்கியமான வித்தியாசமான பாட்டுதான் இது.

கல்யாணம்னு ஒண்ணு முடிவான பின்னாலே அதக்கு அடுத்து முடிவாகற விஷயம் கல்யாண பத்திரிக்கை. அந்த கல்யாண பத்திரிக்கைலே என்ன விஷயம் இருக்கும். கல்யாணம் என்னிக்கு ,அந்த வருசத்தோட பேரு ,பொண்ணு மாப்பிள்ளை பேரு ,இன்னும் பல விஷயங்கள் சேத்து ,கடைசியா தங்கள் நல்வரவை விரும்பும்னு ஒரு பேரு  .ஆடம்பர கல்யாணம் ,எளிமையான கல்யாணம் ,கோடீஸ்வரன் வீட்டுகல்யாணம்,ஏழை வீட்டு கல்யாணம்னு எத்தனையோ கல்யாணங்க நடந்தாலும் பத்திரிக்கை மேட்டர் இதுதான்.
இந்த ஒரு விஷயத்தையே பாட்டா எழுதுனா எப்படியிருக்கும். அப்படியும் பாட்டெழுதி ஆச்சர்யம் கொடுத்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் ஏன் இப்படி பாட்டெழுதினார் எந்த படத்துக்கு இப்படி பாட்டெழுதினார்.

ஸ்ரீதர் டைரக்சன் செஞ்ச படம் நெஞ்சிருக்கும் வரை. ஸ்ரீதர் ஒரு பிடி மண் அப்படிங்கற தலைப்புலே சிவாஜியை ஹீரோவா வெச்சு படம் எடுக்கறதா பிளான் பண்ணி வெச்சிருந்தார். இந்த கதை அப்போ இந்தியா சீனா யுத்தம் நடந்துட்டு இருந்த நேரத்துலே எடுக்கப்பட இருந்த படம்.இந்திய தேசத்துக்காக மக்கள் கிட்டே தேச பக்தியை வளர்க்கறதுக்காக எடுக்கப்பட நெனச்ச படம். ஸ்ரீதர் கதை பண்ணி முடிச்சப்போ இந்தியா சீனா யுத்தமே நின்னு போச்சு. ரெண்டு நாட்டு இடையிலே போர் ஒப்பந்தம் போட்டு யுத்தம் முடிவுக்கு வந்துருச்சு.இனிமேலே எப்படி படமா எடுக்கறது. சிவாஜி கிட்டே வாங்குன கால்ஷீட்டை வெச்சு ஒரு சின்ன பட்ஜெட்டுலே ஒரு படத்தை எடுத்துரலாம்னு ஸ்ரீதர் எடுத்த படம்தான் நெஞ்சிருக்கும் வரை.
படத்தை சிம்பிளா எடுத்தாலும் கொஞ்சம் வித்தியாசமா எடுக்கலாம்னு பல விஷயங்களை செஞ்சார் ஸ்ரீதர்.
அப்படி செஞ்ச விஷயங்கள்லே ஒண்ணுதான் நடிகர் நடிகைகளுக்கு மேக்கப்பே இல்லாமே நடிக்க வெச்சது.

படத்துலே வர்ற ஒரு பாட்டையும் வித்தியாசமா பண்ணியிருப்பார்.அந்த பாட்டுதான் பூ முடிப்பாள் இந்தபூங்குழலி பாட்டு. இந்த பாட்டை எப்படி வித்தியாசமா பண்ணலாம்னு ஸ்ரீதர் கண்ணதாசன் விஸ்வநாதன் டிஸ்கஸ் பண்ணுனப்போ உதயமான ஐடியா தான்,ஒரு கல்யாண பத்திரிக்கை மேட்டரை வெச்சே பாட்டா எழுதிடலாம்னு முடிவு செஞ்சு பாட்டை தயார் செஞ்சாங்க. அதுக்கு முன்னாலே விஸ்வநாதன் கண்ணதாசனை சீண்டறமாதிரி ,இப்படி அமைப்புலே உங்களாலே பாட்டை எழத முடியுமான்னு வேற கேட்டுட்டார்.அப்படி கண்ணதாசன் எழுதுன பாட்டுதான் இது.



கண்ணதாசன்  சில சமயங்கள்லே ஒரு வார்த்தை சொன்னா அது ஒரு பரிமாண பார்வை தாண்டி இரு பரிமாணம் முப்பரிமாணம் காட்டற மாதிரி வார்த்தைகளை எழுதுவார். இந்த பாட்டுலே கூட கல்யாண பொண்ணை வர்ணிக்க அந்த மாதிரி வார்த்தையை போட்டிருப்பார்.

முதல் வரி இப்படி 
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

இந்த வண்ண தேனருவி வார்த்தையை பாருங்க.பெண்ணை தேன்னு சொல்வார் அதுக்கு அடுத்து அருவியை சேத்து தேனருவின்னு இரு பரிமாணத்துலே சொல்லியிருப்பார். அது பத்தாதுன்னு மூணாவதா வண்ண தேனருவின்னு முப்பரிமாணத்துலே வார்த்தையை போட்டிருப்பார்.

பாட்டை  எப்படி வித்தியாசமா பண்ணியிருக்காங்க பாருங்க.
கதைப்படி கே ஆர் விஜயாவை சிவாஜி விரும்புவார். விஜயாவோ முத்துராமனை காதலிப்பார். முத்துராமனும் விஜயாவை விரும்புவார்.சிவாஜி தன்னோட காதலை சொல்லாமே  மனசுக்குள்ளே வெச்சிருப்பார்.விஜயாவும் முத்துராமனும் காதலிக்கறாங்கன்னு தெரிஞ்சதுமே நாகரீகமா விலகிடுவார்.சிவாஜியே ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கற மாதிரி காட்சி. இந்த சிச்சுவேசனுக்குத்தான் பூ முடிப்பாள் பாட்டு. ஒரு கல்யாண பத்திரிக்கைலே இருக்கற விஷயங்களை வெச்சு பாட்டா பண்ணியிருப்பாங்க.பாட்டு ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே பொண்ணை பத்துன ஒரு வர்ணனையை முதல்லே சொல்லிட்டு அதுக்கப்பறம் அந்த பத்திரிக்கை விஷயங்கள் வர்ற மாதிரி பாட்டு போகும்.




பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

கல்யாண மேடைலே பொண்ணோட உணர்ச்சிகளை அப்படியே வர்ணிச்சு அடுத்த வரிகளை கொட்டியிருப்பார் கவிஞர்.

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
சரணத்தோட கடைசி வரிகளை 'டி'ன்னு முடிச்சிருப்பார்.
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

மணமகள் வர்ணனை முடிஞ்சி கல்யாண சடங்கு ஆரம்பிக்கைலே அதைப் பத்தி அடுத்த வரிகள்லே விவரிப்பார்.
இப்பத்தான் அந்த கல்யாண பத்திரிக்கை மேட்டர் வரும்.

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

இந்த விவரணை முடிஞ்சு அடுத்த சரணத்துலே கல்யாண நிகழ்வுகளை சேத்திருப்பார்

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...
இப்படி ஒரு கல்யயாண நிகழ்வுலே நடக்கற அந்த முக்கியமான தாலி கட்டற வைபவத்தை மேலே சொன்ன வரிகள்லே அழகா விவரிச்சிருப்பார் கவிஞர்.
ஒரு பெரிய கட்டுரையா எழுத வேண்டிய விஷயத்தை இந்த பத்து வரிலே மொத்தமா சொல்லி முடிச்சிருவார் கவிஞர்.


சிவாஜி அண்ணன் ஸ்தானத்துலே இருந்து அந்த கல்யாணத்தை நடத்தி வைப்பார். அந்த அண்ணணோட கடமையையும் அடுத்த வரிலே சொல்லிருவார்.


கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட
பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி

மைக்செட் வெச்சு நடந்த கல்யாணங்கள் எல்லாம் இந்த பாட்டை ஒளிபரப்பு செய்யாமே இருந்திருக்காது.மைக்செட் வெக்கறவப்பவே ,இந்த பாட்டு இருக்கான்னு கேட்டதெல்லாம் ஒரு காலம்.
கல்யயாண வீடு மண்டபங்கள்லே  இந்த பாட்டு சத்தம் கேட்டுத்தான் நிறைய கல்யாணங்கள் நடந்திருக்கு.நிறைய சினிமாக்கள்லே கல்யாண காட்சிகள் இருக்கு. ஆனா இந்த டைப்புலே ஒரு பாட்டும் இல்லேன்னுதான் சொல்லணும்.


செந்தில்வேல் சிவராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற