திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சந்திப்பு Nasseb

நடிகர்திலகம் சிவாஜி  நடிச்சு சிவாஜி புரொடொக்சன் தயாரிச்சு வெள்ளிவிழா ஓடுன  சந்திப்பு படத்தை பத்தி இந்த பதிவுலே பாக்கலாம்.

சந்திப்பு படம் வெளியான தேதி 16.6.1983.
நடிகர்திலகத்தோட திரைப்பட வரிசையிலே 235 வது படம்.
இளையதிலகம் பிரபு சிவாஜியோட நடிச்ச 3 வது படம்.
நடிகை ஸ்ரீதேவி சிவாஜிக்கு ஜோடியா நடிச்ச ரெண்டாவது படம்.நடிகர்திலகம் சிவாஜி இரட்டை வேஷத்துலே நடிச்ச 19 வது திரைப்படம்.

1981 லேவெளியான நஸீப் என்ற இந்தி படத்தோட ரீமேக்தான் தமிழ் சந்திப்பு படம்.
நஸீப் என்னும் இந்தி வார்த்தைக்கு விதி அல்லது தலையெழுத்துன்னு அர்த்தம் .

சந்திப்பு படம் இந்தி ரீமேக்கா இருந்தாலும் தமிழ் திரைக்கதையிலே பல மாற்றங்களை செஞ்சு எடுத்திருந்தாங்க. முக்கியமா படத்தோட ஆரம்ப கட்ட காட்சிகள். சந்திப்பு படத்துலே கோயில் தர்மகர்த்தாவா இருப்பார் சிவாஜி. கோயில் நகைகளை கொள்ளையடிக்க மேஜரும் நம்பியாரும் பிளான் பண்ணி நகைகளை கொள்ளையடிச்சு ,ஒரு கொலைப்பழியையும் சிவாஜி மேலே சுமத்தி ,சிவாஜியை அடிச்சு போட்டு ரயில் தண்டவாளத்துலே போட்டுட்டு போயிருவாங்க.படத்தோட இந்த ஆரம்ப காட்சிகள் ,கேரக்டர் வடிவமைப்பு  நஸீப் படத்துலே வேற மாதிரி இருக்கும்.

இந்தி படத்துலே நாம்தேவ் அப்படிங்கற கேரக்டர்லே நடிச்சவர் பிரான். இந்த கேரக்டர் தான் தமிழ்லே சிவாஜி செஞ்ச கோயில் தர்மகர்த்தா கேரக்டர். 
வில்லன்களா அம்ஜத்கான் காதர்கான் நடிச்சாங்க.
ஒரு குடிகாரன் தான் வாங்குன லாட்டரி டிக்கட்டை பிரானுக்கு வித்துருவான். பிரான்  அந்த டிக்கட்டை தன்னோட மூணு நண்பர்களோட சேந்து வாங்குவார்.அந்த நண்பர்கள் தான் அம்ஜத்கான் காதர்கான் ,இன்னொரு நண்பர்.லாட்டரியிலே முதல் பரிசு கிடைக்கும்.அம்ஜத்கானும் காதர்கானும் மூணாவது நண்பரை கொலை செஞ்சு அந்த கொலைப்பழியை பிரான் மேலே போட்டு ,அவரை அடிச்சு  பாலத்துலே இருந்து தண்ணிலே வீசி எறிஞ்சுருவாங்க. 
இதுதான் நஸீப் படத்தோட ஆரம்ப காட்சிகள். தமிழ்லே லாட்டரி சீட்டு காட்சிகளுக்கு பதிலா கோயில் சம்பவங்களை திரைக்கதையா மாத்தி இருப்பாங்க.

நஸீப் பட ஹீரோ அமிதாப்பச்சன். இந்த கேரக்டர் தான் சந்திப்புலே வர்ற மகன் சிவாஜி கேரக்டர்.இந்திலே ஹேமாமாலினி செஞ்ச கேரக்டர்லே இங்கே ஸ்ரீதேவி.
நம்பியார் மேஜர் கேரக்டர் இந்திலே அம்ஜத்கான் காதர்கான் நடிச்சிருப்பாங்க.
இந்திலே டான் கேரக்டர் செஞ்சவர் அம்ரீஷ்பூரி . இங்கே தமிழ்லே சுதர்சன்..
இந்திலே ரிஷிகபூர் கேரக்டர் தமிழ்லே பிரபு.

நஸீப் படத்துலே அப்பா கேரக்கடர்லே பிரான் நடிச்சிருப்பார்.மகன் கேரக்டர்லே அமிதாப்.இந்த ரெண்டு கேரக்டரையும் சிவாஜியே பண்ணியிருப்பார்.


நஸீப் பாக்ஸ் ஆபீஸ்லே பெரிய கலெக்சன் செஞ்ச படங்கள்லே ஒண்ணு.அதே போலே தமில்லேயும் பெரிய வசூல் ரெக்கார்ட் செஞ்ச படம் சந்திப்பு. படம் வெளியான 35 நாள்லேயே 75 லட்சம் ரூபாய் வசூல் செஞ்ச படம் சந்திப்பு. 50 நாளுக்குள்ளேயே ஒரு கோடிக்கு மேலே வசூல் செஞ்சது.

விஸ்வரூபம் படத்துக்கு அடுத்து ஸ்ரீதேவி சிவாஜிக்கு ஜோடியா நடிச்ச படம் சந்திப்பு.விஸ்வரூபம் படம் வந்தப்பவே ஸ்ரீதேவி ஜோடியான்னு விமர்சனம் வந்துச்சு. அதே காலகட்டத்துலே NTR,நாகேஸ்வரராவ் இந்திலே மூத்த நடிகர்களோட ஸ்ரீதேவி ஜோடியா நடிச்சார். அதெல்லாம் எந்த விமர்சனம் ஆகலே.ஆனா சிவாஜிக்கு ஜோடியா நடிச்சப்ப மட்டும் விமர்சனம் பண்ணுனாங்க. மத்தவங்க எப்படியோ இருந்துட்டு போகட்டும். சிவாஜி எவ்வளவு பெரிய ஆளுமை,அவர் இப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லேன்னு அவங்க நினைச்சிருக்கலாம்.இந்த ரெண்டு படத்துலே கூட இளைய கேரக்டர் சிவாஜிக்குத்தான் ஸ்ரீதேவி ஜோடியா நடிச்சிருப்பார்.மூத்த சிவாஜி கேரக்டருக்கு சுஜாதா தான் ஜோடி. இருந்தாலும் அதுக்கு பின்னாலே வந்த கால கட்ட படங்கள்லே சிவாஜி இதை நிறையவே தவிர்த்துட்டார்.ஆனா இன்னைக்கு வரைக்கும் தமிழ் சினிமா பெரிய கதாநாயகர்கள் தங்களை மாத்திக்கவே இல்லை அப்படிங்கறது குறிப்பிட வேண்டிய விஷயம்.கதாநாயகர்கள் உடல் பருமனா ,குண்டா இருந்திருந்தா அவங்க எல்லாம் எப்பவே பீல்டை விட்டு கழண்டு போயிருப்பாங்க. வயசான கேரக்டர்களை செஞ்சே..
 யாரும் செய்ய முடியாத படங்களை சிவாஜி செஞ்சு காட்டினார்.இந்த ஒரு விதிப்படியும் சிவாஜிதான் பெரிய ஆளுமையா இருந்தார்.

1981 லே ரொம்ப பாப்புலரான இந்திப்பாடல் ஜான் ஜானி ஜனார்த்தன்.இந்த நஸீப் படத்துலே தான்.அமிதாப் அறிமுகம் ஆகற காட்சி பாட்டு. இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் இந்தி பேமஸ் நடிகர்கள் ராஜ்கபூர் தர்மேந்திரா ராஜேஷ்கன்னா ஷம்மிகபூர் ரந்தீர்கபூர் ராகேஷ் ரோஷன் விஜய் அரோரா நடிகைகள் வஹிதா ரஹ்மான் மாலாசின்ஹா ஷர்மிளாதாகூர் இன்னும் பல பிரபலங்கள் வருவாங்க. தமிழ் படங்கள்லே இப்படியொரு காட்சியை பாக்க முடியாது. பாரதவிலாஸ் படத்துலே சிவாஜியோட நட்புக்காக பிரேம்நஸீர் சஞ்சீவ்குமார் ஒரு சின்ன ஷாட்டுக்கு வந்துட்டு போனாங்க.
இந்த நஸீப்போட மேக்கிங் ரொம்ப பிரமாண்டமா இருக்கும்.

இந்த கால கட்டத்துலே எல்லா பெரிய பட நிறுவனங்களும் 
அதிகமாக இளையராஜாவை புக் செஞ்சுகிட்டிருந்த நேரத்தில சிவாஜி புரொடொக்ஷன் சந்திப்பு படத்துக்கு MS.விஸ்வநாதனை இசையைமைக்க வைச்சது
ஆனந்தம் விளையாடும் வீடு என்ற குடும்ப பாடலை கூட  பெரிய ஹிட் செஞ்சார் MS.விஸ்வநாதன்.
நடிகர்திலகம் தன்னோட கொள்கையை சொல்லறமாதிரி இசையமைக்கப்பட்ட உன்னைத்தான் கும்பிட்டேன் பாட்டு சிவாஜி ரசிகர்களுக்கு குளுக்கோஸ் பாடலாக அமைஞ்சது.  இந்த பாட்டை சிவாஜிகிட்டே பிரபு  கேக்கற மாதிரி இருந்ததும் ,அதுக்கு  சிவாஜி பதில் சொல்றது மாதிரியும் பாட்டு இருக்கும்.
அதிரடி மியூசிக்கும் படத்தில் பட்டையை கிளப்பும்.சிவாஜி பிரபு ஸ்ரீதேவி ராதா சரத்பாபு மனோரமா உள்பட குழு பாடலா  க்ளைமாக்ஸில ஷோலாப்பூர் ராணி பாட்டுலே விஸ்வநாதன் அதிரடியில அட்டகாசம் செஞ்சிருப்பார்.

சிவாஜி ஸ்ரீதேவி பாடற  டூயட் பாட்டான  வார்த்தை நானடி கண்ணம்மா பாட்டு  இடையிலே ஸ்ரீதேவி சிவாஜியை புகழ்ந்து பாடறது மாதிரி  வரிகளுக்கு தியேட்டரில பெரிய ஆரவாரம் இருக்கும்.பாட்டோட சில வரிகள்  இப்படி இருக்கும்.
விழியில் வீரம் காட்டும்போது
கட்ட பொம்மன் போலே 
அன்பை வாரி வாரி வழங்கும்போது
வள்ளல் கர்ணன் போலே...
உன்னை மிஞ்சும் நடிகன் இன்றும் உலகில் தோன்றவில்லை...

இந்த படம் வெளியான 1983 ம் வருசம் சிவாஜி நடிச்சு 7 படங்கள் வந்துச்சு.
அந்த படங்கள் :
பெஜவாடா பெப்புலி தெலுங்கு
நீதிபதி
இமைகள்
சந்திப்பு
சுமங்கலி 
மிருதங்க சக்கரவர்த்தி
வெள்ளை ரோஜா..
இதுலே நீதிபதி சந்திப்பு வெள்ளிவிழா ஓடுன படங்கள்.
பெஜவாடா பெப்புலி மிருதங்க சக்கரவர்த்தி வெள்ளைரோஜா 100 நாள் ஓடுன படங்கள்.
இதுலே வெள்ளை ரோஜா ஒரு க்ரைம் த்ரில்லர் ,அட்டகாச நடிப்பு ,மிருதங்க சக்கரவர்த்தி ஒரு மியூசிக் க்ளாசிக் வொண்டர் படம்னு சிவாஜி நடிச்சிருந்தாலும் 100 நாள் ஓடுன பட வரிசையிலேதான் இருக்கு. 
சந்திப்பு ஒரு கமர்சியல் மசாலாதான். ஆனா சக்கைப் போடு போட்டு பாக்ஸ் ஆபீஸ் படமா இருக்கு. இது நம்ம ரசனையிலே இருக்கற ஒரு குறைப்பாடு.ரசனையை மேம்படுத்திக்காத குணம்.

நடிகைககள்:
சுஜாதா வடிவுக்கரசி ஸ்ரீதேவி ராதா மனோரமா 
நடிகர் பட்டாளம் :
நடிகர்திலகம் டபுள் ஆக்ட்.
நம்பியார் மேஜர் சுந்தரராஜன்
விஜயகுமார் சரத்பாபு டெல்லிகணேஷ் சுதர்சன் (வில்லன்)இளையதிலகம் சத்யராஜ் மற்றும் பலர்னு ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இந்த படத்துலே நடிச்சிருப்பாங்க.

இசை சாம்ராஜ்யம் M.S.விஸ்வநாதன்.
இயக்கம் :C.V.ராஜேந்திரன்.
இந்தப்படம் 48 நாட்களுக்கு உள்ளாகவே  ஒரு கோடி வசூல் செஞ்சு சாதனை செஞ்சது.
மதுரையில் வெள்ளிவிழா ஓடின படம்
திரிசூலம் படத்திற்கு 
பின்னாலே கமர்ஷியல் ஹிட்டடிச்ச  சிவாஜி புரொடொக்ஷன் படம்.
நம்பியார் மேஜரிடம் டான் சிவாஜி பேசற  வசனம் ,பிரபுவின் பாக்சிங் பைட்,மனோரமாவின் மாட்டுக்கறி காமெடி,நடிகர்திலகம் இளையதிலகம் மோதல்,சுஜாதாவுக்காக பிரபு போடும் சண்டை ,காதலுக்காக நண்பர்கள் விட்டுக் கொடுக்கும் காட்சிகள் ..என்று பல சுவையான காட்சிகள் இடம் பெற்ற திரைப்படம் இது..
மொத்தத்தில் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படம் சந்திப்பு...

செந்தில்வேல் சிவராஜ் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற