திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

sivajiganesan cvr combo

செவாலியர் சிவாஜியின் FanBoy சி.வி.ராஜேந்திரன்

சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர்களில் நான்காம் இடத்தில் இருக்கிறார் சிவி ராஜேந்திரன். மாற்றுமுகாம் நடிகரை வைத்து படமெடுக்காத இயக்குனர்களிலும் பீம்சிங்குக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய சிவி ராஜேந்திரன் அவர்களைப் பற்றிய பதிவே இந்த வீடியோ.

சிவி ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கிய படங்கள் 14. சிவாஜியை இயக்கிய முதல் படம் கலாட்டா கல்யாணம். 

சிவாஜி கால்ஷீட் கிடைச்சாச்சா.பிடி சீரீயஸ் சப்ஜெக்ட்டை என்று கொடி தூக்கிக் கொண்டு வந்த இயக்குனர்கள் தான் ஏராளம்.
பந்துலு மட்டும் மூணு படம் பண்ணினார்.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பலே பாண்டியா சபாஷ்மீனா என்று..
சிவி ராஜேந்திரனுக்கு முதல் படம் 
வாய்த்தது ஒரு சிரிப்பு படம்தான்.கலாட்டா கல்யாணம்.சிவாஜியை காமெடி ஹீரோவாக மட்டுமல்ல.ஸ்மார்ட் பாயாகவும் காட்டினார்.சிவாஜி செய்தது தான் இது என்றாலும் சிவி ராஜேந்திரனுக்கும் பெயர் கிடைத்தது.
தலைவனை புதுசா பாக்க வெச்சுட்டியே என்று ரசிகர்கள் ஆனந்தப்பட்டார்கள் .
கலாட்டா கல்யாணம் கூட போகிற போக்கில் அமைந்ததுதான்.

ஶ்ரீதரின் உதவியாளராக இருந்த சிவி ராஜேந்திரன், யுத்த நிதிக்காக சிவாஜி-ஶ்ரீதர்,கோபு இணைந்து நடத்திய நாடகத்தையே படமாக்கும் வாய்ப்பை பெற்றார். சிவாஜி, ஜெமினி, முத்துராமன், நாகேஷ் நடித்த நாடகம் படமாகும் போது சிவாஜியுடன் ஜெயலலிதா, தங்கவேலு, நாகேஷ், AVM ராஜன், V கோபாலகிருஷ்ணன், சோ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். சிவாஜியுடன் ஜெயலலிதா முதன்முதலில் ஜோடி சேர்ந்து நடித்த இந்த நகைச்சுவை திரைப்படம் சிவாஜியின் சொந்த தயாரிப்பில் வந்த நூறுநாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படமாகும். 



அடுத்ததாக இதே கூட்டணியில் உருவான சுமதி என் சுந்தரியும் ஒரு வெற்றிப்படமே.
இதில் கம்பீரம் காட்டாத மென்மையான சிவாஜியை பார்க்கலாம்.கமர்ஷியலாக மேக்கிங் செய்யப்பட்டிருந்தாலும் அதையே க்ளாசிக் படமாக செய்திருப்பார் CVR.
ஜெயலலிதாவுக்கு மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது.சினிமா ஷீட்டிங் கதைக்களம் ஊட்டி லோகேசன் எல்லாமே மெலடியாக அமைந்த பாடல்கள் ஒரு காட்சியும் கூட பிசிறு தட்டாமல் கொண்டு போன திரைக்கதை  என்று ரசிக்க ரசிக்க பார்க்க வைக்கும் திரைப்படம்.டைட்டிலை பார்த்து இது வழக்கமான சாதாரண காதல் கதை என்று படம் பார்க்காமல் இருப்பவர்கள் ஒரு அழகான படத்தை மிஸ் செய்தவர்களே.




என்னதான் ஸ்மார்ட் பாயாக சிவாஜியை காட்டி விட்டாலும் சிவாஜிக்கென ஒரு கெத்து இருக்கின்றதே ஸ்டைல் இருக்கின்றதே ,அதையும் செய்தார் அடுத்த படத்தில் CVR.
அது என்னடாவென்றால் இதுக்கு மேலேயே என்று சொல்ல வைத்தது.ஒரு கமர்சியல் சினிமாவுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் அதகளமாக பின்னியெடுத்திருப்பார்கள் சிவாஜியும் ராஜேந்திரனும்.அதுதான் ராஜா.
இரட்சகர்களையே பார்த்து பழகிப்போன தமிழ் சினிமாவில் இலட்சிய வீரனை நாயகனாக காட்டிய ராஜாவும் இவரது இயக்கத்தில் வெளிவந்த அதிரடி திரைப்படம் ஆகும்.
இந்தி ரீமேக்காக இருந்தாலும் தமிழில் பாலீஸ் பளபளப்பாக மாற்றியுருப்பார்கள் சிவாஜியும் CVRம்.
ராஜாவை 100 நாள் ஓட்டத்தோடு வெகு திருப்தியாக நிறுத்திக் கொண்டார் பாலாஜி.அந்தளவு வசூல் ஆனது.ராஜா எப்போதும் ஒரு பணப்பெட்டி.



 ராஜாவைத் தொடர்ந்து நீதி .கமர்சியலாக பாலாஜி படங்கள் இருந்தாலும் அருமையான கதையை இந்தியில் இருந்து ரீமேக் செய்தார்.நல்ல நீதியை சொன்ன படம் .நிஜமாக சட்டத்துறை யோசிக்காத ஒரு கதைக்களம். தீர்ப்புன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என சமூகத்துக்கு பாடம் போதித்த படம்.படத்தில் எதற்கும் குறைவே இல்லை.ஒரு காமெடி படம் அடுத்து மென்மையான காதல் படம் பின் சூப்பர் ஆக்சன் படம்.. அது அடுத்து சமூக நீதி படமென வரிசையாக வித விதமான வெரைட்டி படங்களால் சிவாஜி ரசிகர்களின் Fanboy டைரக்டராக மாறிப்போனார் CVR.




அடுத்து என் மகன் ..முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தது.எல்லா அம்சங்களையும் பக்காவா செட் செய்திருப்பார் CVR.இரு வேறுபட்ட வேடங்களில் சிவாஜி.ஒரு போலீஸ் பாத்திரத்தின் குணம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான வேடம் தான் சிவாஜி இந்த படத்தில் செய்த போலீஸ் வேடம்.போலீசாக மிடுக்கு ,குடும்பஸ்தராக அடக்கம் என அந்த ஒரு வேடத்தையே இரண்டு வேடங்களாக செய்திருப்பார் சிவாஜி..


 உனக்காக நான் படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்று சிவாஜி -பாலாஜி கூட்டணியின் ஆஸ்தான இயக்குனராக இருந்தார் சிவி ராஜேந்திரன்.

அகில இந்திய புகழ்பெற்ற 'ஆராதனா'வை சிவகாமியின் செல்வனாக மிகவும் அழகாக ரீமேக் செய்து கொடுத்திருந்தார் சிவி ராஜேந்திரன். இன்றும், என்றும் ரசிகர்களுக்கு மனநிறைவைத் தந்து கொண்டிருக்கும் படமாக திகழ்ந்து வருகிறது சிவகாமியின் செல்வன். 


சாணக்யாவின் இயக்கத்தில் பாதி வளர்ந்த வாணி ராணியையும் முழுமையாக முடித்து கொடுத்தார் சிவி ராஜேந்திரன்.

நடிகர் திலகம் நாயகனாக நடித்த இளைய திலகம் பிரபுவின் அறிமுகப்படமான சங்கிலி படத்தையும் அதன் மூலப்படமான காளிச்சரணை விட மேம்பட்டதாக உருவாக்கி கொடுத்திருந்தார் சிவி ராஜேந்திரன். முக்கியமாக 'நல்லோர்கள் வாழ்வைக் காக்க' என்று தொடங்கும் புத்தாண்டு கொண்டாட்ட பாடல் காளிச்சரணில் இல்லாதது.

அடுத்து, சிவாஜி - ஶ்ரீதேவி ஜோடியாக நடித்த சந்திப்பு படத்தை அதன் மூலப்படமான நசீபை விட சிறந்த படமாக இயக்கியிருந்தார் சிவி ராஜேந்திரன். 
ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் திரைக்கதையில் பல முடிச்சுகள் என இருந்தாலும்  தெளிவாகவே குழப்பம் இல்லாமல் படத்தை சுறு சுறுப்பாக கொண்டு போனார் CVR.அதிக வசூலை வாரிக் கொடுத்தது சந்திப்பு.
சிவாஜி - பிரபு இடையிலான காட்சிகள் ரசிகர்களுக்கு பல்சுவை விருந்து படைத்தது.

சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் வெளிவந்த, பஞ்சு அருணாசலம் வசனத்தில் உருவான அவ்தார் படத்தின் ரீமேக்கான வாழ்க்கை சிவி ராஜேந்திரனின் பேர் சொல்லும் மற்றொரு படமாக விளங்குகிறது.


அடுத்து சிவி ராஜேந்திரனின் தயாரிப்பில் வெளிவந்த ஒன்ஸ்மோர் படத்தை சிவாஜியின் Mass FanBoys படமென்று தான் சொல்ல வேண்டும்.



செவாலியர் சிவாஜிக்கும் தன்னால் பின்னணி இசையில் பின்னியெடுக்க முடியும் என்று காட்டியிருந்தார் தேவா. தாழையாம் பூ முடிச்சி, நான் கவிஞனும் இல்லை பாடல்மெட்டை தகுந்த இடங்களில் பயன்படுத்தி இருப்பார்.

S.P.ராஜ்குமார் வசனகர்த்தாவாக அறிமுகமான படம். சிவாஜிக்கும் விஜய்க்கும் போட்டி போட்டுக்கொண்டு வசனம் எழுதியிருப்பார். கலைஞர் வசனத்தில் வந்த இருவர் உள்ளம் படத்தின் தொடர்ச்சி போல, சண்முகப்பிரியன் எழுதிய கதைக்கு சிவாஜி படங்களின் உதவி இயக்குனராகவும், கலைஞர் படங்களின் இயக்குனராகவும் இருந்து MGR முகாமில் பணியாற்றாத SAC திரைக்கதை அமைத்து அதில் சிவாஜியின் நிழலில் அவரது வாழ்த்துகளை பெறும் வேடத்தில் தன் மகன் விஜயை நடிக்க வைத்திருந்தார். அதுவும் சிம்ரன் காதலை மறுத்து விட்டு செல்வதால் அதிர்ந்து நிற்கும் விஜயின் தோளைத் தொடும் போது ஒரு expression! விஜய் உடைந்து அழ, அவரை ஆதரவாக அரவணைக்கும் போது  ஒரு expression! நடிகர் திலகத்தின் அறிவுஜீவி விமர்சகர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கான சவுக்கடி அந்த காட்சி.

"அவன் body அடியாள் bodyடா. என்னுது romantic body" என்று  ஆக்சன் ஹீரோக்களை அடி துவம்சம் செய்த கலாட்டா கல்யாணம், சிவாஜியின் அதிரடி சரவெடி ஆக்சன் படம் ராஜா, 
சட்டத்துறைக்கே பாடமான நீதி,
கலர்புல் காதல் கவிதை மெலடி படமான சுமதி என் சுந்தரி ,

 சிவகாமியின் செல்வன், 
என் மகன் ,
சுனாமி வசூல் சந்திப்பு ,யாரும் எதிர்பார்க்காத வாழ்க்கை ,
கடைசியாக ஒன்ஸ்மோர் 
என சிவாஜியின் Fanboy படங்களின் Godfather என சிவி .ராஜேந்திரனை சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற