நடிப்புக்கே திலகம் சிவாஜிகணேசன் நாட்டியத்துக்கே ராணி பத்மினி ரெண்டு பேரும் தமிழ் சினிமாவோட ஆல் டைம் கிரேட்டஸ்ட் டபுள் ரிங்ஸ்.
பத்மினி ஒரு DANCE QUEEN சிவாஜி ஒரு ACTING KING..
இவங்க இளமையாக ஜோடி சேந்த பணம் படமாகட்டும்,ராஜா ராணி கதையான உத்தமபுத்திரன் ஆகட்டும்,வயாசான பிரெஸ்டீஜ் பத்மநாபருக்கு ஜோடியான வியட்நாம் வீடாகட்டும் ..எல்லாமே MADE FOR EACH OTHER தான்.
நடிகர்திலகம் நடிச்ச படங்கள்லே கிட்டத்தட்ட 40 படத்துலே நடிச்சிருக்கார் பத்மினி. 32 படங்கள்லே ஜோடியா நடிச்சிருக்கார்.
சிவாஜி பத்மினி நடிச்சு 100 நாள் ஓடுன படங்கள் விபரம் இது.
சிவாஜி பத்மினி சேந்து நடிச்ச ரெண்டாவது படம் அன்பு.சிவாஜியோட அண்ணியா TR.ராஜகுமாரி நடிச்ச படம்.100 நாள் ஓடுன திரைப்படம் இது. படம் வந்த தேதி..24.7.1953
வேலை இல்லா திண்டாட்டத்தை சொல்ல நோ வேகன்சி போர்டை விற்றே பணம் சம்பாதிப்பதாக காட்டப்படும் ஒரு புதுமையான பாடல் இடம் பெற்ற படம் இது.
பந்துலு எடுத்த காமெடி படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. சிவாஜி TR.ராமச்சந்திரன் பத்மினி நடித்த படம்.திரும்பிப்பார் அந்தநாள் படங்களில் Anto hero வாக நடித்த சிவாஜி காமெடியிலும் தனித்துவமாக ஜொலித்திருப்பார்.இது 100 நாட்கள் ஓடி வெற்றி படம்.படம் வந்த தேதி 13.4.54.
சிவாஜிக்கு முதன்முதலாக TMS பாடத் தொடங்கியது ,திருவிதாங்கூர் சகோதரிகள் 3 ,பேரும் நடித்தது ,கொண்டு வந்தால் தான் தந்தை,
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் ,கொலையும் செய்வாள் பத்தினி ,
உயிர் காப்பான் தோழன் என்று 4 வாழ்வியல் தத்துவங்களை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ,பாலைய்யாவின்
சேட் காமெடி ,என்று இன்னும் பல புதுமைகளை கொண்ட படம் தூக்குத் தூக்கி. பட்டி தொட்டியெல்லாம் தூக்கு தூக்கிய படம் இது. சிவாஜி பத்மினி நடித்த இந்த படம் 100 நாள் ஓடிய படம் ஆகும். படம் வெளிவந்த தேதி 26.8.54.
இந்த படத்துக்கு அடுத்து வெளியான படம் எதில்பாராதது.புதுமையான ,
புரட்சிகரமான திரைக்கதை அமைப்பில் வெளியாகி தைரியமான கதை என்று பெயர் வாங்கியது.காதலியாக வந்து சிற்றன்னையாக மாறும் அதிசய வேடத்தில் நடித்தார் பத்மினி. சிவாஜி பத்மினி நடிப்பே படத்தை ஏற்றுக் கொள்ள செய்தது.100நாள் படம் இது.வெளி வந்த தேதி 9.12.54.
சிவாஜிகணேசன் பத்மினி நடிப்பில் வெளியான அடுத்த படம் காவேரி.இப் படம் தமிழகத்தில் 100 நாள் ஓடியதா என தெரியவில்லை. இலங்கையில் 100 நாள் ஓடியது.படம் வெளிவந்த தேதி 13.1.55. கடைசியாக மேற் சொன்ன 3 படங்களும் தொடர்ச்சியாக வெளியாகி ஹாட்ரிக் 100 நாள் படங்களாக அமைந்தது.
சிவாஜிக்கு பத்மினி அண்ணியாக நடித்த படம்
மங்கையர் திலகம்.சிவாஜியின் அண்ணனாக வரும் SV.சுப்பையாவுக்கு மனைவியாக பத்மினி நடித்த இப்படமும் 100 நாள் ஓடி வெற்றி கண்டது.இதுவும் பத்மினி துணிந்து ஏற்று புதுமை செய்த படம் தான்.படம் வந்த தேதி 26.8.55.
சிவாஜி பத்மினி நடித்த அமரதீபம் அடுத்த 100 நாள் திரைப்படம் ஆகும். சாவித்திரியும் நடித்திருப்பார்.தமிழில் ஹிட் ஆனதை அடுத்து இந்தியில் சிவாஜியே அமர் தீப் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டார்.அமரதீபம் வெளியான தேதி 29.6.56.
விண்ணோடும் முகிலோடும் என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம் புதையல்-
சிவாஜி பத்மினி ஜோடியின் அடுத்த 100 நாள் திரைப்படம் இது.படம் வெளியான தேதி 10.5.57.
இரட்டை வேட படங்களில் என்றுமே ஆச்சர்யம் கொடுத்துக் கொண்டிருக்கும் படங்களில் முக்கியமானது சிவாஜி நடித்த உத்தமபுத்திரன்.சிவாஜியின் ஜோடியாக பத்மினி நடித்திருப்பார்.தலைசிறந்த கற்பனை சரித்திர பொழுது போக்கு படங்களில் இதுவும் ஒன்று.100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் இது.படம் வந்த தேதி 7.2.58.
சம்பூர்ண ராமாயணம்.சிவாஜிக்கு பத்மினி ஜோடியில்லை. ராமாயணகதை இது. வெள்ளிவிழாவே ஓடிய திரைப்படம் இது.படம் வந்த தேதி 14.4.58.
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான் என்ற சிதம்பரம் ஜெயராமன் குரலுக்கு சிவாஜி நடித்த நடிப்பும் ,பத்மினியின் சிலிர்ப்பூட்டும் நடிப்பையும் ,அழகு அழகான பாடல்களை கொண்டதுமான திரைப்படம் தங்கப்பதுமை. பெண்கள் கூட்டத்தோடு வெற்றி வாகை சூடியது. குறிப்பாக மறு வெளியீடுகளில்.வெளியீட்டில் 100 நாள் ஓடியது.படம் வந்த தேதி 10.1.59.
தமிழகத்தை உலுக்கி எடுத்த ,எப்போதும் அதிசயமாக பார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும் திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
கட்டபொம்மனுக்கு பத்மினி ஜோடி இல்லை. வெள்ளிவிழா ஓடி அசுர சாதனை படைத்த திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். படம் வந்த தேதி 16.5.59.
சிவாஜி பத்மினி நடிப்பில் 100 நாள் ஓடிய அடுத்த திரைப்படம் மரகதம்.அந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கருங்குயில் குன்றத்து கொலை என்ன புதினமே இப்படம் ஆகும். 100 ஓடிய படம்.படம் வெளியான தேதி 21.8.59.
கட்டிட மேஸ்தரியாக சிவாஜி சுமை தூக்கும் கூலியாக பத்மினி நடித்தபடம் தெய்வப்பிறவி.அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் என்ற அருமையான பாடல் இடம் பெற்ற இப் படம் 100 நாள் ஓடி வெற்றிகண்டது. படம் வெளியான தேதி 13.4.60.
முப்பெரும் தேவிகளின் சபதத்தை மையமாக வைத்து AP.நாகராஜன் எடுத்த திரைப்படம் சரஸ்வதிசபதம். மூன்று தேவிகளில் ஒருவராக பத்மினி நடித்திருந்தார்.நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் தனித்து நடித்திருந்தார்.100 நாள் ஓடிய வெற்றி திரைப்படம் இது.படம் வெளியான தேதி 3.9.66.
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் .நாட்டியப் பேரொளி பத்மினிக்கான வரிகள் இது.அதற்கு ஏற்றவாறே அவரும் ஆடிய நடன பாடல்.நிறைய ரசிகர்களின் விருப்பப் படம் .இது இரு மலர்கள்.காதலியாக பத்மினியும் கட்டிய மனைவியாக கே ஆர் விஜயாவும் சிவாஜிக்கு இணையாக நடித்த படம் இரு மலர்கள்.இந்த இருமலர்களை தாங்கும் கொடியாக சிவாஜி நடித்த இப்படம் கொடுத்த ரசனை அதிகம்தான் .100 நாள் ஓடிய இப்படம் வெளியான தேதி 1.11.67.
நாட்டியப் பேரொளி என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு அவருக்கான முழு நீளக் கதைக்களம் காலம் கடந்துதான் அமைந்தது. அது காலத்தை எல்லாம் கடந்து நின்றது.இந்த படத்துக்கு நாதஸ்வரம் வாசித்த மேதைகளையே சிவாஜிதான் அசல் நாங்கள் நகல் சொல்ல வைத்தது சிவாஜியின் நடிப்பு .தில்லானா மோகனாம்பாள் 100 நாள் ஓடிய வெற்றிபடம்.வெளியானதேதி 27.7.68.
பிரெஸ்டீஜ் என்ற வார்த்தையை நினைத்தாலே கூடவே பத்மநாபனும் வந்த வியட் நாம் வீடு.சிவாஜியின் பாந்தமான ஜோடியாகவும் ஜொலித்தார் பத்மினி .சிவாஜி புரொடொக்சன் தயாரித்த இப் படம் 100 நாள் வெற்றித் திரைப்படம் .
வெளிவந்த தேதி 11.4.70.
சிவாஜி பத்மினியின் அடுத்த 100 நாள் படம் குலமாகுணமா.வெளிவந்த தேதி 26.3.71.
சரித்திரப்படமா வீரபாண்டிய கட்டபொம்மன்
புராண படமா திருமால் பெருமை
இதிகாச படமா சம்பூர்ண ராமாயணம்
கலை இசை படமா தில்லானா மோகனாம்பாள்
குடும்ப காவியமா வியட்நாம் வீடு
காதல் படமா இரு மலர்கள்
அரசகதை படமா உத்தமபுத்திரன்
இன்னும் பல அம்சங்கள்லே பல திரைப்படங்கள் இந்த ஜோடி செய்யாத பட வரிசையே இல்லைன்னுதான் சொல்லணும் .
தமிழ் சினிமா ஜோடி லிஸ்ட்ல ரொம்ப பேரோட நம்பர் ஒன் சாய்ஸ் சிவாஜி பத்மினி ஜோடி தான் ..
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக