திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

இந்தப் பாட்டுக்கு வயசு 73

இந்த பதிவுலே நாம பார்க்க போறது ஒரு பாட்டு. சினிமா பாட்டு .73 வயசாச்சு இந்த பாட்டுக்கு.
ஒரு சமத்துவத்தை பேசற பாடல்.
இது பாட்டு அப்படிங்கறத தாண்டி ஓர்  சமூக சிந்தனையா நம்மை பாக்க வெச்ச பாட்டு.

ஒரு சமூக சிந்தனையையே பாட்டாக்கிய பெருமை இதை எழுதினவருக்கு இருக்கு.
அவர்தான் உடுமலை நாராயண கவி .இவர் எழுதுன இந்த பாட்டு என்னன்னு சொல்றதுக்கு முன்னாடி இவர் பத்தின ஒரு விஷயத்தை நாம தெரிஞ்சுக்கணும்.

புகழ் உச்சியில இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார்,(23.05.1981)ல் மரணம் அடைஞ்சார்.. 
அவர் இறக்கறதுக்கு முன்னாலே தான் இறந்த பின்னாலே என்ன செய்யணும்னு ஒரு ஆவணமா  எழுதி வெச்சிருந்தார்.அந்த ஆவணத்துலே ,

 ‘‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடையுது, குறையுது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரிஞ்சு போனா அப்பவே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. 
வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்ய வேண்டாம் .
இதுதான் என் கடைசி ஆசை!’’ன்னு  எழுதிவைச்சார். 

தமிழ் சமூகத்துக்கு விழிப்புணர்வை ஊட்டுன  உடுமலை நாராயணகவி சமூக சிந்தனையை பாட்டுலே எளிமையா  சொல்லி பேர் வாங்குன  ஒரு புலவன்.
இவர் எழுதுன ஒரு சமுக சிந்தனையை சொன்ன பாட்டுத்தான் பராசக்தி படத்துலே வர்ற காகாகா ஆகாரம் உண்ண எல்லோரும் ஓடி வாங்க பாட்டு.

இந்த உலகத்துலே சமத்துவம்ங்கற வார்த்தையை மட்டும் தான் மனுசன் கண்டு பிடிச்சான். ஆனா அந்த வார்த்தைக்கு ஏத்தமாதிரி தன்னோட வாழ்க்கையை நடத்தறானா?  அதான் கேள்வி ...
அந்த சமத்துவத்தை அவனுக்கு புரிய வைக்கத்தான் இந்த பாட்டு. எதை உதாரணம் வெச்சு அவனுக்கு சொல்லறது? 

ஒரு விலங்கை வெச்சு சொல்ல முடியுமா?  ஒரு மரத்தை வெச்சு சொல்ல முடியுமா? ஒரு பறவை அது சொல்லற சமத்துவம்.
காகத்தை விட நல்ல உதாரணம் இல்லே. தனக்கு கிடைச்ச உணவை பங்கு போட்டு பசியாறும் உயிரினம் காகம். அதை வெச்சு சமத்துவம் சொன்னார் கவிஞர்.
இந்த பாட்டு ஒரு அபூர்வமான பாட்டுதான்.

ஆரம்பத்திலேயே காக்கைகளோட குரலை சொல்லி பசியோட உண்மையை எடுத்து சொல்லும் படி ஆரம்பிக்கும் ."ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க" ங்கற வரிகள், உணவுங்கறது தனிப்பட்டவங்களோட சொத்து அல்ல, அனைவருக்குமான உரிமைங்கற  உணர்வை நமக்குக் கொடுக்கும்.
இதுலே அந்த அனுபவ பொருள்னு ஒரு வார்த்தை வருது. காக்கையோட அந்த குணம் எல்லாருக்கும் தெரியும். அது தெரிஞ்சும் மனுசங்க தங்களை மாத்திக்கலையே .
சமத்துவம்ங்கறத காக்கையோட அந்த அனுபவம் சொல்லுது. நமக்கும் தெரியுது. அதுதான் அந்த அனுபவப் பொருள். 

அடுத்து, "சாப்பாடில்லாம தவிக்குதுங்க ஜனம், கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க"ங்கற வரிகள், அன்றாட வாழ்க்கையிலே பசியால் வாடற மக்களின் நிலையை நேரடியாகக் காட்டும்.. பசியை போக்கறது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல; அது ஒரு மனிதாபிமானக் கடமைங்கற கருத்தை இந்தப் பாடல் வலியுறுத்தும்.

பசிக்குதுன்னு சொல்லி பிச்சையா கேட்டாக் கூட கதவை ஓங்கி சாத்தறதுதான் மனுசங்க பண்பாடு.அப்படிப்பட்ட மனுசங்களுக்கு நீங்க இன்னும் சத்தம் போட்டு பாடுங்கன்னு  சவுக்கடியா ஒரு வரி ...
காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால் தாழ்ப்பாளை போடுறாங்க பாருங்க...
ரொம்ப எளிமையா பட்டுன்னு சொல்லறதுதான் நாராயண கவியோட பாணி. 
அத இந்த வரிலே  நாம தெரிஞ்சுக்கலாம் ..

இந்தப் பாடலோட மிகப்பெரிய சிறப்பு – சமுதாயத்திலே  உள்ள சாதி, பணம், இன பாகுபாடு  சுவர்களைத் தாண்டி ,
போக சொல்லறதுதான்.
"இளைத்தவன்.. வலுத்தவன்.. இனச்சண்டை.. பணச்சண்டை... எத்தனையோ இந்த நாட்டிலே...ங்கற வரிகள்,சமூக அவலத்தை  ஒரு கண்ணாடி நமக்கு காட்டறது மாதிரி இருக்கும்.

இது வெறும் கலைப் பாடல் மட்டுமல்ல , ஒரு சமூக அறிவிப்பு போல நமக்குத் தோணும்."பட்சமா இருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க"ன்னு முடியற 
இந்த வரிகள், ஒவ்வொரு மனுசனும் தன் பழக்கத்தை மாத்தாமே , குறைந்தபட்சம் பகிர்ந்து வாழக் கத்துக் கொள்ள வேணும்னு  அழகா, ஆனால் கடுமையான உண்மையைச் சொல்லும்.

அதே போலே இந்த மனுசங்களை பாத்து பட்சி ஜாதியான நீங்க உங்க பழக்கத்தை மாத்திக்காதீங்கன்னும் ஒரு வரியை போட்டிருப்பார்.
பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க...

அதனால் தான், இந்தப் பாட்டை ஒரு பசி, சமத்துவம், பகிர்வு, அன்பு ஆகியவற்றோட  கூட்டு பாடலா கருதலாம்.
இது இசையால் ரசிக்க வேண்டிய பாடல் மட்டும் இல்லை; சிந்திக்க வைக்கும் பாடல்.

1952:லே பராசக்தி பட பாட்டு இது...பாட்டு வந்து 73 வருசமாச்சு. இந்த பாட்டு சொன்ன சமத்துவம் ,சமூக அவலத்தை இவ்வளவு எளிமையா சொன்ன ஒரு பாட்டு எதுவும் இல்லே. காகத்தை உதாரணமா வெச்சு வந்த பாட்டுலே இதைய மீறுன ஒரு பாட்டும் இல்லே.  நல்ல 
சமத்துவத்தை ,சமூக சிந்தனையை ,சமூக அவலத்தை ஒரு சேர கலந்து சொன்ன பாட்டு  இந்த பாட்டு ..

செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற