ஒரு ரசிகனுக்கு அதீதமான ரசனையை சர்வ சாதாரணமாக நடிகர்திலகம் செய்து உச்சமாக பார்க்க வைத்த படம்.
விநியோகஸ்தர்களுக்கு ஜாக்பாட்டாக பணப் பெட்டியை நிரப்பிய படம்.
தயாரிப்பாளருக்கு ஒரு பக்கம் பணத்தையும் இன்னொரு பக்கம் புகழையும் கொடுத்துக் கொண்டே இருக்கும் படம்.
ஒரு படம் தயாரிச்சா இப்படி தயாரிக்கணும்.காசுக்கு காசு .புகழுக்கு புகழ்.ஒரு தியேட்டருக்கு படப் பெட்டியை அனுப்பி வெச்சா பெட்டி நிறைய பணத்தோட வர்ற படம்.
வசந்த மாளிகை.
முதல் ரிலீசுலேயே வெள்ளிவிழா ரன்னிங்கா போச்சு.பிலிம் தேய தேய காசு பாத்தார் ராமா நாயுடு.
ஊர்லே போஸ்டர் ஒட்டுனா போதும் .எங்கிருந்துதான் தியேட்டருக்கு கூட்டம் வருமோ ?
எப்போ போட்டாலும் தியேட்டர் சும்மா கலகலன்னு இருக்கும்.இந்த பட வசனத்தை பேசறதுக்கே தியேட்டர்லே ஆளுக இருப்பாங்க.
முதல் வெளியீட்டுலே தமிழ்நாட்டுலே 12 தியேட்டர்லே 100 நாள் ஓடுச்சு. சென்னைலே சாந்தி கிரவுண் புவனேஸ்வரி மூணு தியேட்டர்லயும் 271 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்புல் ஆன படம்.கிரவுண் புவனேஷ்வரி தியேட்டர்கள்லே 140 நாள் ஓடுச்சு.
சாந்திலே 175 நாள். மதுரைலே 200 நாள்.இங்க தமிழ்நாட்டுலே இப்படின்னா இலங்கைலே இன்னும் பட்டையை கிளப்பி ஓடுச்சு.
இலங்கைலே முதல் வெளியீட்டுலே யாழ்ப்பாணத்துலே 200 நாள் ஓடுச்சு.அஞ்சரை லட்சத்துக்கு மேலே வசூல் செஞ்சது. கொழும்புலே 250 நாள் ஓடுச்சு .12 லட்சத்துக்கு மேலே வசூல் செஞ்சது.14 தியேட்டர்லே 50 நாள் ஓடுச்சு. ஒரு தமிழ்படம் இலங்கைலே செஞ்ச பெரிய ரெக்கார்ட் இது.வசந்தமாளிகை படம் ரிலீசானப்போ மட்டும் இல்லே. எப்ப படம் போட்டாலும் ஏதாவது ஒரு சாதனையை செஞ்சுட்டுதான் இருக்கு.
1983 க்கு முன்னாலே வரைக்கும் வசந்த மாளிகை படத்தை 5 தடவை வெளியிட்டு இருக்காங்க.1983 லே 6 வது தடவையா படம் வெளியானப்பவும் பெரிய வசூல் சாதனை செஞ்சிருக்கு.
யாழ்ப்பாணத்துலே வசந்த மாளிகை 6 வது தடவையா வெளியானப்போ முதல் 7 நாள்லே ஒரு லட்சம் ரூபாய் வசூல் செஞ்சது.14 நாள்லே இரண்டு லட்சம் ,25 நாள்லே மூணு லட்சமும், 39 நாள்லே 3,66,425 ரூ -75 பைசா வசூல் செஞ்சது.இது ஒரு பெரிய வசூல் ரெக்கார்ட்.
இதே யாழ்ப்பாணத்துலே பத்து வருசத்துக்கு முன்னாலே அதாவது படம் முதல் வெளியீட்டுலே 1972 லே 200 நாள் ஓடி வசூல் செஞ்ச தொகை அஞ்சரை லட்சம்.1983 லே 39 நாள்லே 3,60,000 க்கும் மேலே வசூல் செஞ்சது.
பத்து வருசத்துலே 6 தடவை வெளியீடு செஞ்சு அப்பவும் பிரேக் ரெக்கார்ட் பண்ணுன படம் வசந்த மாளிகை.வசந்த மாளிகை படத்தை ஒரு பொக்கிஷ பெட்டின்னுதான் சொல்லணும்.
டிஜிட்டல்லேயே 4 ,5 தடவை படத்தை பண்ண இதான் காரணம்.
இந்த இலங்கைலே படம் ஓட்டற ,ஓடுன விஷயங்களை கேட்டா ரொம்ப ஆச்சர்யமா ,சுவாராஸ்யமா இருக்கும்.
ஒரு பிக்சர் பொட்டியை ஒரு சிட்டிக்கு அனுப்பி வெச்சா ,அங்க தியேட்டர்காரங்க ரெண்டு தியேட்டர்லே போட்டு படத்தை ஓட்டுவாங்க.இலங்கை தமிழ் மக்கள் தமிழ் படத்தை ரொம்ப ஆர்வமா பாப்பாங்க.படம் வெளியாகற முதல் ராத்திரியே கூட மக்கள் கூட்டம் அலைமோதும்.
தியேட்டர்காரங்கனாலே கூட்டத்தை கட்டுப்படுத்தறது ரொம்ப கஷ்டமாயிடும்.அப்ப அவங்க இந்த ஐடியாவை பாலோ பண்ணுவாங்க. அதாவது ஒரு பிக்சர் பெட்டி தான் இருக்கும்.பக்கத்து பக்கத்து தியேட்டர்கள்லே ,அதாவது ரெண்டு தியேட்டர்லே படத்தை ஓட்டுவாங்க. அது எப்படின்னா ,முதல் தியேட்ரலே காலைலே படம் 9.30.க்கு ஆரம்பிப்பாங்க.அரை மணி நேரம் படம் ஓடுனதும் அந்த ரீல் பாக்ஸ் ரெண்டாவது தியேட்டருக்கு அனுப்பி வைப்பாங்க. ரெண்டாவது தியேட்டர்லே படம் 10 மணிக்கு படத்தை போடுவாங்க.அடுத்த அரைமணியிலே அடுத்த ரீல் பாக்ஸ் போகும்.ரெண்டாவது தியேட்டர்லே அதை கொடுத்துட்டு முதல் ரீல் பாக்ஸை வாங்கிட்டு வருவாங்க .இப்படி அரை மணிக்கு ஒரு தடவை ரீல் பாக்ஸ் மாறி மாறி போகும்.தியேட்டர் வாசல்லே ஒரு காரோ ஆட்டோவா ரீல் பாக்ஸ் கொண்டு போக தயாரா நிக்கும்.பர பரன்னு வேலை செய்வாங்க.சிவாஜியோட பல படங்கள் இப்படி ஓட்டப்பட்டிருக்கு.
புது படங்க ரிலீசாகறப்போ இலங்கை தியேட்டர்கள்லே வெக்கற பேனர் ,கட் அவுட்டுகளை பாத்தா இங்க தமிழ்நாட்டுலே வெக்கறதெல்லாம் பெரிசாவே தெரியாது. அந்தளவுக்கு பெரிய வேலைப்பாடுகள் செஞ்சிருப்பாங்க.
பொன்னூஞ்சல் படத்துக்கு சிவாஜி உஷாநந்தினி படத்தை கட்அவுட்டா செதுக்கி ,ஒரு ஊஞ்சல்லே ஆடற மாதிரி ,ரெண்டு பக்கமும் செயின் போட்டு தியேட்டர்லே தொங்க விட்டாங்க.காத்து வீசுனா அந்த ஊஞ்சல் அப்படியே ஊஞ்சாலடற மாதிரி இருக்கும்.
அதே மாதிரி ராஜா படத்துக்கு வேற லெவல்லே பண்ணி இருந்தாங்க. சிவாஜி கட் அவுட்டை நாலு செஞ்சு ,ஒரு வட்ட வடிவ சுழல் பலகைலே திசைக்கு ஒண்ணா வெச்சு சேத்து கட் அவுட்டை வெச்சாங்க. சுழல் பலகைலே பேரிங்கை செட் பண்ணுனாங்க. இதுவும் காத்துக்கு சுத்திட்டே இருக்கும்.அப்படி சுத்தறப்போ பலகைலே இருக்கற நாலு கட் அவுட்டையும் ஒரு சுத்துலே பாக்கலாம்.
தமிழ்நாட்டுலே கட் அவுட்னா நிக்கற போஸ் மட்டும் தான் பெரும்பாலும்.
ஆனா இலங்கைலே ரொம்ப ரிஸ்க்கான வேலை எல்லாம் செய்வாங்க.மோட்டார் பைக்லே ஹுரோ உக்காந்து இருக்கற மாதிரி ,ரெண்டு மாட்டை புடிச்சு ஏர் ஓட்டற மாதிரி ,தரைலே ரெண்டு கையையும் விரிச்சு காமிக்கற கட் அவுட்னு ஒவ்வொரு படத்துக்கும் வித விதமா செய்வாங்க.
நாமெல்லாம் தமிழ்நாட்டுலே அதுமாதிரி பாக்க சான்ஸ் கொடுத்து வைக்கலே.
கௌரவம் படம் இலங்கைலே ரிலீஸ் ஆனப்போ முதல் நாள் நைட்டே ஜனங்கள் தியேட்டர்லே கூடிட்டாங்க. பெரிய கூட்டம்.இவ்வளவு கூட்டம் சேந்துருச்சேன்னு தியேட்டர் நிர்வாகமும் மறுநாள் காலைலே போட வேண்டிய படத்தை ,நைட் 12 மாணிக்கே போட்டுட்டாங்க. நான்ஸ்டாப்பா படத்தை ஓட்டுனாங்க.தமிழ் நாட்டுலே நாலு ஷோ இல்லேன்னா 5 ஷோ அவளவுதான். இலங்கைலே 7 ஷோ 8 ஷோ ஓட்டுன படங்கள் எல்லாம் இருக்கு..
அந்த கால சினிமாவை பத்தின அனுபவத்தை நெனச்சு பாக்கறப்போ ,இதையெல்லாம் கேக்கறப்போ அட இலங்கைலே படம் பாத்திருக்கலாமோன்னு நெனக்க வைக்கும்.
இலங்கை சினிமா ரசிகர்கள் வேற லெவல் தான்.
வசந்தமாளிகை ரெக்கார்டை பேச ஆரம்பிச்சு இப்படி வந்து முடிஞ்சிருக்கு. இந்த பதிவு எப்படின்னு உங்க கருத்தை சொல்லுங்க.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக