பத்மினி,கே ஆர்விஜயா ,
சரோஜாதேவி,தேவிகா ,
ஜெயலலிதா, லட்சுமி இந்த ஆறு பேரும் பாடி நடிக்க சிவாஜி பாடாமே நடிச்ச ஆறு பாட்டுக்கள் .
சிங்கத்துக்கு எதுக்கு பாட்டு. வந்து நின்னாலே பத்தாதா? ஒரு ஷாட் போதுமே .தன்னோட போர்ஷனோட கெத்தை காட்டிருவாரே. அப்படி பல பாட்டுக இருக்கே. அப்படி அமைஞ்ச 6 பாட்டுக்களை பாக்கலாம்.
முதல்லே பத்மினி பாட்டு.
பத்மினிக்கு சோலோவா ரொம்ப பாட்டுக இல்லே.ஆனா இந்த ஒரு பாட்டு போதும்.மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன.சிக்கலாருக்கு இந்த படத்துலே பாட்டே இல்லேங்கறது ஒரு விஷயம்.ஆனாலும் எல்லா பாட்டுலயும் வருவார்.
சிக்கலார் ஒரு கொஞ்சம் ஆணவம் பிடிச்ச குழந்தை. மோகனா ஆட்டம் இருக்கு பாக்க வாங்கோன்னு சொன்னது ஒரு மரியாதை.தன்னோட நாதஸ்வரம் இருக்குதே அதை விட என்ன பெரிய ஆட்டம். அதுலே ஒரு ஈகோ.
வெடிச்சத்ததுக்கு நீயாடுன்னு ஒரு காரணத்தை சொல்லிருவார்.சிக்கலார் கோஷ்டிக்கு மோகனா டான்ஸை பாக்கறதுக்கு ஆசை.சிக்கலார் தடை போட்டுருவார்.
படுக்கைலே புரண்டு படுத்த சிக்கலார் திரும்பி பாத்தா ஒருத்தரையும் காணோம். அவங்களை தேடற சாக்குலே மோகனா ஆடற இடத்துக்கு வந்துருவார். எப்படிடா முகத்தை காட்டறது. மண்டப ஓரமா சிலைக்கு பக்கத்துலே கொஞ்சம் மறைஞ்ச மாதிரி நின்னு பாப்பார்.
மோகனாவும் பாத்துடுவா. கவிஞர் போட்டாரு பாருங்க. முதல் வரியை.மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னன்னு ..
இதுலே அடுத்ததா ஒரு வார்த்தை வரும் பாருங்க. ஓரே வார்த்தை நவரசமும்னு ..
கேவி மகாதேவன் இந்த வார்த்தைக்கு அடுத்ததா அடுத்த வார்த்தையை தொடராமே ஒரு மியூசிக் போட்டிருப்பார்.கொஞ்சம் செகண்ட் அது போகும். ஏன் அப்படி .
நவரசம்னு ஒரு வார்த்தை சொன்னா கண்டிப்பா அதுக்கு பின்னாடி நவரசத்தையும் காட்டற மாதிரி ஷாட் கண்டிப்பா வெப்பாரு டைரக்டர். அதனாலே நவரசம்ங்கற வார்த்தைக்கு பின்னாலே அப்படி ஒரு மியூசிக்.டைரக்டர் என்ன நெனைப்பார்னு புரிஞ்ச ஒரு இசை மேதை KVM..
பரதம் ஆடறப்போ ,அதுவும் பத்மினி ஆடறப்போ இல்லேன்னா எப்படி ?சினிமா ஸ்கிரீன் எல்லாம் எல்லாம் அப்படி பொங்கற மாதிரி இருக்கும்.என்ன ஒரு ஷாட்டுப்பா. என்ன ஒரு நடிப்பு ,முக பாவம்.
சாதாரணமா வந்த சிக்கலார் அப்படி ரசிப்பார்.பாட்டுலே சிக்கலாலரையும் சீண்டறமாதிரி ,தன்னை பத்தியும் சொல்லற மாதிரி சிலேடையா மோகனா பாடுவா.அழகர் மலையழகா ,இந்த சிலை அழகா..எதை பாக்கறீங்கன்னு கேக்கற மாதிரி இருக்கும்.கவிஞரோட எழுத்துதான் இதுக்கு சரி. வெடிச்சத்ததுக்கு நீயே ஆடுன்னு சொல்லி போனவர் இப்ப வந்து இப்படி மறைஞ்சு எட்டி எட்டி பாக்கறாரேன்னு மோகனாவுக்கு ஆனந்தம்.சிக்கலாரை முதல் தடவை பாத்ததுமே மோகனாவுக்குள்ளே ஒரு காதல் வந்துருச்சி. அது தெரியாத ஆம்பளைகள்கிட்டே வம்பு இழுக்கறது காதலோட குணம்.அதைத்தான் மோகனாவும் செய்வா.எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன். நீ மறைஞ்சு மறைஞ்சு பாத்தாலும் எனக்கு தெரியாமே போகுமா ..
உன்னை என்னையன்றி வேறு யாரறிவார்னு அடுத்த வரி .இதுதான் மோகனாவோட காதலை சொல்லற வரி.
உந்தன் பாட்டுக்கு நானாட வேண்டாமான்னு பாடி ஒரு அபிநயம் காட்டுவார் பாருங்க பத்மினி.இப்பல்லாம் கெமிஸ்ட்டிரின்னு சொல்றாங்க.இதுலே கெமிஸ்ட்டிரி என்ன அறிவியல் இயற்பியல் கணக்கு எல்லாமே கலந்திருக்கும்.கல்யாணமாகி கொஞ்ச நாள் கழிச்சு வந்தா நடிப்பா இது ...
மாயவா வேலவான்னு சொலிட்டு எனையாளும் சண்முகான்னு சிக்கலாரோட பேரையும் சொல்லிடுவா. டக்குன்னு பல் கடிப்பார் பாருங்க சிக்கலார். ஒரு சின்ன ஷாட்டுதான்.என்ன அழகா காமிப்பார்.சிவாஜியை ஒரு ரெண்டு மூணு ஷாட்டுலேதான் காட்டுவாங்க. பாட்டு பூராம் தெரியற மாதிரியான பீலிங் இருக்கும். அத பத்மினியோட மூவ்மெண்டுகளே நமக்கு காட்டற மாதிரி இருக்கும்.
மேதைகளோட கலை திறமையை ரசிக்க நாமும் கொஞ்சம் மேம்பட்டு நம்ம ரசனைய வளத்திருந்தா இன்னும் பல நுணுக்கங்களை தெரிஞ்சுக்கலாம். ஒவ்வொரு தடவையும் ஒரு புது விதமான ரசனையை கொடுக்கற பாட்டு இது.ரீவைண்ட் அடிச்சு ரீவைண்ட் அடிச்சு பாக்க வைக்கும்.பரதம் சங்கீதம் நவரசம் இந்த எபிசோட்.
சிவாஜி கே ஆர் விஜயா...
இந்த பாட்டோட ஸ்பெசலே
கே ஆர் விஜயாவோட நடிப்புத்தான்.அதுலயும் அந்த குறிப்பிட்ட ஷாட். உற்சாகமா போற பாட்டுலே சந்தோசமான பாவனையை காட்டிட்டு இருக்கற அந்த முகத்துலே டக்குன்னு சோகம் விரக்தியை கலந்து காட்டுவார் பாருங்க.அந்த செகண்ட். அந்த ஷாட்.க்ளீன் போல்ட் விக்கெட் மாதிரி எபெக்ட் கொடுக்கற நடிப்பு.
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள் கோர்த்து வைத்திருந்தேன். சொர்க்கம் பட பாட்டு.கணவன் மனைவிகள் ,அதிலயும் கணவன் ஜாலி மேனா இருந்தா கண்டிப்பா பாக்கணும் இந்த பாட்டை.ஒரு பார்ட்டிலே பாடற பாட்டு.
பார்ட்டிலே விஜயா பாடற மாதிரி சிச்சுவேசன்.
சிவாஜி எங்கே குடிக்க போயிருவாரோன்னு வெச்ச கண்ணு விலக்காமே பாத்துட்டே பாடுவார்.
ஒரு பதைபதைப்பு இருக்கணும். ஆனா முகத்துலே பளீர்னு காட்டக்கூடாது. ரொம்ப லைட்டா காட்டணும்.அப்படி பண்ணி இருப்பாங்க கேஆர் விஜயா.ரெண்டாவது சரணம் முடியற வரைக்கும் இதே எபெக்ட்லே பாட்டு போகும். ரெண்டாவது சரணம் முடிஞ்சு அந்த ,முப்பது முத்துகள் போட்டு வைத்திருந்தேன்னு பாடபாட சிவாஜி உக்காந்து இருந்த சேர் காலியா இருக்கும். எது நடக்கக் கூடாதுன்னு நெனச்சாரோ அது நடந்திரும்.சிவாஜி குடிக்க ,விஜயா அதை பாக்க,விஜயா பாத்ததை சிவாஜி பாக்க ,சிகரெட் பத்த வெச்சு அவ்வளவு பந்தாவா நடந்து வருவார் சிவாஜி.இந்த ஒரு சின்ன செகண்ட்லே சிவாஜி நடிப்பை பாக்கணும்.வொய்ப் பாத்துட்டாளேன்னு ஒரு சின்ன சங்கடத்தை முகத்துலே காட்டி ,சுதாரிச்சு நடந்து வருவார்.
அந்த மது மயக்கம் கொடுக்கற எபெக்ட் முகத்துலே.அந்த எபெக்ட் வந்துட்டா எதையும் லட்சியம் பண்ணாது அந்த குணம். அப்படித்தான் வருவார்.கே ஆர் விஜயா பக்கம் வந்ததும் ஒரு சின்ன பயம் அதிர்ச்சியோட சேர்லே போய் உக்காந்துக்குவார்.
சிவாஜிக்கு இந்த ஒரு குறிப்பிட்ட ஷாட்டும் ,பாட்டு பூராவுமே கே ஆர் விஜயாவுக்கும் ஸ்கோப் கொடுத்த பாட்டு.
பாட்டோட முதல் பாதி பதை பதைப்பு ,சந்தோசம் ரெண்டாவது பாதி கோபம் விரக்தி சோகம்னு கே ஆர் விஜயா பண்ணியிருப்பார்.
சிவாஜி ரோஜாதேவி ...
இவங்க காம்பிநேசன்லே ரொம்ப பாட்டுக இருக்கு. எந்த பாட்டை சொன்னாலும் அடடா இது பிரமாதமாச்சேன்னு சொல்ல வைக்கும்.
ஆனா எந்த படத்திலயும் இல்லாத ஒரு புதுமையான பாட்டு இந்த ஜோடிக்கு இருக்கு.தட்டட்டும் கை தழுவட்டும் ,என் தம்பி பட பாட்டு.
தம்பி பாலாஜி அண்ணன் சிவாஜிக்கு போட்ட சவால் பாட்டு.
சரோஜா ஆடணும் ,சிவாஜி சரோஜாவ தலையிலே இருக்கற பூவை எடுக்கணும் .சும்மா இல்லே. கைலே வெச்சிருக்கற சாட்டையாலே.பம்பரம் போலே சரோஜா சுத்தி சுத்தி ஆடுவாங்க. நேரம் பாத்து சாட்டையை வீசுவார் சிவாஜி. முதல் குறி தப்பிரும்.பாலாஜி கிண்டலா சிரிக்க...அதுக்கு பின்னாலே ஸ்டைல் ஸ்டைலா சாட்டையை வீசி பூவெடுப்பார் சிவாஜி.இந்த சாட்டை வீச்சுலே கடைசியா வர்ற சாட்டை வீச்சு ரொம்பவே அசத்தலா இருக்கும். சாட்டையை சரோஜாதேவி தலையை பாத்து வீசி பூவை பறிச்சு , சடார்னு திரும்பி யாரும் எதிர்பாராத படி பாலாஜியோட சிகரெட்டை விளாசித் தள்ளுவார் சிவாஜி.அருமையாஅமைஞ்ச ஷாட் அது.இந்த டைப்புலே வந்த ஒரே பாட்டு இதுதான்.பாட்டு ஓட ஓட நம்மையும் பர பரன்னு பாக்க வைக்கும்.இது ஒரு அதிரடிப்பாட்டு.
சிவாஜி தேவிகா...
என்னன்னே தெரியாது. இந்த பாட்டை கேக்கறப்போ எல்லாம் மனசுச்சுள்ளே வைப்ரேசன் உண்டாகுது.ஒரு காதல் மெலடி பாட்டுக்கு போட்ட மியூசிக் மாதிரியா இருக்கும்? ரொம்ப உற்சாக மூடுலே இருந்திருப்பார் போலே மெல்லிசை மன்னர்.
அடிச்சு தூக்கியிருப்பார்.இவ்வளவு அழகான மொத்த பாட்டையும்
தேவிகா பக்கம் தூக்கி கொடுத்துட்டா ,
நடிகர்திலகத்தையும் சும்மா நிக்க வெச்சுட்டா ,விட்டுருவாரா நடிகர்திலகம். ஒரு ஷாட்டை மட்டும் பாருங்க.
பாட்டுலே இந்த வரி வரும்.
வருடம்தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும்பனியில் மகிழ்வோம் இங்கே..
தேவிகா பாட சிவாஜி தேவிகா பின்னாலே கட்டி பிடிச்சபடி இருப்பார்.இந்த வரிகளை தேவிகா பாடறப்போ ,தேவிகாவை நெனச்சு சிவாஜி சோகமா ஒரு பாவனையை காட்டுவார். தேவிகா சிவாஜியை டக்குன்னு பாக்க அந்த பாவனையை மகிழ்ச்சிக்கு மாத்திருவார்.டக்குன்னு வந்து போகும் அந்த முக பாவம்.
சிவாஜி நிக்கறதே அழகான ஸ்டைலா இருக்கும் .அந்த தொப்பி இன்னும் கூடுதலா ஒரு அட்ராக்சனா இருக்கும்.
பாட்டோட மியுசிக் ,அந்த லோக்கேசன் , தேவிகா நடிப்பு ,சிவாஜி ஸ்டைல் எல்லாமே ஒரு வைப்ரேசன் மூடை தர்ற பாட்டு.
சிவாஜி ஜெயலலிதா...
மங்கையிடம் ஒரு அனல் வந்தது
அது எந்த மன்னன் தந்த அனலோ
எப்படி வார்த்தைகளை கவிஞர் போட்டிருக்கார் பாருங்க.எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது, எந்த தேவதையின் குரலோ.அவன்தான் மனிதன்.
சிவாஜி ஜெயலலிதா ஆடற அந்த சின்ன டான்ஸ் மூவ்மெண்ட் என்ன ரசிப்பை கொடுக்குது.ஒரே வீட்டுலே புல்பாட்டு. சிவாஜி நடை ,நிக்கற போஸ் , அந்த ஸ்டைல் எல்லாமே கலக்கலா இருக்கும்.பாட்டு ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே வர்ற அந்த ஹம்மிங்..மனசுக்குள்ளே இறங்கி ஒரு கிறக்கத்துக்கு ஆளாக்க,ஹம்மிங் முடிஞ்சு எந்த தேவதையின் வார்த்தை ஆரம்பிக்க ட்ரம்ஸ்லே மெல்லிசை மன்னர் அதிரடி காட்ட ,போக போக ஒரு நம்மை மெஸ்மரைஸ் பண்ணிடும் .
சிவாஜியும் ஜெயலலிதாவும் டச் பண்ணாமே ஆடற அந்த டான்சும் பேக்ரவுண்ட் மியூசிக்கும் கொடுத்த ரசிப்பே அலாதிதான்.
சிவாஜி லட்சுமி
இந்த பாட்டு ஆரம்பிச்சு 22 செகண்ட்டுக்கு மியூசிக் போகும். மெலடிலே. அப்படி ஒரு எபெக்ட்.மனசை ஒரு வழி பண்ணிடும். மன்னர் டைப்லே ராஜா பண்ணுன மியூசிக்.
கவிஞரோட வார்த்தைகள்.
அலையிலாடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்.
சில ஹம்மிங் கேட்டா அட இவங்களை விட்டா ஆளில்லேப்பான்னு சொல்ல வைக்கும். மெலடிலே.. ஹம்மிங் ராட்சஸி ஜானகி உருக வெச்சுருவார். அலையிலாடும் காகிதம்ம்னுனுனு ,ஒரு இழு இழு இழுப்பார் பாருங்க. மனசு அப்படியே சொக்கிப் போகும்.
வசந்தகால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்.
தியாகம் பட பாட்டு.கொடிலே காயப் போட்டிருக்கும் துவைச்ச துணிகள். லட்சுமி பாடிட்டே அந்த துணியை இழுப்பார். ஒரு கேப் விழும். தூரத்துலே நின்னுட்டு இருப்பார் நடிகர்திலகம். வெள்ளை டிரெஸ்லே. கன்னத்துலே கை வெச்சுட்டு.கேமரா பக்கம் போய் திரும்பும்.ஜிவ்வுன்னு போகும் மனசு.
கடைசி சரணத்துலே சிவாஜி நடை ,க்ளோசப் ஷாட் ஒண்ணு ,அப்பறம் தோப்புலே நடந்து வர்ற மாதிரி ஷாட்டுன்னு
அழகான கவிதை மாதிரி படம் பிடிச்சிருப்பாங்க.
ரம்மியமான சூழல்,லட்சுமி நடிப்பு ராஜா மியுசிக் ,கவிஞர் எழுத்து ,நடிகர்திலகம் எல்லாம் மெலடிலே ஹை டெசிபல் அதிர்வுலே ரசிக்க வைக்கும்.
சிவாஜி பாடலேன்னாலும் ஒரு சின்ன ஷாட்டா இருந்தாலும் தன்னோட இருப்பை காட்டி மறக்க முடியாதபடி மனசுலே பதிய வெச்சுருவார். வெறும் ஆடியோவா கேக்கறப்போ கூட ,அட சிவாஜி இந்தபாட்டுலே இப்படி பண்ணியிருப்பாரேன்னு மனசுலே அந்த காட்சி வந்து போகும்.
செந்தில்வேல் சிவராஜ்..
கருத்துகள்
கருத்துரையிடுக