1961 ஆம் வருசம்.
ஒரு வருசத்துலே எவ்வளவு வெரைட்டியா படங்களை கொடுத்திருக்கார் சிவாஜி .சிவாஜிங்கறதாலே அது ஆச்சர்யப்பட வெச்சிருக்காது. ஏன்னா அதான் சிவாஜி. மூணு பா வரிசை படங்கள் இந்த வருசத்துலே.பாவமன்னிப்பு பாசமலர் பாலும் பழமும். மூணுமே வேற வேற ரூட்டுலே போகற படங்கள்.
இதே வருசத்துலே கப்பலோட்டிய தமிழன் வேற. இந்த மாதிரி ஒரு படம் ஒரு நடிகன் பண்றானா அந்த நடிகன் ஒரு வருசம் இழுத்துடுவான் .14 கெட்டப்புலே நடிச்ச மருத நாட்டு வீரன் .அது ஒரு களம்.இந்த படங்களுக்கு சம்பந்தமே இல்லாமே புனர் ஜென்மம் .அப்படி ஒரு குடிகார வேஷம். மொதல்லே அந்த கேரக்டர்லே நடிக்கறதுக்கே கதாநாயகர்கள் யோசிப்பாங்க.
இன்னொரு டைப்புலே எல்லாம் உனக்காக. நெனச்சு பாக்க முடியாத பட வரிசை. மறுபடி மறுபடி சொல்றது இதுதான். சிவாஜிங்கறதாலே சாத்தியமாச்சு.
எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பா செஞ்சா ,இனி ஒருத்தன் பொறந்துதான் வர வேணும்னு சொல்வாங்க.சிவாஜியை பொறுத்த வரை அவரை அப்படி சொல்ல முடியாது . அவரோட சரி.
பாலும் பழமும் படத்தை பேர் வெக்காமத்தான் பீம்சிங் எடுத்துட்டு இருந்தார். கடைசியா தான் பாலும் பழமும் டைட்டில் வெச்சாங்க.
பாலும் பழமும் படத்துலே டாக்டர் வேஷத்துக்கு சிவாஜி உண்மையான டாக்டர் வெச்சிருந்த கோட்டை அணிஞ்சு நடிச்சார்.
டாக்டர் பாலகிருஷ்ணனை பாக்க்க போன சிவாஜி அவரோட ரூம் ஹேங்கர்லே மாட்டி வெச்சிருந்த ஒரு வொயிட் கோட்டை ,அவரோட பெர்மிசன் வாங்கி அணிஞ்சு நடிச்சார்.டாக்டர் பாலகிருஷ்ணன் மகள் படத்தை பாத்தப்போ அப்பாவோட கோட்னு ரசிச்சு பாத்தாராம்.
சிவாஜி தன்னோட ஹேர்ஸ்டைலை பெப்பர் அண்ட் சால்ட் லுக்குலே வெச்சிருப்பார். இந்த ஹேர்ஸ்டைல் அப்போ ரோம்பவே ஸ்பெசல் .நிறைய ரசிகர்கள் இது மாதிரி ஹேர் ஸ்டைல் வெச்சு தங்களை அலங்காரம் செஞ்சுகிட்டதும் இந்த ஹேர் ஸ்டைலோட சிறப்பு.
சரோஜாதேவிக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்த கேரக்டர்கள்லே இந்த பட கேரக்டரும் ஒண்ணு.
நிறைய பேர் அப்போ புதுசா பிறந்த குழந்தைகளுக்கு ,ஆண் குழந்தைக்கு ரவின்னும் ,பெண் குழந்தைக்கு சாந்தின்னும் பேர் வெச்சாங்களாம்.
கணவன் மனைவியா வாழ்ந்தா ரவி சாந்தி மாதிரி வாழனும்னு நிறைய தம்பதிகளை நெனக்க வச்ச படம் இது.
படம் சூப்பர் ஹிட்டாகி செமையா ஓடுச்சு. அந்த வருசம் வெளியான பாவமன்னிப்பு பாசமலர் வெள்ளி விழா ஓடுச்சு. அந்த வரிசைலே மூணாவதா இந்த படமும் வெள்ளிவிழா ஓட வேண்டியது.வரிசையா வந்த சிவாஜியோட படங்களாலே 140 நாள்லே படத்தை எடுக்க வேண்டிவந்துருச்சு.
இந்த படத்தோட வெற்றி ஜவுளிகடைக்காரங்களுக்கு வியாபார ரீதியா நல்ல பலனை கொடுத்துச்சு. சரோஜாதேவியோட அந்த கேரக்டர் செஞ்ச பாதிப்பு தான் காரணம். ஐவுளிக் கடைகள் ஒரு புடவையோட டிசைனுக்கு இந்த படத்தோட பேரை வெச்சு சேல்ஸ் பண்ணுனாங்க.
பாலும் பழமும் சேலைகள்னு பரபரப்பா விற்பனை ஆச்சு.நிறைய கடைகள்லே பாலும் பழமும் சேலைகள் இங்கே கிடைக்கும்னு போர்டே வெச்சாங்க.
பாலும் பழமும் ரிலீசான முதல் நாள் படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்துன்னு தெரிஞ்சுக்க பீம்சிங் சென்னை சாந்தி தியேட்டர்லே படம் பாத்தார்.இந்த படத்துலே ஒரு காட்சிலே வெளிநாட்டுலே இருந்து ஒரு லெட்டர் வந்ததா காட்டுவாங்க.ஆனா அந்த லெட்டர்லே இந்திய ஸ்டாம்பை காட்டியிருப்பாங்க. இதை பத்தி பீம்சிங்கிட்டே சுட்டி காட்டுனார் ஒரு ரசிகர்.அப்பவே ஆபரேட்டர் ரூம் போய் அந்த ஷாட்டை கட் பண்ணிட்டார் பீம்சிங்.
இந்த படத்துலே MR.ராதா கொஞ்ச காட்சிகளே வந்தாலும் கலகலப்பா பண்ணியிருப்பார்.
" டாக்டர் ஆக இருப்பவன் ஒரு நர்ஸ் ஐத் தான் கல்யாணம் கட்டிக்கணும் !
ஒரு என் ஜினீயர், சித்தாளைத்தான் கட்டிக்கணும் !
ஒரு ஆபிஸர் ஆக இருப்பவன் , ஒரு 'டைப்பிஸ்ட்டை' த்தான் கட்டிக்கணும் !
அப்போத்தான் தொழில் வளரும் !
இது ஒரு கலாட்டான்னா ,
இன்னொரு காட்சிலே ,
ஒருத்தர் , எம் ஆர் ராதாவுக்கு :
" ஆசிர்வாதம் " என்று சொல்லறப்போ , எம் ஆர் ராதா ' டக் 'குனு ஆசி " எனக்கு, " வாதம் " உனக்கு ! ன்னு பட்டுன்னு அடிச்சு விடுவார்.
காதல் சிறகை காற்றினில் விரித்துன்னு ஒரு சூப்பர் ஹிட் பாட்டு சரோஜாதேவிக்கு அமைஞ்சது போலே , சௌகார் ஜானகிக்கும் தென்றல் வரும்னு ஒரு சூப்பர் பாட்டு படத்துலே சேக்க ஐடியா பண்ணியிருந்தார் பீம்சிங்.ஆனா படத்தோட நீளம் அதிகமா போனதாலே அந்த பாட்டை படத்துலே சேர்க்கலே.
சிவாஜிக்கு மேக்கப் போட்ட ஒப்பனையாளரோட மனைவிக்கு இந்த படம் வந்த சமயத்துலே ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் வெச்ச பேர் ரவி.
ரொம்ப சிறப்பா அமைஞ்ச இந்த படத்துக்கு பாலும் பழமும் டைட்டில் பொருத்தமா இல்லே ,இதை விட சிறப்பா வெச்சிருக்கலாம்ங்கறது பல விமர்சகர்களோட கருத்தா இருந்துச்சு.
இந்தப் படத்தில டிபி நோய் பாதிச்சவரா நடிச்சிருப்பார் சரோஜாதேவி.மெலிஞ்ச உடலமைப்புக்கு வேண்டி பட்டினி எல்லாம் இருந்து சரோஜாதேவி நடிச்சார்.சரோஜாதேவி இந்த அளவுக்கு ரொம்ப ரிஸ்க் எடுத்தது வேற எந்த படத்துக்கும் கிடையாது.சிவாஜி ,சரோஜா நீ என்னை விட சிறப்பா பண்ணியிருக்கேன்னு பாராட்டி இருக்கார்.
இந்தப் படம் கன்னடத்தில கல்யாண்குமார், சரோஜாதேவி நடிப்புலே பெரத்தஜீவா என்ற பேருலே ரீமேக் செஞ்சு வெளியிட்டாங்க..இந்தியில சாத்திங்கற டைட்டில்லே ரீமேக் செஞ்சாங்க. இந்தப் படத்தில ராஜேந்திரகுமாரும் வைஜயந்தி மாலாவும் நடிச்சாங்க.. இதை சி.வி.ஸ்ரீதர் டைரக்சன் பண்ணினார்.அங்கயும் படம் பெரிய ஹிட்டாச்சு.
கருத்துகள்
கருத்துரையிடுக