திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

கண்ணன் பாட்டை காதல் பாட்டா மாற்றிய கண்ணதாசன்

பாலும் பழமும் படத்துக்காக ஒரு பாட்டு பதிவு பண்ண வேண்டிய நேரம்.
கண்ணதாசன் எழுத வேண்டிய பாட்டு அது.
கண்ணதாசன் பாட்டு எழுத வர்றார்.
அந்தப் பாட்டுக்கான சிச்சுவேஷன் பீம்சிங் சொல்றாரு.

காதலிச்சு கல்யாணம் செய்த முதல் மனைவி விபத்துலே இறந்து போய் விடுவார்.அவள் இறந்ததா நெனச்சு சோகமா வாழ்வார் ஒரு புற்றுநோய் டாக்டர். அவரை வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு  செலுத்தற நன்றிக்கடனா விருப்பம் இல்லாம இரண்டாவது கல்யாணம் பண்ணிக்குவார்.அவளோட ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து ஏற்பட்டு கண் பார்வையை இழந்து விடுவார் .

சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவரை கவனிச்சுக்க நர்ஸாக வருவார்.
 உடல் நலமில்லாத அவரை வாக்கிங் கூட்டிட்டு போவார் முதல் மனைவியான நர்ஸ். 
அவர் மனம் மாற்றம் ஏற்பட அந்த நர்ஸ் பேச  அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல். இதுதான் சிச்சுவேஷன்னு சொல்லிப் பாட்டெழுத சொன்னாங்க கவிஞர் கண்ணதாசனை.

 பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், திடீர்னு ஒரு யோசனை.. தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவிட்டு வா” என்றார். பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார்.

அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா இதில் ‘அவன் என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். ‘எப்படி கவிஞரய்யா இது...?’ என்று. சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்ஸாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற