திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜி பிராண்டோ

1960 வருஷம் செப்டம்பர் மாசம் சென்னை வாணி மஹால் விழாவில் நடிகர் திலகம் இப்படி பேசினார்:
என்னை உலகிலேயே சிறந்த நடிகர் என்று கூறுவதை நான் விரும்பவில்லை. அமெரிக்காவில் உள்ள மார்லன் பிராண்டோ ஒருவரை தவிர வேறு நாட்டு சிறந்த நடிகர்களை பற்றி யாராவது சொல்கிறார்களா? நமக்கு மார்லன் பிராண்டோ மட்டுமே தெரியும். மற்ற நாட்டு நடிகர்களிலும் மார்லன் பிராண்டோவைப் போல பலர் இருப்பார்கள் அவர்களை எல்லாம் நினைவில் கொள்ளாமல் என்னை மட்டும் 'உலகின் சிறந்த நடிகன்  என்று கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை என்று நடிகர் திலகம் பேசினார் .

இப்படி நடிகர்திலகம்  பேசியதை அடுத்து பேசும் படம் இதழ் முதல்வர் என்ற தலைப்பில் அவையடக்கம் தன்னடக்கம் இரண்டும் நிரம்பிய நடிகர்திலகம்  நடிப்புலகில் இன்று முதல்வராக இருக்கிறார் அப்படின்னு ஒரு கட்டுரை வெளியிட்டுச்சு.
இது 1960 அக்டோபர் இதழ்லே வெளியாச்சு.

அந்தக் கட்டுரையில பல காரசாரமான விஷயங்கள் இருந்துச்சு.நடிகர் திலகம் அந்த பட்டத்துக்கு எப்படி பொருத்தமானவர் அப்படிங்குறத அந்த கட்டுரை சொன்னது .

மூணு வருசத்துக்கு முன்னாலே  அதாவது 1956 லே ஒரு நாள் பேசும் படம் ஆபீசுக்கு ஒரு லெட்டர் வந்துச்சு. அந்த லெட்டர்லே ,சிவாஜி கணேசன் இன்று தன்னிகரற்ற நடிகராக விளங்குகிறார் .அவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டத்தை அறிவிக்க பேசும்படம்  ஏன்  முன் வரக் கூடாது ?அதை  விமர்சையாக கொண்டாட ஒரு விழாவும் எடுக்கணும் .அதுக்காக அன்பளிப்பு  இரண்டு ரூபாய் அனுப்பி வைக்கிறேன்னு ஒரு வாசகர் எழுதி அனுப்பினார்.

ரசிகர் சொன்ன அந்த கருத்தை ஏத்து  பேசும் படம் நடிகர் திலகம் அப்படிங்கற பட்டத்தை சிவாஜிக்கு கொடுத்துச்சு..
அதுக்கு பின்னால  பேசும்  பட ஆபீஸ்க்கு ரொம்ப காரசாரமா நிறைய லெட்டர்கள் வந்துச்சு.

நடிகர்திலகம் தன்னிகரின்றி தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறாரா ? அவருக்கு இணையா  வட இந்திய நடிகர்கள் யார் இருக்காங்க ?  அவருக்கு இணையா  நடிகர்கள் யாராச்சும் மேல்நாட்டிலே  இருக்காங்களா ?உலகத்திலேயே சிறந்த நடிகர் யார் அப்படிங்கற மாதிரியான கேள்விகளை  கேட்டு பல நூத்துக்கணக்கான லெட்டர்கள் பேசும் பட ஆபீஸ்க்கு வந்துச்சு.

நடிகர்திலகம் பட்டத்தை கொடுத்துட்டா ஆச்சா ? அதுக்கு ஆதாரமா விஷயங்களை சொல்லணுமே ?இதுதான் அந்த பத்திரிக்கைக்கு எழுந்த கேள்வி.

இந்த சமயத்தில்தான் கட்டபொம்மன் நாடக அரங்கேற்றம் நடந்துச்சு.நாடகத்துக்கு ஒரு நாள் தலைமை ஏத்து  பேசுன  அறிஞர் அண்ணா உலகப் புகழ் பெற்ற மார்லன் பிராண்டோ  கூட கணேசனை போல நடிப்பது  கஷ்டம் தான் .ஒரு வேளை முயற்சி செஞ்சா கணேசன் போல நடிக்க கூடும் அப்படின்னு சொன்னார் .

அண்ணாதுரை மார்லன் பிராண்டோவோடு  சிவாஜியை ஒப்பிட்டு  பேசுனதுலே  இருந்து,மார்லன் பிராண்டோ  யார்? அவர் எந்த நாட்டு  நடிகர்?
அவரை விட சிறந்த நடிகர்கள் வெளிநாடுகளில் இல்லையான்னு  ஏராளமான  கடிதங்கள் பேசும் பட பத்திரிக்கைக்கு வந்துச்சு.

சினிமாவ பாக்காமயும் , சினிமாவ பத்தியும் அதுல இருக்கிற நடிகர்களை பத்தியும் தெரியாம பேசுற அரசியல்வாதி அண்ணாதுரை அல்ல. அண்ணாதுரை எல்லா வெளிநாட்டு படங்களை நிறைய பார்ப்பவர். பிராண்டாவோட படங்களை பார்த்து அவரோட நடிப்பை எடை போட அவரால முடிஞ்சது.
அப்படி அண்ணாதுரை கணேசனுடன் பிராண்டோவை ஒப்பிட்டு பேசினது தமிழ் பட ரசிகர்களிடையே ஒரு பெரிய  பரபரப்பையும் உண்டாக்குச்சு.

அப்படின்னா உலகின் சிறந்த நடிகர் யார் அப்படிங்கற கேள்விக்கான விடையும்  பக்கம் வருது.ஆனால் அதுக்கு முன்னாடி மேல் நாட்டின் சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோதானாங்கற  கேள்வியும் கூடவே வருது.
பிராண்டோவ பத்தின விஷயங்களை தெரிஞ்சுக்க மக்கள் கிட்டே  ஆர்வம் வந்துச்சு.ஒரு சில பத்திரிகைகள் பிராண்டாவை  பத்தின விளக்கங்களும் வெளியிட்டுச்சு.
அவரோட வரலாற்றை பல புத்தகங்கள் வெளியிட்டுச்சு.கூடவே சிவாஜியையும் பிராண்டோவையும்  ஒப்பிட்டு கட்டுரைகளையும் வெளியிட்டுச்சு.

ஆனால் உலகத்திலேயே சிறந்த நடிகர் யார்? அப்படிங்கிற கேள்விக்கு சிவாஜிகணேசன் தானா அப்படிங்கறதுக்கு இது  விடையும் தரலே ? விளக்கமும் சொல்லல .
ஆசிய ஆப்பிரிக்கப்பட விழாவில கணேசன் சிறந்த நடிகர் அப்படின்னு பாராட்டப்பட்டதும் ,
தொடர்ந்து அவருடைய பாகப்பிரிவினை தெய்வப்பிறவி படிக்காத மேதை படங்கள் வெளிவந்ததும் தமிழ் மக்கள் கிட்டே சிறந்த நடிகர்னா உலகத்திலேயே நம்மளோட கணேசனாத்தான் இருக்க முடியும் அப்படிங்கிற எண்ணத்தை மக்கள் மனசுல ஆழ பதிய வைச்சது.
அதோட பிரதிபலிப்பா பேசும் படம் ஆபீசுக்கு நூத்துக்கணக்கான லெட்டர்களும் வந்துச்சு.
உலகத்துலே  சிறந்த நடிகர் யார் சிவாஜியா ? இல்லாட்டி வேறு யார் அப்படிங்கற  கேள்வியும் அந்த 90% லெட்டர்கள்லே இருந்துச்சு.
இந்த கேள்விக்கு விடைய அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க முடியும்னு பேசும் படம் பத்திரிக்கைக்கு தோணலே.
ஒரு சின்ன பதிலுக்குள்ள அடக்க முடியாத இந்த கேள்விக்கான விடையை அலசி ஆராய்ஞ்சு  ஒரு சிறப்பான கட்டுரை வெளியிட பேசும் படம் முடிவு செஞ்சது.

உலகத்துல ஒருத்தன் பெரியவனாகவோ சிறந்தவனாகவோ  ஆவது  எப்படி ?
இதுக்கு ஒரு சின்ன கதை சொல்லுவாங்க .முதல்ல ஒருத்தன் அவன் வீட்டுக்கு பெரியவனாவான். பின்னால அந்த கிராமத்தோட சிறந்தவனா ஆவான். அடுத்து ஒரு ஊருக்கு பெரியவனாவான். தொடர்ந்து மாவட்டம் தேசத்துலே பெரியவனாவான்.கடைசியில் உலகத்துல முதல்வன் ஆவான் அப்படின்னு சொல்லுவாங்க .

படிப்படியா முன்னேறித்தான் ஒருத்தன் வர முடியும் அப்படிங்கிறது இது காட்டுது. இந்த அடிப்படையில தான் நடிகர் திலகத்தையும் அணுக முடியும்.இதுதான் சிறந்த முறை ..சிக்கல்களை விடுவிடுக்கவும் இது துணை புரியும்.

இந்த அடிப்படையிலே  பாக்கும்போது தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் கணேசன் தான்ங்கறதுலே  யாருக்குமே சந்தேகம் இருக்காது.
கணேசன் நடிப்புலகின் விடிவெளியா யாருமே எண்ண முடியாத உயரத்தில் இருக்கிறார்ன்னு  பல பெரிய நடிகர்களும் சொன்னதையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கருத்தை எல்லா தென்னிந்திய நடிகர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இது ஏற்கப்பட்ட ஒரு யோசனை. முடிவு செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம். இதுல அபிப்ராய பேதத்துக்கு இடமில்லை.

அப்படினா இந்தியாவின் சிறந்த நடிகர் இவர்தான்ங்கறதை  எப்படி முடிவு செய்யறது? இதுக்குத்தான் சில சான்றுகளை தேடிப் பார்க்க வேண்டி இருக்கு. அதுக்கு முன்னால நடிகன் அப்படிங்கறவன் யார்? இதுக்கு ஒரு சின்ன விளக்கம் தர வேண்டி இருக்கு.

இதயத்தில் விழும் எண்ணங்களை சொற்களாக வடிப்பதை விட முகத்தில் வரிகளாக எவன்காட்டுகிறானோ அவனே சிறந்த நடிகன் என ஒரு மேல்நாட்டு டைரக்டர் சொல்லியிருக்கிறார் .

நடிகன் என்பவன் பேசவே கூடாது .பாவத்தால் அவன் பேச வந்ததை சொல்ல வேண்டும் என்று கருத்து தந்திருக்கிறார் ஒரு பிரெஞ்சு நாடக ஆசிரியர்.

குறிப்பிட்ட சில பாத்திரங்களில் தான் சோபிக்க முடியும் .மற்ற பாத்திரங்களில் ஒரு நடிகன் தன் திறமையை காட்டி சோபிக்க முடியாமல் போனா அவன் முழு நடிகனாக பிரகாசிக்க முடியாது .

இந்த அடிப்படையில் வைச்சு  நடிகன் என்பவனின் இலக்கண இலட்சண அளவுகளை கொண்டு நடிகர் திலகத்தை பார்க்கலாம்.
குறிப்பிட்ட பாத்திரங்களில் தான் நடிகர் திலகம் திறமையாக நடிக்கிறார் அப்படின்னு சொல்ல முடியாது. எந்த பாத்திரத்தை கொடுத்தாலும் அந்த  பாத்திரமாகவே மாறிவிடும் பண்பு அவர் கிட்டே  ஏராளமா இருக்கு. அவர் ஏத்து  நடிச்ச பலதரப்பட்ட பாத்திரங்களை வேற யாராச்சும் ஏத்து  நடிச்சிருக்காங்களா அப்படின்னு பார்த்தா நம்ம நாட்டுல யாருமே இல்லை .ஆசிய நாடுகளிலும் யாரும் இல்லை. மேலை நாடுகள்ல ஒரே ஒரு பிராண்டோதான் இருக்கிறார் இதை பற்றி பின்னால பாக்கலாம்.

நம்ம இந்திய நாட்டைப் பொறுத்தவரைக்கும் கதாநாயகன் வேசத்தை ஏத்து  நடிக்கிற நடிகர்களில் சிவாஜியோட ஒப்பிட  கூடிய அளவுல இருக்கறவங்க  ரொம்ப கம்மிதான் .பம்பாய்ல ஒரு திலீப் குமாரும் ராஜ்கபூரும், கல்கத்தாவுலே ஒரு உத்தம்குமார் இருக்காங்க .
திலீப்குமார் சோக நடிப்பில் பிரமாதமான நடிகரே  தவிர பல விதமான வேஷ திறமை நடிப்பு கொண்டவர் அல்ல.குறிப்பா நடிகர் திலகம் செஞ்ச காமெடி செஞ்சது இல்ல .காரசாரமான வசனங்கள்லே  அவர் நடிப்பு எடுபட்டது இல்லே.ஜெமினிதயாரிச்ச இன்ஸானயித்,மொகலே ஆஜம் படங்கள் இதைத்தான் நிரூபிக்குது.

ஏவிஎம்ல ஒரு சமயம் நடிகர் திலகம் நடிச்ச  அந்த நாள் படத்தைப் பார்த்த திலீப்குமார் நான் கண்ட மிகச்சிறந்த நடிகர் .
என்னைவிட திறமைசாலின்னு  ஏவிஎம் அதிபர்கிட்ட சொல்லி இருக்கிறார் .இதை ஏவிஎம் அவர்களே சிவாஜிக்கு தன் ஸ்டுடியோவுலே  கொடுத்த விருந்துல சொல்லி இருக்கிறார்.

காமெடி நடிகர் தங்கவேலு வீட்டிலே என் எஸ் கே அவர்களோட படம் திறந்து வைக்கப்பட்ட சமயம் .அதுல பங்கு கொண்டு ஜெமினி அதிபர் வாசன் பேசினப்போ, நான் பல ஹிந்தி நடிகர்களோட பழகி இருக்கிறேன். அவர்களிடம் இருந்து வேலை வாங்கி இருக்கேன்.ஆனால் நம்ம நடிகர்களுக்கு இணையா நான் அவங்களை சொல்ல மாட்டேன்னு
 பொதுப்படையா சொன்னாரு .
வாசனை இப்படி தன்னோட கருத்தை தெரிவிச்சப்போ நடிகர் திலகம் அவரோட படத்துல நடிச்சு இருக்கல .ஆனால் திலீப்குமார் நடிச்சிருந்தார்.

சென்னைக்கு அமர தீபம் இந்தி பதிப்புலே  நடிக்க வந்த தேவானந்தும் ,தெய்வபிறவி ஹிந்தி படிப்பில் நடிக்க வந்த பால்ராஜ் சஹானியும் ,அவரைப்போல நடிக்க நாங்க முயற்சி செய்கிறோம்ன்னு சொல்லி இருக்காங்க. இது எல்லாம் கணேசன் நடிப்பு மேலே அவங்க வெச்சிருந்த மரியாதையா பாக்கணுமே  தவிர ,களத்துலே அவங்க தோத்தவங்க அப்படிங்கற மனோபாவத்துல நினைக்க கூடாது.

அடுத்ததா இந்தி நடிகர் ராஜ்கபூர். தாஸ்தன் படத்துலே கோமாளியா வேஷம் போட்ட  ராஜ்கபூர்தான் 'ஜாக் தே ரஹோ 'படத்துலே அப்பாவி கதாநாயகனா மாறி சர்வதேச பரிசு வாங்கியிருக்கார்.சர்வதேச அளவுலே வெளி நாட்டு மக்கள் தெரிஞ்சு  வெச்சிருக்கற ஒரே இந்திய நடிகர் ராஜ்கபூர்தான்.

வட இந்திய நடிகர்கள்லே குறிப்பா இந்தி நடிகர்கள்லே பலதரப்பட்ட வேஷங்களையும் ஏத்து நடிச்ச நடிகர்னா அது ராஜ்கபூர்தான்.

ஆனா ஒரு வட்டம்னு இருந்தா அதுக்குள்ளேயே சுத்தி சுத்தி வர்ற மாதிரி அவர் நடிச்ச பல வேஷங்கள் ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இருக்கிற மாதிரி இருந்ததே  தவிர புதுமையா இல்லை. இது எல்லோரும் ஒப்புக்கிட்ட ஒரு விஷயம் தான்.

இந்த அடிப்படையிலே மட்டுமில்லாமே  பொதுப்படையா பாக்க போனா  திலிப் குமார் ராஜ்கபூர் இவங்களை விட நடிகர்திலகம் மோலோங்கி  நிக்கிறார் .

இந்தி பட நடிகர்கள் நடிகைகள் எல்லாரும் சிவாஜியை பராட்டி பேசற அளவுக்கு சிவாஜி பிரபலமா இருக்கிறார். இதுக்கும் சிவாஜி ஹிந்தி படங்கள்லே நடிச்சதில்லே.சிவாஜியை பத்தி தெரிஞ்சுக்க எல்லாரும் ஆர்வமா இருக்காங்க.

கல்கத்தாவுலே துருவ நட்சத்திரமா இருக்கற நடிகர் உத்தம்குமார்தான்.சிறப்பான படங்களை தந்திருக்கிறார்.பெரிய வெற்றியும் அவரோட படங்கள் அடைஞ்சிருக்கு.
ஆனாலும் சிவாஜியை விட நடிப்புலே சிறந்து விளங்குபவர்னு சொல்ல முடியாது.வங்கத்துலே அவர் பெரிய நடிகர். அங்க இருக்கற பிரபலங்கள் கூட நடிகர்திலகம் தான் இந்தியாவின் சிறந்த நடிகர்னு கருத்து சொல்லி இருக்காங்க.
இதைத்தான் லண்டன்லே இருந்து வர்ற டைம் பத்திரிக்கை கூட எழுதுச்சு.
மொத்தமாவே இந்திய நாட்டுலே இருக்கற எல்லா பெரிய நடிகர்களையும் வெச்சு ஒரு அலசு அலசிப் பாத்தா ,
இந்தியாவிலேயே சிறந்த நடிகர் சிவாஜிதான் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லாமே தெளிவாகுது.

இனி ஆசியாவுலே சிறந்த நடிகராகி ,உலகத்துலேயே சிறந்த நடிகர் அப்படிங்கற அலசலையும் வேற பதிவுலே பாக்கலாம்..

செந்தில்வேல் சிவராஜ் ..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற