குதிரை சவாரி சைக்கிள் சவாரி கார் லாரி கப்பல் ரயில் படகு சவாரி பாடல் காட்சிகள் அமைஞ்ச சிவாஜி படங்களை பத்தின விபரங்களை இந்த பதிவுலே பாக்கலாம்.
சவாரின்னால்லே உற்சாகம்தான் .சிவாஜி விட்டு வைக்காத பாட்டுக் களம் இல்லேன்னு சொல்ற படி எல்லாவிதமான கள பாட்டுகள்லயும் சிவாஜி நடிச்சிருக்கார்.
ஒரு இசை கருவின்னு எடுத்துகிட்டா மிருதங்கம் நாதஸ்வரம் உடுக்கை மேளம் புல்லாங்குழல் வயலின் கிடார் ஹார்மோனியம் தபேலா டிரம்ஸ் உள்பட இன்னும் நிறைய இசைக் கருவிகளை வெச்சு நடிச்ச நடிகனா சிவாஜி தான் அதிகமா பண்ணியிருக்கார்.
யானை சவாரி குதிரை சவாரி ஏன் எருமை மேலே உக்காந்தும் நடிச்சிருக்கார் சிவாஜி .
ஒரு நடிகன்னு சொன்னா எல்லாத்தையும் கத்துகிட்டுதான் நடிச்சாகணும் இல்லே.அதை கத்துகிட்டுதான் பண்ண முடியும்னு சொன்னா அதுலயே காலம் போயிடும். தன்னோட நடிப்பாலேயே அதை நிஜம்னு நம்ப வைக்கணும் .அதான் நடிப்பே. அதை தான் சிவாஜி செஞ்சார்.
அந்த வகையிலே இந்த பதிவுலே சிவாஜி செஞ்ச சவாரி பாட்டுக்களை இந்த பதிவுலே பாக்கலாம்.
குதிரை சவாரி பாட்டுன்னு எடுத்துகிட்டா ,மருத நாட்டு வீரன் படத்துலே வர்ற சமாதானமே தேவை பாட்டிருக்கு. படித்தால் மட்டும போதுமா படத்துலே ஓஹோஹோ மனிதர்களே பாட்டு இருக்கு. சிவாஜியும் ஜெமினியும் நடிச்ச ராமு ஐ லவ் யூ உனக்காக நான் பாட்டுஇருக்கு . வந்தாலும் வந்தான்டி ராஜான்னு சித்ரா பவுர்ணமி பாட்டு இருக்கு.இதெல்லாம் உதாரணமா சொல்லியிருக்கேன்.
இன்னும் பாட்டுக இருக்கலாம்.
சிவாஜிகுதிரை ஓட்டற ஸ்டைலை பாக்கணுமே. அவ்வளவு அழகா இருக்கும். லகானை இழுத்து பிடிச்சு ஓட்டறதுலே ஓரு சூரத்தனம் வேணும். அதுலே கெட்டிக்காரர் சிவாஜி. கேமிராவுக்கும் போஸ் கொடுக்கணும்.
பாவனைகளையும் காட்டணும்.
ரெண்டையுமே பக்காவா செஞ்சிருப்பார் சிவாஜி.அதுவும் மருத நாட்டு வீரன் பட பாட்டுலே ஒத்த கையை வீசிட்டே இன்னொரு கையாலே டக் டக்னு குதிரை சவாரி காட்சி பிளாக் அண்ட் ஒயிட் பிலிம்லேயே அவ்வளவு அழகா பண்ணி இருப்பார்.உனக்காக நான் படத்துலே சிவாஜி ஜெமினி ரெண்டு பேரும் குதிரைலே வேகமா வந்து லகானை இழுத்து பிடிச்சு எதிர் எதிரா பக்கத்துலே கொண்டு வந்து நிறுத்தி பாடற மாதிரி காட்சியும் அழகா இருக்கும்.குதிரை வலது புறம் இடது புறம்னு திமிர திமிர குதிரை இருக்க ,அதுவும் ஒரு அழகுதான்.
குதிரை சவாரிக்கு அடுத்ததா யானை சவாரி. இந்த வகையிலே காத்தவராயன்லே சிவாஜியோட அறிமுகமோ யானை மேலே உக்காந்து பாடிட்டு வர்ற காட்சி தான். ஜாதியில்லை மதமும் இல்லையேன்னு புராண படத்துத்துலேயே இப்படி வரிகள் இருக்கும். தாரணி மீதில் எனக்கிணை யாருமில்லையேன்னு அடுத்த வரி .சிவாஜிக்கு பொருத்தமா எழுதி இருப்பார் பாடலாசரியர்.
ரெண்டு கையையும் வீசி பாட்டு பாடின படி ஜம்முன்னு வருவார் சிவாஜி.
படகு சவாரி பாட்டுகள் நிறைய இருக்கு.
1953 லயே வெளியான அன்பு படத்துலேயே ஒரு பாட்டு இருக்கு. ஆடவரே நாட்டினிலேன்னு பாட்டு .
உத்தம புத்திரன்லே முல்லை மலர் மேலே பாட்டு. சிவாஜி பத்மினிகாதல் பாட்டு.ஆண்டவன் கட்டைளை படத்துலே அமைதியயான நதியினிலே ஓடம் பாட்டு.வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில் ..சிவாஜி வாணிஸ்ரீ உயர்ந்த மனிதன் பட பாட்டு..
ராஜா படத்துலே கூட கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா பாட்டுலே
ஒரு சரணத்தை படகுலே எடுத்திருப்பாங்க. தியாகம் படத்துலே போட்லே பாடற பாட்டு. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு சூப்பர் ஹிட் பாட்டு.இந்த பாட்டுலே போட்லே சிவாஜி நின்னுட்டு வர்ற ஸ்டைலே தனிதான்.
ஆத்துக்கு பக்கம் தென்னம்பிள்ளைன்னு பாதுகாப்பு பட பாட்டு.
திருமாலின் திருமார்பில் திரிசூலம் பாட்டு.விஸ்வருபம் படத்துலே அப்பா சிவாஜி சுஜாதா பாடற ராஜாதி ராஜனுக்கு பாட்டு,மகன் சிவாஜி ஸ்ரீதேவி பாடற ஓ மிஸ் பாட்டு ரெண்டையும் படகுலே எடுத்திருப்பாங்க. ஒ மிஸ் பாட்டுலேயே குதிரை சாரட் வண்டிலே சிவாஜி ஸ்ரீதேவி வர்ற மாதிரியும் காட்சி இருக்கும்.
அப்புறம் சிவாஜி சுஜாதா ஜோடிலே ஒரு செம ஹிட்டான ஒரு பாட்டு. நினைவாலே சிலை செய்து ,அந்த மான் காதலி பட பாட்டு. போட்லே எடுத்திருப்பாங்க.
இன்னும் சில பட பாட்டுகள் இருக்கு. கடைசியா ஜல்லிக்கட்டு படத்துலே ஏரியில் ஒரு ஓடம் பாட்டையும் சேத்துக்கலாம்.
சைக்கிள்லே பாடிட்டு வர்ற மாதிரியான பாட்டுகள் பாவமன்னிப்பு இதுலே ரொம்ப ஸ்பெசல். வந்த நாள் முதல் இந்த நாள் வரை பாட்டு.க்ளோசப் ஷாட்டுக பேக் புரொஜக்சன்லேயும் , மிடில் ,லாங் ஷாட் எல்லாம் நேச்சுராவே எடுத்திருப்பாங்க.
தியாகம் பட பாட்டு புல்லாவே சைக்கிள் ரைடிங் பாட்டுதான். வருக எங்கள் தெய்வங்களே பாட்டு .சிவாஜி சைக்கிள் ஓட்டறதை வித விதமான ஆங்கிள்லே ஷுட் பண்ணியிருப்பார் ஒளிப்பதிவாளர்.
கை ரிக்சாசவாரி பாட்டுலயும் சிவாஜி நடிச்சிருக்கார். அட எதையோ நினைச்சேன் எதுக்கோ சிரிச்சேன்னு ஒரு பாட்டு .ஊரும் உறவும் படத்துலே.
அடுத்ததா கார் லாரி ஜீப் சவாரி பாட்டுகளை பாக்கலாம்.
பறவைகள் பலவிதம் இருவர் உள்ளம் பட பாட்டு,சிவாஜி நம்பியார் கோஷ்டி பாட்டா ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் நிச்சய தாம்பூலம் பாட்டுகள் கார் சவாரி பாட்டுகளா அமைஞ்சது.
அமரகாவியம் படத்துலே சிவாஜி நாகேஷ் கார்லே பாடிட்டு வர்ற மாதிரியான ஒரு பாட்டு இருக்கு.
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் பாட்டு. சிவகாமியின் செல்வன் படம்.ஜீப்பை AVM ராஜன் டிரைவ் பண்ண சிவாஜி பாடிட்டு வர்ற மாதிரிபாட்டு.ரயிலும் ஓடிட்டு இருக்கும் .அந்த ரயில்லே வாணிஸ்ரீ .ஜீப் ரயில் ரெண்டும் ஒண்ணா வர்ற மாதிரி பல ஷாட்டுகள் ரொம்ப அழகா இருக்கும். இந்தியை பாத்துதான் எடுத்திருந்தாலும் தமிழுக்கு அது புதுசு.
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே ,டாக்டர் சிவா பட பாட்டு.மலைப்பிரதேசத்துலே ரம்மியமான சூழல்லே காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருக்கும்.
இரண்டு கைகள் நான்கானால் திரிசூலத்துலே. ஒரு டெக்னிகல் ஷாட்டை அசத்தலா எடுத்திருப்பாங்க இந்த பாட்டுலே.
ஒரு சிவாஜி மேலே இன்னொரு சிவாஜி உக்காந்து பாடற மாதிரி .ஜீப் காட்சி பேக் புரொஜெக்சன் தான் எடுத்திருப்பாங்க.
லாரி சவாரி பாட்டுகளும் இருக்கு. உலகம் பெரிது சாலைகள் சிறிதுன்னு கிரஹப்பிரவேசம் பட பாட்டு.
அடுத்ததா ரயில் ...
பச்சை விளக்குலே ஒளிமயமான எதிர்காலம் பாட்டு.பாட்டோட ஆரம்பத்துலே வர்ற மியுசிக் ரொம்ப வைப்ரேசனா இருக்கும்.செம ஹிட் பாட்டு.
வெட்கப்படவோன்னு லாரிடிரைவர் ராஜாக்கண்ணுல ஒரு ரயில் பாட்டு.ரொம்ப வொர்க் பண்ணியிருப்பாங்க. கூட்ஸ் ரயில் ஓடிட்டே இருக்கும். சிவாஜி ஸ்ரீப்ரியா பாடற காதல் பாட்டு.அழகான இயற்கை காட்சிகளா பாட்டு முழுதும் அழகா எடுத்திருப்பாங்க.
புண்ணிய பூமி படத்துலே எருமை மேலே உக்காந்து கூட பாடற மாதிரி ஒரு பாட்டுலே நடிச்சிருந்தார் சிவாஜி.மனுசன் என்னமோ நல்லவன்தான்னு பாட்டு .
ப்ளைட்டுக்குள்ளே பாட்டு எடுத்ததா சொல்ல முடியாது. அது செட்டிங்ஸ்தான் .அந்த வகைலே கூட ஒரு பாட்டை சொல்லலாம் .ஓ மானிட ஜாதியே ,வசந்தமாளிகை பாட்டு.
முழுக்க முழுக்க கப்பல்லயே எடுத்த படமான சிரஞ்சீவி பாட்டையும் இதுலே சொல்லலாம்.அன்பெனும் ஒளியாக ஆலய மணியாக பாட்டு. ரொம்பஅருமையான பாட்டு .
மேலே சொன்ன எல்லா பாட்டும் ஒவ்வொரு டைப் .ஒவ்வொரு களம். ஒண்ணுக்கொண்ணு வித்தியாசம். இந்த டைப் பாடல் வரிசையும் நடிகர்திலகத்தோட ஸ்பெசல் வரிசை பாட்டுகள்னு சொல்லலாம்.
இதுலே சொல்லாத பாட்டுகள் இருக்கும். அதை நீங்க சொல்லுங்க.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக