எந்த இந்தி படங்கள் நடிகர்திலகம் நடிக்க தமிழில் ரீமேக்செய்யப்பட்டது என்கிறஇதுவரை யாரும் பதிவிடாத விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.முதலில் தாகேஜ் என்ற இந்திப்படம்.இதில் நடித்தவர்கபிரிதிவி ராஜ்கபூர் ,ஜெயஸ்ரீ ,கரண் தவான் ,லலிதா பவார்.இந்த படம் 1950 ல் வெளியான படம்.தமிழில் இது பொம்மை கல்யாணம் என்ற பெயரில் நடிகர்திலகம் நடிக்க உருவாக்கப்பட்டது. படத்தின் டைட்டில் கூட இந்தி படத்தில் வருவது போலவே ,அதாவது கொலு பொம்மைகள் வரிசையாக வருவது போலேவே தமிழிலும் இடம் பெற்றது. வரதட்சணை கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் நடிகர்திலகத்துடன் ஜமுனா மைனாவதி நாகையா ரங்காராவ் சாந்தகுமாரியும் நடித்தார்கள்.
இது தெலுங்கிலும் உருவான திரைப்படம்.படப்பெயர் பொம்மளபெள்ளி.
2.1952 ல் வெளியான இந்தி படம் தாக். திலீப்குமார் லலிதாபவார் நிம்மி ஆகியோர் நடித்த படம் இது .தமிழில் இது புனர்ஜென்மம் என்ற பெயரில் தயாரானது.புனர்ஜென்மம் படத்தில் முதல் காட்சியிலேயே சிவாஜி குடித்து விட்டு குப்பை கூளங்களில் படுத்து கிடப்பது போல காட்சி இருக்கும் ஆனால் இந்தியில் அப்படி தொடங்காது.சிவாஜி பத்மினி காண்ணாம்பா நடித்த நடித்தார்கள்.
3.அசோக்குமார் ராஜ்ஸ்ரீ நடித்து 1963 ல் வெளியான இந்திப்பட க்ரஹஸ்தி.ஏராளமான குழந்தைகள் பெற்ற ஒரு தொழிலதிபர் இரட்டை வாழ்க்கை நடத்தும் கதையமைப்பை கொண்டது இந்த படம். இந்த படம் தான் 13 குழந்தைகளுக்கு அப்பாவாக சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை.இந்தியில் பாக்ஸ்ஆபீஸ் வெற்றிபெற்ற படம் இது.பொதுவாக தமிழில் இது போன்ற கதைகளில் நடிக்க பெரும்பாலான கதாநாயகர்கள் மறுத்து விடுவார்கள். SS.வாசன் தயாரித்த இந்த படத்தில் துணிச்சலுடன் நடித்தார் சிவாஜி. பண்டரிபாய் சௌகார்ஜானகி மணிமாலா ஆகியோருடன் சிவாஜிக்கு மகள்களாக ஜெயலிதா காஞ்சனா மற்றும் பலர் நடித்தார்கள்.மிக சிறப்பான விமர்சனத்தை இப் படம் பெற்றது.
4.1961ல் திலீப்குமார் கதை எழுதி தயாரித்த படம் கங்கா ஜமுனா. வைஜெயந்திமாலா ஜோடியாக நடித்த படம்.பாக்ஸ் ஆபீசில் பெரிய ஹிட்டடித்த திரைப்படம் இது .தமிழில் சிவாஜி பத்மினி வீரப்பா நாகேஷ்முத்துராமன் நடிப்பில் P.S.வீரப்பா தயாரித்தார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை போல் கொள்ளையடிக்கும் காட்சிகள் படத்தின் பின்பாதியில் இடம் பெற்றது. இந்தி வாடை தமிழில் எதிரொலித்தது. தமிழில் பெரிய வெற்றி இல்லை.தமிழில் தேரு பாக்க வந்திருக்கும் சித்திர பெண்ணே பாடலை கூட இந்தி ஹோலி கொண்டாட்டம் போலே தமிழில் எடுத்திருந்தார்கள்.
5.1971ல் தேவானந்த் நடிப்பில் வெளியான இந்தி படம் கேம்ப்ளர்.K.பாலாஜி இதை தங்கை என்ற பெயரில் தமிழில் வெளியிட்டார். புதுமை படைத்த சிவாஜியின் ஸ்டைல்களால் படம் நல்ல வரவேற்பை பெற்றது.பாலாஜி தயாரித்த முதல் சிவாஜி படம்.
6.1970 ல் தேவானந்த் ஹேமாமாலினி பிரான் நடிப்பில் வெளியாகி அதிரடி ஹிட்டான படம் ஜானி மேராநாம். ரீமேக் ராஜாவான K.பாலாஜி ராஜா என்ற பெயரில் தமிழில் உருவாக்கினார்.தமிழிலும் பெரிய ஹிட்டானது ராஜா. சிவாஜியுடன் ஜெயலலிதா பாலாஜி சுந்தரராஜன் சந்திரபாபு 3 வேடம் ஆகியோர் நடித்த படம் இது. பக்காவான மாஸ் துப்பறியும் க்ரைம் த்ரில்லர் படமாகும்.
7.ராஜேஷ்கன்னா மும்தாஜ் மீனாகுமாரி நடிப்பில் 1971ல் வெளியான இந்தி படம் துஷ்மண்.
K.பாலாஜியே இதை தமிழில் தயாரித்தார்.சிவாஜியுடன் ஜெயலலிதா சௌகார் சுப்பையா மனோகர் நடித்தார்கள். சட்டத்துறைக்கு சவால் விடுக்கும் ஒரு மிக முக்கியமான கேள்வியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை இது.மிக பிரமாதமான பதிலை சட்டத்துறைக்கு சொன்ன படம் இது.
8.1968 ல் வெளியான இந்திப்படம் பிரம்மச்சாரி. ஷம்மிகபூர் ராஜ்ஸ்ரீ பிரான் நடித்த படம். தமிழில் இது எங்கமாமா என உருவாக்கப்பட்டது.சிவாஜியுடன் ஜெயலலிதா பாலாஜி வெண்ணிறஆடை நிர்மலா நடித்தார்கள்.எங்கமாமா திரைப்படத்தை ஒரே வார்த்தையில் விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் தங்கமாமா என்று சொல்லலாம்.
9.1970 ல் L.V.பிரசாத் தயாரித்த இந்தி படம் கிலோனா. சஞ்சீவ்குமார் மும்தாஜ் ஜிதேந்திரா சத்ருகன்சின்ஹா நடத்தது.பெரிய வெற்றி அடைந்த இந்த படம் தமிழில் எங்கிருந்தோ வந்தாள் என உருவானது. சிவாஜி ஜெயலலிதா பாலாஜி முத்துராமன் நடித்தார்கள். நாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த கதையில் பைத்தியக்காரனாக சிவாஜி நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார்.இந்த படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பைத்தியக்காரன்.
10.1966 ல் தேவ்குமார் மாலாசின்ஹா நடிப்பில் வெளியான இந்தி படம் மேரே லால் .தமிழில் மனிதரில் மாணிக்கம் என்ற பெயரில் தயாரானது.AVMராஜன் கநாநாயகனாக நடித்த இப் படத்தில் சிவாஜி டாக்டராக கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
11.ஆராதனா. மிகப்பெரிய பிளாக் பஸ்டர் இந்தி திரைப்படம் இது. 1969 ல் வெளியானது .தமிழ்நாட்டிலும் பெரிய வசூல் செய்தது. ராஜேஷ்கன்னா சர்மிளாதாகூர் நடித்த படம். படத்தின் பெரிய வெற்றிக்கு காரணம் இப் படத்தின் பாடல்கள்.தமிழில் சிவாஜி வாணி ஸ்ரீ AVM ராஜன் நடிப்பில் சிவகாமியின் செல்வன் என்று தயாரிக்கப்பட்டது. தமிழிலும் மிகப் பிரமாதமாக அமைந்தன இந்த படத்தின் பாடல்கள்.
12.1972 ல் தர்மேந்திரா சஞ்சீவ்குமார் ஹேமாமாலினி இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி பெற்ற படம் சீதா அவுர் கீதா.இது தமிழில் சிவாஜி முத்துராமன் வாணி ஸ்ரீ நடிப்பில் வாணிராணி என்ற பெயரில் வெளியானது.சிவாஜி கழைக் கூத்தாடியாக வேடமேற்று நடித்த படம் இது.
13.பீ இமான் 1972 இல் வெளியான இந்தி திரைப்படமாகும்.மனோஜ் குமார், ராக்கி மற்றும் பிரேம்நாத் நடித்தார்கள். தமிழில் இது என்மகன் என தயாரிக்கப்பட்டு வெளியானது.பாலாஜி தயாரிப்பு.சிவாஜி இரண்டு வேடம் மஞ்சுளா பாலாஜி நடித்தார்கள்.
14.1973 ல் இந்தியில் வெளியான வெற்றிப்படம் நமக்ஹராம். ராஜேஷ்கன்னா அமிதாப்பச்சன் ரேகா நடிப்பில் உருவானது. தொழிற்சங்கங்களின் எழுச்சியை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டது. இந்தபடம்
தமிழில் சிவாஜி ஜெமினி லட்சுமி நடிப்பில் உனக்காகநான் என்று வெளியானது
15.ஆக் கலே லக் ஜா என்று1973 ல் இந்தி படம் ஒன்று வெளியானது. சசிகபூர் சர்மிளாதாகூர் நடித்தது. தமிழில் உத்தமன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. சிவாஜி மஞ்சுளா விகே ராமசாமி பாலாஜி நடித்தார்கள் .சூப்பர் ஹிட்டான பாடல்கள் உத்தமன் படத்தில் இடம் பெற்றது.
16.1974 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் இந்தி மற்றும் வங்காள மொழியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.பயங்கரமான ஹிட் ஆனது.வங்காளத்தில் 96 வாரங்கள் ஓடியது. இதில் நடித்தவர்கள் உத்தம்குமார் சர்மிளா தாகூர். படத்தின் பெயர் அமனுஷ்.அப்போது ரீமேக்கா எடுத்த பாலாஜி இது தெரிந்ததும் விடுவாரா என்ன ?தமிழில் வெளியிட்டார். ஹீரோ வேறு யார். அவருடைய ஆதஷ்ண ஹீரோ சிவாஜியேதான். லட்சுமி ஜோடியாக நடித்தார் .இசைக்கு இளையராஜாவை போட பெரு வெடிப்பாய் பாடல்கள் தமிழ்நாட்டை உலுக்கியது. அதுதான் தியாகம்.
17.1957 ல் ஒரு இந்தி படம் வெளியாகி ஒரு வருடம் ஓடியது. பாக்ஸ் ஆபீசில் கலக்கியது.நர்கீஷ் சுனில்தத் ராஜேந்திரகுமார் நடிப்பில் உருவான அந்த படம் தான் மதர் இண்டியா.20 வருடங்கள் கழித்து தமிழில் எடுக்க என்ன யோசனை வந்தது என்றுதான் தெரியவில்லை. புண்ணிய பூமி என்ற பெயரில் உருவானது. சிவாஜி வாணிஸ்ரீ நம்பியார் நடிப்பில் வெளியானது.இந்தி வாசனை போகாத படச்சுருளாக இது அமைந்தது. சிவாஜியின் குதிரை சவாரி கொள்ளையடிப்பு காட்சிகளில் மிரட்டல் தெரிந்தது. தமிழுக்கு ஏற்ற திரைக்கதை கவனம் இன்மையால் போதிய ஓட்டம் கிடைக்கவில்லை.இரு துருவத்தையும் நினைவு படுத்தும் இந்த படம்.
18.1974 ல் ஹிந்தியில் நல்ல வெற்றி அடைந்த படம் மஜ்பூர். அமிதாப்பச்சன் பர்வீன் பாபி பிரான் நடித்த அதிரடி திரைப்படம் இது. கே.ஆர் விஜயா இதன் உரிமத்தை வாங்கி தமிழில் நான் வாழ வைப்பேன் என்று தயாரித்தார் .நடிகர் திலகம் ரஜினிகாந்த் கே ஆர் விஜயா சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்த திரைப்படம் இது.
19.1977 ல் அமிதாப் பச்சன் இரு வேடங்களில் நடித்து அதாலத் என்ற திரைப்படம் வெளிவந்தது. அதிரடி திரைப்படம் இது .இந்தத் திரைப்படம் தமிழில் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்ட பெயர் விஸ்வரூபம். சிவாஜி கணேசன் இரண்டு வேடங்கள் சுஜாதா ஸ்ரீதேவி மேஜர் சுந்தர்ராஜன் மனோகர் மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம் இது .
20.முக்தர் கா சிக்கந்தர்.1978 ல் வெளியான இந்திப்படம். அமிதாப் வினோத் கன்னா ரேகா ராக்கி நடித்தது.இந்தப் படத்தை தமிழில் MS. விஸ்வநாதன் எடுத்தார் .நடிகர் திலகம் கதாநாயகனாக நடிக்க ஸ்ரீ பிரியா ஜெய் கணேஷ் மாதவி மற்றும் பலர் நடித்தார்கள் .இந்தப் படம் தான் அமரகாவியம்.
21.1976 ல் வெளியான இந்திப்படம் காளிச்சரண். சத்ருகன்சின்கா இரட்டை வேடத்தில் நடித்த இத் திரைப்படம் இந்தியில் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகளிலும் இப் படத்தை தயாரிக்க வைத்தது. அப்படி தமிழில் தயாரிக்கப்பட்ட படம் தான் சங்கிலி. இளையதிலகம் பிரபு அறிமுகமான இப்படம் 1982 ல் வெளி வந்தது.இதில் நடிகர்திலகம் இரட்டை வேடத்தில் நடித்தார்.
22.1975 ல் சஞ்சீவ்குமார் சர்மிளா தாகூர் நடிப்பில் வெளியான இந்தி படம் மௌஷம்.இது சிவாஜி கணேசன் ஸ்ரீப்ரியா நடிக்க தமிழில் வசந்தத்தில் ஒரு நாள் என வெளியானது.
23.1981ல் அமிதாப் சத்ருகன் சின்ஹா ஹேமாமாலினி நடிப்பில் ஒரு மாஸ் மசாலா திரைப்படம் நஸீப்.சிவாஜி புரொடொக்சன் இதன் உரிமையை பெற்று சந்திப்பு என வெளியிட்டது. இங்கும் வசூலை அள்ளியது. சிவாஜி பிரபு நம்பியார் மேஜர் சரத்பாபு ஸ்ரீதேவி ராதா வடிவுக்கரசி விஜயகுமார் என நட்சத்திர பட்டாளம் நிறைந்த படம்.இது ஒரு வெள்ளி விழா திரைப்படமாக அமைந்தது.
24.1979 ஆம் ஆண்டு வெளியான இந்திபடம் தோ லட்கே தோனா கட்கே . இதை தமிழில் நடிகர் விஜயகுமார் சிவாஜியை வைத்து நெஞ்சங்கள் என்ற பெயரில் தயாரித்தார்.
25.1980 ல் வெளியானஇந்திப்படம் ஆஷா.ஜிதேந்திரா ரீனாராய் நடிப்பில் உருவானது. தமிழில் சிவாஜி பிரபு சுஜாதா கீதா நடிக்க சுமங்கலி என்ற பெயரில் வெளிவந்தது.
26.சஞ்சீவ்குமார் சத்ருகன் சின்ஹா மாலா சின்ஹா ரீனாராய் நடிப்பில் 1980 ல் வெளியான இந்திபடம் பீ ரெகாம். திருப்பம் தமிழ் திரைப்படம் இதன் ரீமேக்தான். சிவாஜி பிரபு அம்பிகா சுஜாதா ஜெய்சங்கர் சுதர்சன் நடித்தார்கள்.
27.ராஜேஷ்கன்னா ஷபானா ஆஸ்மி நடிப்பில் வெளியான படம் இந்தி அவதார். சிவாஜிக்கு கச்சிதமாக பொருந்தும் இந்த கதையை தமிழில் வாழ்க்கை என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.சிவாஜிக்கு ஜோடி அம்பிகா.
27..1982 ல் திலீப்குமார் ஷம்மிகபூர் சஞ்சீவ்குமார் சஞ்சய்தத் பத்மினி கோலாப்புரி சஞ்சய்தத் அம்ரிஸ்பூரி நடிப்பில் வெளியான படம் விதாதா. இது தமிழில் சிவாஜி பிரபு நம்பியார் ராதிகா நடிப்பில் வம்சவிளக்கு என்ற பெயரில் வெளியானது.
28.1985 ல் ஜாக்கி ஷெராப் மீனாட்சி ஷேஷாத்ரி நடிப்பில் உருவான படம் மேரே ஜவாப். இதை சிவாஜிபுரொடொக்சன் தமிழில் நீதியின் நிழல் என்ற தலைப்பில் வெளியிட்டார்கள்.பிரபு மெயின் ஹீரோவாகவும் நடிகர்திலகம் கௌரவ வேடத்திலும் நடித்தார்கள்.
29.1982 ல் வெளியான இந்திப்படமான குத் தார் ,தமிழில் படிக்காதவன் என தயாரிக்கப்பட்டது .
30.1977 ல் வெளிவந்த இந்திப்படம் துல்கான் வாஹி ஜோல் பியா .இதை சிவாஜி ரேவதி சுரேஷ் நடிக்க பாலாஜி மருமகள் என்ற பெயரில் 1986 ல் வெளியிட்டார்.
31.1980 ல் இந்தியில் அதிரடி அட்டகாச வெற்றி பெற்ற படமான குர்பானியை தமிழில் விடுதலை என வெளியிட்டார் பாலாஜி.சிவாஜி ரஜினி விஷ்ணுவர்த்தன் விஜயகுமார் சுதர்சன் நடித்தார்கள்.
இந்தியில் அம்ஜத்கான் செய்த போலீஸ் அதிகாரி வேடத்தை தமிழில் நடிகர்திலகம் செய்தார்.
32.1980 ல் அசோக்குமார் ரேகா நடித்து வெளியான இந்தி படம் கூப் சூரத். இதை தமிழில் லட்சுமி வந்தாச்சு என தயாரித்து வெளியிட்டனர்.சிவாஜி பத்மினி ரேவதி நிழல்கள் ரவி SV.சேகர் நடித்தார்கள்.
33.நடிகர்திலகத்தின் 275 வது படம் புதியவானம். இது ஹுக்குமத் இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.தர்மேந்திரா ரதி அக்னிஹோத்ரி நடித்த படம்.
செந்தில்வேல் சிவராஜ் .
கருத்துகள்
கருத்துரையிடுக