இவங்க கூட நடிக்கறப்போ ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி நடிகர்திலகம் சொன்னது நடிகைகள்லே ரெண்டு பேர்.ஒருத்தர் பானுமதி. இன்னொருத்தர் மனோரமா.
மனோரமாவை சிவாஜி 'மனோ'ன்னு கூப்பிடுவார்.
சிவாஜி வீட்டு எதிர் வீதிலே பக்கந்தான் மனோரமா வீடும் இருந்துச்சு.
சிவாஜியை மனோரமா முதன்முதலா சந்திச்சது எப்போன்னா ...
1954 ஆம் வருசம் சிவாஜி எதிர்பாராதது படத்துலே நடிச்சுட்டு இருந்தார்.மனோரமா அப்போ வைரம் நாடக சபா நாடகத்துலே நடிச்சுட்டு இருந்தார்.அப்போ நடந்த ஒரு நாடகத்துக்கு தலை தாங்குனவர் சிவாஜி.இந்த நாடகம் திண்டிவனத்துலே நடந்துட்டு இருந்துச்சு. மனோரமா அந்த நாடகத்துலேயே ' டபுள் ஆக்ட்'பண்ணினார்.அந்த காலகட்டத்துலே அஞ்சலிதேவி பெரிய ஹீரோயினா இருந்தார்.அவங்களை உதாரணமா வெச்சு ,அஞ்சலிதேவி மாதிரி நடிச்சாங்கன்னு பாராட்டுனார் சிவாஜி. மனோரமாவுக்கு ரொம்ப சந்தோசம்.மனோரமா சிவாஜியை முதன்முதலா சந்திச்சது இந்த நேரத்துலேதான்.
சிவாஜியோட மனோரமா நடிச்ச முதல் படம்னா ஜீவபூமிதான்.ஆனா அந்த படம் பாதிலே நின்னு போச்சு.அந்த படத்துலே வொர்க் பண்ணியிருந்தார் A.P.நாகராஜன்.
அந்த நேரத்துலேயே சிவாஜி பாவை விளக்கு படத்துலயும நடிச்சுட்டு இருந்தார்.
பாவை விளக்கு படத்துக்கு திரைக்கதை எழுதினவர் A.P.நாகராஜன்.நாகராஜனோட சப்போர்ட் மனோரமாவுக்கு இருந்துச்சு.
ஜீவபூமி பாவை விளக்கு ரெண்டு பட ஷுட்டிங்கும் டெல்லி ஆக்ராவுலே ஒண்ணா நடந்துச்சு.ஜீவபூமி படத்துலே சிவாஜி மயங்கி விழற மாதிரி ஒரு காட்சி இருக்கும்.
.மயங்கி விழற சிவாஜியை சரோஜாதேவியும் மனோரமாவும் மயக்கம் தெளிய வெச்சு அந்தப்புரத்துக்குள்ளே கூட்டிட்டு போற மாதிரி ஒரு காட்சி அந்த இடத்துலே எடுத்தாங்க. அதுதான் மனோரமா சிவாஜியோட நடிச்ச முதல் காட்சி.அதே ஸ்பாட்டுலே தான் காவியமா ஓவியமான்னு பாவை விளக்கு பட பாட்டையும் அதுக்கப்பறம் ஷுட்டிங் பண்ணுனாங்க.ஷுட்டிங் முடிஞ்சதும் மறுநாள் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டித் தள்ளுது.மறுநாள் எல்லாரும் ஓய்வுலே இருக்கும்படி ஆயிருச்சு.
சிவாஜி சரோஜாதேவி மனோரமா எல்லாரும் பேசிட்டு இருந்த நேரத்துலே சிவாஜியோட போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டார் மனோரமா. அந்த இடத்துலயும் மனோரமாவை பாத்து ,நீங்க நல்லா நடிக்கிறீங்கன்னு பாராட்டுனார் சிவாஜி..எல்லார் முன்னாடியும் சிவாஜி பாராட்டுனதுலே மனோரமாவுக்கு ரொம்பவே சந்தோசம்.
ஜீவபூமி படத்துலே சிவாஜியோடநடிக்கற வாய்ப்பு கிடைச்சசும் அந்த படம் நின்னுபோனதாலே மனோரமாவுக்கு ரொம்பவே வருத்தமாயிடுச்சு.
மனோரமாவோட வருத்தம் தெரிஞ்ச நாகராஜன் அவரோட வடிவுக்கு வளைகாப்பு படத்துலே நடிக்க சான்ஸ் கொடுத்தார்.
அதுலே இருந்து நாகராஜன் எடுத்த எல்லா படங்கள்லயும் சிவாஜி படங்கள்லயும் மனோரமா நடிக்க APN சான்ஸ் கொடுத்தார்.
மனோரமா அத்தனை படத்துலயும் நடிச்சிருந்தாலும் தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணி கேரக்டரை மட்டும் அவராலே மறக்க முடியாத கேரக்டரா ஆக்கிருச்சு.இதுக்கும் ஆரம்பத்துல அந்த படத்துலே நடிக்க மறுத்தவர்தான் மனோரமா. சிவாஜி பத்மினி பாலய்யா நம்பியார் நாகேஷ் இன்னும் நெறைய பேர் இருக்காங்க.எல்லாரும் பெரிய ஆளுங்க.இவங்கள தாண்டி எனக்கு என்ன பேர் கிடைச்சுடப் போகுதுன்னு வாதம் செஞ்சவர் மனோரமா.APNதான் சமரசம் செஞ்சு உனக்குன்னு ஒரு தனி பேரை வாங்கி கொடுக்கற மாதிரி நான் செஞ்சு காட்டுறேன்னு சொல்லி மனோரமாவை நடிக்க வெச்சார்.அந்த ஜில் ஜில் ரமாமணி கேரக்டர் சினிமா உலகத்துலே எங்கயோ போயிடுச்சு.
தில்லானா மோகனாம்பாள் படத்துலே சிவாஜி பாலய்யா சாரங்கபாணி இவங்க எல்லாம் இருக்கற ஒரு காட்சிலேதான் மனோரமாவுக்கு முதல் ஷாட்டே வெச்சார் APN.
பாலய்யா சிவாஜிக்கு முன்னாலே மனோரமாவுக்கு ரொம்ப டயலாக்கே இருக்கும். மனோரமாவுக்கு டயலாக் பேசறதுலே பயம் வந்துடுச்சு. பேச்சே வரலே. APN கூப்பிட்டு ,அவங்கள மறந்துடு,நீ என்ன பேசணுமோ அதை மட்டும் மனசுலே வெச்சு பேசிடுன்னு சொல்ல அதுக்கப்புறம் சமாளிச்சு நடிச்சார் மனோரமா. இது ஒரு சாதாரண காட்சியா இருந்தாலும் மனோரமாவாலே இதை மறக்கவே முடியாது. காரணம் என்னான்னா நான் பேச பேச என்னையே சிவாஜியண்ணன் பாத்து ,பரவாயில்லை ,சின்ன பொண்ணா இருந்தாலும் நல்லா ஆக்ட் பண்ணறாளே , அவர்
என் நடிப்பை ரசிக்கறார்னு எனக்கு தெரிஞ்சிச்சுன்னு மனோரமாவை பெருமையா பேச வெச்ச காட்சி அது.
மனோரமா அம்மா செத்துபோன தகவல் தெரிஞ்சதும் பத்தே நிமிஷத்துலே மனோரமா வீட்டுக்கு வந்துட்டார் சிவாஜி.உங்க அம்மாவுக்கோ உனக்கோ அண்ணன் தம்பி இருக்காங்களான்னு கேட்டார் சிவாஜி.யாருமே இல்லைன்னு சொன்னார் மனோரமா.கவலைப்படாதே நான் இருக்கேன்னு சொன்ன சிவாஜி , தலைப்பாகை கட்டிகிட்டுஅவங்க அம்மாவுக்கு வெண்பட்டு சேலை துளசிமாலை எடுத்துகிட்டு மனோரமா வீட்டுக்கு வந்து தாய்வீட்டு சீராய் மனோரமா அம்மாவோட இறுதிக் காரியங்களை செஞ்சு முடிச்சார்.
சிவாஜி செஞ்சதை பாத்த மனோரமா,எவ்வளவு பெரிய மனுசன் மூலமா அம்மாவுக்கு இறுதிக்காரியம் பண்ற பாக்கியம் கிடைச்சிருக்கு ,இந்த பாக்கியத்துக்காக நான் செத்திருக்க கூடாதான்னு நெனச்சாராம்.இந்த விஷயத்துலே அம்மா மேலேயே பொறாமை வந்திருச்சு எனக்குன்னு இதைப்பத்தி சொல்லியிருக்கார் மனோரமா.
எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் சிவாஜிகிட்டே சொல்லாமேஇருக்க மாட்டார் மனோரமா.சிவாஜியோட பாதுகாப்புதான் மனோரமாவுக்கு கடைசி வரை ஒரு அரணாஇருந்துச்சு.வேலை இருந்தாலும் இல்லாட்டியும் சிவாஜியை அடிக்கடி சந்திச்சு பேசிடுவார் மனோரமா.
1990 கள்லே மனோரமா ரொம்ப பிஸியா இருந்த நேரம்.
இந்தகால கட்டத்துலே சிவாஜியை பாக்கறதுலே ஒரு கேப் விழுந்துடுச்சு.பிரபு நடிச்ச வியட்நாம் காலனி பட ஷுட்டிங்லே இருந்தார் மனோரமா.அந்த பட தயாரிப்பாளர் CV.ராஜேந்திரன்.
ஒரு நாள் ஷுட்டிங் இடைவெளியிலே ,ராஜு !சிவாஜிஅண்ணனை பாக்கணும்.தொடர்ந்து இடைவெளி இல்லாமே ஷூட்டிங் நடந்துட்டே இருக்கு.அதனாலே முடியலே.சிவாஜி அண்ணன் வீட்டுக்கு போக சந்தர்ப்பமே கிடைக்க மாட்டேங்குதுன்னு தன்னோட வருத்தத்தை CV.ராஜேந்திரன் கிட்டே சொல்லி இருக்கார்.இதை CVR ம் சிவாஜிகிட்டே சொல்லிட்டார்.
மறுநாள் காலைலே ,இளையதிலகம் பிரபுமகள் ஐஸ்வர்யாவை கூட கூட்டிகிட்டு மனோரமாவை தேடி ஷுட்டிங் நடக்கற இடத்துக்கே வந்துட்டார் சிவாஜி.
என்ன மனோ! என்னை பாக்கணும்னு சொன்னியாமே ,உன்னை பாக்கத்தான் வந்தேன்னு ,மனோரமாகிட்டே சொன்னார்.இதை கேட்டு மனோரமா அசந்து போயிட்டார்.நான் சொன்ன ஒரு வார்த்தை ,அதுவும் வேற ஒருத்தர் கிட்டே அதை கேட்டுட்டு வந்தாரே சிவாஜிஅண்ணன் .இதுக்கு மேலே எனக்கு என்ன பாக்கியம் வேணும்னு இந்த விஷயத்தை பத்தி பெருமையா சொல்லி இருக்கார் மனோரமா.
சிவாஜி சில நேரம் மனோரமாவை அத்தாச்சின்னு பாசமா உரிமையா கூப்பிடுவார்.இதை கேட்டு மனோரமாவுக்கு ரொம்ப பெருமையா சந்தோசமா இருந்தாலும் சிவாஜிகிட்டே
அய்யோ அப்படியெல்லாம் கூப்பிடாதங்க,நான் ரொம்ப சாதாரணமானவள்னு சொல்வாராம். அத்தாச்சின்னா மனைவியோட தங்கை ஸ்தானத்தை குறிக்கிற வார்த்தை.
சிவாஜி வீட்டுக்கு மனோரமா ஒருசமயம் போயிருந்தப்போ ,கமலாம்மா சிவாஜிகிட்டே ,மாமா,யாரோ மதுரை பாஷை பேசி நடிச்சாங்க ,இப்ப ஒரு படத்துலே ,மனசுலயே நிக்கலேன்னு சொல்லி இருக்காங்க.உடனே சிவாஜி ,பாஷையெல்லாம் மாத்தி மாத்தி பேசறதுக்கு மனோரமாவை விட்டா யார் இருக்காங்க இப்போன்னு மனோரமாவை பாராட்டிப் பேசசுனார்.அதை கேட்ட மனோரமாவுக்கு வானத்துலே பறக்கற சந்தோசத்தை கொடுத்ததா இதை சொல்லி இருக்கார்.
மனுசன்னு டிவி சீரியல்லே நடிச்சுட்டு இருந்தார் மனோரமா..அப்பத்தான் அந்த கேக்க கூடாத செய்தி வருது.
சிவாஜி காலமாயிட்டார்னு...மேக்அப்பை கலைக்காமே அப்படியே சிவாஜி வீட்டுக்கு ஓடி வந்துட்டார்.கதறி துடிச்சார்.அந்த இறுதி ஊர்வலம் என் நெஞ்சை விட்டு மறையவே இல்லே.
அவர் மாதிரி என்னை பாசமா நடத்துன கலைஞர் யாருமே இல்லேன்னு உருக்கமா சொன்னவர் மனோரமா....
கருத்துகள்
கருத்துரையிடுக