இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

பொள்ளாச்சியும் சிவாஜியும்

படம்
சிவாஜியும் பொள்ளாச்சியும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பொள்ளாச்சிக்கும் உறவு முறை ஆரம்பத்தில் அது நட்பு முறையாகவும் ,அதுவே பின் உறவு முறையாகவும் ஆனது. எத்தனையோ வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்த மனுஷன், தமிழ்நாட்டுல அவருடைய காலடி படாத இடமே இல்லை, இந்தியாவோட எல்லா முக்கிய பிரபல நகரங்களுக்கும் போயிட்டு வந்தவர் நடிகர்திலகம்.இப்படி சிவாஜி பற்றின உண்மைகள் இருந்தாலும் சிவாஜிக்கு ரொம்ப பிடிச்ச இடம் உலகத்திலேயே சேர்த்து மடை தான் .சிவாஜி எங்க போனாலும் நடிகர் திலகம் பிரமிப்பா எல்லோரும் பார்க்கிறார்கள். பொள்ளாச்சிக்கு போனா எளிமையான மனுசனா இயல்பா இருக்கிற ஒரு சந்தோசத்தை அங்க அங்க கிடைக்குதுன்னு ரொம்ப பீல் பண்ணினாரு. 90களுக்கு பின்னால் தான் பொள்ளாச்சிக்கு அடிக்கடி சிவாஜி வந்துட்டு போயிட்டு இருந்தார்.  சிவாஜி பொள்ளாச்சி வந்தார்னா கோயம்புத்தூர் ஐஏபி ஸ்டுடியோவில் இருந்து கார் அனுப்புவாங்க .கோயமுத்தூரில் இருந்து  வேட்டைக்காரன் புதூர் வரைக்கும் கார்ல போவாரு.அவர் அடிக்கடி கார்ல போறத பாத்தவங்க எல்லாரும் சொல்லுவாங்க .அப்போ தலையில ஒரு துண்டை கட்டிட்டு சாதாரணமா கார்ல ஒக்காந்து போவார் என்று சொல்லுவாங்க....

ஒப்பீடற்ற சிவாஜி படங்கள்

படம்
நடிப்பு ,வேடங்கள், திரைப்படங்கள் ஒரு கலைஞனால் உருவாக்கப்படும் போது அது சமூகத்திற்க்கு என்ன பயன் அளிக்கும் ,அளிக்கப்படவேண்டும் ,என்பதுதான் முக்கியம்.அதிக நாட்கள் ஓடியது ,சாதனை செய்தது  என்பதை  சில படங்களை வைத்து சமூகத்திற்கு உபயோகமான பயன் தந்த, தந்து கொண்டிருக்கக்கூடிய படங்களுடன் ஒப்பிடக்கூடாது.தமிழில் ஏராளமான ஓடிய படங்களை பார்த்தோமானால் அது வெறும் குப்பைகளாக உள்ளது.ஒரு படத்திற்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரமும் ,லாபமும் கண்டிப்பாக அவசியம், தேவையும்  தான். இந்த வரைமுறைகளில் உருவானவை தான் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்.நடிகர்திலகத்தின் படங்களை வைத்தே சில விஷயங்களை பார்க்கலாம். உத்தமபுத்திரன் தெய்வமகன் சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் கௌரவம் .உதாரணத்திற்காக இந்த சில படங்கள்.தெய்வமகன் தில்லானா மோகனாம்பாள் படங்களின் பேச்சு வரும் போதெல்லாம் இந்த படங்களுக்கு இணையான படங்களை யாரும் சொல்ல முடியாது.வெள்ளிவிழா , வருடக்கணக்கில் ஓடிய படங்கள் தமிழில் நிறைய உண்டு.அந்த படங்கள் எல்லாம் இந்த படத்திற்கு இணையாகுமா ?இதில்  சிவாஜி ரசிகர்களின் கருத்துகளை ...

சிவாஜி -எதச் சொல்ல எத விட....

படம்
உச்சி பூரா உள்ளம் பூரா குளிச்சியா இருக்குதய்யா உன் நடிப்ப பாக்கையிலே வெச்ச பார்வைய  வெலக்கிடத்தான் தோணலய்யா உன் முகத்த பாக்கையிலே! நீ  பேசினாக்க நடந்தாக்க அத பாத்தாக்க நெஞ்சுக்குள்ளே ரத்தமா பாயுதய்யா  உன்ன பத்தி பேசத்தா உதடெல்லாம் துடிக்குதய்யா கொஞ்சமா செஞ்சீரு நீரெல்லாம் கொள்ளாம கொள்ளாம நெஞ்செல்லாம் திணறுதய்யா உன்னை மட்டுந்தா பாக்க வெச்சே அத கொள்கையா மாத்த வெச்சே! கற்பூரமா பத்திக்குது கண்ணெல்லாம் சொக்குது காலமெல்லாம் கூட வந்து கவலையெல்லாம் மறக்க வெச்சே எத பேச எப்படிப் பேச எடுத்துச் சொன்னா அம்புட்டு எழுத்தும் பத்தாதே! ரெண்டாயிரம் வருச சோழன ரெண்டு மணியிலே மறக்க வெச்சயே நூறு பேரு பாரதத்துல  ஒத்தையாளு கர்ணனைத்தா மனசுல நிக்க வெச்சேயே பாஞ்சால சிங்கத்த பாருங்கன்னு பாருக்கெல்லம் புரிய வெச்சயே  சிவனே என் சிவனேன்னு கையெடுத்து கும்பிட்டாக்க உன் முகத்தை நிலைக்க வெச்சயே  நீ வந்து என்பது வருஷமாச்சு எல்லாமே உன்னாலே மாறிப் போச்சு  ஓயாம உழச்சு ஓடா தேஞ்சேம்பாங்க ஆனா ஓயாம உழச்சு மலையா  வளந்தவனே மலையா வளந்தாலும்-அத பெரிசா நெனக்கலியே  அந்த குணத்துலே  உன்ன ம...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற