சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

ஒப்பீடற்ற சிவாஜி படங்கள்

நடிப்பு ,வேடங்கள், திரைப்படங்கள் ஒரு கலைஞனால் உருவாக்கப்படும் போது அது சமூகத்திற்க்கு என்ன பயன் அளிக்கும் ,அளிக்கப்படவேண்டும் ,என்பதுதான் முக்கியம்.அதிக நாட்கள் ஓடியது ,சாதனை செய்தது 
என்பதை  சில படங்களை வைத்து சமூகத்திற்கு உபயோகமான பயன் தந்த, தந்து கொண்டிருக்கக்கூடிய படங்களுடன் ஒப்பிடக்கூடாது.தமிழில் ஏராளமான ஓடிய படங்களை பார்த்தோமானால் அது வெறும் குப்பைகளாக உள்ளது.ஒரு படத்திற்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரமும் ,லாபமும் கண்டிப்பாக அவசியம், தேவையும்  தான்.
இந்த வரைமுறைகளில் உருவானவை தான் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்.நடிகர்திலகத்தின் படங்களை வைத்தே சில விஷயங்களை பார்க்கலாம்.
உத்தமபுத்திரன் தெய்வமகன் சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் கௌரவம் .உதாரணத்திற்காக இந்த சில படங்கள்.தெய்வமகன் தில்லானா மோகனாம்பாள் படங்களின் பேச்சு வரும் போதெல்லாம் இந்த படங்களுக்கு இணையான படங்களை யாரும் சொல்ல முடியாது.வெள்ளிவிழா ,
வருடக்கணக்கில் ஓடிய படங்கள் தமிழில் நிறைய உண்டு.அந்த படங்கள் எல்லாம் இந்த படத்திற்கு இணையாகுமா ?இதில்  சிவாஜி ரசிகர்களின் கருத்துகளை  விட்டு விடுவோம்.பொது மக்களை கேட்டுப் பாருங்கள் .இதில் மாற்றுக் கருத்தாக மட்டுமல்ல மாற்றே இல்லாத கருத்துக்களாகத்தான் பதில் வரும்.மேலே குறிப்பிடப்பட்ட நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமல்லாது ,இன்னும் அதிகமான நடிகர்திலகத்தின் படங்கள் நூறு நாட்கள் படங்கள் வரிசையில் உள்ளன.அந்த படங்கள் எல்லாம் நூறு நாட்கள் ஓட வேண்டிய படங்கள் தானா ?
உதாரணத்திற்காக நூறு நாள் ஓடிய தில்லானா மோகனாம்பாள் ,கர்ணன் படங்களுக்கு இணையாக மட்டுமல்ல ,அதற்கு அடுத்தடுத்த இடங்களில் வைத்து கூட எந்த படங்களுமே இல்லை என்பது ஆச்சர்யம் மட்டும் அல்ல.நிதர்சனமான, பலமான உண்மை.இந்த படங்களைத்தான் மக்கள் அதிகம் நேசிக்கிறார்கள்.பார்க்கிறார்கள்.
பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள் .இந்த படங்களை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது.மீண்டும் அதே கேள்வி .இந்த படங்கள் நூறு நாள் மட்டும் ஓட வேண்டியவையா ?
இதிலும் சில விஷயங்கள்.
உதாரணமாக உத்தமபுத்திரனை எடுத்துக் கொள்ளலாம்.   வெளிவந்த வருடம் 1958.இந்த ஆண்டில் மட்டும் நடிகர்திலகத்தின்  ஒன்பது படங்கள் வெளி வந்தன.
அப்படியானால் 40 நாட்களுக்கு ஒரு படமா? வெளி வந்த படங்களையும் பாருங்கள்.பொம்மள பெள்ளி (தெ)உத்தமபுத்திரன்,பதிபக்தி சம்பூர்ண ராமாயணம் பொம்மை கல்யாணம் அன்னையின் ஆணை
சாரங்கதாரா சபாஷ் மீனா காத்தவராயன்.இவற்றில் சாரங்கதாரா படத்தை தவிர மற்ற படங்களை பாருங்கள்.இந்த உதாரணம் இந்த வருடத்தை வைத்து மட்டுமல்ல.முப்பது வருடங்களாகவே இப்படித்தான்.இதிலும் உத்தமபுத்திரன் பதிபக்தி அன்னையின் ஆணை சபாஷ் மீனா படங்கள் 100 நாள் படங்கள்.சம்பூர்ண ராமாயணம் வெள்ளிவிழா. இவை ஒரே ஆண்டில்.
அடுத்தாகவும் இது போன்ற ஒரு உதாரணம் .1968 ஆம் ஆண்டை எடுத்துக் கொள்வோம்.திருமால் பெருமை  ஹரிச்சந்திரா கலாட்டாகல்யாணம் என் தம்பி தில்லானா மோகனாம்பாள் எங்க ஊர் ராஜா லட்சுமி கல்யாணம் உயர்ந்த மனிதன் என்ற படங்கள் இந்த ஆண்டில் வெளியானது.இதில் ஹரிச்சந்திரா லட்சுமி கல்யாணம் நூறு நாள் படங்கள் அல்ல.ஆனால் இவை எப்படிப்பட்ட தரமான படங்கள்.ஆனால் அதே வருடத்தில் பல தரமில்லாத பல தமிழ்படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடியுள்ளன.இதையெல்லாம் எந்த விதத்தில் ஒப்பீடு செய்வது. ஒரு ஹரிச்சந்திரா நாடகம் பார்த்துத்தானே ஒரு அஹிம்சா மூர்த்தி உருவானார்? ஹரிச்சந்திரா திரைப்படம் போன்ற படைப்புகளை சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கடமை கலைஞர்களுக்கு இருக்கிறது. நடிகர்திலகத்துக்கு அந்த பொறுப்பு மிக அதிகமாகவே இருந்தது.அதனால் அது போன்ற படங்களை கொடுத்தார்.ஓடிய சாதனைகளை பேசுபவர்களே! இப்போது சொல்லுங்கள். இந்த வகையில் மற்ற நடிகர்களை சொல்லத்தான் முடியுமா? சொல்லத்தான் இருக்கிறார்களா? 
இன்றைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு இருக்கும் கலா ரசிகர் கூட்டம் வேறு படங்களுக்கு இல்லை.தில்லானா மோகனாம்பாள் படம் ஒரு வருடம் வேண்டுமானாலும் ஓட வேண்டிய படம் என்று சொல்லப்படும் போது அதற்கு எதிர் கருத்து உங்களால் சொல்ல முடியுமா? இந்த படத்தில் அப்படியென்ன இருக்கிறது? அப்படியென்ன இது சிறந்த படமாகவா இருக்கிறது? இல்லை இதெல்லாம் ஓட வேண்டிய படம் இல்லை? என்று யாரேனும் கருத்து சொல்ல முடியுமா? ஆனால் வெள்ளிவிழாக்களும் வருடக் கணக்கில் ஓடிய பல தமிழ்ப்படங்களை குறை சொல்ல முடியும்.சில படங்கள் ஓடியிருப்பதாலேயேஅவைகள் தரமானது, சிறப்பு என்று தமிழ் சினிமாவை தலை நிமிர்ந்து சொல்ல முடியாது.
ஹரிச்சந்திராவை சிவாஜி தான் செய்தார்.
கப்பலோட்டிய தமிழனை சிவாஜிதான் செய்தார்.
திருவருட்செல்வரை சிவாஜிதான் செய்தார்.
இந்த படங்களை காட்டிலும் ஓடிய படங்கள் சிறந்தல்லவே.
45 நாட்களுக்கு ஒரு படம் என முப்பது வருடங்களாக படங்களை அளித்தவர் நடிகர்திலகம்.வியாபார ரீதியாகவும் இது எத்தனை வணிகத்தை அளித்தது.விளம்பர ஒட்டிகள், விநியோகஸ்தர்கள்,
தயரிப்பாளர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள், சிப்பந்திகள், நாளிதழ்கள்,பேனர் ஆர்ட்டிஸ்டுகள்,இன்னும் பல மறைமுக பணியாளர்கள் என்று எவ்வளவு பெரிய வணிகம் சுழற்சியாக நடைபெற்றது.ஓடிய ஒரு பட வசூலை வைத்து மட்டுமே சாதனை என்கிறார்களே மேற்கூறிய வணிக சுழற்சியினால் எத்துணை பணபுழக்கம் நடைபெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்அதுவும் வருடம் முழுவதும்.அதுவும் 30 வருடங்களாக! .
நடிகர்திலகத்தின் ஒரு படம் 100 நாட்கள் ஓடும் நேரத்தில் 2 அல்லது 3 ,4படங்கள் வெளியாகித் தள்ளும்.இதனால் பல நல்ல சிறப்பான  படங்கள் 100 நாள் ஓட்டத்திற்கு தடையாக இருக்கும்.ஏனெனில் நடிகர்திலகத்தின் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் திரையரங்கங்கள், அப்போதும் நல்ல  ஓட்டத்துடன் படங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், அவை நல்ல வசூலை சம்பாதித்துக் கொடுத்து விட்ட திருப்தியும் அடைந்திருக்கும் நிலையில் அடுத்து வெளியாகும் திரைப்படத்தை திரையிடுவதில் தானே ஆர்வம் காட்டும்.ஏன் சிவாஜியின் படங்களை அதே தேதிகளில் வெளியிட ஆர்வம் காட்டுகின்றன? முந்தைய படங்கள் நல்ல வசூலை செய்ததால் தானே? எத்தனையோ  வசூல் சித்திரங்கள்  வரலாற்று சித்திரங்களாக ஆகாது. இல்லை.ஆனால் நடிகர்திலகம் நடித்த படங்கள் வரலாற்றுச் சித்திரங்கள் என்ற வரிசையில் இடம் பெற்றவை.முதலீடு செய்த பணம் லாபத்துடன் வரவு, அடுத்த பட வெளியீட்டுக்காக திருப்தியுடன் வழி விடுதல், காலமானாலும் சொல்லப்படும் ஸ்திரத்தன்மை,சமூகத்திற்கான நல்ல பயன்பாட்டுச் சித்திரம், வெளியீட்டில் மட்டுமல்லாது திரையிடும்தெல்லாம் மக்கள் பார்க்க விரும்பும் ஈர்ப்பை ஏற்படுத்தும் ரசிகத்தன்மை, கலா ஈர்ப்பு  என்று நடிகர்திலகத்தின் படங்கள் விளங்குவதற்காகவே உருவாக்கப்பட்டவை.
எத்தனையோ ஓடிய பல  படங்கள் எல்லாம் தமிழ் சினிமா என்று மார் தட்டிக் கொள்ள முடியாது.நல்ல சினிமாவை உணர ரசிகன் தான் முயல வேண்டும்.அந்த ரசனை இருப்பவன் சிவாஜி ரசிகன்.ஒரு சாதனை விளம்பர பிட்நோட்டீசோ,  உண்மையாகவே இருந்தாலும் பத்திரிக்கைகளின் செய்திகளோ நடிகர்திலகத்தின் படங்களுக்கு ஒப்பீடு செய்ய தகுதி அற்றவை.


செந்தில்வேல் சிவராஜ்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற