இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

3 டைரக்டர் -3 தெரியாத விஷயம்

படம்
கிருஷ்ணன்-பஞ்சு இந்த இரட்டை இயக்குனர்களில் இயக்கத்தில் முதல் படமான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் நடித்து கொண்டிருக்கும் போது சிவாஜியை ஏளனமாக பலர் பேசியபோது ... சிவாஜி கணேசனை அரவணைத்து நெஞ்சார தைரியம் கொடுத்தது இயக்குனர்களில் பெரியவர் கிருஷ்ணன் அண்ணன் மட்டுமே மேலும் பராசக்தி படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருந்ததாலே படங்களில் கேமரா கோணங்களை அரிய செய்து ஆங்கில போஸ் முறையில் நடிக்க யோசனைகள் சொன்னார் கிருஷ்ணன் அவர்கள் .மேலும் அதனாலே அவரது திரைப்படங்களில் நான் நடிக்கும் போது எனக்கொரு தனி உற்சாகம் சந்தோஷம் இனம் தெறியாத நட்பு மேலும் எனக்கும், அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வயது ஆனால் என்னை அவர் கடைசி காலம் வரை மிஸ்டர் கணேஷ் அல்லது சிவா அதிகபட்சமாக வாங்க போங்க என்று மரியாதை நிமித்தமாகவே என்னை அழைப்பார்.  என்னிடம் ஒரு போதும் அதிர்ந்து கூட பேசாத வயதில் பெரிய இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ணன் அவர்கள் . சிவாஜி தன்  தாயார் பெயரில் ராஜாமணி பிக்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பாசமலர் படத்தை வெளியிட்ட பின் , சிவாஜி கணேசன் அவர்கள் மனதில் ஒரு கு...

உலகம் வியந்த நவ சிவாஜி

படம்
நவ சிவாஜி - 9 அற்புதங்கள் அதிசயமாகத்தான் இருக்கு.நம்பாமயும் இருக்க முடியலேயே.சிவாஜி செஞ்ச 9 வேஷந்தான்.ஒரு வேஷத்துக்கும் இன்னொரு வேஷத்துக்கும் சென்டிமீட்டர் மில்லி மீட்டர் அளவுல ஆராய்ச்சி பண்ணினாலும் ஏதும் கண்டு பிடிக்க முடியலேயே.எல்லாமே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமாத்தானே இருக்கு. அந்த 9 வேஷத்தையும் சிவாஜியாலே நாம பாத்துட்டோம்.சிவாஜி எதைப் பாத்து செஞ்சிருப்பாரு.இந்த ஆச்சர்யம் பாக்குற யாருக்கும் வராம போகாது. அற்புதம்,பயம்,கருணை , கோபம்,சாந்தம்,அருவருப்பு,, சிங்காரம்,வீரம்,ஆனந்தம் இந்த 9 ரசங்களையும் அவர் நடிச்சப்போ நாமும் அந்த குணங்களுக்கு மாறுகிற உணர்வுகளுக்கு அடிமை படுத்திவிடுவார் பாருங்க  இந்த நவ சிவாஜி. அற்புதராஜ் இந்த அற்புதராஜை பாருங்க.அந்த காலத்துலே இங்கிலீஸ் படங்கள பாத்தப்போ அட இவங்க எல்லாம் எவ்வளவு ஸ்டைலிசா இருக்காங்க ,நடிக்கிறாங்க அப்பிடின்னு எல்லாம் பேசிக்குவாங்க.நம்ம ஊர் நடிகர்கள் நம்ம கலாச்சார படி தான் இருப்பங்க ,நடிப்பாங்க.  ஆனா இந்த அற்புதராஜ் நடிப்பை பாக்கையிலே சிவாஜி மேல் நாட்டுல இருந்து வந்தவரோ ,அங்கேயே படிச்சு வளந்தவரோ அப்பிடீன்னு நெனப்பு வந்து போகும்.தோளை மெல்ல த...

சிவாஜி ரசிகன் VS மற்ற ரசிகன்

படம்
சிவாஜி ரசிகர்களுக்கும் மத்த  ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.அப்படி என்ன வித்தியாசம்  ? பேஸ்புக்க்குல பல நாளுக்கு முன்னாலே ஒரு பதிவ பார்த்தேன்.அந்த பதிவுலே இருந்ததை முதல்ல உங்களுக்கு சொல்றேன் .அப்புறம் என்ன வித்தியாசம் என்பதை கடைசியிலே பாக்கலாம். பதிவு இதுதான். அந்த நண்பர் இட்ட பதிவு... சிவாஜி கணேசன் இறந்து விட்டாரா ..? . யார் சொன்னது..? . கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை ... ... சுமார் ஒன்பது மணி இருக்கும். . எனது ஃபேஸ்புக் நண்பர்  அவர்கள் ‘திடீர்’ என ஒரு பதிவு இட்டார்.. என் பெயரை டேக் செய்து..! . அது இதுதான்...! . “நண்பரே உங்களுக்கு ஒரு சேலஞ்ச் . சும்மா வெளையாட்டுக்குத்தான். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துல , இந்தக் காட்சில வர்ற பாட்டுக்கும் , நடிகர் திலகத்திற்கும் ஒரு சிறப்பான ஸ்பெஷாலிடி உண்டு. யார் மொதல்ல கண்டு புடிக்கிறாங்களோ அவங்களுக்கு ஒரு புத்தகம் பரிசு. அவங்களுக்குப் புடிச்ச புத்தகம். வாங்கி அனுப்புவேன். பரிசுத் தொகை ரூ 500/-“ . இப்படி எழுதி “தில்லானா மோகனாம்பாள்” காட்சி ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் ஆகப் போட்டிருந்தார் அவருடைய  நண்பர். . காட்சியைப் பார்த்தேன்..! ...

திருலோகசந்தர் இயக்கிய சிவாஜி படங்கள்

படம்
ஏசி திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த படங்கள்: 1.தங்கை. திருலோகசந்தர் சிவாஜியை வச்சு டைரக்ஷன் பண்ணுன முதல்படம் இது.குடும்ப படம் சரித்திர புராண படங்கள்ல விருப்பப்பட்டு நடிச்சுகிட்டு இருந்த சிவாஜிய இதுல ஒரு ஆக்ஷன் ஹீரோவா அறிமுகம் செஞ்சாரு திருலோகசந்தர்.சிவாஜி ஆக்ஷன் காட்சிகள்ல தன்னோட ஸ்டைல் நடிப்பையும் காட்டி அசத்த வெச்சாரு.இந்தப் படம் நல்லா வசூல் செஞ்சு பாலாஜிக்கு ரொம்ப திருப்திய கொடுத்துருச்சு. 19.5.67  வெளியான படம் தங்கை.  2. இரு மலர்கள். திருலோக சந்தரோட ஸ்பெஷாலிட்டியே ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் எடுக்கிறது தான். முதல் படத்துல ஆக்சன் ஹீரோவ காட்டுன சிவாஜிய இதில் அப்படியே மாத்தி இருப்பார்.வழக்கமான முக்கோண காதல் கதை படமா இருந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே படத்தை ரொம்ப  ரசிச்சு ரசிச்சு பாக்க வெச்சிருப்பார் திருலோக சந்தர்.சிவாஜி அந்தகால கட்டத்துல இளைச்சு போய் ரொம்ப ஹேண்ட்சம்மா இருப்பார்.இரு மலர்கள் படத்தோட ஊட்டி வரை உறவும் ஒரே நாள்ல ரிலீசாச்சு.ரெண்டும்  100 நாள் ஓடி சாதனை செஞ்ச படங்கள். இருமலர்கள் 1.11.67லே வெள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற