நடிகர்திலகத்தின் மணிவிழா...
விசேஷ பூஜை..
சென்னை அக்டோபர் 3 1987 இல் சென்னையில் சிவாஜி மணி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நடிகர் திலகம் என்று கலையுலகமும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் போற்றும் சிவாஜிக்கு அறுபதாவது பிறந்தநாள். அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்து சிவாஜி சந்தன நிறத்தில் பட்டு வேஷ்டியும் பட்டு சட்டையும் அணிந்தார் .பின்னர் தகப்பனார் சின்னையா மன்றாயர் ராஜாமணி அம்மாள் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார் .ஏழு முப்பத்தி ஐந்து மணிக்கு வீட்டுக்கு வெளியே உள்ள விநாயகர் கோவிலுக்கு சிவாஜியும் மனைவி கமலாம்மாளும் மேளதாளத்துடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள் .அங்கு பூரண கும்ப மரியாதையுடன் சிவாஜியை வரவேற்றார்கள் விசேஷ பூஜை நடந்தது.
பிறந்தநாள் கேக் ..
அதைத் தொடர்ந்து சிவாஜி வீட்டுக்கு வந்து பிறந்தநாள் கேக் வெட்டினார் முதல் துண்டு மனைவி கமலா அம்மாளுக்கு ஊட்டினார்.
அடுத்து தளபதி சண்முகம் ராஜசேகர் ஆகியோருக்கும் கேக் ஊட்டினார்.
பிறந்த நாளையொட்டி சிவாஜி வீட்டு வாசலில் அலங்காரப் பந்தல் போடப்பட்டு இருந்தது .காங்கிரஸ் கொடிகள், கம்பங்கள் ஏராளமாக கட்டப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே புல்வெளியில் பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது .காலை 8 மணிக்கு சிவாஜி மேடைக்கு வந்தார் அவருக்கு அகில இந்திய மன்றத்தின் சார்பில் தலைவர் சண்முகம், ராஜசேகரன் இருவரும் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்தார்கள் அப்போது வாணவேடிக்கைகளும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
ரசிகர் பட்டாளம் ..
ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட கியூ வரிசையில் நின்று காத்திருந்தனர். மேடைக்கு சிவாஜி வந்ததும் நடிகர் திலகம் சிவாஜி வாழ்க! கர்ணன் சிவாஜி வாழ்க! சிங்கத்தமிழன் சிவாஜி வாழ்க! உத்தமன் சிவாஜி வாழ்க! என்று கோஷம் போட்டனர்.
பிறகு வரிசையாக வந்து நடிகர்திலகம் சிவாஜிக்கு மாலை அணிவித்தனர். ஏராளமான ரசிகர்கள் நடிகர்திவகம் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.
இளையதிலகம்..
சிவாஜி மகனும் நடிகருமான பிரபு மேடைக்கு வந்து சிவாஜியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார் . ரசிகர் மன்றம் சார்பில் பெரும் மாலை அணிவிக்கப்பட்டது.
அகில இந்திய ராம்குமார் ரசிகர் மன்றம் சார்பில் தலைவர் சிவாஜி ராமதாஸ் ரூபாய் நோட்டு மாலை அணிவித்தார்.
திருமண வைபவம்..
விழா மேடையில் சென்னையில் 119 வது வட்ட சிவாஜி மன்ற தலைவர் ராஜேந்திரன், மலருக்கும் சிவாஜி திருமணம் செய்து வைத்தார்.
மணமக்கள் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்.
பரிசுகள்..
சிவாஜி அமர்ந்திருந்த இடத்தில் பெரிய அண்டா வைக்கப்பட்டு இருந்தது .ரசிகர்கள் அதில் மாலைக்கு பதில் பணம் காசுகளைப் போட்டுவிட்டு சென்றனர். பல ரசிகர்கள் தனக்கு அன்போடு அளித்த ரூபாய் மாலைகளை சிவாஜி கண்ட அண்டாவில் போட்டார் .சிவாஜி மன்ற வளர்ச்சிக்காக இந்த நிதி திரட்டப்பட்டது.
ஊனமுற்ற ஒரு ரசிகர் ஒருவர் கட்டை ஊன்றியபடி மேடைக்கு வந்து சிவாஜிக்கு மாலை அணிவித்தார் .சிவாஜி அந்த ரசிகர் கையைப் பிடித்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ஜோதி...
திருப்பெரும்புதூரில் இருந்து சிவாஜி மன்றத்தினர் தொடர் ஓட்டமாக கொண்டு வந்த பிறந்தநாள் ஜோதியை மேடையில் நடிகர்திலகம் சிவாஜியிடம் கொடுத்தார்கள்.
மலை போல் குவிந்த மாலைகள்...
நடிகர்திலகம் சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட மாலைகள் பழங்கள், சால்வைகள் கதர் துண்டுகள், மலைபோல் இருந்தன.
கோவில் பிரசாதங்கள்...
தேவி கருமாரியம்மன் கோவில் ராமதாசர், மாங்காடு சிவாச்சாரியார்கள் கோவில் பிரசாதம் வழங்கி வாழ்த்தினார்கள்.
அமைந்தகரை வரதராஜ பெருமாள் கோவிலில் விசேஷ பூஜை செய்து பாரதீயன், தயாளன் இருவரும் பிரசாதம் வழங்கினார்கள்.
சூளை ராஜேந்திரன் சூளை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேஷ பூஜை செய்த பிரசாதத்தை நடிகர்திலகம் சிவாஜியிடம் வழங்கினார்.
பூங்கா நகர் சிவாஜி மன்றம் சார்பில் முத்துமாரியம்மன் கோவிலில் பூங்கா முருகன் தலைமையில் விசேஷ பூஜை நடத்தி பிரசாதம் கொண்டு வந்து வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட திரையுலக பிரமுகர்கள்..
நடிகர் நடிகைகள், பட அதிபர்கள், திரை உலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலை இமயம் சிவாஜிக்கு மாலை அணிவித்தனர்.
பிரபல பட அதிபர் எல்.வி. பிரசாத் சிவாஜிக்கு மாலை அணிவித்தார். அப்போது சிவாஜி அவருக்கு சால்வை அணிவித்து காலை தொட்டு ஆசி பெற்றார்.
நடிகர் சாருஹாசன் சிவாஜிக்கு மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்கினார் .அவரை இரு கைகளாலும் தூக்கி கட்டித் தழுவினார் சிவாஜி.
தாசரி பத்மா சிவாஜிக்கு நோட்டு மாலை அணிவித்தார்.
நடிகர்கள் :
ராஜேஷ் விஜயகுமார் மேஜர் சுந்தரராஜன் விகே ராமசாமி சிவச்சந்திரன் இசையமைப்பாளர் இளையராஜா கங்கை அமரன் டி ராஜேந்தர் இன்னும் பலர்..
நடிகைகள்...
ஸ்ரீவித்யா சுகாஷினி மனோரமா டைரக்டர் ஏசி திருலோகச்சந்தர் முக்தா சீனிவாசன் எஸ்பி முத்துராமன் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தானபாரதி மனோபாலா ஒளிப்பதிவாளர் பிரபாகரன்
பட அதிபர்கள் ..
கே.பாலாஜி முக்தா ராமசாமி கலைமணி மணி அய்யர் தண்டாயுதபாணி எஸ் எஸ் கருப்புசாமி முத்துராமன்
ராம் அரங்கண்ணல் மல்லியம் ராஜகோபால் பாலு சண்முகராஜன் சித்ரா ராமு சித்ரா லட்சுமணன் நரசிம்மன் அவிநாசி முருகேசன் இன்னும் பலர்..
அரசியல் பிரமுகர்கள்..
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மந்திரி ராஜாராம் அடைக்கலராஜ் எம்பி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஞானராஜ்
ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ கதிர்வேலு எம்எல்ஏ வெங்கட்ரமணன் எம்எல்ஏ விழுப்புரம் செல்லப்பா
முன்னாள் எம்பி தண்டாயுதபாணி முன்னாள் எம்பி பி பி சரஸ்வதி ரமணிபாய் சுப்பிரமணியம் மணிசர்மா மணலி ராமகிருஷ்ண முதலியார் தொழிற்சங்கத் தலைவர் எம் ஆறுமுகம் சிவாஜி மன்ற நிர்வாகிகள் புரசை குமரன் இசக்கி பாண்டியன் ஏ டி ராஜேந்தர்
குரோம்பேட்டை குமார் இசக்கிமுத்து பூமிநாதன் வழக்கறிஞர் பேரானந்தம் ஜானகிராமன் டிஎஸ் பொன்ராஜ்
தேவர் பேரவை தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன்
கோவை நடராஜ் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வன் புதுவை சிவராஜ் சேலம் சிவப்பிரகாசம் தமிழ்நாடு ராஜீவ்காந்தி சங்க பேரவை தலைவர் அமீனாபக்கர்
மற்றும் பலர் மாலைஅணிவித்து வாழ்த்தினார்கள்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி சிவாஜிக்கு பொன்னாடை போர்த்தினார் இருவரும் மாடிக்குச் சென்று தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள்
ஜனாதிபதி வாழ்த்து..
ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் சிவாஜிக்கு வாக்கு தந்து அனுப்பி இருந்தார்
அமெரிக்காவில் இருக்கும் தமிழக முதல் மந்திரி் சார்பில் சென்னையில் உள்ள முதல்வரின் செயலாளர் பிச்சாண்டி சிவாஜிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்
சூளை 61ஆவது வட்டத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில்
கே பாஸ்கரன் தலைமையில் விசேஷ பூஜை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது
பகல் 12 மணிக்கு ஏழைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது
எழும்பூர் தொகுதி சிவாஜி மன்றம் சார்பாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மற்றும் சார்பில் ஆர் கே சந்திரசேகர் தனது தொகுதி சார்பாக விசேஷ பூஜை நடத்தி நடிகர்திலகத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அண்ணா மாவட்டத்திலே பழனி முருகன் கோவிலில் அகில இந்திய சிவாஜி மன்ற துணைத் தலைவர் வக்கீல் திருமலைசாமி விசேஷ பூஜை நடத்தினார்.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூங்கா நகர் சிவாஜி மன்றம் சார்பாக சூளை ராஜேந்திரன், ராகவன் பூங்கா முருகன் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலிக்கயிறு ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு சிவாஜி வாழ்த்து சொல்ல வந்த பெண்களுக்கு வழங்கினார்கள்.
சிவாஜி பாராசூட்...
சூளை சிவாஜி மன்றத்தினர் பாராசூட் விட்டார் கள்.
அதிலிருந்து கொடி நடித்த சிவாஜி படம் ஆகாயத்தில் பறந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக