1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியுடன் நடித்த சகோதரி நடிகைகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த சகோதரி நடிகைகள்.
நடிகர் திலத்துடன் ஏராளமான நடிகைகள் நடித்துள்ளார்கள்.
சகோதரிகளே நடிகைகளாக தமிழ் தமிழ் திரை உலகில்  வலம் வந்தவர்கள் வெகு சிலரே. அவர்கள் நடிகர் திலகத்துடன் நடித்த படங்களை இந்த பதிவில் பார்க்கலாம் .

நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சகோதரிகள்
லலிதா  பத்மினி ராகினி .இந்த மூன்று சகோதரிகளும் நடிகர் திலகத்துடன் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் .தூக்குத் தூக்கி படத்தில் இந்த மூன்று பேரும் நடித்திருப்பார்கள். சிவாஜி மனைவியாக லலிதா நடித்திருப்பார். கணவனுக்கு துரோகம் செய்யும் வேடத்தில் லலிதா நடித்திருப்பார் இந்த படத்தில். பத்மினி ராகினியும் இந்த படத்தில் நடித்திருப்பார்கள் .
பத்மினியும் நடிகர் திலகத்துடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்கள். 
ராகினி சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ராகினியும் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.

அடுத்ததாக வெகு காலத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமான சகோதரி நடிகைகளாக விளங்கியவர்கள் அம்பிகா ராதா.
அம்பிகா நடிகர் திலகத்தின் வாழ்க்கை வெள்ளை ரோஜா திருப்பம்  கருடா சௌக்கியமா படிக்காதவன் ஆகிய படங்களில்  நடித்துள்ளார்.
அம்பிகாவின் சகோதரியான ராதாவும் நடிகர் திலகத்துடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் ராதா சேர்ந்து நடித்த படத்தில் மிகவும் முக்கியமானது முதல் மரியாதை.
நடிகை ராதா நடிகர் திலத்துடன் சேர்ந்து நடித்த படங்கள் துணை சந்திப்பு வெள்ளை ரோஜா இரு மேதைகள் நீதியின் நிழல் ஐல்லிக்கட்டு ...ஆகியவை ஆகும் .
அம்பிகாவும் ராதா இருவரும்  நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்த படங்கள் ..வெள்ளை ரோஜா, தாம்பத்தியம் ...
நடிகை அம்பிகா நடிகர் திலகத்துக்கு ஜோடியாக வாழ்க்கை தாம்பத்தியம் படத்திலும் நடிகை ராதா முதல் மரியாதை படத்தில் சொல்லப்படாத ஜோடியாக நடித்திருப்பார்கள் ...

அடுத்து நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்த சகோதரி நடிகைகள் ராதிகா நிரோஷா ..
நடிகை ராதிகா நடிகர் திலகத்துடன் நீதிபதி வம்ச விளக்கு நேர்மை ராஜரிஷி வீரபாண்டியன் ஆகிய படங்களில் நடித்திருப்பார்.
நடிகை ராதிகாவின் சகோதரியான நிரோஷா நடிகர் திலகத்துடன் நடித்த படம் பாரம்பரியம். இந்தப் படத்தில் நடிகர் திலகத்தின் மகளாக நடித்திருப்பார் நிரோஷா.

மேலே குறிப்பிடப்பட்ட நடிகைகள் அனைவரும் நடிகர்திலகத்துடன் மட்டும் நடித்திருக்கிறார்கள்..
இப்படி ஏதாவது ஒரு வகையிலே சிறப்புகள் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களிலும் அமைந்திருக்கின்றது. 

செந்தில் வேல் சிவராஜ் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்