1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நடிப்பை விடுங்கள் - சிவாஜி -அதற்கும் மேலே

நடிப்பை விடுங்கள்.அது எல்லோராலும் புகழ்ந்து தள்ளியாயிற்று.குன்று போல் உயர்ந்த புகழின்  பாதி அவர் குணம் சார்ந்தே நிரம்பியது.அவர் காட்டிய நடிப்பு கலையை வைத்தே அவர் அடைந்த உயரம் ஒரு நாட்டிலேயே முதல் மனிதர் என்ற கௌரவத்தை கொடுத்தது. அதன் உயரம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.பூமி சாகும் வரை இது நிலைக்கும்.
தான் மீது வீசப்பட்ட எதிர்மறை கருத்துக்களையெல்லாம் புன்சிரிப்புடன் பதில் சொல்லாமலே அஹிம்சை பாதையில் அதை ஏற்று கடைசி வரை பயணித்துக் கொண்டிருந்தவர்.
உழைப்பில் பெரும்பகுதியை கலைக்கு அர்ப்பணித்தாரென்றார் என்றால் அதில் கிடைத்த பொருளாதார பயனின் பெரும்பகுதியை நாட்டிற்கு யோசிக்காமல் கொடுத்தார்.
 சிவாஜியை எதிர்த்துப் பேசினால் திரையுலகில் நிலைக்க முடியாதோ? என்ற 
என்ற சூழ்நிலையை எல்லாம் அவர் உருவாக்கவில்லை.மாறாக சக கலைஞர்களெல்லாம் ,
பெரும்பான்மையாக உச்சத்தில் இருந்தவர்கள் கொண்டு அனைவரும் மதிக்கும் படியாகவே வாழ்ந்தார்.
அறிமுகம் செய்தவரைத் தவிர ஏனையோருக்கு கடன்படா விட்டாலும், எல்லோருக்கும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டேதானிருந்தார்.
நாடு சம்பந்தப்பட்ட எந்த நல்லவைகளுக்கும், திட்டங்களுக்கும் அவர் செய்யவில்லை என்பதை விட அதற்கு முதல் மனிதராக கொடையளித்தும், கலைப்பணி செய்தும் காட்டிய வகையிலேதான் அவர் வரலாறு இருக்கிறது.

நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை எல்லாம் கணக்கெடுங்கள்? அதற்கு எந்த நடிகர் அதிகம் பங்களித்தார் என்பதையும் 
கணக்கெடுங்கள்.
அரசு கொண்டுவந்த நல்லதிட்டங்களுக்கு  எல்லாம் எந்த நடிகர் அதிகம் உதவி செய்தார் என்பதையும் கணக்கெடுங்கள்?
நாடகங்கள் நடத்தி தனக்கு சம்பளம் கூட பெறாமல் நாடகம் மூலம் வந்த நிதியை நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ததில் எவர் அதிகபங்கு வகிக்கிறார் என்று கணக்கெடுங்கள்!
இது மக்களுக்கான கேள்வி மட்டுமே. உரக்க கூறிய சிவாஜி ரசிகர்களின் தொண்டை வறண்டே போயிருக்கும்!

சில  படங்கள்  ஓடாததைக் குறித்தும் இன்றும்  சிலர் விவாதித்துக்  கொண்டுதானிருக்கிறார்கள்.
இதையே நடிகர்திலகம் குறிக்கோளாக வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் யோசியுங்கள்! வருடக்கணக்கில் ஓடிய படங்கள் எல்லாம் எங்கே சென்றன.ஏதாவது புள்ளிவிபரம் சொல்லப்படும்போது பட்டியலிடுவதோடு சரி.சில வருடக்கணக்கில் ஓடிய படங்களை தொலைக்காட்சியில் கூட காண முடிவதில்லை. அன்று பொழுதுபோக்கு என்கிற அம்சத்திலே பார்க்கப்பட்ட அப்படி ஓடிய  படங்களை இன்று பார்த்தாலும் கூட இதையா வருடக் கணக்கில் ஓட்டினார்கள் என்ற கேள்விதான் வருகிறது. 
நடிகர்திலகத்தின் கௌரவம், தெய்வமகன், நவராத்திரி எல்லாம் 100 நாள் பட வரிசையில் தான் இருக்கிறது.
நடிகர்திலகம் தான் நடித்த 47 வருடங்களில்
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று இப்படி கொடுத்திருந்தால் அப் படங்கள் வருடம் முழுவதும் ஓடியிருக்காதா? அந்த நிலையில் அவர்  நடித்திருந்தால் 47 வருடங்களில் 94 படங்கள் என்ற கணக்கில் எல்லாமே வெள்ளிவிழா பட்டியலில் இடம் பெற்றிருக்காதா? இது  ஒரு விவாதத்துக்காக மட்டுமே.
🙏🙏🙏
செந்தில்வேல் சிவராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்