1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பாட்டுப் புத்தகங்களும் பழைய வரலாறு

Lபாட்டு புத்தகங்களும் ,பழைய வரலாறும்...

பத்து பைசா கொடுத்து பாட்டு புத்தகத்தை வாங்கும் போதே அந்த பாடல்கள் இனி எனக்கே சொந்தம் என்பது போன்ற பரவசம் கிடைக்கும்.ஆளில்லா இடம் தேடி பாட்டு புத்தகத்தை  விரித்து ஒவ்வொரு பாடலாய் வாய்விட்டு உரக்க பாடி சந்தோசம் கொள்ளும் மனம்.இதெல்லாம் 1970 களில்.நடிகர்திலகத்தின் பாட்டு புத்தகங்களை தவிர வேறெந்த பாட்டுப் புத்தகங்களின் மீதும்  என் விரல் ஸ்பரிசங்கள் பட்டதேயில்லை.ஒன்று முடித்தவுடன் அடுத்த புத்தகத்தை வாங்குவதும் படிப்பதும் தொடரும்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில்தான்.
நண்பர் குழாமில் அடிக்கடி போட்டிகள் கூட நடக்கும்.நான் பாடுவது போலே முழுவதுமாய் உன்னால் பிசகாமல் பாட முடியுமா? என்று மார்தட்டி சவால் விடுவார்கள் எல்லோரும்.பெரிய பாகவதர்கள் போலும் நினைத்துக் கொள்வார்கள் தங்களை.
பின்னாட்களில் இதையெல்லாம் நினைத்து பார்க்கையில் எவனுக்குமே பாடவே வரவில்லையே! அப்படி இருந்தும் எப்படி சவடால் விட்டு பாட்டுப் பாடினோம்? அதுவே சிறப்பென எந்த நினைப்பில் பாடித் திரிந்தோம்!
இது ஒரு புறம் இருக்கட்டும்.
அடுத்து ,சேர்ந்த பல புத்தகங்களை ஊசியால் கோர்த்து ஒன்றாக இணைத்து மேலட்டை ஒட்டி அதில் வரிசையாக அதிலுள்ள பட பெயர்களை எழுதி  வைப்பது.
என் அனுபவத்தில் நடிகர்திலகத்தின் பாட்டு புத்தகங்களை சேர்த்து வைத்திருப்பவர்களைப் போல் வேறெவரின் பாட்டு புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தவர்களை பார்த்ததில்லை.
அழகாக பைண்ட் செய்யப்பட்டு மேலட்டையில் பள்ளி லேபிள் போல், லேபிள் ஒட்டி பெயர் ,விலாசம் ஒட்டி வைத்திருந்ததை நிறைய பேரிடம் பார்த்துள்ளேன்.பெரும்பாலோர் பாட்டு புத்கககங்களை இரவல் கேட்டார் தரவே மாட்டார்கள். 
அன்றைய காலத்தில் பாட்டுப்புத்தகங்களின் வணிகம் கடைக்காரர்களுக்கு நல்ல வசூல் மழையாக அமைந்திருந்தது.ஏராளமான பதிப்பகங்கள் நிறைய சம்பாதித்தன.மிக அதிக படங்களை கொடுத்த வகையில் நடிகர்திலகத்தின் படங்கள் நல்ல வசூலை செய்தன.வருடத்திற்கு எட்டு படங்கள் சராசரியாக நடித்ததால் வணிகர்களுக்கு வருடம் முழுவதும் நல்ல பண வேட்டைதான்.மற்ற நடிகர்களை விட நடிகர்திலகத்தால் அதிக லாபம் வணிகர்களுக்கு.எப்படியெனில் வசன புத்கங்கள் .வசன புத்தகங்களை பொறுத்த வரை மற்ற நடிகர்களுக்கு சாய்ஸ் இல்லை.
ஒரே உள்ளடக்கத்தை கொண்டு வகை வகையான தலைப்புகளில் சிவாஜியின் வசன புத்தகங்களுக்கு மாற்று இல்லவே இல்லை.குறிப்பாக "சிம்மக்குரல் சிவாஜியின் வீர கர்ஜனை "புத்தகம் அசுர விற்பனை தான். ஏனெனில் அது பின்னாட்களில் எத்தனை நடிகர்களை உருவெடுக்க வைத்ததது? எத்தனை மேடை விழாக்களுக்கு பயன் கொடுத்தன! நடிகர்களுக்கு நடிப்புக் கையேடாகவும் விளங்கியது நடிகர்திலகம்  சிவாஜியின் வீர வசன புத்தகங்கள் தான்! 
சங்கிலித் தொடர் போலே திரைப்படங்களை மையப்படுத்தி ஒரு வர்த்தகம்.இந்த வகையிலும் எவ்வளவு பெரிய வர்த்தகம்  நடிகர்திலகம் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ளது? 
பத்து பைசா பாட்டு புத்தக வியாபாரம் எவ்வளவு லட்சங்களை சம்பாதித்து கொடுத்துள்ளது.எவ்வளவு பேரை லட்சாதிபதிகளாக்கியுள்ளது? மொத்த வணிகத்தில் நடிகர்திலகத்தின் பங்கு அதிகம் .இது போலவே காலண்டர் வியாபாரமும்.25 பைசா 50 பைசாக்களில் வண்ண வண்ண காலண்டர்களின் வியாபாரமும் வெகுவே ஜோராக இருந்தன.
நடிகர்திலகத்தின் மூன்று கெட்டப்புகள்(சி.செல்வன் ,ராஜா, ரங்கதுரை)  காலண்டர்,குதிரையில் உட்கார்ந்து காட்சி தரும் ராஜ ராஜ சோழன், சௌத்ரீ போஸ் காலண்டர்கள்,சுதந்திர தின ஸ்பெசலாக கட்டபொம்மன் தேசியக் கொடி பிடித்திருக்கும் காலண்டர்களும், இன்னும் பிறவும் இன்றுவரை மறக்க இயலாதவை.அன்றைய சிவாஜி ரசிகர்களின் வீட்டுக் கதவுகளையும், பீரோக்களையும், சுவர்களையும் அலங்கரித்தவை காலண்டர்கள் படங்களே!
ஒரு நடிகர்திலகத்தின் திரைப்படம் திரைப்படம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அது ஒரு பெரிய சங்கிலித் தொடர் வணிகமாய் நீண்டிருந்தது.எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் சிவாஜி மட்டுமே பழக்கம். தெரியும். அழியாத ஞாபகங்களும்.அது தான் இக் கட்டுரை.
பாட்டு புத்தகத்தில் ஆரம்பித்த கட்டுரை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.
பிடித்தாலும் ,பிடிக்க விட்டாலும் கருத்தை தெரிவிக்கவும்.
நன்றி 
செந்தில்வேல் சிவராஜ்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்