1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

உங்களை விட்டால் வேறு யார் ?

உங்களை விட்டால் வேறு யார்? 
உதட்டுப் புன்முறுவலில் மறைத்து வைத்தீர்கள்.
அது காதலா? அன்பா? 
மெல்லிய புள்ளியில் ஒரு 
ராஜ பேரிகை காதல் சொன்னீர்கள்!
அழகாபுரியின் ஆனந்தாக!
இதைச் செய்ய 
எங்களை மயக்க 
உங்களை விட்டால் வேறு யார்?

பாசப் பார்வையில் சோறிட்டு 
அன்பு காட்டியதற்காக
வாழ்க்கையையே அர்ப்பணித்த 
பாபுவின் தியாகம் சொல்ல,
உங்களை விட்டால் வேறு யார்?

வாழ்ந்து மரணித்த காதலை 
மனதில் ஓரமாய் புதைத்து 
சோகத்தை மனதிலும், 
கம்பீரத்தை கண்களிலும்  காட்டி
உயர்ந்த மனிதராய் வாழ்ந்த
 சரித்திரத்தை சொல்ல 
உங்களை விட்டால் வேறு யார்?

உதட்டில் புன்னகையையும்
முகத்தில் சாந்தத்தையும் 
கொண்ட இளைஞன்  ரஹீமாக
பாத்திரமேற்றீர்கள்.
மதத்தை தாண்டியது மனிதம்
என்பதை அழகாக சொன்னீர்கள்.
எம்மதமும் இப்படியோர் இளைஞன் 
நமக்கும் கிடைப்பானா என ஏங்க வைத்தீர்கள்.
ரசிக்க வைத்த ரஹீமாக செய்ய உங்களை விட்டால் வேறு யார்?

வான் பொழியும் பூமி
தேன் சொறியும் காடு
மான் துள்ளும் பூமி 
சோழமண்டலம்.
நீதியின் பரிபாலனம் 
நீர்த்து போகாத தேசம்.
அரசே அநீதிக்கு தலை வணங்கியதால் 
அதை எதிர்த்து பொங்கியெழுந்த 
மனோகரனாக நீங்கள்.
இதற்கும் உங்களை விட்டால் வேறு யார்?

புதியபறவையில் நீங்கள் செய்தது என்னமோ கொலைகாரரர் பாத்திரம்தான்.
இத்தனை ஆண்டுகளாயினும் அது கவனத்தில் வருவதில்லை.
இதைச் செய்ய உங்களை விட்டால் வேறு யார்?

கொலைகாரனை,
கண்ணன் தண்டனைக்கு முயற்சிக்கிறான்.
ரஜினிகாந்த் விடுவிக்க முயற்சிக்கிறார்.
நியாயம் என்னவோ கண்ணன் பக்கம்தான்.
எல்லோரின் ஆதரவும் ரஜினிகாந்திற்கே!
எந்த ஊர் நியாயம் இது!
உங்களால் இந்த முரண் நியாயமாக்கப்பட்டது.
இதைச் செய்ய உங்களை விட்டால் வேறு யார்?

படம் முழுதும் ஒரே டிரஸ்தான்.
எதிர்பாராத கொலைகேஸ்ஸிலும் தண்டனை கைதி
குடிகாரன் கூட.
பாதி படத்தில் மீசையையும் எடுக்கணும்.
நிறைய அவமானப்பட வேண்டிய சீன்களும் உண்டு.
டூயட் பாட்டு கிடையாது.
ஆனால் படம் கிளாஸா இருக்கணும்
மாஸா ஹிட்டாகணும்.
யாரய்யா  செய்வான் இதை?
அதற்கும் உங்களை விட்டால் வேறு யார்?

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்