1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

தமிழ் தமிழ் என்று வாழ்ந்த தமிழன்

தமிழ் தமிழ் என்று வாழ்ந்த
தமிழன்
தமிழர்க்கெல்லாம் தமிழை
தக்க முறையில் சொன்னவன்
தரணியிலே அவன் 
தங்கமான நடிகர்திலகம்

சப்தமானதை  அதை  சுத்தமானதாக
சரளமாக பேசுவான்
சதுரங்க வேட்டை நடத்துவான்
சங்கத்தமிழிலிலே
சகஜமாய் வார்த்தைகள் தெறிக்கும்
சகலமும் அவனது நாவிலே! 

'வாழ வழி இல்லையா' என்பதை "வாழையிலையே இல்லையா "
என்று குழறினாலும் 
'வாழ இடம் இல்லை தமிழனுக்கு'
என்று முழங்கினாலும் 
'வக்கணையாக பேச வந்து விட்டே'
என்று வெடித்தாலும்
வார்த்தைகளுக்கு அவனே கர்வம் சேர்த்தவன் 

காலையிலே கந்தலாடை
மாலையிலே  பொன்னாடை
இரவிலே பஞ்சாடை 
என்று 
முப்பொழுதும் வேறுவேறு ஆடை உடுத்துவான்
நடிப்புக்காக
பார்த்தவன் சொல்வான் 
அவன் என்ன 
மனிதனா? மாயாவியா? 

செக்கிழுப்பார் கப்பலோட்டிய தமிழனில்
சிதம்பரனார் தான் தெரிவார்
ஜிந்தாபாத் என்று முழங்குவார்
பகத்சிங் தெரிவான் கண்களில்
பாஞ்சால சிங்கமாய் கர்ஜிப்பான்
கட்டபொம்மன் மனதில் நிற்பான்
சிவாஜி நடித்ததால்
அவர்களின் புகழுக்கு ஆயுள் கூடியது

நேரங்கள் காத்திருக்காது மனிதனுக்கு
அந்த நேரத்தையே காக்க வைத்தவன்
சிவாஜிக்கும் நேரத்திற்கும்
வாழ்நாளெல்லாம் போட்டிதான்
தோல்வியை நேரமானது உணர்ந்த நாள்
சிவாஜியின் ஆன்மா பிரிந்த நாள்தான்

..செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்