1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பால்குடியிலேயே கலந்த சிவாஜி

ஆத்தா பால் குடிச்சு 
வளந்த காலத்துல 
அத்தோட 
சிவாஜி நடிப்பையும் 
ருசிச்சு வளந்த
உடம்பய்யா 

பத்து வயசு அப்போ..
மாறி மாறி மழை பேஞ்சு 
ஊரெல்லாம் ஊறிக் கெடந்ததய்யா
அதெல்லாம் பெரிசில்லே
தரைக் கொட்டாயிலே 
ஆறு மணிக்கு போட்டுருவானே
"பதிபக்தி "
அது எப்போ ஆவும்னு
அலைஞ்சய்யாதா அப்போ மனசு
அத அன்னைக்கு பாத்தாத்தா 
மறுநா வயித்துல சோறிறங்கும்

கோலிகுண்டு விளையாண்ட காலம்
பெட்டெல்லாம் வெச்சு அடிப்போம்
சிவாஜி பிச்சருக்காகவே நான் கோலியெடுப்பேன்
குறி கோலி அடிச்சா பத்து பிச்சரு
ஒருத்தன் வெச்சிருந்தான் பைக்ல வர்ற சிவாஜி பிச்சரு
மூணு மாசமா கேட்டேன்
அவந் தரலே
ஒருநா கேட்டான் இந்த கோலில நீ
ஜெயிச்சா உனக்குத்தா இது
தோத்துபுட்டே ஐநூறு பிச்சரு 
நீ தரனும்ட்டான்
கை உதறுனாலும் வெறி அடங்கலேய்யா
அன்னைக்கு
அடிச்சேனய்யா குறிகோலிய 
தெறிச்சுதய்யா கண்ணாடி கோலி
அன்னைக்கே 
ஐநூறு பிச்சர சும்மா கேட்டாலும்
குடுத்திருப்பேனய்யா 

பதினோரு வயசு
கொட்டாயிலே அன்னைக்கு 
'புதையல் 'படம்
நம்மூருக்கு அது புதுசு
அஞ்சு மணிக்கே போயும் அத்தினி கூட்டம்
டிக்கட் கிடச்ச பாடில்லே
ஓலைக் கொட்டாயிதானே அது
கொஞ்சம் கிழிஞ்ச தட்டியிலே 
பாதி படம் தெரிஞ்சுது
அதயே ரோட்டுல நின்னு 
முக்கா படம் பாத்தமய்யா
மிச்சப்படம் நாளக்கி பாத்துக்கலாம்னுதான்..

இன்னொரு நா ..
'வசந்தமாளிக ' போட்டிருந்தாங்க 
கொட்டாய தாண்டி கும்பல் கும்பலா
ஜனங்கமாருக -அது
ஒரு ஊரு கூட்டம் மாதிரி இருந்திச்சு
படத்த கால்மணிக்கு முன்னாடியே போட்டுட்டான் அன்னைக்கு
எழுத்து முடிஞ்சு ப்ளைட்டுல தலைவரு பாட்டு ஆரம்பிக்குது
மூஞ்சிய பாத்ததுமே ஆசையா கை தட்ட அத்தினி ஜனம் கிடக்க
பட்டுன்னு கட்டாச்சு பிக்சர் 
ஆளாளுக்கு கத்த ஆரம்பிச்சாட்டாங்க
ஒரே குய்யோ முய்யோதா
பிக்சர ஒட்டி ஓட்ட அஞ்சு நிமிஷமாகும்
மறுபடியும் படம் ஓட ஆரம்பிக்குது
விசில் சத்தம் கை தட்டற சத்தத்தை கேட்டா 
கூரையெல்லாம் பிச்சுட்டு போயிருக்கும் போலிருக்கு
நம்முளுக்கு வேற பயமாவும் இருக்கு
ஓ மானிட ஜாதியே ..
ஒரு ரெண்டு வரிதா பாடியிருப்பாரு தலைவர்
மறுபடியும்  அந்து போச்சு
மறுபடி ஒரு ஒட்டு 
ஓடுது ..
உலகத்தின் வயதுகள் பலகோ...
மறுபடி ஒட்டு..
ஆபரேட்டருக்கே அந்து போயிருக்குமய்யா
அன்னைக்கு
படத்த ஓட்டி முடிக்க மூணே முக்கா மணி நேரமாயிடிச்சு
அடுத்த ஷோவெல்லாம் இல்ல
உலகத்துலேயே ஒரே ஷோவோட வசந்தமாளிகைய நிப்பாட்டுன கொட்டாயின்னா எங்கூரு கொட்டாயாதா இருக்கும்
ஆனா கடசி வரைக்கும் ஒரு பய எந்திரிச்சு போகலியே 
இன்னிக்கும் அதையெல்லாம் நெனச்சா...

ஒரு நா நம்மாளு ஒருத்தன் திரைக்குப் பக்கத்துல சூடம் காமிச்சான்.கொட்டாயிலே அதெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க.நல்லா சாத்திட்டாங்க.அவங் கூட்டாளிக பத்து பேருக்கு மேல இருந்திருக்காங்க.அடிச்சத பாத்த அவனுக பதிலுக்கு கொட்டாயிகாரன்கள அடிச்சிட்டாங்க.பிரிச்சினை பெரிசாகி ஆளாளுக்கு அடிதடி.மணல் தரைதானே அப்ப.மணலெல்லாம் பொம்பளக ,குட்டிக கண்ணுல விழுந்து ஏக களேபரம்.கண்ண தேய்ச்சு தேய்ச்சு செவந்து போச்சு.படத்த உடனே நிப்பாட்டிட்டான்.போலீசுக்கு வேற போன் போட்டாச்சு .அதுக்குள்ளே அந்த கூட்டம் எட்டிக் குதிச்சு ஓடிப்போயிருச்சு.
முக்கா மணி கழிச்சு படம் போட்டான்.கண்ணெரிச்சல் வேற.சிவாஜி படத்த பாக்காம போகலயே! 

ரங்கதுரை போட்டப்போ ...
படம் ஒரு பத்து நிமிஷம் ஓடும்
அப்ப அப்பளம் உப்பறமாதிரி
பிச்சசர் உருகும்
அது நல்லாவே திரையிலேயே தெரியும்
அத ரெடி பண்ணி
மறுபடி ஓட்டுனாக்க  மறுபடி
அதே  மாதிரி பிச்சர் 
அப்பளம்  மாதிரி உப்பும்
இதே பிரச்சினைதா படம் பூராவும்
அன்னைக்கு
கூட்டம் வேற எக்கச்சக்கம்..
அடுத்த நா பாத்தவக சொன்னாங்க 
பாதி படமே இல்லைன்னு
எனக்கொரு சந்தேகம் இன்ன வரைக்கும்
எங்கூரு கொட்டாயிலேதா மட்டுந்தா 
இந்த விவகாரங்களா?
இல்லே எல்லா ஊருலயும் இது போலவெல்லாம் நடந்திருக்கான்னு?

சிவாஜி படம் போட்டா ஒரு வீதி பாக்கியில்லாம சுத்தியடிச்சு அத்தன போஸ்டரையும் பாத்திட்டு அதுக்கு பிறகுதா குளிச்சு யூனிபார்ம் மாட்டி ஸ்கூலுக்கு போன காலமெல்லாம் உண்டு.
இதெல்லாம் கிராமத்துல சகஜமா நடந்ததுதான்.

சிவாஜி படம் எப்பிடியிருந்தாலும் பாத்திரனும்.அப்பிடியெல்லாம் பாத்து ரசிச்சது இன்னைக்கும் அப்பிடியே ஞாபகத்துல இருக்கு!

இன்னும் வரும்....
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்