1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

.சிவாஜி சிங்கமடா!

தமிழருக்கென்று ஒரு குணம் உண்டு..
(தலைப்பு இதுவல்ல இக் கட்டுரைக்கு)  

பிறந்த வீடும் ,புகுந்த வீடும் இணைந்தது, என்று சிவாஜி கணேசன் கடற்கரைக் கூட்டத்திலே பேசினார் .இந்திரா காந்தியும், கருணாநிதியும் இணைந்து பேசிய கூட்டத்தில் சிவாஜிகணேசன் பேசிய பேச்சு இந்த நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது .ஆனால் எதிர்முகாம்  வட்டாரத்தில்,  அதை ஜீரணிக்க முடியாமல் சிலர் சிவாஜி மீது பாய்ந்து இருக்கிறார்கள் .சென்ற மாதம் வரை சிவாஜியை பற்றி ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்த எதிர்முகாம் ஏடுகள் இப்போது விஷத்தை கக்க ஆரம்பித்து இருக்கின்றன.
"திரைஉலகம் " ஏட்டிலேயே மகா கேவலமாக சிவாஜியை தாக்கியிருக்கிறார்கள் .
புகுந்த வீடு போகப் போற அண்ணே !சிவாஜி கண்ணே !
சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே !..
என்ற தலைப்பில் எழுதி சிவாஜி பிளாக் போட்டு அதன் கீழே ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள். புகுந்த வீட்டுக்குப் போகிறவர்கள் பெண்கள் தானே !சிவாஜி புகுந்த வீடு பற்றி பேசியதால் ஆணா ,பெண்ணா ?என்று கேட்டிருக்கிறார்கள்.
சிவாஜி பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது .அவர் ஆண்மகன் தான் என்பதற்கு சாட்சியாக நான்கு குழந்தைகள் இருக்கின்றன .ஆனால் திரையுலகம் கொண்டாடும் வாத்தியார் பற்றி தான் சந்தேகம் நிறைய இருக்கிறது. மனைவிகளின்  எண்ணிக்கையை சொல்கிறார்களே தவிர ,சாட்சிக்கு ஒன்றுகூட இல்லை. சிவாஜி பற்றி ஆராய்வதற்கு முன் திரையுலக பிரகஸ்பதிகள் ,வாத்தியாரை முதலில் சோதிக்கட்டும்.அரசியலிலே கொள்கை ரீதியாக விமர்சிப்பதை யாரும் வரவேற்பார்கள். ஆனால் சிவாஜி பற்றி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தூற்றுதல் அதிகமாக இருக்கிறது .இன்னொரு ஏட்டிலே சிவாஜி சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்று எழுதுகிறது.
கன்னடத்து வலிப்பு நடிகனை  தூக்கிவைத்துக் கொண்டாடுவதை பெருமையாக நினைத்து சிவாஜியை கேவலப்படுத்தி இருக்கிறது .இந்தப் போக்கு சரியில்லை .தேவையற்றதும் கூட.
 எந்தக் கலைஞனையும் மக்கள்தான் புறக்கணிக்க முடியுமே தவிர யாராலும் அழிக்க முடியாது .சுமார் 500 படங்களைத் தாண்டி பிரேம்நஸீர்  நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை பெருமையோடு கேரள மக்கள் பாராட்டுகிறார்கள் .50 வயதை தாண்டி அறுபதை நெருங்கும் ராமராவ் ,நாகேஸ்வரராவ் போன்றவர்களை ஆந்திரர்கள் பெருமையோடு ரசிக்கிறார்கள். கர்நாடகத்தில்  ராஜ்குமார் வணங்கப்படுகிறார் .அதேபோல பம்பாயிலே  அசோக்குமார் சாகும்வரை நடிக்க வேண்டும் என்று வரவேற்கிறார்கள்.வங்கத்திலே 
 உத்தம்குமாருக்கு அந்த பெருமை இன்னும் இருக்கிறது. ரஷ்யாவில் 
பீட்டர் உஸ்டினோவ் -அமெரிக்காவில் மார்லன் பிராண்டோ ,எகிப்திலே
ஹேமத் ஹமாதி...
இப்படி எந்த நாட்டிலும் கலை தொண்டாற்றிய  மாபெரும் கலைஞர்கள் ஒழிந்து போக வேண்டும்  என்று  யாரும் எழுதியது கிடையாது .
தமிழகத்திலே தான் தமிழ் கலைஞனை மதிக்கிற எண்ணம் இல்லை. வேறு மொழி கலைஞர்களை தூக்கிவைத்துக் 
கொண்டாடுகிறோம். 
மலையாளி -கன்னடர் என்று யார் யார் பின்னாலோ ரசிகர்களை இழுத்துக்கொண்டு போகும் எழுத்தாளர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள் .ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ,கேரளத்திலும் நம் தமிழர்களை வரவேற்கும் நல்லெண்ணமும் இல்லை!
 ஆனால் நாம் மட்டும் அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
தமிழ் நடிகர்களுக்கு என்று தனி சங்கம் உருவாகியிருக்கிறது .தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. விரைவிலேயே தமிழ் பத்திரிகையாளர் சங்கம் உருவாக இருக்கிறது .தமிழ் கலை காக்கப்படுவதோடு - தமிழ் கலைஞர்களை  வளர்க்க நாம் பாடுபட வேண்டும் .அதை விட்டுவிட்டு சிவாஜி போன்ற நல்ல தமிழனை இழிவு படுத்துபவர்களை 
 இந்த நாடு மன்னிக்கவே கூடாது.
 மதிக்கவே கூடாது.

மதிஒளி
01.11.79

குறிப்பு:
(...இந்த திரையுலகம் இந்த 2020லும்  அப்படியே தானே இருக்கிறது.)
நடிகர்திலகத்தின் வானாளவிய புகழ் மென்மேலும் வளர்வதைக் கண்டு பொறாமைப்படும் கூட்டம் அன்றுமுதல் இருக்கிறது.அவர்கள்  செய்த சதி வேலைகள் கலையுலக சக்கரவர்த்தியான 
நடிகர்திலகத்திற்கு அதிகளவில் செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர்திலகம் 45 வருடங்கள்.
பின் இளையதிலகம் 1982ல் வந்தார் .
அவரும் 25 வருடங்கள் முண்ணனி நாயகனாக.இப்போது விக்ரம் பிரபுவும்..
என்ன இது! அன்னை இல்லமே இன்றளவும்  திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருப்பதா? என்று வயிற்றெரிச்சல் கூட்டம் பூதக் கண்ணாடி போட்டு ஏதாவது தவறுதெரிகிறதா? என்று பார்த்துக்  கொண்டிருக்கிறது. இளையதிலகத்தின் வளர்ச்சி, விக்ரம் பிரபுவின் வளர்ச்சியும் கண்டு பொறுப்பதில்லை அந்த வயிற்றெரிச்சல் கூட்டம்.இந்த கூட்டத்திற்கு 
அன்னைஇல்லம் தக்க பதிலடி கொடுத்திருந்தால் அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.அப்படி செய்யாததே அன்னை இல்லத்தின் பெருமை! 
காரணம்...
தமிழ்நாட்டின் சிறந்த பிரபல குடும்ப தலைவராக வாழ்ந்து காட்டிய சிவாஜிகணேசன் அப்படி அன்னை இல்லத்தை வளர்க்கவில்லை.

...செந்தில்வேல் சிவராஜ்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்