1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி ரஜினி கமல் விஜய்

கமலுக்கு தேவர்மகன்
ரஜினிக்கு படையப்பா
விஜய்க்கு ஒன்ஸ்மோர்

கமல் தேவர்மகன் கதை சொல்ல வந்த போது சிவாஜி அப்போது நடிக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தார்.கமல்ஹாசன் தான் வற்புறுத்தி கதை கேட்க வைத்தார்.நான் கதையை சொல்கிறேன்.அப்புறம் நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி என்ன சொல்லவே சிவாஜியும் கதை கேட்டார்.கதையை கேட்ட பின் இந்த பெரிய தேவர் கேரக்டருக்கு மீசையை அப்படி வைத்துக் கொள்ளலாமா? இப்படி வைத்துக் கொள்ளலாமா? என்ற விவாதங்களுக்கு சிவாஜி வந்து விட்டார்.சிவாஜிஅப்போது தாடியுடன் தான் இருந்தார்.பொள்ளாச்சி ஷுட்டிங் வந்த போதும் அப்படியே தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முன்பாக இருந்துள்ளார்.முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தவர்கள் அசந்து விட்டார்கள்.
சிவாஜி மீசைக்காக என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை.தேவையற்ற தாடி பகுதியை மட்டும் நீக்கி விட்டார். 
 தேவர் வந்து விட்டார்.
ஏற்கனவே முகத்தில் இருந்த மீசை தான் அது.
மீசை வைப்பது பெரிதல்ல.அந்த மீசை முகத்துக்கு பொருந்துமா என்பதுதான் முக்கியம்.எவ்வளவோ மீசைகளை பார்த்த சிவாஜிக்கு தேவர் மீசை வைத்ததில் அதிக சிரமம் இருக்கவில்லை.
பிற்பாதி படத்தில் கமல் அது போன்று மீசை வைத்து   வருவாரே,  சிவாஜியை பார்த்த பாதிப்போ என்னவோ  அவருக்கே அந்த ஐடியா பிற்பாடு தான் தோன்றியிருக்கலாமோ என்ற எண்ணமும் எங்களுக்கு தோன்றியது. கமலஹாசனின் டாப் படங்களில் முக்கியமானது தேவர்மகன்.கமலஹாசன் நினைக்காத சில விஷயங்கள் அந்தப் படத்தின் மூலமாக நடந்துள்ளது. ஆக கமலஹாசனுக்கு பிரேக் கொடுத்த படம் சிவாஜியின் தேவர் மகன்.

ரஜினிக்கு ஒரு படையப்பா.
ரஜினியின் டாப் கேரியரில் முக்கியமானதும், தமிழ் பாக்ஸ் ஆபீஸ் படங்களின் அப்போதைய உச்ச படமும் படையப்பா. தேவர் மகன் அளவுக்கெல்லாம் இதில் நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை நடிகர் திலகத்திற்கு .ரஜினிக்கு ஒரு கம்பீரமான அப்பா தேவை என்பதால் அதற்கு நடிகர் திலகம் தேவைப்பட்டார். நல்ல வசூலும் அதிக திரைகளில் 100 நாட்களும் ஓடிய படம் படையப்பா. ரஜினியின் பிற்கால படங்களில் கதை அம்சங்கள் எல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. விறுவிறுப்பான பரபரப்பான காட்சிகளை வைத்து தான் படங்களை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் படையப்பா உச்சம். கமர்சியல் ஃபார்முலாவுக்கு சரியான தீனியாக அமைந்த படம் படையப்பா. படையப்பாவை முந்தியது சிவாஜி புரொடக்சன் தயாரித்த சந்திரமுகி.இப்படி ஏதோ ஒரு வகையில் ரஜினியின் டாப் கேரியர் படங்களில் சிவாஜியின் சம்பந்தம் இருக்கின்றது. இதற்கு முன்பு படிக்காதவன் படத்தையும் சொல்லலாம்.

விஜய்க்கு ஒன்ஸ்மோர்...
கொஞ்சம் வயதானதால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த C.V.ராஜேந்திரன் ஒரு படத்தை தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். சிவாஜியையும் ஒரு இளம் கதாநாயகனையும் வைத்து படம் எடுக்கலாம் என்று முடிவு எடுத்தார். அப்போது நினைவுக்கு வந்தவர் விஜய். விஜய்யை வைத்து படம் எடுக்கலாம் என்று அவரது அப்பா
எஸ் ஏ சந்திரசேகரனிடம் பேசிய போது ,எஸ் ஏ சந்திரசேகருக்கும் சிவாஜியை வைத்து படம் எடுக்காத குறை மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக்கூடாது என்று முடிவெடுத்த அவர் இந்தப் படத்தை நானே இயக்குகிறேன் என்று சொல்ல சிவி ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார். அப்படி எடுக்கப்பட்டது தான் ஒன்ஸ்மோர். சிவாஜி வைத்து துள்ளலான படங்களை தந்த சி.வி. ராஜேந்திரனுக்கு, சிவாஜியை அப்படியே வயதானவராக படம் முழுவதும் காட்ட விருப்பமில்லை. சிவாஜியை எப்படியாவது வித்தியாசமாக காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த
 C..V. ராஜேந்திரன் ,சிவாஜியின் இளமை தோற்றத்திற்கு இருவர் உள்ளம் சிவாஜியை மிக்ஸ்  செய்ய விரும்பினார் .அப்படி உருவாக்கப்பட்டது தான் ஒன்ஸ்மோர் திரைப்படம். இந்தப் படம் விஜய்க்கு ஒரு பிரேக் கொடுத்ததுடன் 133 நாட்களும் ஓடியது.அந்த வயதில் சிவாஜி ஆடிய நடனம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு படம் ஒன்ஸ்மோர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்